மும்பை: இந்திய தேசிய காங்கிரஸ் (INC) கட்சியின் வடகிழக்கின் கடைசி கோட்டையாக உள்ள மிஜோராமில், 2018, நவ. 28-ல் தேர்தல் நடைபெற்றது. எதிர்கால தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக கருதப்படும் மிஜோராமில் அடுத்த புதிய அரசை தேர்ந்தெடுக்க, சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

தெற்கு மும்பையின் பாதிளவு எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்டுள்ள மிஜோராம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம். ஆரோக்கியம் (இரண்டாமிடம்), அதிக கல்வியறிவு (மூன்றாமிடம்) கொண்ட மாநிலமாக இது திகழ்கிறது.

இருப்பினும், சண்டிகரை போல் 1.1. மில்லியன் மக்கள் தொகை கொண்ட இம்மாநிலத்தில் நடந்தப்பட்ட ஆய்வில், வறுமை, அதிக வீழ்ச்சியுற்ற விகிதங்கள், இனவாத பதட்டம், ஏற்றத்தாழ்வுகள் ஆகியன, புதிய அரசு சந்திக்கப்போகும் பெரிய சவால்களாகும்.

கடந்த 1986ல், மாநிலத்தில் நிலவிய நீண்டகால கிளர்ச்சி, அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்த பின், காங்கிரஸ் அல்லது மிஜோ தேசிய முன்னணி (எம்.என்.எப்) ஆகியவை மாறி மாறி மாநிலத்தை ஆண்டு வந்துள்ளன. எனினும், மாநிலத்தின் வளர்ச்சி முட்டுக்கட்டையாக சில சிக்கல்கள் அச்சுறுத்துகின்றன.

நீண்ட கால கிளர்ச்சியை அந்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வந்தது. 52 ஆண்டுகளுக்கு முன், 1966 மார்ச் மாதம் தலைநகர் அய்சால் மீது இந்திய விமானப்படைகள், ஒரேயொரு முறை சொந்த மக்கள் மீதே வான்வழி தாக்குதல் நடத்தியது.

மிஜோராமில் உள்ள 40 தொகுதிகளில் வாக்களிக்க, 7,68,000 வாக்காளர்கள் தகுதி பெற்றவர்கள். வடகிழக்கு மாநிலமான மிஜோராமில் முதல்முறையாக பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெற வாக்காளர்கள் முன்வருவார்களா என்பது தேர்தலுக்கு பிறகு தெரிய வரும்.

கடந்த 2018 மார்ச் மாதத்தில் பா.ஜ.க. தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணி (NEDA) ஆட்சி, இப்பிராந்தியத்தில் உள்ள ஏழு மாநிலங்களில் சிக்கிம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகியன இக்கூட்டணியின் ஆட்சி நடக்கிறது.

பெரும்பாலும் மீதமுள்ளவற்றைவிட சிறந்தது

போராளியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய லால் தன்வாலா தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக மிஜோராமை காங்கிரஸ் கட்சி ஆண்டு வருகிறது. கடந்த 2013 தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் இது, 34 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் 2014-க்கு பிறகு, காங்கிரஸின் வாக்கு சதவீதம் 13.4 சதவீத புள்ளிகள் குறைந்ததை 2018 மார்ச் 10-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

மத்திய அரசின் கிழக்கு நோக்கிய கொள்கைகளின் மையப்பகுதியாக மிஜோராம் உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் பண்பாடு மற்றும் எல்லைரீதியாக இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ள கம்போடியா, மியன்மார், வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிற ஆசியான் நாடுகளுடன் கிழக்கு நோக்கிய கொள்கைகளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம்.

பல்வேறு குறிகாட்டிகள் மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் மிஜோராம் ஒரு உயர் செயல்திறன் புள்ளிவிவரங்களை கொண்டுள்ளது.

2017-2018 பொருளாதார ஆய்வறிக்கை படி, நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்று இது. அதன் பொருளாதாரம் 2013-2016 இடையே 12% அதிகரித்திருந்தது. நாட்டின் இரண்டாவது சுகாதார மாநிலம், கல்வியறிவில் மூன்றாமிடத்தை கொண்டுள்ளது.

இருப்பினும், மாநிலத்தில் நிலவும் வறுமை, இனவாத பதட்டங்கள், உயர்நிலை பள்ளிகளில் இடையில் நிற்கும் மாணவர் விகிதம் அதிகரிப்பு, மாவட்டங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் போன்ற சவால்கள் அதன் வளர்ச்சியை தடுக்கும் காரணிகள் என்று நமது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிறிய மாநிலத்தின் பெரிய கரும்புள்ளி

மிஜோராம் பல சிக்கல்களின் பிடியில் உள்ளது. சட்டவிரோத குடியேற்ற பிரச்சனை, பழங்குடியின மக்களிடையே நிலவும் வேறுபாடுகள், படித்தவர்கள், இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாமதது, அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளால் பதட்டம் என மிஜோராம் மாநிலம் பிளவுபட்டு கிடக்கிறது. இதனால் ஜோரம் தேசியக்கட்சி, ஜோரம் மக்கள் மாநாட்டு கட்சி உள்ளிட்ட பிராந்திய அளவிலான கட்சிகளை கொண்ட ஜோரம் மக்கள் முன்னணி (ZPM) போன்றவை உதயமாக வழிவகுத்தன. இது, காங்கிரஸ் மற்றும் மிஜோராம் தேசிய முன்னணி - எம்.என்.எப். இடையே அரசின் பாரம்பரிய பரிமாற்றத்தை சீர்குலைக்க வாய்ப்புள்ளது.

மிஜோராமில் 94% பேர் பழங்குடியினர், 80% பேர் கிறிஸ்தவர்கள். சிறுபான்மையினராக உள்ள சக்மாஸ், ப்ரூஸ் இனத்தவர்கள் தங்கள் மீது லுசிசி, ரால்ட், ஹமர், கியாங்கே மற்றும் லாய் போன்ற பெரும்பான்மையினர் இனவாத வேறுபாடுகளை காட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

அரசில் இடம் பெற்றிருந்த ஒரே சக்மா அமைச்சராக இருந்த புத்த தன் சக்மா, கடந்தாண்டு பதவி விலகினார். தேசிய தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மருத்துவ கல்லூரியில் நான்கு சக்மா மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இனப் பாகுபாடே காரணம் என்று குற்றஞ்சாட்டி, அவர் பதவி விலகினார்.

மிசோரம் மீண்டும் என்ன நடக்கிறது?

வடகிழக்கு மாநில பெண்களில் ரத்த சோகை குறைவான விகிதம் (24.8%) கொண்ட மாநிலமாக மிஜோராம் உள்ளது. குழந்தை இறப்பு (8.4%), முடுக்கம் (28.8%), எடைகுறைவான குழந்தைகள் (12%) என, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 (NFHS-4) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது, சிறிய மாநிலங்களில் முதலிடத்தையும், நிதி ஆயோக்கின் ஒட்டுமொத்த 2018 சுகாதார செயல்திறன் குறியீட்டில், தேசிய அளவில் இரண்டாவதாகவும் உள்ளது. இந்தியாவில் உடல்நலன் சார்ந்த வெற்றிக்கு உடல்நலத்திற்கான அதன் தனிநபர் செலவினம் காரணமாக இருக்கலாம். இது இந்தியா ஸ்பெண்ட்டின் முந்தைய அறிக்கை கூறியது போல், தேசிய சராசரியைவிட ஐந்து மடங்கு ஆகும்: இந்தியாவின் 1.02% உடன் ஒப்பிடுகையில், 2015 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5% என்ற விகிதத்தை கொண்டிருந்தது.

இருப்பினும், மிஜோரமின் முன்னேற்றத்தை மற்ற மாநிலங்கள் தாண்டி வருகின்றன. சிறிய மாநிலமான மணிப்பூர், நிதி ஆயோக்கின் உடல்நலம் குறியீட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மிசோரமின் 2.43% ஒப்பிடும்போது 7.18% என்ற அதிக விகிதத்தை கொண்டுள்ளது.

மிஜோராமின் மந்தகதிக்கு காரணம்?

அதிகம் படித்த மக்களோடு மிஜோராம் வளர்ச்சியடைந்து வந்தாலும், வேளாண்மை மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். போதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்று, 2016 பிப்ரவரி 1-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

அதேபோல், தேசிய போக்கிற்கு நேர்மாறாக இப்பிராந்தியத்தில் வறுமையின் விகிதமும் அதிகரித்து வருகிறது. 2011 உடனான இரண்டு ஆண்டுகளில், வடகிழக்கு மக்கள் தொகையில் இது 21.9%-ல் இருந்து 29.8% ஆக உயர்ந்தது என, அரசின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Source : Handbook of Statistics on Indian Economy, Reserve Bank of India, 2016.
Note: Population below poverty line is as per the “Tendulkar method” on mixed reference period (MRP).

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்திய பொருளாதார புள்ளி விவரம் குறித்த கையேடு 2016-ன்படி, மிசோரமில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் எண்ணிக்கை 15.4%-ல் இருந்து 20.4% ஆக உயர்ந்துள்ளது. இக்கையேடு கலப்பு குறிப்பு காலம் (MRP) எனப்படும் ஒரு குறியீட்டைப் பயன்படுத்துகிறது. 365 நாட்களுக்கு மேல் ஐந்து பொருட்களின் நுகர்வை கொண்டு எம்.ஆர்.பி. அளவு கணக்கிடுகிறது. இதில் ஆடை, காலணி, துணிகளை, கல்வி மற்றும் சுகாதார செலவுகள் அடங்கும்.

அதேபோல், மிஜோராமில் கல்வியறிவு விகிதமானது உயர்நிலை பள்ளி அளவில் பாதியில் நிற்கும் மாணவர்கள், மாவட்ட ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவது, எமது ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இடை நிற்றல், ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முறையே 15.36% மற்றும் 30.67% என்று உள்ளது. இது தேசிய சராசரியான 6.35% மற்றும் 19.89%ஐ விட அதிகமாகும். வடகிழக்கு மாநிலங்களில் பள்ளி இடைநிற்றல் விகிதம் மிஜோராமில் தான் அதிகம் என்று, அரசின் 2017 புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் கல்வியறிவு பெற்ற மாவட்டம் (செர்ச்சிப் 98.76%) மற்றும் குறைந்த பட்ச மாவட்டம் (மமித் 60%) இடையில் 38.76 சதவீத இடைவெளி இருப்பதாக, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. லாங்கில்லா (66%) மற்றும் மமித் (60%) மாவட்டங்கள் மாநில சராசரியை விட குறைந்த எழுத்தறிவு கொண்டுள்ளன. தேசிய சராசரி கல்வியறிவு விகிதம் 70.04% ஆக உள்ளது.

மிஜோராமின் கிராமப்புறங்களை கொண்ட மத் (82.51%) மற்றும் லாங்கில்லா (85.06%) ஆகியன அதிக கல்வி விகிதம் கொண்டுள்ளன. 2009 கணக்கின்படி, மாநிலத்தில் மிக வறுமைமிக்க மாவட்டங்களில் 90% உடன் லாங்கிளை உள்ளது. அடுத்து மமித் (83.2%) இருப்பதாக, 2013 ஆம் ஆண்டின் மாநில அரசு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. நகர்ப்புற மாவட்டமான, தலைநகராகவும் உள்ள அய்சால், குறைந்த வறுமை விகிதங்களைக் கொண்டிருக்கிறது.

Source : Socio Economic and Caste Census 2011, Mizoram Human Development Report 2013

விவசாயிகள் எதிர்ப்பு; வேளாண்மையில் சரிவு

மிஜோராமின் 80% பகுதி மலையால் சூழப்பட்டுள்ளது; 60% மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளதாக, 2014-15 அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இம்மாநிலம் சவாலான நிலப்பகுதிகளை கொண்டுள்ளது; மலைப்பாங்கான அடர் வனத்தில் ஜஹூம் (jhum) அல்லது - சாகுபடிக்கு பின் தீயிடல் - என்னும் பாரம்பரிய முறையால் மண்ணின் தரமும் குறைந்து வருகிறது.

இதற்கு மாற்றாகவும், புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடும் 2009-ல் தேசிய நில பயன்பாட்டுக் கொள்கை (NLUP) அறிமுகம் செய்யப்பட்டது. ஜூஹும் சாகுபடிக்கு மாற்றாக மறுசீரமைப்பு மற்றும் சந்தை உள்கட்டமைப்பை ஏற்படுத்தி பிரதான துறைக்கு புத்துயிர் அளிப்பதை இது நோக்கமாக கொண்டது. மாநில அரசு மற்றும் காங்கிரசின் முந்தைய தேர்தல் பிரச்சாரங்களில் குறுக்கிட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகவும் இது இருந்தது.

எனினும், ஊழல் குற்றச்சாட்டுகளால் என்.எல்.யு.பி. நிதி வீணகிக்கப்பட்டது. 2015 தணிக்கை மூலம், மூங்கில் தோட்டங்களுக்கான நிதி விரயம் கண்டறியப்பட்டது. இஞ்சி, துடைப்பத்துகான புற்களை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய சந்தை வசதி ஏற்படுத்தாமல் நிதி வீணடிக்கப்பட்டதால் ஆவேசமடைந்து அய்சால் நகர தெருக்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்று, மோரங் எக்ஸ்பிரஸ் இதழ், 2018 செப். 29-ல் செய்தி வெளியிட்டிருந்தது. சாலை வசதிகள் செய்து தரவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

மிஜோராமில், 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தின்படி 8,108 கி.மீ., சாலைகள் இருந்தன. இது முந்தைய ஆண்டுகளின் 9,831 கி.மீ. என்பதை விட 17.6% குறைவு. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் (1,381 கி.மீ) எந்த விதத்திலும் மாறவில்லை. ஆனால், மாநில நெடுஞ்சாலைகள் 2015ல் 214 கி.மீ. என்பது, 2016ஆம் ஆண்டில் 170 கி.மீ.ஆக சுருங்கியது. மிசோரம் ஒவ்வொரு ஆண்டும் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் என, பல கேடுகளை சந்திக்கும் பகுதியாகும். இந்நிலையில் சாலைகளின் மோசமான பராமரிப்பு, சிக்கலை மேலும் அதிகரிக்க செய்கிறது.

படித்த, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சட்டசபையில் வாய்ப்பில்லை

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கின்படி, மிஜோராமில் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் என்ற விகிதம் உள்ளது; தேசிய கணக்கீடு இதில், 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் என்றளவில் இருக்கிறது. சண்டிகருக்கு அடுத்ததாக, இரண்டாவது அதிக பெண் தொழிலாளர்களை (54%) மிஜோராம் கொண்டிருக்கிறது என, 2015-2016 வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலை சந்தித்துள்ள இம்மாநிலத்தில் மற்றொரு முரண்பாட்டை சந்தித்துள்ளது. கடந்த 2013 தேர்தலில், மிஜோராமில் ஆண் வாக்காளர்களை விட 2.62% பெண்கள் அதிகம்; ஆனால், 40 சட்டமன்ற உறுப்பினர்களுமே ஆண்கள் தான். 2013 தேர்தலில் போட்டியிட்ட ஆறு பெண்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவர் மட்டுமே நிறுத்தப்பட்டார்.

நடப்பு 2018 தேர்தலில், 4.8% அதிக பெண் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஆண் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வார்களா என்பது, 2018, டிசம்பர் 11-ல் தெரிய வரும்.

(சேத்ரி, லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி பட்டதாரி. சிங், இந்தியா ஸ்பெண்ட் உடன் ஒரு பயிற்சியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.