புதுடெல்லி: மேம்பட்ட மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்கு இந்திய அரசு உறுதி அளித்துள்ள நிலையில், நாட்டின் சுகாதார அமைப்பானது குறைந்த ஊழியர்களை கொண்டுள்ளது; அடர்த்திக்கான உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யவில்லை மற்றும் கிராமப்புற சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய பெரும்பாலும் தகுதியற்றதாக இருப்பதை, புதிய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

"நாங்கள் ஆயுஷ்மான் பாரத் - பி.எம்.ஜே (PMJAY) மற்றும் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை, மக்கள் இயக்கமாக மாற்றுவோம்" என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ஜூன் 3, 2019 அன்று தனது அமைச்சகத்தில் பொறுப்பேற்ற கொண்டபோது ஊடகங்களுக்கு தெரிவித்தார். பிரதமரின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா - பி.எம்.ஜே (PMJAY) அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2018 செப்டம்பரில் தொடங்கப்பட்ட, பிரதமரின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான பி.எம்.ஜே.ஏ.ஒய். “பெரும் சுகாதார செலவுகளை” குறைக்க, 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, ரூ.5 லட்சம் காப்பீடு வழங்குகிறது; மேலும் இந்தியாவை உலகளாவிய சுகாதார பாதுகாப்பு நோக்கி நகர்த்துவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.

இருப்பினும், வெளிப்படையான அணுகல் கொண்ட மருத்துவ இதழான பி.எம்.ஜே ஓபன் 2019 மே 27 அன்று இதழிலில் வெளியான ஆய்வில் இந்த நோக்கங்களை எட்டுவது கடினம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் 10,000 மக்கள் தொகைக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தாதியர் அடர்த்தி, 2016ஆம் ஆண்டில் 20.6 பேர் என்றிருந்தது; இது 2011-12 ஆம் ஆண்டில் 19 ஆக இருந்தது - என்று, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் - என்எஸ்எஸ்ஓ (NSSO) தரவை பயன்படுத்தி கணக்கிடப்பட்ட - ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பிசியோதெரபிஸ்டுகள் சங்கம், இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் போன்ற தொழில்முறை சங்கங்களின் தரவுகளை பயன்படுத்தியது.

புதிய மருத்துவ, நர்சிங் மற்றும் துணை மருத்துவ தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் 2016 வரையிலான பத்தாண்டுகளில் வளர்ந்தவை. "இருப்பினும், இந்த உயர்வு உலக சுகாதார அமைப்பு [WHO] நிர்ணயித்த குறைந்தபட்ச தரங்களை அதாவது 10,000 மக்கள்தொகைக்கு 22.8 சுகாதார ஊழியர்கள் என்பதை பூர்த்தி செய்ய இன்னும் போதுமானதாக இல்லை," என்று, டெல்லியை தலைமையிடமாக கொண்ட இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (PHFI) நடத்தும் இந்திய பொது சுகாதார நிறுவனத்தில் கூடுதல் பேராசிரியராக உள்ள அனுப் கரண் தெரிவித்தார். "இந்த தேவையை பூர்த்தி செய்ய சுமார் 2,50,000 சுகாதார ஊழியர்கள் தேவை" என்றார்.

இந்தியாவின் பல சுகாதார நெருக்கடிகள் இருப்பதால், சுகாதார அமைப்பு முழுமையாக பணியாற்றுகிறது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம், அவற்றில் சில: உலகளவில் பிரசவத்தில் நிகழும் தாய் இறப்புகளில் 17%; தொற்ற நோய்களின் அதிகரித்து வரும் பிரச்சனைகள், இது 2016 இல் 61% இறப்புகளுக்கு காரணமாக இருந்தது; தொழுநோய், மலேரியா போன்ற தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதற்கான தொடர் போராட்டம். பெரும்பாலான இந்தியர்கள் சுகாதார செலவினங்களுக்காக தங்களது பாக்கெட் பணத்தை செலவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் தாங்க முடியாத சுகாதார செலவின பேரழிவுகளால் வறுமைக்கு தள்ளப்படுவதாக, இந்தியா ஸ்பெண்ட் ஜூலை 2018 கட்டுரை தெரிவித்தது.

சுகாதாரப் பணியாளர்கள்: ‘மிகவும் கடுமையான நெருக்கடி’

நாங்கள் முன்பு கூறியது போல், 2006 ஆம் ஆண்டின் உலக சுகாதார அமைப்பு விதிகள்படி, 10,000 மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 22.8 சுகாதார ஊழியர்கள் -10 மருத்துவர்கள் உட்பட- இருக்க வேண்டும். இந்தியாவில் 10,000 மக்கள்தொகைக்கு 20.6 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தாசிகள் உள்ளனர்; மேலும் 5.9 அலோபதி மருத்துவர்களுக்கு மேல் இல்லை என்று என்.எஸ்.எஸ்.ஓ. தரவு கூறுகிறது.

சுகாதாரத் தொழிலாளர் பற்றாக்குறை நெருக்கடியை சரி செய்வதற்காக உருவாக்கப்பட்ட உலகளாவிய சுகாதாரத் தொழிலாளர் கூட்டணி மற்றும் 2006 இல் உலக சுகாதார அமைப்பு ஆகியன, சுகாதார மனித வளங்களை பொறுத்தவரை “மிகக் கடும் நெருக்கடியை” எதிர்கொள்ளும் 57 நாடுகளில் இந்தியாவையும் வகைப்படுத்தி உள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு, 2016 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு தனது விதிமுறைகளை 10,000-க்கு 44.5 சுகாதாரப் பணியாளர்கள் என்று திருத்தியது; இது நிலையான வளர்ச்சி இலக்குகளையும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பையும் அடையத் தேவையான ஒன்று.

கடந்த 2016இல் இந்தியாவில் 38 லட்சத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் இருந்தனர்; இதில் செவிலியர்கள், தாதிகள், மருத்துவர்கள், துணை மருத்துவ வல்லுநர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் நிர்வாக மற்றும் வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் போன்ற மருத்துவரல்லாத பணியாளர்களும் உள்ளனர். கிராமப்புற இந்தியா மற்றும் கிழக்கு மாநிலங்கள் இன்னும் குறைந்த அடர்த்தியை - சராசரியாக 17 என்று கொண்டிருந்தன.

இருப்பினும், இந்த மதிப்பீடுகளில் இந்தியாவின் முதன்மை சுகாதார முறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த 790,000 துணை செவிலியர் மருத்துவச்சிகள் -ஏ.என்.எம் (ANM), கிராம அளவிலான பெண் சுகாதாரப் பணியாளர்கள் இல்லை. "ஏனென்றால் சர்வதேச தரத்தின்படி ஏன்.என்.எம்.கள் செவிலியர்களாக அங்கீகாரம் செய்யப்படவில்லை," என்று இந்திய பொது சுகாதார நிறுவனத்தை சேர்ந்த கரன் கூறினார்.

கடந்த 2019 பிப்ரவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது போல், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மற்றும் உரிமங்களை வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள், தெலுங்கானாவில் நடைபெற்று வருகின்றன; அவை நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவாக்கப்படலாம். ஏ.என்.எம் கணக்கிடப்பட்டால், இந்தியாவில் 10,000 பேருக்கு 29 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர்; இது சுகாதார மனித வளங்களுக்கான 2006 உலக சுகாதார அமைப்பின் விதிமுறையை விட அதிகமாகும். ஆனால் அதன் 2016 வரையறைக்கு கீழே 14.5 பணியாளர்கள் உள்ளனர்.

பதிவுசெய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கைக்கும் என்எஸ்எஸ்ஓ அறிக்கை செய்த தரவுகளுக்கும் இடையில் 12 லட்சம் இடைவெளி இருந்தது. டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தாதியர் அடர்த்தி 26.7 என்று, பதிவேட்டில் தரவை பயன்படுத்துகிறது. இந்த இடைவெளியில் 20% சுகாதார வல்லுநர்கள் பதிவு செய்யப்படலாம். ஆனால் தற்போது சுகாதாரப் பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை என்பதே இதற்கு காரணம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் காணாமல் போய்விட்ட பெண்கள் சுகாதார ஊழியர்கள்

இந்த பற்றாக்குறையின் பெரும்பகுதி, இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களில் காணாமல் போகும் பெண்கள் தான் காரணம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

"மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களில்" கிட்டத்தட்ட 19% பேரும், "மருத்துவத்தில் டிப்ளோமா அல்லது பட்டயம் " பெற்றவர்களில் 31% பேர் பணியாளர்களாக இல்லை. பெண்களில், மருத்துவத்தில் 26% பட்டதாரிகளும், மருத்துவத்தில் டிப்ளோமா அல்லது பட்டயம் பெற்றவர்களில் 46% பேரும் பணியாளர்களாக இருக்கவில்லை.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேலைவாய்ப்பில், பட்டதாரிகளுக்கு இடையே 7%-க்கும் மருத்துவ சான்றிதள் அல்லது டிப்ளோ படித்தவர்களில் 30%புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. உடல்நலம் மற்றும் துணை மருத்துவ சேவைகளில் பணியாளர் தொழிற்பயிற்சியில் ஆண்களின் விகிதம் பெண்களை விட அதிகமாக உள்ளது.

"திருமணம் மற்றும் குழந்தை பராமரிப்பு போன்றவை காரணமாக பெரும்பாலான பெண்கள் தங்கள் உற்பத்திக்குரிய வயதில் சவால்களை எதிர்கொள்வது கவனத்தில் கொள்ள வேண்டும்," என்றார் கரண். இதில் பெரும்பாலும் அவர்களின் குடும்பங்களுக்கான் தொழில் குறித்து இட ஒதுக்கீடு உண்டு.

"பயிற்சி பெற்ற பெண்களை தொழிலாளர் தொகுப்பில் சேர்ப்பது இந்தியாவுக்கு சுகாதார பணியாளர் அடர்த்தியின் இடைவெளியை ஒரு அளவு குறைக்க, நிலைமையை மேம்படுத்த உதவும்" என்றார் அவர். தொழிலாளர்களில் 25-35% பெண்களில், அவர்களில் பாதி பேரையாவது பாலின உணர்வு கொள்கைகள் மூலம் திரும்பப் பெற முடியும் என்றார்.

வாய்ப்புள்ளது; ஆனால் பயிற்சி பெறவில்லை

இந்தியாவின் தற்போது பணிபுரியும் அனைத்து சுகாதார வல்லுநர்களும் பயிற்சியளிக்கப்படவில்லை: 25% அலோபதி மருத்துவர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களில் 54% பேர் “போதிய அல்லது பயிற்சியும் இல்லை” என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்களிடையே தகுதியற்ற தொழிலாளர்களின் விகிதம் வாரியம் முழுவதும் ஒத்திருக்கிறது: மருந்தாளுநர்கள் (62%); உணவு நிபுணர்கள், ஆப்டோமெட்ரிஸ்டுகள் மற்றும் பிசியோதெரபி உதவியாளர்கள் (62%) உள்ளிட்ட சுகாதார இணை வல்லுநர்கள்; செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் (58%); மற்றும் பிசியோதெரபிஸ்ட், கண்டறியும் நிபுணர் மற்றும் பிறர் (45%).

சுகாதாரத்துக்கான தகுதி வாய்ந்த மனித வளங்கள் மட்டுமே கருதப்பட்டால், அடர்த்தி 10,000 க்கு 15.8 ஆக குறைகிறது - இது, 2006 உலக சுகாதார நிறுவனத்தின் தரத்தை விட, ஏழு தொழிலாளர்களுக்கும் குறைவு. வளர்ந்த நாடுகள் மட்டுமே 2016 தரத்தை பூர்த்தி செய்வதால் பழைய தரநிலை தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

தகுதியற்ற மருத்துவ நிபுணர்களின் பிரச்சினை என்பது, இந்தியாவுக்கு மட்டுமானதல்ல: சீனா, பங்களாதேஷ், உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இந்த பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

எவ்வாறாயினும், இந்த தகுதியற்ற பயிற்சியாளர்களை பயிற்சி பெற செய்ய அனுமதிக்காதது, இந்தியா போன்ற ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்துவது கடினம் என்று பொது கொள்கை சிந்தனைக்குழுவான அக்கவுன்டபிலிட்டி இனிஷியேடிவ் இயக்குனர் அவனி கபூர் கூறினார். இது பல சமூகங்களுக்கு எந்தவொரு சுகாதாரத்துக்கும் அணுகலை ஏற்படுத்தக்கூடும். "அதற்கு பதில், எங்களிடம் ஒரு பெரிய அமைப்புசாரா வலைபின்னல் இருப்பதை அங்கீகரிப்பது மற்றும் பயிற்சியை உறுதி செய்வது நிச்சயமாக இந்தியாவின் ஆரம்ப சுகாதார அமைப்பின் பெரும்பகுதிக்கு, அடிப்படை புற நோயாளிகள் கவனிப்புக்கு மிகவும் தகுதிவாய்ந்த பட்டங்கள் தேவையில்லை" என்று அவர் கூறினார்.

அமைப்புசாரா சுகாதார வழங்குநர்களுக்கான பயிற்சித் திட்டங்களை நடத்துவதன் மூலம், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று, மேற்கு வங்கத்தில் 2016 ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதிகமான நோயாளிகள் அவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள்; வருவாய் அதிகரிக்கும்.

பாரம்பரியமாக பிரசவம் கவனிப்பு உதவியாளர்கள், பாம்பு கடி குணப்படுத்துபவர்கள் மற்றும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் போன்றவர்கள், பெரும்பாலும் கிராமப்புற மக்களுடன் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாகும் என்று தற்போதைய ஆய்வு கூறுகிறது. ஆனால், அவர்கள் சுகாதார நிபுணர்கள் என்று கருதக்கூடிய தகுதி பெறாதவர்கள். அவர்களை பதிவு செய்வதன் மூலம் "பிரதான நீரோட்டத்திற்கு" கொண்டு வர முடியும் என்று ஆய்வு பரிந்துரைத்தது. மேலும், தாதியர் (பாரம்பரிய மருத்துவச்சிகள்) அரசில் பதிவு செய்யப்பட்டு குழந்தைகளை பிரசவிக்க அனுமதிக்க முடியும்; அதே நேரம் தொழிலாளர்கள் பலரை துணை மருத்துவ பணியாளர்களாக பதிவு செய்யலாம்.

இருப்பினும், இந்தியாவில் இந்த தொழிலாளர்கள் குறித்து தெளிவான கொள்கை எதுவும் இல்லை என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு, மத்திய இந்தியாவில் பெரும் பின்னடைவு

மேலும், 10,000 மக்கள்தொகைக்கு ஏழு சுகாதாரப் பணியாளர்களுடன், இந்தியாவின் மோசமான சுகாதார-தொழிலாளர்கள் அடர்த்தி கொண்டதாக, ஜார்க்கண்ட் உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. இது, பல மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களை ஒத்திருக்கின்றன: அசாமில் 11 (10,000க்கு), மத்திய பிரதேசத்தில் 12, ஒடிசாவில் 20, பீகாரில் 23 மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 25. ஒரு விதிவிலக்கு மேற்கு வங்கம், இது தேசிய சராசரியை விட அடர்த்தி 10,000 க்கு 36 சுகாதார ஊழியர்களைக் கொண்டுள்ளது.

இதில், 67 சுகாதார ஊழியர்களுடன், டெல்லியில் இந்தியாவில் அதிக அடர்த்தி உள்ளது. அடுத்து, கேரளா (66), யூனியன் பிரதேசங்கள் (62), பஞ்சாப் (52), ஹரியானா (44) உள்ளன.

"இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதிகமான மருத்துவ நிறுவனங்களைத் திறக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்று கரண் கூறினார். “இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை தெற்கு மற்றும் மேற்கில் உள்ளன, அதனால்தான் கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் அங்கு செல்வதை முடித்துக்கொள்கிறார்கள், பெரும்பாலும் திரும்பி வரமாட்டார்கள். நாட்டின் பிற பகுதிகளில் அதிகமான நிறுவனங்கள் திறக்கப்பட்டால், மருத்துவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் தங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார் அவர்.

Source: BMJ Open

பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களில் அகில இந்திய சராசரியான 29 ஐ விட அதிக சுகாதாரத் தொழிலாளர் அடர்த்தி உள்ளது- ஆந்திரா தவிர, அங்கு 10,000 க்கு 25 என்று உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

கிராமப்புற-நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. இந்தியாவின் மக்கள்தொகையில் 71% பேர் இருந்தபோதிலும், கிராமப்புற இந்தியாவில் 36% சுகாதார ஊழியர்கள் உள்ளனர், குறிப்பாக பல் மருத்துவர்கள் (3.2%) மற்றும் பிசியோதெரபிஸ்டுகள், நோயறிதலாளர்கள் மற்றும் பிறருக்கு (14.7%) அடர்த்தி குறைவாக உள்ளது; முறையே 34% மருத்துவர்கள் மற்றும் 33% செவிலியர்கள் கிராமப்புற இந்தியாவில் சேவை செய்கிறார்கள்.

முக்கியமானது தனியார்

இந்தியாவில் சுகாதார பராமரிப்பு பெரும்பாலும் தனியாரால் இயக்கப்படுகிறது. நாட்டின் சுகாதார பணியாளர்களில் 72.4% பேர் தனியார் துறையில் தான் ஈடுபட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட அனைத்து (93.6%) ஆயுஷ் பயிற்சியாளர்கள் (ஆயுர்வேத, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி பயிற்சியாளர்கள்), 91.7% பல் மருத்துவர்கள், 80.4% அலோபதி பயிற்சியாளர்கள் மற்றும் 55.3% செவிலியர்கள் மற்றும் தாசியர்கள், தனியார் துறையில் பயிற்சி பெறுகின்றனர்.

இந்தியாவில் தனியார் சுகாதாரத்துறையில் இலாப நோக்குடன் மற்றும் இலாப நோக்கற்ற மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ பயிற்சியாளர்கள் உள்ளனர்: அனைத்து சுகாதார ஊழியர்களில் 53% பேர், சுயதொழில் செய்பவர்கள்; 6% மட்டுமே பெரிய சுகாதார நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

This story was first published here on Healthcheck.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.