புதுடெல்லி மற்றும் லக்னோ: சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து ஒரு கவளம் சாதம், இந்நாட்களில் 10 வயது ஆஷா யாதவுக்கு கிடைக்கக்கூடிய நிரந்தரமான உணவாகும். நல்ல நாட்களில், அவரது தாய் தட்டில் சில உருளைக்கிழங்கு அல்லது பருப்பை (பயறு) சேர்த்து தருகிறார். கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் -- இது, மாநிலத்தின் விவசாயப்பகுதியில் மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழ்மையான ஒன்று -- வசிக்கும் ஆஷா, கோவிட் ஊரடங்கு நடவடிக்கையால் மதிய உணவை இழந்த 9.51 கோடி குழந்தைகளில் ஒருவராவார்.

இந்திய அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ், பள்ளி நாட்களில் ஆஷா வாயிலாக ஆரோக்கியமான உணவை - அதாவது அரிசி, காய்கறிகள், பால் மற்றும் பழம் - குழந்தைகளுக்கு கிடைக்கும். மார்ச் 24, 2020 முதல், கோவிட்-19 ஊரடங்கு அமலானதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, அத்துடன் மதிய உணவும் கிடைப்பதில்லை.

அங்கன்வாடி (குழந்தை பராமரிப்பு) மையங்களும் மூடப்பட்டுள்ளன. அங்கன்வாடி மற்றும் முன்வரிசை சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முக்கியமான வளங்கள், பல்வேறு சுகாதார மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களில் இருந்து, கோவிட் தடுப்பு தொடர்பான பணிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளனர்.

சரிவிகித உணவின் பற்றாக்குறை, குழந்தைகளுக்கு இடையே ஊட்டச்சத்து குறைபாட்டை அதிகரிக்கும், அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் நீண்டகால பாதகமான தாக்கங்களை அதிகரிக்கும் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்குவதில், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இதுவரை பல தசாப்தங்கள் இருந்து வந்த முன்னேற்றங்களை நீக்குகிறது.

இந்தியா, 2017ம் ஆண்டில் ஐந்து வயதிற்குட்பட்ட 10.4 லட்சம் குழந்தைகளை கொண்டிருந்தது. அதிக எண்ணிக்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட இறப்புகள் உத்தரபிரதேசம் (இறந்த 3,12,800 குழந்தைகளில், புதிதாக பிறந்த 1,65,800 குழந்தைகள் அடங்கும்), பீகார் (1,41,500 இதில் 75,300 பிறந்த குழந்தைகள் உட்பட) உள்ளன. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, தாய்வழி ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியன, இந்த இறப்புகளை தீர்மானிக்கும் முக்கியமானது என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் கே.ஸ்ரீநாத் ரெட்டி கூறினார். “இதன் தீர்வுக்கான சரியான நடவடிக்கைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்றார்.

நிலைமையை மதிப்பிடுவதற்காக, உத்தரபிரதேசத்தின் -கோண்டா, பால்ராம்பூர், பஹ்ரைச் மற்றும் பராபங்கி - நான்கு மாவட்டங்களில் உள்ள 10 கிராமங்களை இந்தியா ஸ்பெண்ட் பார்வையிட்டது. குழந்தைகள், கர்ப்பிணிகள், தினசரி கூலித் தொழிலாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதால், குழந்தைகளுக்கான சத்தான உணவிற்கான ஆதாரங்கள் மூடப்பட்டுள்ளதாக, எங்களிடம் தெரிவித்தனர்.

வரவிருக்கும் நெருக்கடி

குழந்தைகள் வளர்ச்சியின் தோல்வி, மூன்று அளவுருக்களின்படி - அதாவது வயதுக்கேற்ற உயரமின்மை (stunting),உயரத்திற்கேற்ற எடை இன்மை (wasting) மற்றும் எடை குறைவு (underweight) ஆகியவற்றால் அளவிடப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 39%, வயதுக்கேற்ற உயரம் குன்றியிருந்தனர், 16% உயரத்திற்கேற்ற எடையின்றியும் 33% எடை குறைவாகவும் இருந்தனர், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் அதிக வளர்ச்சி குன்றிய குழந்தைகளை கொண்டிருப்பதாக, தி லான்செட் வெளியிட்ட 2000 முதல் 2017 வரையிலான வரைபட போக்குகளின் முதலாவது மதிப்பீடு தெரிவிக்கிறது.

உலகளவில், தொற்றுநோய் பரவலின் போது, வழக்கமான பிற சுகாதாரப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் குறைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் 5 வயதுக்குட்பட்ட 6000 குழந்தைகள் இறக்க நேரிடும் என்று, 2020 மே மாத தொடக்கத்தில் யுனிசெப் எச்சரித்தது. இது குழந்தைகளின் உயரத்திற்கேற்ற வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கும், இது குழந்தை இறப்புக்கான வலுவான முன்கணிப்பு ஆகும்.

குழந்தைகளின் நோய் மற்றும் இறப்பு அடிப்படையிலான இந்த எண்ணிக்கை, வளரும் நாடுகள் பலவற்றுக்கு பின்னால் இந்தியாவை கொண்டு செல்கிறது என்று, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் திட்டத்தின் அட்வகசி நெட்வொர்க்கிங் மற்றும் டெவலப்மென்ட் ஆக்சன் திட்ட களஒருங்கிணைப்பாளர் யோகேந்திர கோர்பேட் கூறினார். "கோவிட்-19 பரவலின்போது ஊட்டச்சத்து குறைபாட்டில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றால், குழந்தைகளின் நோய்த்தன்மை மற்றும் இறப்பை குறைப்பதற்கான நமது முயற்சிகள் பெரும் பின்னடைவை சந்திக்கும்," என்று அவர் கூறினார்.

கோவிட் தொடர்பான பொருளாதார நெருக்கடி, 2012 முதல் 2030 வரை, வயதுக்கேற்ற உருவமின்மை குறைபாட்டை 50% குறைப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) இலக்கை அடைவதில் இருந்து இந்தியாவை மேலும் தள்ளிவிடக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 68% குழந்தைகளின் இறப்புகளுக்கு தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு ஒரு காரணம் என்று, இந்தியா ஸ்பெண்ட் 2020 மே 15 கட்டுரை தெரிவித்தது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கோவிட்-19 மேலும் அதிக ஆபத்தில் ஆழ்த்துகிறது, மற்றும் உயிர்வாழும் குழந்தைகளுக்கு மோசமான வளர்ச்சி, கற்றல் முடிவுகளை ஏற்படுத்துவதாக, யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு ஒரு குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது, தொற்றுநோய் பரவலின்போது, அவர்கள் கூடுதல் பாதிப்பை சந்திக்கிறார்கள். மேலும் “ஊட்டச்சத்து குறைபாடு கொமொர்பிடிட்டியாக கருதப்பட வேண்டும்” என்று கோர்பேட் கூறினார். ஊட்டச்சத்து குறைபாட்டுடன் நேரடியாக இணைந்திருக்கும் பல தொற்று நோய்களால், இந்தியாவில் பல குழந்தைகள் இறக்கின்றனர். "ஊரடங்கின் போது உணவு கிடைக்காததால் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் அதிகரிக்கும், இறுதியில் அவர்கள் [குழந்தைகள்] கோவிட்-19 ஆல் மிகவும் பாதிக்கப்படுவார்கள்," என்று அவர் கூறினார். ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைகளின் இறப்பு அதிகரிப்பதற்கும், நீண்ட காலத்திற்கு வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனைத் தடுப்பதற்கும் வழிவகுக்கும், இது இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல. தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவை உண்ணும் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு, பெரியவர்களாகும் போது குறைவாக சம்பாதிக்கிறார்கள், தங்களை வறுமையில் சிக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று, அக்டோபர் 2019 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

மூடப்பட அங்கன்வாடிகள், திருப்பிவிடப்பட்ட ஆஷாக்கள் & ஏ.என்.எம்.கள்

மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) என்ற திட்டம், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு உணவு, பாலர் கல்வி, முதன்மை சுகாதாரம், நோய்த்தடுப்பு, சுகாதார பரிசோதனை மற்றும் பரிந்துரை சேவைகளை வழங்குகிறது, அவை தற்போது “மூடப்பட்டுள்ளதன் மூலம் ஊட்டச்சத்துக்கு இனி முன்னுரிமை இல்லை”, என்றார் கோர்பேட்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) திட்டத்தின் கீழ் செயல்படும் உள்ளூர் அங்கன்வாடி மையங்கள் (மாநில அரசு நடத்தும் கிராமப்புற குழந்தை பராமரிப்பு மையங்கள்) வாயிலாக தொழிலாளர்கள் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இளம் பருவப்பெண்கள் ஆகியோருக்கு வீட்டுக்கே சென்று உணவுப் பொருட்கள் வழங்கக்கப்படுகிறது."இந்த கடினமான தருணத்தில்," ஏப்ரல் 2020 இல் உலக வங்கியின் ஒரு அறிக்கை, "ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போரில் இப்பெண்களின் [அங்கன்வாடி தொழிலாளர்கள்] பங்கு இன்னும் அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது" என்று கூறியது.

இருப்பினும், அங்கன்வாடி தொழிலாளர்கள் கோவிட்-19 பணிகளில் ஈடுபட்டுள்ளனர், ஊட்டச்சத்து திட்டங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி தொழிலாளர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில், கோவிட்-19 பணிகள், அதிக சுமை தருவதாகவும், இதனால் ஊட்டச்சத்து திட்டங்களில் தங்களால் கவனம் செலுத்த நேரம் கிடைப்பதில்லை என்றும் கூறினர்.

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில், அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷாக்கள்) வீடு திரும்பியவர்களின் விவரங்களை பதிவு செய்து பராமரிக்கவும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் கோண்டா பகுதி குவாஸிதிவார் கிராமத்தில், சரியாக கை கழுவும் முறை குறித்து கிராம மக்களுக்கு அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் சொல்லித் தருகின்றனர். தொற்றுநோய் பரவலால் ஏற்பட்டுள்ள கூடுதல் பணியால், வழக்கமான ஊட்டச்சத்து திட்ட வேலைகளில் குறைந்தளவே கவனம் செலுத்த முடிவதாக, இத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"பல குடும்பங்கள் சப்பாத்திகளை கொண்டு மட்டுமே உயிர் வாழ்கின்றன," என்று கோண்டா பகுதியின் பாண்ட்ரி கிருபால் வட்டார சமூக சுகாதார மையத்தில் துணை செவிலியர் (ஏ.என்.எம்) ரச்னா மிஸ்ரா கூறினார், ஆனால் உணவு கிடைக்காதது மட்டுமே இங்கு பிரச்சினை அல்ல. பள்ளியில் இருப்பது போல், சிறு குழந்தைகளை உட்கார வைத்து உணவளிக்க வேண்டும், ஆனால் பெற்றோர்கள் பெரும்பாலும் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதில்லை.ஊட்டச்சத்து சேவைகளுக்கு வீடு வீடாக செல்லுதல், ஆலோசனை வழங்குதல் மற்றும் உறுதியளித்தல் ஆகியன தேவை. இது தற்போதுள்ள பணிச்சுமைக்கு மத்தியில் செய்வது கடினம் என்று மிஸ்ரா கூறினார்.

"நாங்கள் என்ன சாப்பிடுவது?"

உத்தரபிரதேசத்தில் உள்ள 10 கிராமங்களில், இந்தியா ஸ்பெண்ட் கண்டறிந்தது, பெரும்பாலான குடும்பங்களில் வருவாய் ஈட்டுபவர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான்; அவர்கள் ஹரியானா, டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்கள், இனி அவர்களுக்கு வருவாய் ஆதாரங்கள் இல்லை.தொற்றுநோய் பரவல் காலங்களில் நோயெதிர்ப்பு உருவாக புதிய பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், புரதம் மற்றும் பால் ஆகியவை குழந்தைகளுக்கும், சிசுக்களுக்கும் உணவாக, உலக சுகாதார அமைப்பு ஆலோசனை பட்டியலிட்டு உள்ளது.

“என் குழந்தைகளுக்கு பழங்களையும் பாலையும் கொடுக்க யாராவது என்னிடம் சொன்னாலும், நான் எப்படி அதை தர முடியும்? கிராமத்தில் வேலைகள் எதுவும் இல்லை,” என்று 30 வயதான கிரண் தேவி கூறினார். டெல்லியில் தினக்கூலித் தொழிலாளியான அவரது கணவர் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார். "என்னால் இயன்றதை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்" என்றார்.

உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள பால்ராம்பூரில் வசிக்கும் கிரண் தேவி, 30, மூன்று குழந்தைகள் மற்றும் எட்டு உறுப்பினர் உள்ள குடும்பத்தை கொண்டவர். கோவிட் ஊரடங்கு காலத்தில், அவரது கணவர் வேலையை இழந்தார், இதனால் ஒருநாளைக்கு இரண்டு வேளை உணவை உட்கொள்ளவே மிகவும் சிரமப்படுகிறார்கள்.

“நான் குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு மாவு ஆலையில் வேலை செய்தேன்; ஊரடங்கால் வேலையை இழந்து, இப்போது ஊருக்கு திரும்பினோம். என்னிடம் ரேஷன் கார்டு இல்லை,” என்று பஹ்ரைச் மாவட்டத்தின் பராகான் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான ராம்பச்சன் கூறினார். கிராமத்திற்கு வந்ததும் 15 கிலோ அரிசியைப் பெற்றார், அவர், தாம் தனிமைப்படுத்தப்பட்டு அது, 14 நாட்கள் நீடிக்கும் என்று கூறினார். அவர்களது குடும்பம் பெற்ற ஒரே உணவுப் பொருள் இதுதான், ஆறு பேர் கொண்ட அவர்களது குடும்பம் ஒரு மாதத்திற்கும் மேலாக பசி ஆறியது. “எங்களிடம் இதுதான் உள்ளது. நாங்கள் என்ன சாப்பிடுவது? குழந்தைகளுக்கு என்ன உணவை தருவது?” என்றார்.

ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் கிடைக்கும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட போதும், பொதுவினியோகத் திட்டத்தில் (நாடு முழுவதும் நியாய விலைக்கடைகள் மூலம் மானிய விலையில் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பொது விநியோக முறை) ரேஷன் கடைகளுக்கு வெளியே நீண்ட நெடிய வரிசைகள் உள்ளன; காலை 7 மணி முதல் கடைகளுக்கு முன்பு வரிசை இருக்கிறது என்று, ராம்பச்சன் கூறினார். இந்தியா ஸ்பெண்ட் விசாரித்ததில் தெரிய வந்தது என்னவென்றால், ரேஷன் கடைகளில் உள்ளூர் கார்டுதாரர்களுக்கு தான் முன்னுரிமை தரப்படுகிறது என்பதாகும். ரேஷன் கார்டுகள் இல்லாத நபர்கள் தங்கள் வரிசை முறை வருவதற்குள், பல உணவுப் பொருட்கள் இருப்பு தீர்ந்துவிடும்.

கோண்டாவை சேர்ந்த 10 வயது ஆஷாவின் தாய் சுனிதா யாதவ், 2020 ஏப்ரல் 28 அன்று, தனது நான்கு பேர் கோண்ட குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி கிடைத்ததாக கூறினார். உள்ளூர் ரேஷன் கடையில் இருப்பு இல்லாததால் அவர்களுக்கு 1 கிலோ பருப்பு கிடைக்கவில்லை. "உருளைக்கிழங்கு மற்றும் அரிசி எல்லாம் இப்போது நாம் வாங்க முடியும்," என்று யாதவ் கூறினார்.

உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் லால்சந்த்பூரில் வசிக்கும் ஐந்து வயது நிஜாமுதீன், கடைசியாக தனது வீட்டில் பருப்பு எப்போது சமைத்தார்கள் என்பதே நினைவில்லை என்றான். அவனுக்கும், அவனது சகோதரனுக்கும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் பச்சரிசி பிடிக்காது.

How to tackle malnutrition during COVID-19 outbreak

India must ensure universal access to PDS and enough ration for all who are in need, said Tata Institute of Social Sciences’ Ghorpade. Frontline health workers’ primary focus must be directed back to nutrition programmes, he added.

PDS shops should distribute iron tablets, health supplements and take-home ration along with regular ration, said Aarti Devi, an accredited social health activist at Balrampur’s Nagwa sub-centre in UP. This single-point-collection will make things easier for people and the anganwadi workers a lot of time.

UNICEF’s suggestions to prevent child wasting:

  • Intensify the public awareness on COVID-19 Infection Prevention and Control measures and protect, promote and support and safe breastfeeding feeding for all children
  • Intensify pre-positioning (with a minimum buffer stock of two months) of essential commodities for nutrition programming and routine medicinal supplies
  • Scale-up preventive distribution of specialised nutritious foods (e.g. fortified flours) for all households with children under the age of two
  • Intensify efforts to strengthen the capacity of mothers and caregivers to detect and monitor their children’s nutritional status using low-literacy/numeracy tools
  • Simplify dosage and distribution schedules of ready-to-use foods and other specialised nutrition foods, as well as potential adaptations to in-patient management for complicated cases in the context of COVID-19
  • Capacity building of community health workers to provide treatment for uncomplicated wasting at the community level

(திவாரி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை நிருபர். பாண்டே, ஒரு சுயாதீன பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.