புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் தொழுநோய் தலைதூக்கியுள்ளது. .

பொது சுகாதார பிரச்சனையாக இருந்த தொழுநோய் இந்தியாவில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்று, 13 ஆண்டுகளுக்கு முன் சுகாதாரத்துறையினரும் ஆர்வலர்களும் கொண்டாடினர். ஆனால், 2017ஆம் ஆண்டு இந்தியாவில் புதியதாக 1,35,485 பேருக்கு தொழுநோயை சுகாதார அமைச்சகத்தின் மத்திய தொழுநோய் பிரிவு வெளியிட்ட அறிக்கை, நமக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும். அதாவது ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒரு தொழுநோயாளி கண்டறியப்படுகிறார்; அதை நீக்குவதற்கு எதுவுமில்லை.

இந்தியாவில் தொழுநோய் மீண்டும் அதிகரித்து வருவதை ஒப்புக் கொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2018ஆம் ஆண்டுக்குள் அது முற்றிலும் ஒழிக்கப்படும் என்று, 2017 பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் உரையின் போது தெரிவித்திருந்தார். ஆனால் இப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களோ, இலக்கை அடைய முடியாது என்று கூறியுள்ளனர்.

கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளில் ஏறத்தாழ பாதி பேர் (67,160) நோய் முற்றிய நிலையில் உள்ளனர். புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. உதாரணத்துக்கு, தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் குஷன்பள்ளி கிராமத்தில் 250 வீடுகள் (1040 மக்கள்) உள்ள நிலையில், அங்கு 19 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். “ஒவ்வொரு ஆண்டும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று 2016-ல் உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டது. 2015ஆம் ஆண்டில் உலகளாவில் புதிய தொழுநோயாளிகளில் இந்தியாவில் மட்டும் 60% என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தொழுநோய் அறிகுறி குறித்த நம்பகமான ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. “தொழுநோய் இல்லாத இந்தியா” நிலையை இழந்துவிடுவோமோ என்று கருதி அரசும் புதிய நோயாளிகள் விவரங்களை பதிவு செய்ய தங்குவதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தேவையில்லாதது மற்றும் புறக்கணிக்கப்பட்டது

ரச்னா குமாரி 18 வயதில் திருமணம் செய்துகொண்டார், 21 வயதிலேயே இரண்டு குழந்தைகளை பெற்றார். பீகாரின் முங்கரில் அவரது வாழ்க்கை நன்றாகவே இருந்தது. அவருக்கு தொழுநோய் இருப்பது தெரிய வரவே, வாழ்க்கையில் புயல் வீசியது. அவரை ஏற்க மறுத்த குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர்.

இதனால் இதயம் நொருங்கிப்போன அவர், தனது வாழ்க்கையை மீட்க நோயை எதிர்த்து தனியே போராட தொடங்கினார். இதில் இருந்து மீண்ட பிறகு, தொழுநோயால் எந்த வடிவத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்தார். தற்போது அவர், தொழுநோயாளிகளுக்கு தொழுநோய் எதிர்ப்பு சங்கங்களில் சர்வதேச கூட்டமைப்பு குழுவில் இடம் பெற்றுள்ளார். பீகாரின் முங்கரில் உள்ள தொழுநோய் பரிந்துரை மையத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். “தொழுநோய் இல்லாத உலகம் என்பது என் கனவு. தொழுநோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிக்கு நான் சொல்வது, இதற்காக வெட்கப்பட வேண்டாம் என்பது தான். தலையை உயர்த்தி எந்த பயமும் இல்லை என்று கூறுங்கள்” என்ற “அனைவரும் நேர்மையாக அர்ப்பணிப்போடு உழைத்தால், போலியோ போலவே தொழுநோயையும் நாம் முற்றிலும் ஒழித்து விடலாம்” என்றார்.

இந்தியாவில் தொழுநோய் பாதிப்புகளால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சமுதாயத்தின் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, தேவையற்றவர்களாக கருதப்படுகிறார்கள். பெரும்பாலும் 750க்கும் மேற்பட்ட தொழுநோய் காலனிகளில் வாழ்கின்றனர். சமூகம் அவர்களை பெரும்பாலும் வேண்டாதவர்களாகவே ஒதுக்கி வைத்துள்ளது.

தொற்றுநோயான தொழுநோய் எளிதில் பரவுகிறது. உரிய நேரத்தில் இதை கண்டறியவில்லை என்றால், தோல் மற்றும் புற நரம்புகள் வழியாக பரவும்; கை, கால்களின் நரம்புகளை சேதப்படுத்தி இறப்புக்கு வித்திடுகிறது. இயற்கையாகவே இது காயங்களை குணப்படுத்தாது; இதனால் தான் தொழுநோயால் மிக அச்சம் உண்டாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பதால் நம்மில் பெரும்பாலோர் தொழுநோயை கட்டுப்படுத்துவதில்லை. மேலும், நோயை ஏற்படுத்தும் மைக்கோபாக்டீரியம் வலுவாக எதிர்க்கும் சக்தியை கொண்டிருக்கிறோம். இது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவ வசதியற்ற ஏழைகள் மத்தியில் இது பரவும் வாய்ப்பு உள்ளது.

நீக்குதல் என்பது ஒழிப்பு அல்ல

தொழுநோயை ஒழிப்பதற்கான நிதியை உலக சுகாதார நிறுவனத்திடம் பெற்றது முதல், முன்னேற்றத்தை காட்ட வேண்டிய நெருக்கடியில் இந்தியா இருப்பதாக, ஆர்வலர்கள் கூறுகின்றனர். 2005ஆம் ஆண்டு நாட்டில் தொழுநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அரசு அறிவித்தது; அப்போது 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு (0.01%) இது இருந்துள்ளது. ஆனால், தொழுநோய் ஒழிப்பு அறிவிப்பு குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். உதாரணத்துக்கு, நோயுள்ளவரை தேடிச்சென்று நிறுத்துதல் (சுய அறிக்கையை கணக்கிடுதல்; இது தவிர்க்க முடியாமல் அறிக்கை தயாரிக்க வழிவகுக்கிறது) மற்றும் ஒற்றை நோயாளியை கணக்கிடாதது (தீவிரத்தை குறைந்ததாக இது கருதப்படுகிறது).

இந்தியாவின் பரந்த மக்கள்தொகைக்கு நன்றி; "10,000 பேரில் 1" என்பதை விட குறைவாக லட்சத்தில் ஒன்றாக இருந்திருந்தால். பொது சுகாதார பிரச்சனையான தொழுநோய் ஒழிக்கப்பட்டதாக 2005-ல் அறிவித்திருந்தாலும், உலகிலேயே அதிக தொழுநோயாளிகள் இந்தியாவில் இருப்பதாக, 2016-ல் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

மேலும், மாநிலங்களில் உள்ள பரந்த வேறுபாடுகளை தவிர்த்து, அனைத்து மாநிலங்களின் சராசரியை கொண்டு, '10,000-இல் ஒன்று' என்ற கணக்கீடு வந்தது. உதாரணமாக, பெரிய மற்றும் வளர்ந்து வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகளவிலும், கேரளா போன்ற வளர்ந்த மாநிலங்களின் தொழுநோயாளிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். இவற்றையெல்லாம் ஒன்றாகவே மதிப்பிட்டு தொழுநோய் இல்லை என்று அறிவித்தது பெரிய தவறு.

‘நீக்குதல்’ என்பது ‘ஒழிப்பு’ என்பதாக கருதி குழப்பப்பட்டுள்ளது. பிந்தையதில் பூஜ்ஜியம் என்பது புதிய நோயாளின் முழுமையான மற்றும் நிரந்தரமான குறைப்பைக் குறிக்கிறது - மற்றும் தொழுநோய் அச்சுறுத்தல் முன்கூட்டியே கருதப்பட்டது. தொழுநோய் ஒழிப்புக்கான பணியாளர் உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் குறைக்கப்பட்டு, பிற அவசர தேவையுள்ள சுகாதார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதிப்புள்ள வீடுகளை அடையாளம் காணும் முன்வரிசை பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

நோயாளிகள் குறித்த அறிக்கை

தொழுநோய் ஒழிப்பு அறிவிப்புக்கு பிறகு அதன் மீதான கண்காணிப்பு செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது, பீகாரின் முங்கரில் உள்ளது போல் நோய் பாதிப்பை கடுமையாக்கியது.

புதிய நோயாளிகளில் ”அதிக உடல் குறைபாடு” உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளதாக, மிதமான மதிப்பீடு செய்த தேசிய தொழுநோய் அகற்றும் திட்டத்தின் 2016 அறிக்கை தெரிவித்தது. இது "சமுதாயத்தில் தாமதமாகக் கண்டறியப்பட்ட நோயாளிகளை காட்டுவதோடு,கண்டறியப்படாத அல்லது மறைக்கப்பட்ட பல நோயாளிகளும் இருக்கலாம்” என்பதை காட்டுகிறது. நோயாளிகள் மறைக்கப்படுவது மிக ஆபத்தானது. ஏனென்றால், “சிகிச்சை அளிக்கப்படாத தொழுநோயாளி ஒருவர் செயல்பாட்டில் உள்ள நீர்த்தேக்கம் போன்று, நோய் தாக்கத்தை எளிதில் பரவச் செய்துவிடும்” என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதில் கண்டறியப்பட்டவர்களிடையே அதிகம் குழந்தைகள் இருந்தனர்.

எனினும், புதிய நோயாளிகள் குறித்த விவரங்களை பதிவு செய்வதை அரசு எதிர்ப்பதாக, தொழுநோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள, பெயர் கூற விரும்பாத ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். உதாரணத்திற்கு 2005ஆம் ஆண்டுக்கு பிறகு தொழுநோயாளிகள் அதிகளவில் கண்டறியப்பட்டாலும், ஆண்டு எண்ணிக்கை 1,30,000 (அதாவது 130 கோடி மக்கள் தொகையில் 0.01%) என்பதற்குள் வர வேண்டும் என்பதற்காக கணக்கு காட்டப்பட வில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

புதிய நோயாளிகள் குறித்த அரசின் எண்ணிக்கை " பெரும்பாலும் நேர்மறையாகவே வருவதால், நோயாளிகளை கண்டறிய எந்தவொரு தேசிய அளவிலான நடவடிக்கையும் இல்லை" என்று செகந்திராபாத்தில் உள்ள தொழுநோய் அமைப்பின் தலைமை நிர்வாகி ஆஸிம் சாவ்லா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

தொழுநோய் நீக்குதல் இலக்கில் முன்னணியில் இருந்த டெல்லி, சண்டிகர், தாதர் மற்றும் நாகர் ஹவேலி, ஒடிசா, மேற்கு வங்கம், லட்சத்தீவு போன்ற இடங்கள் தற்போது மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளன. தொழுநோய் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டு, அதை நீக்குவதில் வெற்றி கண்ட கேரளாவில் தற்போது மீண்டும் நோயாளிகள் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள், இங்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தல்

தொழுநோய் அறிகுறி இருப்பின் அது முற்றி, உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் முன் ஆரம்ப நிலையை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம், இது முடங்கி போனவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதை போன்றது. இதனால் அவர்கள் சுதந்திரமான, கவரவமான வாழ்க்கையை அடைய முடியும். ஆனால் சமூகத்தில் களங்கமும், பாகுபாடும் நிறைந்துள்ளது. நோயாளிகளிடையே உள்ள நம்பிக்கை மற்றும் குறைந்த புரிதல் காரணமாக, சுகாதார ஆர்வலர்களும் இப்பணியில் மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அத்தகைய கட்டுக்கதைகளில் ஒன்று, தொழுநோய் என்பது கடவுளின் தண்டனை என்பதாகும்.

மருத்துவ சிகிச்சை தாமதமாகும் வரை அதை தேடுவதற்கு இது நோயாளிகளை தூண்டுகிறது என்று, சமூக ஆர்வலரும் சசாகவா இந்தியா தொழுநோய் அறக்கட்டளை நிர்வாக இயக்குனருமான வினிதா சங்கர் சுட்டிக்காட்டுகிறார். இதில் நரம்பு சேதம் என்பது மீள முடியாதது; ஒருமுறை குறைபாடு ஏற்படுவது, சமூக மறுவாழ்வில் மிகவும் சவாலாகிவிடும்.

"அதிகம் படித்தவர்கள் மற்றும் கருத்துகளை கூறுபவர்களுடன் கூட நாங்கள் போராட வேண்டும்," என்று சாவ்லா கூறினார். “மிக சமீபத்தில் போப் கூட குழந்தை துஷ்பிரயோகம் என்பது, ’வீட்டில் தொழுநோய்’ போன்றது என்று கூறியிருந்தார். ஏனென்றால் களங்கத்திற்கு பயந்து நோயாளிகள் அதை மறைக்க முயல்கிறார்கள். மனப்போக்குகளை மாற்றுவதற்கு காலம் பிடிக்கும்; ஏதாவது சிக்கலைச் சமாளித்து விரைவான முடிவுகளை எடுக்க, அரசு ஏதும் செய்யவில்லை. அனைத்து பங்கெடுப்பாளர்கள், மாற்றத்திற்கான ஈடுபாட்டிற்கும் தேவை " என்றார்.

அண்மையில், பல்வேறு சட்டங்களில் தொழுநோயாளிகளுக்கு எதிராக உள்ள பாகுபாட்டை நீக்க, நாடாளுமன்றத்தில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றப்பட்டது, குறிப்பாக நம்பிக்கை அடிப்படையில் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக. தொழுநோயாளிகளுக்கு எதிரான பாகுபாட்டுடன் 119 சட்டங்கள் இருந்தன. உதாரணத்திற்கு, தொழுநோயானது விவாகரத்துக்கான ஒரு சரியான காரணம் என்று எடுத்துக் கொண்டு ஒரு "தீங்கு விளைவிக்கும் நோய்" என்ற கருத்து இருந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்ற, ஒரு வரைவு மசோதா தயாரிப்பில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நோயாளிகளை அடையாளம் காண்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நல்ல வெளிச்சத்தில் நோயாளியின் அனைத்து உடல் பாகங்களும் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலும் நோயாளிகளுக்கான பரிசோதனை மோசமாக உள்ளது. ஆண் ஊழியர்கள் பெண்களிடம் கேள்வி கேட்கவோ, ஆடை அகற்றி உடலை பரிசோதிக்கவோ தயங்குகின்றனர்; கிராமப்புறங்களில் ஆண் சுகாதார ஊழியரிடம் உடல் பரிசோதனைக்கு பெண்கள் ஒப்புக்கொள்வதில்லை. இது சிறு அளவில் உள்ள நோய் கண்டறியப்படாமல் போகும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

ஒருமுறை நோய் கண்டறியப்பட்டால் அதன் பிறகு நோயாளியை அரசு சுதந்திரமாக விட்டுவிடுகிறது. பல மருந்துகளின் கலவையை கொண்டு நோயாளிகளுக்கு பலவகை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது - இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் வழக்கமாக ஆறு முதல் 12 மாதங்களுக்குள் குணமாகிறது.

ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பது இன்றியமையாதது; அதேபோல் கண்டறிந்த பிறகும் தொடர் சிகிச்சை அளிப்பது, பின்விளைவுகளை கண்டுபிடிப்பது மற்றும் மருந்து எதிர்ப்பு தடுப்பு வகைகளை அடையாளம் காண்பது அவசியமானது.

புகையிலைக்கு எதிரான இயக்கத்தின் வெற்றியானது சாவ்லாவுக்கு நம்பிக்கையை தருகிறது. ”தொழுநோய் ஒழிப்பு பணிக்கு பெரு நிறுவனங்கள், தனியார், அரசு சாரா அமைப்புகள் போன்றவற்றின் ஆதரவு தேவை” என்றார் அவர். தொழுநோய் பெரும்பாலும் ஏழைகளையே பாதிப்பதால் அது பெரும் கவனத்தை பெறவில்லை. சோதனை செய்து கண்டறிவதன் மூலம் அதன் பரவலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். உடனடியாக சிகிச்சை அளித்தல், இந்தியாவின் தொலைதூர பகுதிகளிலும் கூட எளிதாக கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். "நோயாளிகளுக்கு எதிராக பாகுபாடு கண்டறிந்து சிகிச்சை அளிக்கவோ, அல்லது அதை முடிவுக்கு கொண்டுவரக் கூடிய உறுதியான உள்கட்டமைப்பு இல்லை" என்று அவர் கூறினார்.

Targets Of New Global Strategy For 2020

  • Zero disabilities among new pediatric patients.
  • Achieve a disability rate of less than 1 case per 1 million people.
  • Zero countries with legislation allowing discrimination on basis of leprosy.
  • Sustained and committed efforts by national programmes along with continued support from national and international partners.
  • Increased empowerment of people affected by the disease, together with their greater involvement in services and the community bringing us closer to a world without leprosy.

Source: World Health Organization (June 2017)

முன்னதாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு திட்டங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொழுநோயாளி மற்றும் பாதிக்கப்பட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பாகுபாடு நீக்கப்படுதல் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திட்ட, ஏழு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அதை செய்திருக்க வேண்டும்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமடையும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது; நேர்மறையான படங்கள் மற்றும் குணமடைந்தவர்களின் அனுபவங்களை பயன்படுத்தலாம். அவசரமாக நோயை சமாளிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமான தருணத்தில் தீர்ப்பு வந்துள்ளதாக, இந்திய தொழுநோய் அறக்கட்டளை இயக்கத்தின் தலைமை ஆலோசகர் நிகிதா சாரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், ஒரு சிறந்த உழைக்கும் உத்தியானது பிறர் நலன், பராமரிப்பு வசதிகளுடன் ஒருங்கிணைக்கப்படலாம். இதனால் தொழுநோய்க்கு தனித்தனியே சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.இந்தியாவில் ஒரு நல்ல உழைப்பு மூலோபாயம், மற்றவர்களுடைய நலன்புரி பராமரிப்பு வசதிகளுடன் ஒருங்கிணைக்கப்படலாம், இதனால் இது ஒரு பயங்கரமான நோயாக இருப்பதுடன் தனித்தனியாக சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

தொழுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பெரும் சவாலாக இருப்பது, அதற்கு இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாதது தான் என்று, இந்திய தொழுநோய் திட்ட இயக்கத்தின் நிர்வாக இயக்குனர் மேரி வர்கீஸ், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். தொழுநோய் பரவலை தடுக்க ஒரே வழி, பொதுமக்கள் தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் கண்டு அவர்களாகவே சிகிச்சைக்கு வருவது தான் என்று அவர் கூறினார். தொழுநோயை கட்டுப்படுத்த மேலும் ஆதார வளங்களை ஒதுக்குவது அவசர அவசியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதுப்பிப்பு: இக்கட்டுரையானது புதுப்பிக்கப்பட்டு, மத்திய தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் அனில் குமாரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

(ரமேஷ் மேனன் ஒரு எழுத்தாளர். விருது வென்ற பத்திரிகையாளரான இவர், ஆவண பட தயாரிப்பாளரும் கூட. சிம்பியோசிஸ் இன்டிடியூட் ஆப் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் இணை பேராசிரியரும் ஆவார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.