மும்பை: கேரள மாநிலம், கடந்த 94 ஆண்டுகளில் இல்லாத வகையில், அண்மையில், மோசமான பருவமழையை எதிர்கொண்டது. இதில், 373 பேர் உயிரிழந்தனர். 1.2 மில்லியன் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டனர். கடந்த 2018 ஜூன் 1ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 20-க்கு இடைப்பட்ட காலத்தில், 2,378 மி.மீ. மழை பதிவாகியது; இது, இயல்பைவிட 42% அதிகம்; இந்தியாவின் மழை சராசரியை விட, 3 மடங்கு அதிகம் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடும் வானிலை நிகழ்வு, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் மாறுபாடுகள் போன்றவை, இந்தியா ஸ்பெண்ட் முன்பு கூறியது போல, வெள்ள அபாயம் என்பது மேலும் பொதுவான காரணங்கள் என்றாகிவிடும். மோசமான திட்டமிடல் உள்ளிட்டவை, பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்கு இட்டுச் செல்லும் விளைவுகளாகும். பொதுவாக, கேரளாவில் பருவமழை குறைந்து வருகிறது. இதனால் தான் மிக பலத்த மழைக்கு மாநிலம் ஆயத்தமாக இருந்திருக்கவில்லை என்று, வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர், டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு, 2018, ஆகஸ்ட் 21-ல் தெரிவித்திருந்தார்.

வெள்ள பாதிப்பின் மையமாக இருந்த இடுக்கி மாவட்டத்தில், கேரளாவில் அதிகபட்சமாகவும், இந்தியாவில் 2வது அதிகபட்சமாகவும் மழை பதிவாகி, 51 பேரை பலி கொண்டது. கடந்த 81 நாட்களில் இது, 93% அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய அளவில் அதிகபட்ச மழை, கர்நாடக மாநிலம் உடுப்பியில் (3,663 மி.மீ.) பதிவாகியுள்ளது. ஆனால் இது இயல்பைவிட, 18%-க்கும் மேலாக இல்லை.

கடந்த 2018 ஆகஸ்ட் 9ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதிக்குள், கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில், கடந்த 64 ஆண்டுகளில் இல்லாத அளவாக, இயல்பைவிட 290% அதிக மழை பெய்து, கடும் வெள்ள பாதிப்புடன், 12 பேரை பலி கொண்டது.

கேரளாவில், கடந்த 2018 ஆகஸ்ட் 9 முதல், 15ஆம் தேதி வரை, இயல்பான மழை அளவைவிட, 255% (98.8மி.மீ) கூடுதலாக பதிவாகியுள்ளது. இது, அதே காலகட்டத்தில் இந்தியாவின் சராசரியைவிட, 5 மடங்கு அதிகமாகும். அதே நேரம், கர்நாடகாவில், 80% (50.3 மி.மீ.) மழை பதிவானது. இது, அதே நாட்களில் பதிவாகும் இந்திய சராசரியைவிட, 54% அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில், 14 மாவட்டங்களை சேர்ந்த 776 கிராமங்களில், 1,398 வீடுகள் முற்றிலுமாகவும், 20,148 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்ததாக, அரசு தெரிவித்துள்ளது.

Source: India Meteorological Department

கேரளாவில், 1924ஆம் ஆண்டில், 21 நாட்களில், 3,368 மி.மீ. மழையை பெற்றது. அதனுடன் பார்க்கும் போது, தற்போது, 81 நாட்களில் 2,3 78 மி.மீ. என்பது மிக தீவிரமானதாக இல்லை. சமீபத்திய வெள்ளங்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பாதிப்புகளுடன் நேரடியான தொடர்பற்ற இணைப்பு இல்லை என்றாலும், காடுகள் அழிப்பு, மலை வனப்பகுதிகளில் மனித இடம் பெயர்வு உள்ளிட்டவற்றுக்கு தொடர்புண்டு.

இந்தியா சமீபத்தில் சந்தித்த எதிர்பாராத தீவிரமான மழை போன்றவற்றின் பின்னணியில், காலநிலை மாற்றம் உள்ளது.

கனமான, அதிக நிச்சயமற்ற மழை

கடந்த 100 ஆண்டுகளில் நகர்ப்புற இந்தியாவில் 100 மி.மீட்டர் மழை பதிவு என்பது அதிகரித்துள்ளது, 1900ஆம் ஆண்டுகளில் இருந்து 100, 150 மற்றும் 200 மி.மீ.க்கு அதிகமான மழைப்பதிவு நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன; அண்மை 10 ஆண்டுகளில் மாறுபாடு அதிகரித்து வருவதாக, 2017 ஆகஸ்டு 29ல் இந்தியா ஸ்பெண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

மழை, வெள்ளத்தால் அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடுகளில், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 1953ஆம் ஆண்டு தொடங்கி, 2017ஆம் ஆண்டு வரையிலான 64 ஆண்டுகளில், இந்தியாவில் மழைக்கு, 1,07,487 பேர் இறந்ததாக, கடந்த 2018 மார்ச் 19-ல் மாநிலங்களவையில் மத்திய நீர்கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரூ. 3,65,860 கோடிக்கு, வீடுகள், பயிர், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இது, இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 1,600-க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பலியாகின்றனர். 32 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை இது பாதிக்கிறது. மழையால் ஆண்டுக்கு 92,000 கால்நடைகள் இறக்கின்றன; ஏழு மில்லியன் ஏக்கர், அதாவது கேரளாவை விட இரு மடங்கு பாதித்து, ரூ.5,600 கோடிக்கு சேதத்தை ஏற்படுத்துவதாக, அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

வரும் 2014ஆம் ஆண்டுக்குள், தற்போதுள்ளதைவிட 6 மடங்கு மக்கள் பல்வேறு வெள்ளச்சேதங்களால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக, ‘சயின்ஸ் அட்வான்ஸ்’ என்ற இதழில் வெளியான ஆய்வை சுட்டிக்காட்டி, 2018 பிப்ரவரி 10ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்திருந்தது. அதேபோல், 2050 ஆம் ஆண்டுக்குள், இந்திய மக்கள் தொகையில் 50% பேரின் வாழ்க்கைத்தரத்தை பருவநிலை மாற்றம் குறைத்துவிடும் என்று, உலக வங்கி ஆய்வு எச்சரிக்கிறது.

மத்திய இந்தியாவை மையமாகக் கொண்ட தீவிர பருவமழையில், உள்ளூர் மற்றும் உலகச் சூழலில் சிக்கலான மாற்றங்களின் ஒரு பகுதியாக, தீவிர மழைப்பொழிவு அதிகரித்து, மிதமான மழை குறைந்து வருவது, இந்திய மற்றும் உலகளாவிய ஆய்வுகளை மதிப்பிட்டு, 2015-ல் இந்தியா ஸ்பெண்ட் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய கடும் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களுக்கு, நாம் ஏற்கனவே கூறியபடி, மோசமான திட்டமிடலே காரணம். வெள்ளத்துக்கு முக்கிய காரணம், குறுகிய காலத்தில் மிகபலத்த மழை பெய்வது, போதுமான வடிகால் வசதியில்லாதது, திட்டமிடப்படாத நீர்த்தேக்கங்களை கையாளுதல், வெள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளில் தோல்வியே காரணம் என்று, 2018 மார்ச்சில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசு பதிலளித்திருந்தது.

இந்தியாவில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பருவ மழைக்கால சராசரி மழைப்பொழிவு, 1951ஆம் ஆண்டில் இருந்து குறைந்துவிட்டது; ஆனால் இந்த மாதங்களில் மழை மாறுபாடு அதிகரித்துள்ளது. மிக மோசமான சேதம், அடிக்கடி வறட்சியும் ஏற்படுவதை, கர்நாடக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவின் மலாட் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 4 மீட்டருக்கு மேல் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதும்; மேற்கு, வடக்கு மாவட்டங்களில், 3 ஆண்டு வறட்சியால் நிலத்தடி நீர் சரிந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவை ஆகஸ்டில் புரட்டிய சீற்றம்

கர்நாடகாவில், 2018 பருவமழை காலத்தில் குடகு, சிக்மகளூர், தட்ஷின கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் மழை பெய்த போதும், ஜூன் 1 முதல், ஆகஸ்ட் 20, 2018 வரையிலான காலத்தில், 634 மி.மீ. மழை பெய்துள்ளது. இது, 615 மி.மீ என்ற இயல்பான அளவைவிட, 3% அதிகம்; இந்திய சராசரியை விட, 9% அதிகம் என்று, அரசு தரப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

கடலோர மாவட்டமான இடுக்கியில், இந்திய அளவில் அதிகபட்ச மழையாக, 3,663 மி.மீ. பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட (3,108 மி.மீ.), 18% அதிகம். 2018 ஆகஸ்டு 9 மற்றும் ஆகஸ்ட் 15-க்கு இடைப்பட்ட காலத்தில், உடுப்பியில் 640 மி.மீ. மழை பெய்தது. இது, இயல்பைவிட, 167 சதவிகிதம் அதிகம். குடகு (508.2 மி.மீ.) மற்றும் தக்‌ஷின கன்னடா (465 மிமீ) அடுத்த இடங்களை பெற்றன.

கர்நாடகாவில் மழைக்கு, 161 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில், 2018 ஆகஸ்ட் 20ஆம் தேதிப்படி, குடகு பகுதியில் 12 பேர் இறந்துள்ளனர். 2018 ஆகஸ்ட் 14 ஆம் தேதியின்படி, உடுப்பியில் கன மழை மற்றும் காற்று காரணமாக, 64 வீடுகள் சேதமடைந்தன; ரூ.35.8 லட்சம் இழப்பு ஏற்பட்டது.

மிக அதிக வெள்ளச்சேதம் ஏற்பட்ட குடகுவில், 2018, ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 15-க்கு இடையே, இயல்பு அளவை (130.3 மி.மீ.) விட 290% அதிகமான மழை பெய்தது.

Source: India Meteorological Department

இடுக்கியில் மோசமான பாதிப்பு; ஆனால் திருவனந்தபுரத்தில் அதிக மழை

கடந்த 2018, ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 15-க்கு இடையே, இடுக்கியில், 679 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது, இயல்பைவிட நான்கு மடங்கு அதிகம். தலைநகர் திருவனந்தபுரத்தில், 617% அதாவது, இயல்பான அளவை விட 6 மடங்கு அதிகம் மழை பெய்துள்ளது. இது, கேரளாவின் மற்ற மாவட்டங்களை விட அதிகம்.

கடந்த 2018, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில், 87 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழையை கேரளா சந்தித்தது. 111 ஆண்டுகளில் அதிகபட்சமான மழை, இடுக்கியில் கொட்டித்தீர்த்தது என, ஆகஸ்ட் 21, 2018-ல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2018, ஆகஸ்ட் 9 முதல், 15-ஆம் தேதிக்குள், குறைந்தபட்ச மழையாக திருச்சூரில்180.3 மி.மீ மழை பெய்தது. இது, இயல்பான அளவைவிட, 76% அதிகமாகும்.

(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.