புதுடெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில், பிப்ரவரி 7 ம் தேதி ஒரு பெரும் சோகம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, இரண்டு பாலங்களையும் ஒரு நீர்மின் திட்டத்திற்கான அமைப்புகளையும் துடைத்து எடுத்தது; மற்றொரு நீர் மின் திட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது, அத்துடன் நேரத்தில் கிட்டத்தட்ட மூன்று டஜன் மக்களை பலி கொண்டது. சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள், 2013 ஆம் ஆண்டின் மோசமான கேதார்நாத் வெள்ளத்தை நினைவூட்டுகின்றன, இது சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான உத்தரகண்ட் இமயமலையில் மோசமான அழிவுக்கு வழிவகுத்தது.

மிகப்பெரிய வெள்ளத்திற்கு என்ன காரணம் என்பதற்கு பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களும் கல்வியாளர்களும் வெவ்வேறு விளக்கங்களைக் கொண்டு வந்துள்ளனர், எனினும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

"வளர்ச்சி" என்ற மாதிரியானது இதுபோன்ற பேரழிவுகளை அதிகமாக்குவதாக, டெஹ்ராடூனில் உள்ள மக்கள் அறிவியல் நிறுவனத்தின் (PSI) நிறுவன இயக்குனர் ரவி சோப்ரா கூறுகிறார். முந்தைய திட்டக்குழு உட்பட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பல குழுக்களில், அவர் பணியாற்றி வருகிறார். உத்தரகண்டில் நீர் மின் திட்டங்களுக்கு இடமளிப்பதற்கான விதிகளை அரசு எவ்வாறு மாற்றியது என்பதை ஆவணப்படுத்திய, 'ஜூன் 2013 உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவின் போது சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் நீர்மின் திட்டங்களின் தாக்கம்' குறித்த அறிக்கை தயாரித்த நிபுணர் குழுவிற்கு சோப்ரா தலைமை தாங்கியவர்.

ஐ.ஐ.டி பம்பாய் பொறியியலாளரான சோப்ரா, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.எச்.டி முடித்தார். அவர் 14 புத்தகங்கள் மற்றும் சிறப்பு அறிக்கைகளை எழுதியுள்ளார் மற்றும் / அல்லது இணை ஆசிரியராக இருந்துள்ளார் மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் 20 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுக்கான தேசிய ஆணையத்தில் முன்னோகிய திட்டமிடல் தொடர்பான அரசின் செயற்குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.

இந்த நேர்காணலில், சாமோலி விபத்து ஏன் இனியும் கடைசியாக இருக்காது என்பதையும், உடையக்கூடிய இமயமலையால் காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான தாக்கங்களைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சோப்ரா விளக்குகிறார்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

சாமோலியில் என்ன நடந்தது என்பது நமக்கு எப்படி தெரியும்? டெஷ்ராடூனை சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் (IIRS), ரிஷிகங்காவின் நீர்ப்பிடிப்பில் 5,600 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறியது, அது புதிதாகக் குவிந்த பனியை சீர்குலைத்து அதன் கீழ்நோக்கிய இயக்கத்தைத் தொடங்கியது. வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் புவியியல் அமைப்பு(WIHG) அதன் ஆரம்ப முடிவை அறிவித்தது, இது "ரவுந்தி பனிப்பாறை பகுதியில் பாறை மற்றும் தொங்கும் பனிப்பாறைகளின் இயற்கைக்கு மாறான " என்றது.

பிப்ரவரி 7 அன்று இரண்டு நிகழ்வுகள் நடந்தன. வாரத்தின் தொடக்கத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டது. பிப்ரவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில், பிரகாசமான சூரிய ஒளி மற்றும் வலுவான சூரிய கதிர்வீச்சு இருந்தது. இது பனி உருகுவதற்கும், பனியின் கீழ் புதையுண்ட சில பனிக்கட்டிகள் பெயரவும் வழிவகுத்தது. பனி மற்றும் நீர் ஆகியவற்றின் கலவை-அது ஒரு சாய்வில் இருந்து கீழே நகரும்போது-கொடியதாக மாறியது. இது திரிஷுல் நாலாவின் செங்குத்தான சாய்வில் இருந்து கீழ் நோக்கி பாய்ந்து, அந்த பள்ளத்தாக்கில் இருந்த அனைத்து வண்டல்கள், பாறைகள் மற்றும் கற்பாறைகளை சேகரித்துக் கொண்டு நகர்ந்தது. இந்த பனிச்சரிவு ரிஷிகங்கா ஆற்றில் சாய்வின் அடிப்பகுதியை அடைந்து வெள்ளத்தை உருவாக்கியது. இதுவரை, இது ஒரு இயற்கை நிகழ்வு. இத்தகைய நிகழ்வுகள் பெரும்பாலும் இமயமலையில் தொலைதூர இடங்களில் நடைபெறுகின்றன, அவற்றைப் பற்றி நாங்கள் கேள்விப்படுவதில்லை.

இப்போது, ​​அத்தகைய வெள்ளம் கீழ்நோக்கி நகரத் தொடங்கும் போது, ​​அதற்கு நிறைய ஆற்றல் இருக்கிறது; அதன் வழியில் குறுக்கிட்டு நிற்கும் எதையும் அது அழிக்கத்தக்கது. வெள்ளம் ரிஷிகங்காவில் இருந்து நகர்ந்தபோது, ​​ஒரு பாலத்தை எதிர்கொண்டது, அதை தகர்த்தது. அடுத்த தடை, 13.2 மெகாவாட் (மெகாவாட்) ரிஷிகங்கா நீர் மின் திட்டம், அதை தாக்கி முற்றிலுமாக அழித்தது, அடுத்து தவுலிகங்கா பள்ளத்தாக்கில் நுழைந்தது, அப்போது வெள்ளம் தவுலி கங்கா ஆற்றில் பாயத் தொடங்கியது.

முதல் தடை [இங்கே] இருந்த 520 மெகாவாட் தபோவன் விஷ்ணுகாட் திட்ட தொகுப்பை, வெள்ளம் சரமாரியாக நாசம் செய்தது, சில நொடிகளில் அந்த இடம் தரைமட்டமானது. இந்த திட்டத்திற்கான சுரங்கப்பாதையிலும் தண்ணீர் நுழைந்தது, மிக விரைவாக பாறைகள் மற்றும் கற்பாறைகள் சுரங்கப்பாதையின் வாயில் நிரம்பி, அதனுள் மக்களை உள்ளே சிக்க வைத்தன. தப்போவன் திட்டத்தின் சரமாரியை அகற்றிய பின்னர், வெள்ளம் கீழ்நோக்கி நகர்ந்து இறுதியாக அலக்நந்தா பள்ளத்தாக்கில் நுழைந்தது. அலக்நந்தா மிகப் பெரிய நதி; வெள்ளம் அதன் சக்தியை சிறிது இழந்தது, பின்னர் அது அலக்நந்தாவில் ஒரு பாலத்தை இடித்தது. ஆனால், அலக்நந்தாவின் சாய்வு மேலும் படிப்படியாக மாறியதால், வெள்ளம் அதன் சக்தியை இழந்து, பிபல்கோட்டியை அடைந்த நேரத்தில், அது அமைதியாகிவிட்டது. எனவே அது இரண்டாவது நிகழ்வு.

முதல் நிகழ்வு ஒரு இயற்கை நிகழ்வு, இரண்டாவது ஒரு பேரழிவு. இது பேரழிவுக்கு காரணம், மனிதர்கள் இயற்கையின் பாதையில், ஒரு நதியின் பாதையில் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். எனவே, இந்த விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த தடையும் இல்லாதிருந்தால், எந்த சேதமும் ஏற்படாது.

சோராபரி பனிப்பாறை (2013 இல் கேதார்நாத் சோகம்) அல்லது இந்த பனிப்பாறை - சாமோலியில் நந்தா தேவி மாசிபின் ஒரு பகுதி - பனிப்பாறைகளின் ஆரோக்கியம் இந்திய இமயமலையின் நல்வாழ்வின் முக்கிய குறிகாட்டியாகும். பனிப்பாறைகள் மீதான காலநிலை மாற்றத்தின் விளைவு என்ன?

கடந்த 30 அல்லது 40 ஆண்டுகளில், இந்தியாவில் மந்தநிலை மற்றும் / அல்லது பனிப்பாறைகளின் சுருங்குதல் என்ற வடிவத்தில் புவி வெப்பமடைதலின் ஒரு திட்டவட்டமான தாக்கத்தை, பனிப்பாறை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். சிறிய பனிப்பாறைகள் உடைந்து போகின்றன - இச்செயல்பாடு துண்டுகளாக பிளவுபடுதல் எனப்படுகிறது - மற்றும் பெரும்பாலும், வெவ்வேறு துண்டு பனி மற்றும் அவை உருகுவதால் ஏரிகள் உருவாக்குகின்றன. அத்தகைய ஏரியின் சுவர் பனி மற்றும் கற்களால் ஆனது; அதுவும் உருகியதால்தான் 2013 இல் சோராபரி பனிப்பாறை காரணமாக உருவான வெள்ளம் உருவாக்கத்தை நம்மால் காண முடிந்தது.

இரண்டு பனிப்பாறைகள் மட்டுமே உள்ள யமுனை போன்ற ஆறுகள் உள்ளன, அவற்றின் மந்தநிலையும் கவலைக்கு ஒரு காரணம், ஏனெனில் இது ஆற்றில் வரும் நீர் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். உண்மையில், இரண்டின் பெரிய பனிப்பாறை யமுனை பள்ளத்தாக்கில் கூட இல்லை, அது டன் - அல்லது தமாசா - யமுனையின் முக்கிய துணை நதி; இது பண்டர்பஞ்ச் பனிப்பாறையில் இருந்து வருகிறது, அது யமுனை நதியை சந்திக்கும் போது, ​​அதில் யமுனையை விட அதிக நீர் உள்ளது. மக்கள் அறிவியல் நிறுவனமானது, காட்லிங் பனிப்பாறையில் தோன்றும் பிலங்கனா நதியை காண்கிறது. 2016 ஆம் ஆண்டில் நாங்கள் காட்லிங் பனிப்பாறை பற்றி ஒரு ஆய்வு செய்தபோது, ​​பனிப்பாறை நான்கு துண்டுகளாக உடைந்திருப்பதைக் கவனித்தோம், அவற்றில் இரண்டு அல்லது மூன்று ஏற்கனவே ஏரிகளை உருவாக்கியுள்ளன. எனவே, கவலைக்கு இதுவும் ஒரு காரணம்.

உங்கள் தலைமையிலான உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, குறிப்பாக பனிப்பாறை சுற்றுப்பகுதி மண்டலத்தில், அதிகமான அணைகள் கட்டுவதற்கு எதிராக எச்சரித்தது. ஆயினும்கூட அரசு அவற்றில் ஒரு பகுதியை அகற்றியது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் சிவப்பு வகைப்பாட்டில் இருந்தாலும், சார் தாம் யாத்திரைத் திட்டத்தை அரசு தொடர்கிறது. மலை சுற்றுச்சூழல் அமைப்பில் இந்த கட்டுமானத்தின் விளைவு என்ன?

மலைப்பகுதிகளில் சாலைகள், அணைகள், டவுன்ஷிப்கள் கட்டுவது நிச்சயமாக மலை சுற்றுச்சூழல் அமைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக, இது மலைச்சூழலின் முதுகெலும்பாக இருக்கும் காடுகளை அழிக்க வழிவகுக்கிறது. காடுகளும் நீரூற்றுகளுக்கு வழிவகுப்பவை. காடுகள் அழிந்துவிட்டால், சரிவுகளில் மண் வளத்தின் பாதுகாப்பு உண்மையில் கொஞ்சமே மிச்சமிருக்கும். எனவே, மழையுடன் மண்ணும் இறங்குகிறது, பெரும்பாலும் இது நிலச்சரிவுக்கு வழிவகுக்கும். இது நீரூற்றுகளின் இழப்புக்கும் வழிவகுக்கிறது. ஒரு திட்டத்தின் தாக்கத்தை, பனிப்பாறைகள் போன்ற தொலைதூர பகுதிகளுக்கு ஒதுக்குவது பொதுவாக கடினம். ஆனால் தொலைதூர பகுதிகளில் கூட இந்த நடவடிக்கைகள் அனைத்திலும் ஒட்டுமொத்த தாக்கம் இருப்பதை நாங்கள் அறிவோம். எனவே, எங்களிடம் அளவீடுகள் இல்லை, ஆனால் தரமான சான்றுகள் உள்ளன.

கடந்த 1988 ஆம் ஆண்டில் நாங்கள் டெஹ்ராடூனுக்கு வந்தபோது எனக்கு நினைவிருக்கிறது, நாங்கள் முசோரிக்குச் சென்றோம், எந்த நாளிலும் உயர்ந்த இமயமலையின் பனி மூடிய சிகரங்களைக் காணலாம். ஆனால் இப்போது நாம் முசோரிக்குச் செல்லும்போது, ​​பெரும்பாலான நாட்களில், உயர்ந்த இமயமலை மூடுபனியால் மூடப்பட்டிருக்கும். இந்த மூடுபனி சமவெளியில் இருந்து வரும் தூசி மற்றும் மாசுபாட்டைத் தவிர வேறொன்றுமில்லை, உயரமான இமயமலை வரை பயணிக்கிறது, அங்கு பனி மூடிய சிகரங்களின் உயரமான தடையை சந்திக்கிறது மற்றும் தூசி மற்றும் மாசுபாடுகள் அங்கு தேங்குகின்றன.

இப்போது, அதற்கு தெளிவான சான்றுகள் எங்களிடம் இல்லாதபோது கூட சமவெளிகளில் இருந்து வரும் தூசி மற்றும் மாசுபாடுகளின் தாக்கம் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இப்போது, ​​அளவீடுகள் செய்யப்படுகின்றன, மேலும் பகுதிகள், கருப்பு கார்பன் அல்லது சூட் என்று அழைக்கப்படும் சிறிய பிட்கள் உள்ளன, அவை மலை உச்சியில் இப்பகுதியைப் படிக்கச் செல்லும் மக்களால் காணப்படுகின்றன. எங்களிடம் சரியான அளவீடுகள் இல்லையென்றாலும், சில நேரங்களில் தரமான சான்றுகள் நமக்கு எச்சரிக்கையுடன் ஒரு குறிப்பைக் கொடுக்கின்றன, இது ஒரு முன்னெச்சரிக்கைக் கொள்கையைப் பயன்படுத்த வேண்டிய நேரம். இந்த நடவடிக்கைகளில் சிலவற்றின் தாக்கத்தைத் தணிக்க முன்னெச்சரிக்கை கொள்கை நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை அரசு அறிந்து கொண்டுள்ளது என்பதை நீங்கள் காண்கிறீர்களா - நீங்கள் பேசும் காலநிலை மாற்றத்தின் ஒட்டுமொத்த தாக்கமும், நீதிமன்றங்களும் தங்கள் கவலையை எழுப்புகின்றனவா?

சில நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புகளில் சில விளைவுகள் உள்ளன, சில நேரங்களில் மக்கள் எதிர்ப்பின் விளைவும் உள்ளது. உதாரணமாக, ஜி.டி.அகர்வால் மேற்கொண்ட வெவ்வேறு உண்ணாவிரதங்கள், கங்கை நதியில் சுற்றுச்சூழல் பாய்ச்சல் குறித்த கவலையை ஏற்படுத்தின. குறைந்த பட்சம் அரசு இப்போது நதிக்காக தாம் ஏதாவது செய்வதாக, சத்தமிட்டாக வேண்டும்.

சில நேரங்களில் சில அதிகாரிகளும், மத்தியில் உள்ள அரசும் நீதிமன்ற உத்தரவுக்கு அதிக பதிலளிப்பதைக் காண்கிறோம். ஆனால் மாநில அரசு, இந்த வகையான வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுப்பதில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அயராது உள்ளது. எங்களுக்கு வருவாய் தேவை என்பதே அவர்களின் வாதம். எங்களிடம் வேறு எந்த வருவாயும் இல்லை. இமயமலைப் பிராந்தியத்தின் நல்வாழ்வு முழு நாட்டிற்கும் முக்கியமானது என்பதை நிதி ஆணையங்களும் இந்திய அரசும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.

கங்கைப் படுகையை எடுத்துக் கொண்டாலும், 400-500 மில்லியன் மக்களைப் பற்றி நாம் பேசுகிறோம், கிட்டத்தட்ட அது நம் மக்கள் தொகையில் பாதி. எனவே, இமயமலை மாநிலங்களில் நமது காடுகளையும் நமது நதிகளையும் பாதுகாப்பது முக்கியம் என்பதை அவர்கள் இப்போது அங்கீகரிக்கத் தொடங்க வேண்டும், இதற்காக இமயமலை மாநிலங்களுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கு போதுமான கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

நிபுணர் குழுவின் தலைவராக இருந்து நீங்கள் தயாரித்து அளித்த விரிவான அறிக்கைக்கு பின், ஏழு ஆண்டுகள் கழித்து, களத்தில் ஏதேனும் மாற்றத்தைக் காண்கிறீர்களா?

ஆமாம், சில மாற்றங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மீண்டும், இது [அறிக்கை] கங்கை படுகையில் போதுமான சுற்றுச்சூழல் இருப்பை உறுதி செய்வதற்கான பிரச்சாரத்திற்கு பலத்தை அளித்தது. இறுதியாக, ஜி.டி.அகர்வாலின் உண்ணாவிரதம் மற்றும் பலவற்றின் காரணமாக, அரசு ஒரு கொள்கையை உருவாக்க வேண்டியிருந்தது. இரண்டாவதாக, தனியார் துறையில் பல திட்டங்கள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர திட்டங்கள் குறைந்துவிட்டதைக் காண்கிறோம். அனைத்து வகையான நீதிமன்ற வழக்குகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, கட்டுமான நேரம் மிக நீண்டதாக இருப்பதை தனியார் துறையும் உணர்கிறது; நீண்டு போகும் அந்த காலத்திற்கான கடன்களை அவர்கள் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் இது திட்டத்தின் லாபத்தை குறைக்கிறது. புதிய மாற்றீடுகள் மிகவும் மலிவானவை என்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஒரு சிறிய நீர்மின் திட்டம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 8-10 என்ற தொகைக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை உருவாக்கக்கூடும். சூரிய சக்தி ஒரு யூனிட்டுக்கு ரூ .2.5-3 என்று அதே மின்சாரத்தை வழங்கும். எனவே, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் நீர் மின் மீதான ஆர்வத்தை குறைத்துள்ளன. ஆனால் திட்டங்களும் நீதிமன்றங்களில் பிணைக்கப்பட்டுள்ளன, எனவே 2014ஆம் ஆண்டுக்கு பிறகு திட்டங்களின் உண்மையான கட்டுமானம் மிகவும் குறைவாகவே உள்ளது.

அடிப்படையில், மாநில அரசைவிட மத்திய அரசு இடைவிடாது சிறப்பாக பதில் அளித்துள்ளது.

உத்தரகண்ட் கடந்த இரண்டு-மூன்று தசாப்தங்களாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் அதிகரிப்பைக் கண்டுள்ளது, இதனால், திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர், ஹோட்டல் கட்டுமானம் போன்ற சிக்கல்களை உருவாக்குகிறது. கங்கோத்ரி தேசிய பூங்கா 2007-08 ஆம் ஆண்டில் இருந்து தினசரி மக்களின் வருகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பிறகே அது இயல்பு நிலைக்கு திரும்பியது. இதுபோன்ற நுழைவுக் கட்டுப்பாட்டின் கீழ் மேலும் பல பகுதிகளை வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

ஆமாம், அனைத்து இமயமலை நதிகளின் ஆரம்ப நீளமும் சூழல் உணர்திறன் மண்டலங்களாக கருதப்பட வேண்டும் என்று நாங்கள் வாதிட்டோம். மேலும், ஏன் கங்கை, பாகீரதி மட்டும்? அலக்நந்தா கங்கையின் ஒரு முக்கிய பகுதியாகும், எனவே பல்வேறு பனிப்பாறைகளில் இருந்து வருபவைகளும் தான். எனவே, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல அறிவிப்பைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாம் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் அல்லது இடையக பகுதியை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளதா?

இல்லை, முதல் விஷயம் நீங்கள் கொள்கையை சரியாகப் பயன்படுத்துகிறீர்கள். இப்போது, ​​அந்த இடையக மண்டலம் என்ன என்பதை யாரும் கவனிப்பதில்லை.

விஷயம் என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்துவதில் அரசு நிர்ணயம் செய்துள்ளது. எனவே, சார் தாம்ஸ் அதிக செறிவுள்ள நீளமாக மாறும், கார்பெட் பூங்கா மற்றொரு இடமாக மாறும். ஆனால் உத்தரகண்ட் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான அல்ல, ஆயிரக்கணக்கான இடங்கள் உள்ளன. எனவே, இந்த வகையான மையப்படுத்தப்பட்ட சுற்றுலாவை விட அதிகமான வழங்கப்பட்ட சுற்றுலா இருக்க வேண்டும். அப்படி இருந்தால், மற்றும் வீடு சார்ந்த சுற்றுலா தங்குமிடங்கள் இருந்தால், அது நன்மைகளை பரப்புகிறது. ஆனால், அதே நேரத்தில், சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியைக் குப்பைக்குள்ளாக்கக்கூடாது என்று கற்பிக்கப்பட்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உள்ளூர் சமூகத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?

முதலாவதாக, 1980ஆம் ஆண்டுகளில் தெஹ்ரி அணை மற்றும் நர்மதா அணைக்கு எதிரான பெரிய போராட்டங்களுக்கு பிறகு, அணை கட்டியவர்களும் எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு சொந்த உத்திகளை வகுத்துள்ளனர் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். மேலும், குறிப்பிடத்தக்க வெற்றிகரமான உத்திகளில் ஒன்று, உள்ளூர் மக்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் தரும் வேலைகள் என்றாலும், அது சில வேலைகளை வழங்குவதாகும். ஆனால் உத்தரகண்ட் போன்ற பகுதியில் வேலை வாய்ப்புகள் நம்பமுடியாத அளவிற்கு குறைவாக இருப்பதால், இது உள்ளூர் சமூகங்களை பிளவுபடுத்துகிறது. எனவே, உள்ளூர் சமூகங்கள் பிளவுபட்டுள்ளதை மீண்டும் மீண்டும் காண்பீர்கள்.

மறுபுறம், உள்ளூர் மக்களுக்கு கொண்டு வரப்படும் நேர்மறையான மாற்றங்களைப் பற்றி சமூக ஆர்வலர்கள் கற்பிப்பது முக்கியம் அல்லது மாற்று வழிகளைக் கொண்டு வரலாம். இத்தகைய சேதப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக கிடைத்த வெற்றிகள் - நாங்கள் எங்கள் சொந்த வெற்றிகளை முன்னிலைப்படுத்த மாட்டோம் என்பதாகும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.