மும்பை: விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி, விப்ரோவில் உள்ள, 7.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனது 34% பங்குகளை, அதாவது 2100 கோடி டாலரை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக, 2019 மார்ச் 13ல் அறிவித்திருப்பது, சக இந்திய தொழிலதிபர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தனிநபர்களின் பெரிய பங்களிப்பு (10 கோடிக்கும் மேலாக) பிரேம்ஜி ஒற்றை நபராக 80% என்ற பெரிய பங்களிப்பை செய்துள்ளார் என, பைன் தொண்டு நிறுவன 2019 அறிக்கை தெரிவிக்கிறது.

பிரேம்ஜியின் பங்களிப்பு, தொண்டு நன்கொடைகளாக ஏற்கப்பட்டால், இந்தியாவில் தனிப்பட்ட நபரின் மிக உயர்ந்த நிகர மதிப்பு- யு.எச்.என்.ஐ. (UHNI) கொண்டவர் ஆவார். ரூ. 25 கோடிநிகர மதிப்பு என, உண்மையில் இது 2014இல் இருந்து 2018 வரை 4% குறைந்தது, தனிநபர் என அறிக்கை வரையறுத்துள்ளது. உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளில், யு.எச்.என்.ஐ. குடும்பங்களின் எண்ணிக்கை 12% அதிகரித்தது, மேலும் 2022 ஆம் ஆண்டில் எண்ணிக்கை மற்றும் செல்வம் என இரண்டுமே இரு மடங்கு ஆகுமென எதிர்பார்க்கப்படுவதாக, மதிப்பீடு தெரிவிக்கிறது.

இந்தியாவின் செல்வந்தர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகி வருவதாக, ஜனவரி 24இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. 2017 ஆம் ஆண்டில், நாட்டின் சொத்து மதிப்பு ரூ 20,913 பில்லியன் ($ 303 பில்லியன்) உயர்ந்து, 1% என்றளவில் உயர்ந்தது. இது, மத்திய அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பிற்கு சமம் என்று, ஆக்ஸ்ஃபாம் இந்தியா அறிக்கை தெரிவிக்கிறது.

போர்ப்ஸ் 2019 பட்டியலில் இந்தியாவின் 106 பில்லியனர்கள் உள்ளனர். உண்மையில் இது, 2018 ஆம் ஆண்டில் 121 இந்தியர்கள் என்ற சாதனை எண்ணிக்கையை விட இது 12% குறைவு; 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 18% அதிகம். அத்துடன், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்ததாக, அதிக செல்வந்தர்கள் எண்ணிக்கையை உருவாக்கும் மூன்றாவது மிகப்பெரிய நாடு ஆகும்.

உயர்நிகர மதிப்பு தனிநபர்களின் பெரிய பங்களிப்புகள் 2014 முதல் 4% குறைந்தது

Source: India Philanthropy Report 2019, Bain & Company and Dasra

பிரேம்ஜி ஒரு முன்மாதிரியாக திகழும் நிலையில், பல யு.எச்.என்.ஐ. கோடீஸ்வரர்கள் அதை பின்பற்றவில்லை.

உதாரணமாக, பார்க்லே ஹுரன் இந்தியா நன்கொடை பட்டியல் 2018இல் முன்னணியில் உள்ள முகேஷ் அம்பானி, கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ. 437 கோடி நன்கொடை அளித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் இருந்து 2019 வரை அவரது சொத்து 1000 கோடி டாலர் என வளர்ந்த நிலையில், அந்த சொத்தில் இது 0.1% மட்டுமே; 5000 கோடி டாலர் அல்லது அதற்கு மேல் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் உலகளாவிய தரவரிசையில், அவர் 13வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாராளமனப்பான்மையுள்ள இந்திய கோடீஸ்வரர்களில் சிலர்-பயோகான் நிறுவன நிர்வாக இயக்குனர் கிரண் மசும்தார்- ஷாவின் நிகர மதிப்பு சுமார் 350 கோடி டாலர்கள்; அதில் 75% பணத்தை தருவதாக உறுதி அளித்துள்ளார்; இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேணி, தனது நிகர சொத்து மதிப்பான 210 கோடியில் குறைந்தபட்ச உறுதி அளித்தபடி, 50% அறக்கட்டளைகளுக்கு வழங்குகின்றனர்.

ஆண்டுக்கு பங்களித்த நிகர மதிப்பு சதவீதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு தந்த நன்கொடைகளுடன் ஒப்பிடுவதன் மூலம், பணக்கார மக்களின் 'கொடுக்கும் உத்தி’யை மதிப்பிட்டதில், யு.எச்.என்.இஅ. நன்கொடையாளர்களிடம் இருந்து மட்டும் ரூ. 40,000 கோடியில் இருந்து ரூ.60,000 கோடி (5.7-8.7 பில்லியன்) அதிகரித்துள்ளது; இந்த அறிக்கையில் மத நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்த நன்கொடைகள் உள்ளன.

உலகளாவிய அளவில் மிகச்சிறந்த தயாள குணமுள்ள சிலர் தங்கள் செல்வத்தின் மிகப்பெரிய அளவை நன்கொடை தருகின்றனர்- - 9650 கோடி பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புள்ள பில்கேட்ஸ், தனது செல்வத்தில் குறைந்தபட்சம் 37%, கேட்ஸ் அறக்கட்டளைக்கு கொடுத்துள்ளார்; வாரன் பபெட் தனது மதிப்பீட்டில் 99.5 சதவிகிதம் 8250 கோடி டாலர் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பது என்பது இந்தியாவில், வணிக துறையில் புதுமையான அணுகுமுறைகள் மூலம் இந்தியாவில் திறமையானதாக மாறியுள்ளது, எச்.என்.டபிள்.ஐ. மற்றும் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஆகியோருக்கு நல்வாழ்வில் சிறிய பங்களிப்பு இல்லை என, அசோகா பல்கலைக்கழகத்தின் சமூக தாக்கம் மற்றும் நற்பண்புகளுக்கான மையத்துடன் இணைந்து.சமூகநீதி மற்றும் சமாதானத்திற்கான சர்வதேச கூட்டணியை சேர்ந்த கரோலின் ஹார்ட்னல் 2017 செயல் அறிக்கை தெரிவிக்கிறது.

இன்னும் பரந்த மனப்பான்மை என்பது ஒரு "முக்கியத்துவம், திறமை, மூலதனத்திலும் தாக்க அளவிலும் திரும்பியது" என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது; "சூரிய ஆற்றல் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் சமூக தொழில்முனைவோர் புதிய மாதிரிகளை உருவாக்குவதற்கும், சோதனை செய்வது, ஊக்கங்கம் கொண்டு தொண்டு புரிவது மற்றும் தாக்க முதலீடு ஆகியவை வளர்ந்து வருகின்றன".

இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தால் 'சில்லறை' அல்லது தனிநபர் நன்கொடையாளர்கள் அதிகரித்து வருவதாக கூறும் அந்த அறிக்கை, "இது இந்திய தொண்டு சேவைகளின் மிகப்பெரிய கதை மற்றும் மிக பெரிய சாத்தியமான பகுதி" என்றது.

"அனைத்து வகை இணையதளம் வழியாக வழங்குதல், கூட்டமாக அளித்தல் உள்ளிட்டவை இளம் வயதினர் மத்தியில் வளர்ந்து வருகிறது," என அந்த அறிக்கை கூறுகிறது. 2009 முதல் 10 கோடி புதிய நன்கொடையாளர்கள் இந்தியாவில் சேர்ந்துள்ளதாக, Charities Aid Foundation (CAF) ஆய்வை மேற்கோள்காட்டி, ஆய்வு தெரிவிக்கிறது ( குறிப்பாக உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் உட்படஅனைத்து வயதுவந்தோர் அனைவரையும் உள்ளடக்கியது).

(ஆப்ரஹம், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.