புதுடில்லி: >இந்தியாவின் 21 பெரிய மாநிலங்களில் ஒன்பது, சுகாதாரத் துறை செயல்திறனில் சரிவை கண்டுள்ளன; இதில் ஐந்து, ஏழ்மையானவை ஆகும் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. பீகார் மிகப்பெரிய சரிவையும், ஹரியானா மிக உயர்ந்த முன்னேற்றத்தையும் கண்டுள்ளன.

>அரசின் நிதி ஆயோக் அமைப்பு, 2015-16 மற்றும் 2017-18ஆம் ஆண்டுக்கு இடையில் சுகாதாரத் துறையில் மாநிலங்களின் செயல்திறனை கண்டறிந்து ஒப்பிட்டு, ஜூன் 25, 2019 அன்று வெளியிட்ட >ஆரோக்கியமான மாநிலங்கள் முற்போக்கான இந்தியா >என்ற தலைப்பிலான அறிக்கையின் இரண்டாம் >பதிப்பில்> கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை “சிறந்த சுகாதார விளைவுகளை தரும் பலதரப்பட்ட தலையீடுகளை புரிய, மாநிலங்களைத் தூண்டுவதற்கான வருடாந்திர, முறையான கருவியாகும்”, என்று நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

>கீழ்காணும், மூன்று வகைகளின் கீழ், 23 சுகாதார குறிகாட்டிகளின் அடிப்படையில் இந்த அறிக்கை ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சுகாதார குறியீட்டைப் பெற்றது: அவை, சுகாதார விளைவுகள், நிர்வாகம் மற்றும் தகவல் மற்றும் முக்கிய உள்ளீடுகள் மற்றும் செயல்முறைகள். ‘உடல்நல விளைவுகளில்’ பிறந்த குழந்தை மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம், நிறுவன பிரசவங்கள், பிறக்கும் போது பாலின விகிதம் போன்ற குறிகாட்டிகள் அடங்கும்; 'ஆளுகை மற்றும் தகவல்' தரவு ஒருமைப்பாடு அளவை உள்ளடக்கியது, அதாவது கணக்கெடுப்பு தரவுகளுடன் அறிக்கையிடப்பட்ட தரவுகளின் சதவீதம் விலகல், மாநில மற்றும் மாவட்ட மட்டத்தில் முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகளை ஆக்கிரமித்தல் என்பதாகும். அதே நேரம் ‘முக்கிய உள்ளீடுகள் மற்றும் செயல்முறைகள்’ காலியாக உள்ள சுகாதார வழங்குநர் நிலைகளின் விகிதத்தையும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மனித வள மேலாண்மை அமைப்புகளின் விகிதத்தையும் பார்த்தன.

>சிறந்த குறியீட்டு மதிப்பெண்ணை கேரளா (74.01), அதை தொடர்ந்து ஆந்திரா (65.13) >மற்றும் மகாராஷ்டிரா (63.99) பெற்றுள்ளன. மிகக்குறைந்த மதிப்பெண்ணை உத்தரபிரதேசம் (28.61), அடுத்து பீகார் (32.11), ஒடிசா (35.97) பெற்றிருக்கின்றன.

>ஏழு மாநிலங்கள் மதிப்பெண்களில் முன்னேற்றம் கண்டன, ஒன்பது மாநிலங்கள் சரிவைக் கண்டன. இவற்றில் ஐந்து - பீகார், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசம் - நாம் ஏற்கனவே கூறியது போல், இந்தியாவின் ஏழ்மையானவை. ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவற்றுடன் இணைந்து, அவற்றின் சுகாதார குறியீட்டு மதிப்பெண்களை மேம்படுத்திய இந்த மாநிலங்கள், அதிகாரமளிக்கப்பட்ட செயல்பாட்டு குழு -ஈ.ஏ.ஜி >(EAG)> உருவாக்கியுள்ளன.

>2017-18 ஆம் ஆண்டில் ஹரியானா அதன் குறியீட்டு மதிப்பெண்ணில் அதிக முன்னேற்றத்தை கண்டது, பீகார் மாநிலமோ, மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

>ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா - முறையே ஆறு மற்றும் நான்கு என - தரவரிசையில் மிகவும் முன்னேற்றம் கண்டன. அதேநேரம், தமிழ் நாடு 2017-18 ஆம் ஆண்டில் மூன்றாம் இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்திற்கு சரிவை சந்தித்தது.

பெரிய மாநிலங்களின் சுகாதார குறியீட்டு தரவரிசை, 2015-16 & 2017-18

Source: NITI Aayog

>எட்டு சிறிய மாநிலங்களில், மிசோரம் முதல் இடத்தையும் (73.70), நாகாலாந்து கடைசி இடத்தையும் (37.38) பெற்றுள்ளது. திரிபுரா மற்றும் மணிப்பூர் சுகாதார மதிப்பெண்ணில் அதிக முன்னேற்றத்தைக் காட்டின. எட்டு சிறிய மாநிலங்களில் நான்கு ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் செயல்பாடுகளில் பெரும் சரிவை காட்டியுள்ளன.

>யூனியன் பிரதேசங்களை எடுத்துக் கொண்டால், ஒட்டுமொத்த செயல்திறனில் சண்டிகர் முதலிடத்தை பிடித்தது (63.62); டாமன் டையு மிக மோசமான செயல்பாட்டை (41.66) கொண்டிருந்தன. தாத்ரா நகர் ஹவேலியும் மிக நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

ஈ.ஏ.ஜி மாநிலங்கள் ஏன் தொடர்ந்து திணறுகின்றன

>எட்டு அதிகாரமளிக்கப்பட்ட செயல்பாட்டு குழு ஈ.ஏ.ஜி மாநிலங்களில் ஐந்து, நாங்கள் முன்பு கூறியது போல், அடிப்படை ஆண்டான 2015-16 உடன் ஒப்பிடும்போது, 2017-18 ஆம் ஆண்டில் அவர்களின் ஒட்டுமொத்த சுகாதார குறியீட்டு மதிப்பெண் சரிவைக் கண்டது. பீகார் மிக அதிக சரிவை கண்டது (-6.35); அதை தொடர்ந்து உத்தரப்பிரதேசம் (-5.08), உத்தரகண்ட் (-5.02), ஒடிசா (-3.46) மற்றும் மத்திய பிரதேசம் (-1.70).

>கடந்த 2015-16 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மூன்று பிரிவுகளின் கீழும், 2017-18 ஆம் ஆண்டில் குறிகாட்டிகளில் மோசமான செயல்திறன் காரணமாக பீகாரின் செயல்பாடு சரிந்தது என்று நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது. மாநிலத்தின் மொத்த கருவுறுதல் வீதம் - ஒரு பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை - >2015-16ஆம் ஆண்டில் 3.2இல் இருந்து 2017-18ல் 3.3 ஆக அதிகரித்தது. குறைந்த பிறப்பு எடையின் பாதிப்பு 2015-16 ஆம் ஆண்டில் 7.2% ஆக இருந்தது, 2017-18 இல் 9.2% ஆக அதிகரித்தது. பாலின விகிதம் 2015-16ல் 1,000 ஆண்களுக்கு 916 பெண்கள் என்றிருந்தஹ்டு, 2017-18ஆம் ஆண்டில் 908 ஆக குறைந்தது. அதேபோல், காசநோய் சிகிச்சை வெற்றி விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 71.9% ஆக இருந்தது - இது 2015-16 ஆம் ஆண்டில் 89.7% ஆக இருந்தது.

>தேசிய சுகாதார இயக்கம் - என்.எச்.எம் (NHM) நிதியை பீகார் மாநில கருவூலங்களில் இருந்து துறைகள் அல்லது சங்கங்களுக்கு அனுப்புவதற்கு, 2015-16ல் 40 நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில், 2017-18 ஆம் ஆண்டில் 191 நாட்கள் என்று அதிகரித்தது.

>பீகாரில், 2017-18 ஆம் ஆண்டில் தரமான அங்கீகாரச் சான்றிதழ் கொண்ட ஒரு மாவட்ட அல்லது துணை மாவட்ட மருத்துவமனை கூட இல்லை; இது 2015-16 முதல் 27.16 சதவீத புள்ளிகளின் சரிவு ஆகும்.

>உத்தரபிரதேசத்தில், குறைந்த பிறப்பு எடை, குறைந்த காசநோய் சிகிச்சை வெற்றி விகிதம், மாநில மற்றும் மாவட்ட அளவில் முக்கிய பதவிகளின் பதவிக்காலத்தின் (18.98 மாதங்கள்) மோசமான சராசரி மற்றும் குறைந்த பிறப்பு பதிவு (60.7%) ஆகியவற்றின் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டது. காசநோய் சிகிச்சை வெற்றி விகிதம் 87.5% இலிருந்து 64% ஆகவும், குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகளின் சதவீதம் 9.6% இலிருந்து 11.8% ஆகவும் அதிகரித்துள்ளது. பிறப்பு பதிவு 68.3% என்றிருந்தது 60.7% ஆக குறைந்தது.

பெரிய இந்திய மாநிலங்களுக்கான சுகாதார குறியீட்டு மாற்றம் மற்றும் தரவரிசை, 2017-18

Source: NITI Aayog

>உத்தரகண்ட் மாநிலத்தில், அதிக அளவில் பிறந்த குழந்தை மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட இறப்பு விகிதங்கள், மாவட்ட மட்டங்களில் முக்கிய நிர்வாக பதவிகளின் குறைந்த நிலைத்தன்மை, ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சி - பிரிவுகளை செய்யும் முதன்மை சுகாதார மையங்களின் செயல்பாட்டில் 30 சதவீத புள்ளி குறைப்பு மற்றும் என்.எச்.எம். நிதி பரிமாற்ற தாமதங்கள். மாநிலத்தின் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 1,000 நேரடி பிறப்புகளுக்கு 28 இறப்புகளில் இருந்து 30 ஆக உயர்ந்துள்ளது; மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம், 38 முதல் 41 ஆக அதிகரித்தது.

>ஐந்து வயதிற்கு உட்பட்ட இறப்பு மற்றும் பிறந்த குழந்தை இறப்பு விகிதங்களின் "உடனடி முடிவுகள்" பெரும்பாலான ஈ.ஏ.ஜி மாநிலங்களில் (உத்தரகண்ட் தவிர) மேம்பட்டுள்ளன; முழு நோய்த்தடுப்பு பாதுகாப்பு, நிறுவன விநியோகம் மற்றும் காசநோய் சிகிச்சை வெற்றி விகிதம் போன்ற பெரும்பாலான "இடைநிலை முடிவுகள்" "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" தேவையில்லை என்று அறிக்கை தெரிவித்தது.

ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கருக்காக என்ன வேலை செய்தது?

>ஈ.ஏ.ஜி மாநிலங்களில், ராஜஸ்தான் (+6.30), ஜார்க்கண்ட் (+5.99) மற்றும் சத்தீஸ்கர் (+1.34) ஆகியவை அவற்றின் சுகாதார குறியீட்டு மதிப்பெண்களில் முன்னேற்றங்களை கண்டுள்ளன.

>ராஜஸ்தானின் பிறந்த குழந்தை இறப்பு 1,000 நேரடி பிறப்புகளுக்கு 30 இறப்புகளில் இருந்து 28 ஆக குறைந்தது; அதன் ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு 50 முதல் 45 ஆகக் குறைந்தது. இது குறைந்த பிறப்பு எடையின் பாதிப்பை 25.5% முதல் 14% ஆகவும், பிரதேச மருத்துவமனைகளில் சிறப்பு பதவிகளில் உள்ள காலியிடங்களை 47.7% முதல் 18.4% ஆகவும் குறைத்தது.

>ஜார்கண்ட் 2015-16 முதல் 2017-18 வரை சுகாதார விளைவுகளில் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் காட்டியது: குழந்தை பிறந்த இறப்பு விகிதம் (23 முதல் 21 வரை), >ஐந்து இறப்புகளின் கீழ் (39 முதல் 33 வரை), மொத்த கருவுறுதல் வீதம் (2.7 முதல் 2.6 வரை), பிறக்கும் போது பாலின விகிதம் (1,000 சிறுவர்களுக்கு 902 முதல் 918 பெண்கள்), முழு நோய்த்தடுப்பு (88.1% முதல் 100% வரை), நிறுவன விநியோகங்கள் (67.4% முதல் 88.2% வரை) மற்றும் காசநோய் சிகிச்சை வெற்றி விகிதம் (90.9% முதல் 91.7% வரை).

>சத்தீஸ்கரின் முன்னேற்றம் “முக்கிய செயல்முறைகளில்” சிறந்த செயல்திறன் காரணமாக அமைந்தது: இது 24 மணி நேரம் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களை 40.3% முதல் 111.3% வரை (அதாவது, இலக்கு எண்ணை விட அதிகம்) முதல் மூன்று மாதங்களுக்கு முந்தைய பதிவு 74.6% முதல் 89.4% வரை மற்றும் சமூக சுகாதார மைய தரம் 47.7% முதல் 67% வரை மேம்படுத்தியது.

“முன்னணி வகிப்பவர்கள்” செயல்திறனும் குறைந்தது

>சுகாதார செயல்பாட்டில் "முன்னணி வகித்து வந்தவை" என்று அழைக்கப்படும் அதிக தரவரிசை உள்ள மாநிலங்களின் - முதல் மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண் - செயல்திறனில் சரிவு காணப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய சரிவை கண்டது தமிழகம் (-2.99); அதைத் தொடர்ந்து கேரளா (-2.55), பஞ்சாப் (-2.20).

>"ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வந்த மாநிலங்கள், இதற்கு முன்னர் மோசமான இருந்த மற்றும் மேம்படுத்துவற்கு அதிக வாய்ப்புள்ள மாநிலங்களை போல அதிக மாற்றத்தை காட்டவில்லை" என்று, நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், இந்த அறிக்கை தொடர்பான புதுடெல்லி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

>ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய நாடுகள் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் செயல்திறன் மேம்பாடு ஆகிய இரண்டிலும், மூன்றில் ஒரு பங்கு மாநிலங்களில் முதலிடத்தில் இருந்தன. பெரிய மாநிலங்களில் ஆந்திராவில் அதிக எண்ணிக்கையிலான குறிகாட்டிகள் (63%) இருந்தன, அவை “மிகவும் மேம்பட்டவை” அல்லது “மேம்படுத்தப்பட்டவை” என்ற பிரிவில் அடங்கும்.

>"ஒப்பீட்டளவில் நல்ல செயல்திறன் கொண்டிருந்தபோதும், முன்னணி வகிக்கும் மாநிலங்கள் கூட, சில குறிகாட்டிகளின் மேம்பாடுகளில் இருந்து மேலும் பயனடையக்கூடும்; ஏனெனில் அதிகபட்சமாக 74.01 என்ற குறியீட்டு மதிப்பெண் என்பதே 100ஐ விடவும் குறைவானது " என்று அறிக்கை கூறியுள்ளது.

>தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியால் அளவிடப்படும் சுகாதார குறியீட்டு மதிப்பெண்களுக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொருளாதார மேம்பாட்டு நிலைகளுக்கும் பொதுவான நேர்மறையான தொடர்பு இருப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.

>எவ்வாறாயினும் சில மாநிலங்கள் - ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், ஆந்திரா மற்றும் பஞ்சாப் - சுகாதார குறியீட்டில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளதை அறிக்கை கண்டறிந்துள்ளது.

>"இந்த மாநிலங்களின் படிப்பினைகள், இதேபோல் குறைந்த அளவிலான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள மாநிலங்களில் சுகாதார குறியீட்டு மதிப்பெண்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த சில நுண்ணறிவுகளை வழங்கக்கூடும்" என்று அறிக்கை கூறியுள்ளது. "மறுபுறம், சில மாநிலங்கள் மற்றும் கோவா, டெல்லி மற்றும் சிக்கிம் போன்ற உயர் பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட யூனியன் பிரதேசங்கள் சுகாதார குறியீட்டு மதிப்பெண்களிலும் சிறப்பாக செயல்படவில்லை" என்று அறிக்கை கூறியுள்ளது.

>(யாதவர்>, இந்தியா ஸ்பெண்ட்> சிறப்பு செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.