மாயமாகும் இந்தியாவின் நடுத்தர ஊர்கள்: நகரங்களைவிட மக்கள்தொகை அதிகமுள்ள 24,000 ‘கிராமங்கள்’ நகர்ப்புறங்களுக்கான கொள்கையை இழக்கின்றன
பெங்களூரு: வடக்கு பீகாரின் தர்பங்கா மாவட்டம், ராஹ்ரி கிராமத்தின் மக்கள் தொகை 36,000 த்துக்கும் மேல் உள்ளது; மேலும், 7,500 வீடுகள் இருப்பதாக 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது கேரளாவின் அடூர் நகரை விட அதிகம். அளவின்படி 3ஆம் தரத்தில் மூன்று படிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்நகரின் மக்கள்தொகை 29, 000 ஆகும்.
நகரங்களைவிட அதிமாக 24,000க்கும் மேற்பட்ட மக்கள்தொகையுடைய இடங்களில் ஒன்றாக ராஹ்ரி உள்ளது (மக்கள் தொகை வகைப்பாட்டின்படி, ஒரு நகரின் குறைந்தபட்ச மக்கள் தொகை 5,000 ஆகும்). ஆனால் நகர்ப்புறமாக இது வகைப்படுத்தப்படவில்லை; ஏனெனில், 25% க்கும் குறைவான மக்களே விவசாயம் சாராத தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
பரம்பூர் மற்றும் அஹியாரி போன்ற தர்பாங்காவின் வேறுசில கிராமங்கள் 10,000க்கும் அதிகமான மக்கள்தொகைய கொண்டுள்ளன; மேலும் பல, 5,000 பேஐ கொண்டவையாக உள்ளன; ஆனால் மக்கள் தொகை, அதன் அடர்த்தி அளவை சந்தித்த போதும், இவை நகர்ப்புறமாக வகைப்படுத்தப்படவில்லை. இத்தகைய கடுமையான, காலாவதியான வகைப்படுத்தல்கள், அவற்றின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டில் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
இத்தகைய 'சாம்பல்' குடியேற்றங்கள், கிராமப்புறமாக கருதப்பட்டாலும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 'பெரிய' மற்றும் 'மிகப்பெரிய' கிராமங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகிறது; இவற்றில் சுமார் 19 கோடி மக்கள் உள்ளனர். இதன் பொருள், ‘நகர்ப்புற’ மக்களுக்காக மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு, வீட்டு வசதி அல்லது வேலைவாய்ப்பு கொள்கைகளை, இத்தகைய 10% மக்கள் இழக்கின்றனர் என்பதாகும் என, பெங்களூரில் உள்ள மனிதவள தீர்வுகளுக்கான இந்திய நிறுவனம்- ஐ.ஐ.எச்.எஸ். (IIHS) பகுப்பாய்வு காட்டுகிறது.
பல்வேறு வரையறைகள் இருந்தால், அதிகாரபூர்வ மதிப்பீடுகளை காட்டிலும் இந்தியாவில் அதிகளவில் நகர்ப்புறங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த குடியேற்றங்கள் 'சாத்தியமான நகர்ப்புறம்' எனக் கருதப்பட்டால், நகர்ப்புற இந்தியாவின் முகம் மறுசீரமைக்கப்பட வேண்டியிருக்கும். இத்தகு 'சாம்பல்' குடியேற்றங்கள் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களின் வருங்கால மையங்களாக இருக்கலாம்.
இந்தியாவின் நகர்ப்புற மாற்றங்களின் வேகத்தை தக்கவைப்பதில் தோல்வி அடைந்த நகர்ப்புற கொள்கை
ஐ.ஐ.எச்.எஸ். 2011 கணக்கெடுப்பில் இருந்து 600,000 நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடியேற்றங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்து, நகர்ப்புற இந்தியா 2015: ஆதாரம் நூலின் வரைகலைகள், பூகோள வரைபட போக்குகளை பார்வையிட்டனர்: ஆதாரம். சில முக்கிய போக்குகள் உருவாகின: அதிக அடர்த்தியுள்ள கொத்தளங்கள், நிறுவப்பட்ட நகர்ப்புற மையங்களின் அருகே அமைந்தன; நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நகர்ப்புற குடியிருப்புக்கள் அதிகரித்தன; 1,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட குடியிருப்புக்கள் குறைந்தன. கடந்த முப்பது ஆண்டுகளில் 5,000 முதல் 20,000 வரை மக்கள்தொகை கொண்ட குடியிருப்புகள் அதிகரித்துள்ளன.
Sources: Census 2011 and Indian Institute for Human Settlements’ ‘Urban India 2015: Evidence’
Note: Distribution of settlements is based on Census criteria, ranging from rural hamlets to cities with million-plus populations.
சுதந்திரம் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கும் இடையே உள்ள காலங்களில் நகர்ப்புற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 1950ல் குக்கிராமங்கள், கிராமங்களில் 43% மக்கள் இருந்தனர்; 2011ல் அவர்களில் 12% பேர் என்றிருந்தது. சுமார் 24,000 குடியேற்றங்கள் தற்போது 'பெரிய' மற்றும் 'மிகப்பெரிய கிராமங்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன; அவற்றில் 190 மில்லியன் மக்கள் --இந்திய மக்கள்தொகையில் 10% க்கும் அதிகமானோர்-- வாழ்கின்றனர்.
Source: Indian Institute for Human Settlements’ ‘Urban India 2015: Evidence’
இத்தகைய போக்குகள் பெரிய நகரங்களில் கவனம் செலுத்துவதை தரும் வழக்கமானவற்றில் இருந்து, ஒரு நகர்ப்புறமயமாக்கல் என்பதை குறிக்கிறது; தமிழ்நாடு, குஜராத் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வேகமாக நகர்ப்புற மயமாதல் நடக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாநிலங்கள் முழுவதும், நகர்ப்புற மையங்களை சுற்றியே இந்த மையங்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி வலுவான இணைப்புகள் உள்ளன. ஆனால் இவை நகர்ப்புற குணாதிசயங்களை வெளிப்படுத்தினாலும் கிராமப்புறமாக அவை தொடர்ந்து வகைப்படுத்தப்படுகின்றன; ஏனெனில் 'கிராமப்புறம்' மற்றும் 'நகர்ப்புறம்' என்றே கண்டிப்பாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
Sources: Census 2011 and Indian Institute for Human Settlements’ ‘Urban India 2015: Evidence’
உதாரணத்துக்கு, பீகார் தற்போது 'நகரங்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ள 2% குடியேற்றங்களை மட்டுமே கொண்டுள்ளது; பெரும்பாலும் கிராமப்புறங்கள் உள்ள மாநிலமாகவே கருதப்படுகிறது. ஆனால் பீகாரில் உள்ள பெரிய மற்றும் மிகப்பெரிய கிராமங்களை 'நகர்ப்புறம்' என்று கருதினால், இந்தியாவில் அதிகளவாக 18% நகரங்களை கொண்டதாக அது இருக்கும்; அடுத்த இடங்களில் உத்தரப்பிரதேசம், ஆந்திரா உள்ளன.
Source: ‘Visualising the Grey Area between Rural and Urban India’ by Arindam Jana, The Administrator, Volume 56, 2015
இந்திய வரையறைகளின் தனித்துவம்: நகர்ப்புற இந்தியா என்னவாகிறது?
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி நகர்ப்புறம் என, பின்வரும் அளவுகோலை பயன்படுத்தி கூறுகிறது: நகராட்சி, மாநகராட்சி, கட்டுப்பாட்டு வாரியம் அல்லது அறிவிக்கப்பட்ட நகரப்பகுதி கமிட்டி ஆகிய அனைத்து இடங்கள். குறைந்தபட்சம் 5,000 பேர் கொண்ட அனைத்து பிற இடங்களும், குறைந்தபட்சம் 75% ஆண்கள் விவசாயம் சாராத தொழில்களில் ஈடுபடுதல். சதுர கிலோமீட்டருக்கு குறைந்தபட்சம் 400 நபர்களின் மக்கள்தொகை அடர்த்தி, 'கணக்கெடுப்பு நகரங்கள்' என வகைப்படுத்தப்பட்டன.
ஒரு குடியேற்றம் இரு வழிகளில் ஒரு நகரம் ஆகலாம்: வரையறுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தால், அது 'கணக்கெடுப்பு நகரம்' ஆகிறது; ஒரு நகரத்தை அரசே அறிவித்தால், அது 'சட்டப்பூர்வ நகரம்' என்ற அந்தஸ்தை பெறும். எனவே அனைத்து சட்டரீதியான நகரங்களும் நகர்ப்புற அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கணக்கெடுப்பு நகரங்களில் இருக்கக் கூடாது. 'கிராமங்கள்' என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறை இல்லை, நகரங்களுக்கான தகுதிகளை இல்லாத குடியேற்றங்கள் கிராமங்கள் என்று கருதப்படுகின்றன. நகரங்கள் மற்றும் கிராமங்கள் இன்னும் தங்கள் மக்கள்தொகை அளவு அடிப்படையில் துணை வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணையை பொறுத்தவரையில், நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் மக்கள்தொகை அளவு பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது; மேலும் வகைப்பாட்டிற்கான தீர்மானிக்கப்பட்ட அளவுகோல் தொழிலாளர் சக்தியின் அமைப்பு ஆகும்.
Size Classification Of Towns & Villages | |||
---|---|---|---|
Towns | Villages | ||
Classification | Population Range | Classification | Population Range |
Class I | >100,000 | Very Large Villages | >10,000 |
Class II | >50,000 and <100,000 | Large Villages | >5,000 and <10,000 |
Class III | >20,000 and <50,000 | Medium-sized Villages | >2,000 and <5,000 |
Class IV | >10,000 and <20,000 | Small Villages | >1,000 and <2,000 |
Class V | >5,000 and <10,000 | Hamlets | >500 and <1,000 |
Class VI | <5,000 | Small Hamlets | <500 |
Sources: Census 2011 and ‘Visualising the Grey Area between Rural and Urban India’ by Arindam Jana, The Administrator, Volume 56, 2015
சில அறிஞர்கள் இந்தியாவில் உள்ள 'நகர்ப்புறத்தின்' வரையறையை மீண்டும் வரையறுக்கவோ அல்லது விரிவுபடுத்தவோ முயன்றுள்ளனர். இது, நகர்ப்புறமாகக் குறிப்பிடப்படுவதால், கிராமங்களில் அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்படும் ஆனால் பெரிய நகரங்களின் நகர்ப்புறப் பகுதிகளுக்குள் வீழ்ச்சியடைகிறது. இது முக்கியம் என்றாலும், நடப்பு வரையறைகளின் உள்ளார்ந்த உட்குறிப்புகளைப் புரிந்து கொள்வதும் முக்கியமாகும்.
சுதந்திரத்திற்கு பின் தொடங்கி 2011ஆம் ஆண்டு வரை, நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்தும், கிராமங்களில் குறைந்தது -- இந்தியா போன்ற ஒரு கிராமப்புற அடிப்படையிலான விவசாய பொருளாதாரம், நகர்ப்புற சார்ந்த தொழில்துறை என-- இந்தியாவில் ஒருபொருளாதார மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்த கிராமப்புற நகர்ப்புற மாற்றத்தின் தாக்கங்கள், நகர்ப்புற குணாதிசயங்களை கொண்டிருக்கும் 'பெரிய' மற்றும் 'மிகப்பெரிய' கிராமங்களுக்கு பெரியதாக இருக்கிறது; எனினும் தொழிலாளர் சந்தை மாற்றத்தை உருவாக்க இயலவில்லை. இந்த 'நகர்ப்புற' சாம்பல் குடியேற்றங்கள் 'நகர்ப்புற' பிரதேசங்களுக்குள் மாற்றமடைந்திருந்தால், அவர்களுக்கு வேளாண் சாராத துறைகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
'சாத்தியமான நகர்ப்புறத்திற்கான' பங்கீடு
இத்தகைய 'பெரிய கிராமங்கள்' கங்கை கரையோர பகுதிகள் மற்றும் தெற்கு கரையோரம், டெல்டா பிராந்தியங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
Source: Indian Institute for Human Settlements’ ‘Urban India 2015: Evidence’
இந்த 'கிராமங்கள்' பரவலானது மாநிலங்களில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளைக் காட்டுகின்றது; ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தி தரவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி, தேசிய சராசரியில் மறைக்கலாம்.
Source: Indian Institute for Human Settlements’ ‘Urban India 2015: Evidence’
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களை ஒப்பிடும்போது, ’நகரங்கள்’ என்பதற்கான விகிதத்தை தமிழ்நாடும், மிகப்பெரிய எண்ணிக்கை அடிப்படையில் மகாராஷ்டிரா 'நகர்ப்புற மக்கள்தொகை'யை கொண்டுள்ளது.
நாட்டின் நகரங்கள் விகிதத்தில் 6.5% மட்டுமே மகாராஷ்டிரா பதிவு செய்திருந்தாலும், நாட்டின் நகர்ப்புற மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 12% (சராசரி 54,000 பேர்) வசிக்கின்றனர். மறுபுறம், இந்தியாவின் அனைத்து நகரங்களில் கிட்டத்தட்ட 14% தமிழ்கத்தில் இருக்கிறது; ஆனால் மொத்த நகர்ப்புற மக்கள் தொகையில் 8% (சராசரி 6,300 பேர்) இருந்தனர். எனவே மகாராஷ்டிராவில், பெரிய நகரங்களில் மக்கள் சிறிய அளவில் பங்கிடுகின்றனர்; தமிழ்நாட்டில், அதிகமான சிறிய நகரங்களில் மக்கள் பெரிய அதிகளவில் பங்கிடுகின்றனர்.
Sources: Census 2011 and ‘Visualising the Grey Area between Rural and Urban India’ by Arindam Jana, The Administrator, Volume 56, 2015
இப்புள்ளிவிவரங்கள், இத்தகைய மாநிலங்களுக்கு எந்த வகையான கொள்கைகள் தேவைப்படும் என்பதை மதிப்பிடுவதில் முக்கிய பங்கு வகிக்கும், சில அளவுருக்கள் மறுபரிசீலனை செய்யும்போது அளவுக்கு மீறிய ஒரு பெரிய மறுசீரமைப்புக்கு வழிவகுக்கிறது, மக்கள் இடம் சார்ந்து பங்கிடப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGS) க்கு தற்போது நகர்ப்புறங்களை இலக்காக கொண்டிருக்காத நிலையில், உதாரணமாக, பீகாரை பொறுத்தவரை, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான வளங்களை ஒதுக்கீடு செய்வதில் பெரும் தாக்கங்கள் இருக்கக்கூடும். எதிர்கால கொள்கைகளுக்கு, ஏற்கனவே நகர்ப்புற மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமா; அல்லது வரவிருக்கும் நகர மையங்களுக்கான மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டுமா? இதில் இரண்டாவது, பொருளாதாரத்தின் முதன்மை துறையின் இரண்டாம், மூன்றாம் பிரிவுகளாக மாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கும். இந்த பகுதி "நகரங்களில்" கவனம் செலுத்தும் முன்னர் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் போன்ற திட்டங்களில் இது கருதப்படவில்லை. அதே நேரத்தில், கிராமப்புறங்களில் கவனம் செலுத்தும் திட்டங்களைக் கருத்தில் கொண்டார்களா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
ஒவ்வொரு மாநில அல்லது பிராந்தியத்திற்கும் இது நகர்ப்புறமயமாக்கப்படக் கூடியதாக இருக்காது அல்லது தேவையானதாக இருக்காது. ஆயினும்கூட, மாற்று மாதிரிகளுக்கு திட்டமிட வேண்டியது அவசியம், வேளாண் வேலைகள் மற்றும் பிராந்தியங்களில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அதிக கவனம் செலுத்துகிறது. எவ்வழியிலாயினும், பெருநகரங்களில் உள்ள தீவிரத்தாண்டி, இந்தியாவின் நகர்ப்புற நுணுக்கங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது பெரு நகரங்கள் எதிர்கொள்ளும் அதே சிக்கல்களை வளர்ப்பதில் இருந்து, 'சாத்தியமான நகர்ப்புற குடியிருப்புகளை' காப்பாற்றுவதற்கு பொருத்தமான கொள்கைகளை உருவாக்க உதவும்.
இக்கட்டுரை, மனித குடியேற்றங்களுக்கான இந்திய நிறுவனங்கள் Urban India 2015: Evidence, அரிந்தம் ஜனா எழுதிய ‘Visualising the Grey Area between Rural and Urban India’ , The Administrator , 2015 நூலை தழுவி எழுதப்பட்டது. இவர், லால்பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமி இதழின் நிர்வாகி.
(அரிந்தம் ஜனா, பெங்களூரில் உள்ள இந்திய மனிதவள தீர்வு நிலையத்தில் நகர்ப்புறத் தரவு பகுப்பாய்வு பிரிவில் பணி புரிகிறார். அர்ச்சிதா எஸ், பெங்களூருவில் உள்ள இந்திய மனிதவள தீர்வு மையத்தின் வெளி ஆலோசகர் மற்றும் நகரங்கள் மற்றும் நகர்ப்புற பிரச்சினைகள் பற்றி எழுதி வருகிறார்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.