இந்தூர் மற்றும் லக்னோ: >உத்தரபிரதேச தலைநகரான லக்னோவில் இருந்து தென்மேற்கே 300 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் ஜான்சியில் உள்ள ஒரு சிறிய நகரத்தில், 14 வயது சீமா * பிப்ரவரி 2019ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். வழக்கு பதிவு செய்வதற்கு பதிலாக, குடும்பத்தினருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையே பிரச்சனையை பேசித்தீர்க்க போலீசார் முயன்றனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் சீமாவை இரண்டாவது முறையாக பாலியல் பலாத்காரம் செய்த பிறகே, முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) கூட பதிவானது. ஆனால் எஃப்.ஐ.ஆர் ஒப்புக்கு இருந்தது; >பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ) >மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) பிரிவுகள் அதில் சேர்க்கவில்லை.

இந்தியாவின் சட்ட உதவிச்சட்டத்தின் கீழ், காவல் நிலையத்தில் ஒரு சட்ட உதவி தன்னார்வலர் இருந்திருக்க வேண்டும்; வழக்கு தொடர்ந்த குடும்பத்திற்கு இலவச சட்ட உதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

“என் மகள் நிறைய கஷ்டப்பட்டாள்; அவள் எப்படி சிரிக்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டாள். அவள் மீண்டும் சிரிப்பதை பார்க்க விரும்புகிறேன்,” என்று சீமாவின் தந்தையான தலித், இந்தியா ஸ்பெண்டிடம்> கூறினார். சீமா மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று அவரது வழக்கறிஞர் கூறினார். சீமாவின் தந்தை தினக்கூலி தொழிலாளி; ஐந்து பேர் கொண்ட குடும்பத்தின் முக்கிய சம்பாதிக்கக்க்கூடியவர். அவருக்கு இலவச சட்ட உதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களது வழக்கிற்கு ஆஜராகி வரும் வழக்கறிஞர் ஜான்சி பகுதியை சேர்ந்த ஒரு சட்ட உதவி அமைப்பை சேர்ந்தவர்; சில சமூக ஆர்வலர்கள் மூலம் அவரை கண்டுபிடித்தனர்; இந்த வழக்கை இலவசமாக மேற்கொண்டு வருகின்றனர்.

போதிய உதவியைப் பெறுவதற்கான >சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டம் -1987> (எல்.எஸ்.ஏ, 1987) இன் கீழ், பாதிக்கப்பட்ட லட்சக்கணக்காண தகுதியானவர்களுக்கு சட்ட உதவி கிடைக்கிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80% பேர் சட்ட உதவி பெற தகுதி பெற்றுள்ளனர், ஆனால் 1995 முதல், 15 மில்லியன் பேர்களுக்கு மட்டுமே சட்ட சேவை நிறுவனங்கள் (எல்.எஸ்.ஐ) சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றன.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் மற்றும் ஒரு வழக்கறிஞரை நியமிக்க நிதி வழிஇல்லாமல் உள்ளவர்; ஊனமுற்றோர்; பட்டியலின சாதிகள் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட உதவிக்கு தகுதியானவர்கள்; அத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட்வர்கள், பேரிடர் அல்லது இன வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள்; காவலில் உள்ள நபர்களும் இலவச சட்ட உதவி பெறலாம் என்று, நவம்பர் 2019 இல் வெளியான டாடா டிரஸ்ட்ஸின் >இந்தியா நீதி அறிக்கை 2019> அறிக்கை கூறுகிறது.

புகார் பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள், தங்கள் தரப்பில் எந்த குறைபாடும் இல்லை என்று கூறினர். "காவல்துறையினர் சரியான நேரத்தில் செயல்படவில்லை அல்லது சரியான நேரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாததால் பாதிக்கப்பட்டவருக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், நாங்கள் அதை விசாரிப்போம்; ஆனால் அதுபற்றி எங்களுக்கு புகார் தர வேண்டும், "என்று பெயர் வெளியிட விரும்பாத காவல் அதிகாரி கூறினார்; பாதிக்கப்பட்டவர் அத்தகைய புகாரை அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதில் அனைத்து மாநிலங்களிலும் கடைசி இடத்தில் உள்ள உத்தரபிரதேசம் (உ.பி.) மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ள மத்திய பிரதேசம் (ம.பி.) ஆகிய மாநிலங்களுக்கு இந்தியா ஸ்பெண்ட்> குழு சென்றது. சட்ட உதவி முறைமைக்குள் மனிதவள பற்றாக்குறை, சட்ட உதவி கிடைப்பது குறித்த குறைவான விழிப்புணர்வு, மகளிருக்கு உதவி சட்ட உதவியாளர்கள் பற்றாக்குறை மற்றும் கண்காணிப்பு இல்லாமை ஆகியன பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவியை அணுகுவதை கடினமாக்கி இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

இந்திய நீதி அறிக்கை 2019ன் கண்டுபிடிப்புகள் அடிப்படையில் நடந்து வரும் தொடரின் மூன்றாவது பகுதி இது. முதல் பகுதி >இங்கே> மற்றும் இரண்டாவது >இங்கே>.

இந்த அறிக்கை,18 பெரிய மற்றும் நடுத்தர அளவிலான மாநிலங்களை (10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன், இந்தியாவில் 90% க்கும் அதிகமானோர் வாழ்கின்றனர்) ஒப்பிடுகிறது மற்றும் ஏழு சிறிய மாநிலங்கள் (10 மில்லியன் வரை மக்கள் தொகை) நீதி அமைப்பின் நான்கு தூண்களின் அடிப்படையில்: காவல், சிறைச்சாலைகள், நீதித்துறை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, இந்தியா ஸ்பெண்ட்> நவம்பர் 7, 2019 >அறிக்கை> செய்தது.

சட்ட உதவி இல்லாதது வழக்குகளை தாமதப்படுத்துகிறது

சரியான நேரத்தில் சட்ட ஆலோசனை வழங்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாகலாம்; வழக்கு பலவீனமடையக்கூடும், நீதி தாமதமாகும். சீமாவின் குடும்பத்தினர் முதலில் ஒரு வழக்கை பதிவு செய்ய முயற்சித்து, ஆறு மாதங்களுக்கு பிறகு தான் ஒரு வழக்கறிஞரையே கண்டறிய முடிந்தது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு எதிரான வழக்கை வலுப்படுத்தும் இந்திய சட்டத்தின் கீழ் சரியான பிரிவுகளைப் பெற வழக்கறிஞருக்கு மேலும் ஆறு மாதங்கள் ஆகின; பிறகு தான் எஃப்.ஐ.ஆரில் அது சேர்க்கப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டபோது சீமா சரியாகக்கூட விசாரிக்கப்படவில்லை என்றார்.

இந்த வழக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முந்தையது. குற்றச்சாட்டு உண்மையா? மருத்துவ பரிசோதனை முறையாக செய்யப்படவில்லையா என்று அவர்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் ஜான்சி போலீசார் தெரிவித்தனர். பலமுறை கேட்ட பிறகும் கூட, அவர்கள் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.

குடும்பத்தினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னர், அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களால் தாக்கப்பட்டனர் என்று அவர்களது வழக்கறிஞர் கூறினார். "இந்த வழக்கில், குடும்பம் உடனடியாக வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை; ஏனென்றால், காவல் நிலையத்தில் எந்தவொரு சட்ட உதவி தன்னார்வலரும் [அவர்களுக்குத் தெரிவிக்க அல்லது அவர்கள் சார்பாக தலையிட] இல்லை”.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரி, தங்கள் காவல் நிலையத்தில் சட்ட உதவி தன்னார்வலர் இல்லை என்று கூறினார்; இதனால் வழக்குகள் தாமதமாகின்றன என்று ஒப்புக்கொண்டார். "பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு வழக்கறிஞரை கண்டுபிடிப்பது தருவது காவல்துறையின் பணியல்ல," என்று அவர் எங்கள் நிருபரிடம் கூறினார்.

சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களே கூட ஒரு வழக்கறிஞரைக் கண்டறிவது கடினம். "குடும்பத்தினர் தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை நான் கண்டேன்," என்று வழக்கறிஞர் கூறினார்.

சில நிகழ்வுகளில், வழங்கப்பட்ட சட்ட உதவிகளின் தரம் மோசமாக உள்ளது.

அக்‌ஷரா*, 26, மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் கிழக்கே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர். 2018 ஆம் ஆண்டில், தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நம்பிக் கொண்டிருந்த நபர், அதை சாக்காக வைத்து தம்மிடம் பாலியல் ரீதியாக தொல்லை தருவதை அவர் உணர்ந்ததாக, இந்தியா ஸ்பெண்டிற்கு> தெரிவித்தார். >இந்திய சட்டத்தின்> கீழ், திருமணம் செய்வதாக தவறான வாக்குறுதி தந்து, சம்மதத்துடன் உடலுறவு கொள்ளப்படுவதும் கற்பழிப்பு என்று கருதப்படுகிறது.

மகளிர் காவல் நிலையத்தில் (>தானா>) உதவி ஆய்வாளர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தபோது, ​மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ​அக்ஷரா அணுகினார். அவருக்கு, இலவச மற்றும் திறமையான சட்ட உதவியை வழங்க எல்.எஸ்.ஏ சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உள்ளூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (டி.எல்.எஸ்.ஏ) பற்றி அவரிடம் கூறப்பட்டது. நடைபெற்று வரும் வழக்கு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டோம் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

"இது நடந்து ஒரு வருடம் ஆகிறது; ஆனால் நான் இன்னும் சரியான சட்ட ஆதரவை தேடி வருகிறேன்” என்று, அக்ஷரா இந்தியா ஸ்பெண்டிடம் > தெரிவித்தார். "வழக்கறிஞர் என் வழக்கில் அதிக அக்கறை காட்டவில்லை, அவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை முன்வைக்க மறுத்துவிட்டு, குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தினார்” என்றார்.

இவ்வழக்கில் வழக்கறிஞர் குறித்து இதுபோன்ற எந்த புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று, மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதியும், தேவாஸ் சட்ட சேவைகள் ஆணைய செயலாளருமான சாம்ரோஸ் கான் தெரிவித்தார். "நாங்கள் புகார்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், அவற்றை விரைவாக தீர்க்க முயற்சிக்கிறோம்," என்றார் கான். ஒரு வழக்கறிஞரின் சிறந்த முயற்சி மற்றும் புரிதல் இருந்தபோதிலும், அவை குறைந்து போகக்கூடும், ஏனெனில் சட்ட அமைப்பு என்பது ஆதாரங்கள் அடிப்படையிலானது என்று கான் கூறினார். "சில நேரங்களில், நாங்கள் ஒரு வழக்கில் தோற்றால், வழக்கறிஞர் சரியாக வாதிடவில்லை என்று பயனாளி உணர்கிறார் என்பது மிகவும் வெளிப்படையானது. இருப்பினும், வழக்கறிஞர்கள் எல்லா நிகழ்வுகளிலும் 100% முயற்சிகளை மேற்கொள்வதை நாங்கள் உறுதி செய்கிறோம்" என்றார் அவர்.

கடந்த 2018 நிலவரப்படி, 668 நீதித்துறை மாவட்டங்களில் 664 சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் 2,254 உதவிப்பிரிவு / தாலுகா சட்ட சேவைக் குழுக்கள் நிறுவப்பட்டன.

சட்ட சேவைகள் ஆணையம் இரண்டு வழிகளில் சட்ட உதவியை வழங்குகின்றன: வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலின்படி வழக்கறிஞர்கள் மூலமாகவும், சட்ட உதவி தன்னார்வலர்கள் (பி.எல்.வி) மூலமாகவும். "இந்த வழியில், நீதிமன்றத்திற்கு வெளியே ஆதரவு தேவைப்படும் நபர்களுக்கும் எங்கள் ஆதரவை வழங்குகிறோம், அதாவது ரேஷன் கார்டுகளை உருவாக்குதல் மற்றும் அரசு திட்டங்களைப் பெறுதல் போன்றவை" என்று கான் கூறினார்.

சேவைகளைப் பற்றி நிறைய பேருக்கு தெரியாது மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (டி.எல்.எஸ்.ஏ) சட்ட உதவி வசதி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. "பெரும்பாலான நேரங்களில், ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துவதற்கான வழிவகை இல்லாத கைதிகளின் வழக்குகளைத்தான் எங்கள் வழக்கறிஞர்கள் பெறுகிறார்கள்," என்று கான் கூறினார்.

காலியாக உள்ள வழக்கறிஞர், சட்ட உதவி தன்னார்வலர் பதவிகள்

சட்ட உதவி தன்னார்வலர்கள் கிடைத்தால் வழக்குத் தாக்கல் செய்வது எளிது, சட்ட சேவைகள் நிறுவனங்கள் (எல்.எஸ்.ஐ) மற்றும் சமூகத்திற்கு இடையிலான ஒரு முக்கிய இணைப்பாக சட்ட உதவி தன்னார்வலர்கள் உள்ளனர்.

2019 ஜனவரியில், 63,759 >வழக்கறிஞர்கள்> சட்ட சேவை அதிகாரிகளிடமும், 69,290 சட்ட உதவி தன்னார்வலர்களிடமும் இருந்தனர். >தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின்> (நல்சா) >சட்ட உதவி தன்னார்வலர் திட்டத்தின்>படி, ஒவ்வொரு சட்ட சேவைகள் ஆணையமும் 50 சட்ட உதவி தன்னார்வலர்களை கொண்டிருக்க வேண்டும். சட்ட உதவி தன்னார்வலர்கள் (பி.எல்.வி) எண்ணிக்கை தேவையை விட அதிகமாக இருந்தாலும், பல மாநிலங்களில் போதுமான எண்ணிக்கையை கொண்டிருக்கவில்லை.

இந்தியாவில் உள்ள 664 மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களில் (டி.எல்.எஸ்.ஏ), இது 33,200 சட்ட உதவி தன்னார்வலர்கள்ளாக இருக்கும், ஆனால் ஒன்பது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் - ஜம்மு-காஷ்மீர், உ.பி., நாகாலாந்து, அசாம், மேகாலயா, மிசோரம், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் & டையு , சண்டிகர் ஆகியவற்றில் தேவையான எண்ணிக்கையை விட குறைவாக இருப்பதாக, இந்திய நீதி அறிக்கை குறிப்பிட்டது.

மேலும், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 100,000 பேருக்கு 10க்கும் குறைவான சட்ட உதவி தன்னார்வலர்களை (பி.எல்.வி.) கொண்டிருந்தன. 2019 ஜனவரி நிலவரப்படி உத்தரப்பிரதேசம் (100,000-க்கு 1.6) அனைத்து மாநிலங்களிலும் மிகக்குறைந்த விகிதத்தைக் கொண்டிருந்தது.

36 மாநிலங்கள் மற்றும் 22 யூனியன் பிரதேசங்க்களில் 100,000 பேருக்கு 10 பி.எல்.வி.கள் என்பதைவிட குறைவாகவே இருந்தனர்

Source: India Justice Report 2019

"சட்ட உதவி தன்னார்வலர்கள் தொடர்பாக எந்தவொரு அனுமானமும் தனிமைப்படுத்த வகையில் இருக்கக்கூடாது" என்று நல்சாவின் இயக்குனர் சுனில் சவுகான் இந்தியா ஸ்பெண்டிடம் >தெரிவித்தார். சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள், வரிசை பட்டியல் செய்யப்பட்ட வழக்கறிஞர்களால் வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில் சட்ட உதவி தன்னார்வலர்கள் தான் மக்களைச் சென்றடைகின்றனர் மற்றும் ஏழைகளை சட்ட உதவி நிறுவனங்களுடன் இணைக்கின்றனர் என்று அவர் விளக்கினார். “சட்ட உதவி தன்னார்வலர்கள் எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று நல்சா வலியுறுத்துகிறது. எனவே சில இடங்களில் தேவை 50 க்கும் குறைவாக இருக்கலாம்” என்றார் அவர்.

இந்தியா முழுவதும், சட்ட உதவி தன்னார்வலர்களில் மூன்றில் ஒரு பங்கு (36% அல்லது 24,999) மட்டுமே பெண்கள் என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் பீகார் மற்றும் உ.பி. போன்ற மாநிலங்களில் பெண் சட்ட உதவி தன்னார்வலர்கள் விகிதம் முறையே 22.3% மற்றும் 24.2% ஆக உள்ளது; இதனால், பெண்கள் வழக்கு தாக்கல் செய்வதில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.

"குற்றம் சாட்டப்பட்டவர் [ஒரே] குடும்பத்தைச் சேர்ந்த பல வழக்குகளில், [வழக்கு] இருப்பின், தகவல் செய்யப்படாமல் போகிறது, ஏனெனில் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதற்கு எந்தவிதமான சட்ட உதவி அமைப்புகளும் கிடைக்கவில்லை," என்று விலக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக செயல்படும் மத்திய பிரதேசத்தின் தேவாஸை சேர்ந்த லாப நோக்கற்ற அமைப்பான ஜான் சஹாஸ் ஒருங்கிணைப்பாளர் ஆமி வெண்டுசா கூறினார். உத்தரப்பிரதேசத்தில் சட்ட உதவி அமைப்புகள் இல்லாதது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களை பாதிக்கிறது; பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் சிறுமியராக இருக்கும்போது, பெற்றோர் காவல் நிலையத்திற்கு செல்வதை தவிர்க்கிறர்கள் என்றார் அவர்.

பல்வேறு சட்டங்களின் கீழ் பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் உரிமைகோரல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட சேவை அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர் என்று சவுகான் கூறினார். "பெண் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்," மற்றும் விழிப்புணர்வு கட்டமைப்பு என்பது அதிகமான பெண்களை அணுகுவதற்கான ஒரு முயற்சியாகும், மேலும் பெண் சட்ட உதவி தன்னார்வலர்களின் சதவீத அடிப்படையில் எந்தவொரு அனுமானத்தையும் செய்வது சரியானதல்ல என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் டி.எல்.எஸ்.ஏ.க்களால் நிறுவப்பட்ட வழக்கறிஞர்களில், 18% பெண்கள் என்று இந்தியா நீதி அறிக்கை 2019 கூறுகிறது. ராஜஸ்தான், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தில் 10% க்கும் குறைவான பெண்கள்.

Source: India Justice Report 2019

பாதிக்கப்பட்ட பெண் தங்கள் துயரங்களை ஆண் உதவி சட்ட தன்னார்வலரிடம் விவரிக்க தயங்குகிறார்கள் என்று, ஆக்ராவை சேர்ந்த குழந்தைகள் உரிமை ஆர்வலர் நரேஷ் பராஸ் கூறினார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் போது கூட, பெண் காவல்துறை அதிகாரி சரியாகக் கேட்பது அரிது, பெரும்பாலும் ஆண் காவல்துறையினர் அபத்தமான கேள்விகளை கேட்கிறார்கள் என்றார்.

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பியவர்கள் இன்னும் காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அவமானத்திற்கு ஆளாகிறார்கள் என்று >அறிக்கை> கூறுகிறது; ‘எல்லோரும் என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள்: இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு நீதி மற்றும் ஆதரவு சேவைகளுக்கான தடைகள் ’, என்ற இந்தியா ஸ்பெண்ட்> நவம்பர் 2017 >கட்டுரை> தெரிவித்தது.

சட்ட சேவைகள் ஆணையங்களில் பல செயலாளர் பதவிகளும் (லோக் அதாலத்துகள், சட்ட கல்வியறிவு முகாம்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கு செயலாளர்கள் பொறுப்பேற்கிறார்கள்) காலியாக உள்ளன. 664 சட்ட சேவைகள் ஆணைய முழுநேர செயலாளர்கள் பதவிகளுக்கு, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 603 ஆகும்; இது 61 அல்லது சுமார் 10% பற்றாக்குறை. 664 பணியிடங்களில் 139 பதவிகள் காலியாக இருந்ததாக இந்திய நீதி அறிக்கை தெரிவித்துள்ளது.

நல்சாவின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக அனுமதிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சவுகான் கூறினார். "சில மாவட்டங்களில் முழுநேர செயலாளர்கள் இல்லாததால், அத்தகைய மாவட்டங்களில் சட்ட சேவைகள் ஆணையங்கள் செயல்படவில்லை என்று அர்த்தமல்ல… அத்தகைய இடங்களில், சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) பதவியில் உள்ள நீதித்துறை அதிகாரிகள் சட்ட உதவிப் பணிகளை கவனித்துக் கொள்கிறார்கள்” என்றார்.

அதிக விழிப்புணர்வு, சிறந்த கண்காணிப்பே தீர்வு

சட்ட உதவி சேவைகள் குறித்து விழிப்புணர்வு இல்லை, குறிப்பாக தொலைதூர பகுதிகளில் கிடையாது என்று, ஜான் சஹாஸுடன் தொடர்புடைய சட்ட ஆர்வலர் ராஜேந்திர பிபாலியா கூறினார்.

சட்ட சேவைகள் ஆணையங்களுடன் இணைந்த வழக்கறிஞர்கள் சில நேரங்களில் பட்டியலின சாதியினருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை எடுக்க மறுக்கிறார்கள் என்று பிபாலியா கூறினார். "இந்த வகையான வழக்குகளுக்கு அதிக முயற்சி மற்றும் நேரம் தேவை, மக்கள் அதிக முயற்சி முதலீடு செய்ய விரும்புவதில்லை, அதற்கு பதிலாக எளிதான வழக்குகளைக் கேட்கிறார்கள்" என்றார்.

ஆனால், நல்சாவின் சவுகான் அதை ஏற்கவில்லை. சட்டத்தின் பல்வேறு துறைகளில் அவர்களின் நிபுணத்துவத்தை கருத்தில் கொண்டு வழக்குகள் சட்ட சேவை நிறுவனங்களால் வழக்கறிஞர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன என்று கூறினார். நியமிக்கப்பட்ட வழக்குகளின் முன்னேற்றம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது; மேலும் அவர் ஒரு சட்ட உதவி வழக்கறிஞராக ஒருவர் அதிகாரம் பெற, குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் தேவை. உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வக்கீல்கள் கூட சட்ட சேவைகளில் ஈடுபடவராக இருக்கலாம் என்று அவர் கூறினார். சட்ட உதவியின் தரத்தை கண்காணிப்பதில் சிக்கல், இந்த நிகழ்வுகளில் கிடைக்கக்கூடிய மிகக் குறைந்த தரவுதான்; ஏனெனில் நல்சாவின் தரவு சேகரிப்பு இன்னும் ஒப்பீட்டளவில் புதிய நிலையில் உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் >தெரிவித்தனர்.

"ஆண்டு அல்லது காலாண்டுக்கு இடையிலான ஒப்பீடுகளைக் காண்பிப்பதை எளிதாக்கும் வகையில் தரவு சேகரிக்கப்பட்டால் நல்லது" என்று இந்திய நீதி அறிக்கையின் தலைமை ஆசிரியர் மஜா தாருவாலா, இந்தியா ஸ்பெண்டிடம்> தெரிவித்தார். ஆதரவின் தரத்தை மேம்படுத்த தரவு சேகரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு வழக்கின் குறிப்பிடத்தக்க அம்சம், அதன் செலவு மற்றும் நேர தாக்கங்கள், கட்சிக்காரரை எவ்வாறு சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பது போன்ற தகவல்களை வழங்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பட்டியல் வரிசையிடப்பட்டவர்களின் தகுதிகள் குறித்த தரவுகளையும் நால்சா சேகரிக்க வேண்டும் என்றார் தாருவாலா. உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தில் எத்தனை தலித்துகள் பட்டியலிடப்பட்டனர்; அதற்கு முன்பு அவர்களுக்கு எத்தனை வருட அனுபவம் இருந்தது, அவர்கள் வாடிக்கையாளருக்கு எத்தனை முறை ஆஜராகினர் என்பதை அறிய விரும்பலாம். "ஒட்டுமொத்தமாக, சட்ட உதவியைப் பயன்படுத்துபவர்களின் திருப்தி குறித்து ஒரு கணக்கெடுப்பு இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

நல்சா ஒரு மேலாண்மை தகவல் அமைப்பை உருவாக்கியுள்ளது என்று நல்சாவை சேர்ந்த சவுகான் கூறினார். ஒவ்வொரு மட்டத்திலும் அதை செயல்படுத்துவதற்கும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மாவட்டத்தில் இருந்தும் நிகழ் தரவை பெற முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த அமைப்பின் மூலம், >தேசிய லோக் அதாலத்து>களுக்காகவும் தரவு சேகரிக்கப்படுகிறது, அவை இலவசமாக, பிற வழக்கு தீர்ப்பாயங்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது வழக்குக்கு முந்தைய கட்டத்தில் தீர்வு காணப்படலாம்.

சட்ட உதவிக்கான அணுகல் ஒவ்வொரு மட்டத்திலும், எழுத்தர் முதல் உயர்நிலை வரை மேம்படுத்தப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒற்றை நிறுத்த மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று ஜான் சஹாஸ் ஒருங்கிணைப்பாளர் வெண்டுசா கூறினார்.

*பாதிக்கப்பட்டவரின் அடையாளம் தெரியாமல் இருக்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

>(மிஸ்ரா> மற்றும் ஷர்மா> முறையே போபால் மற்றும் லக்னோவைச் சேர்ந்த ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்கள். இருவரும் நிருபர்களுக்கான பான்-இந்தியா நெட்வொர்க்கான >101 ரிப்போர்ட்டர்ஸ்.காம்> உறுப்பினர்கள்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.