புதுடெல்லி: இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் - ஐ.எம்.ஆர். (IMR) 11 ஆண்டுகளில் 42% என்று குறைந்துள்ளது - அதாவது 2006ஆம் ஆண்டில் 1000 பிரசவங்களில் 57 என்று இருந்தது, 2017இல் 33 ஆக சரிந்துள்ளதாக, மே 30, 2019 அன்று வெளியான அரசின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

ஐ.எம்.ஆர். விகிதம் குறைந்துள்ள போதும், 2017 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரியான 29.4 என்பதை விட இது அதிகம்; மேற்கு ஆப்ரிக்க நாடான செனகல் மற்றும் தென் ஆசிய நாடுகளை விட - பாகிஸ்தான், மியான்மரை தவிர - அதிக விகிதம் கொண்டுள்ளது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார சூழ்நிலையில், ஐ.எம்.ஆர். என்பது ஒரு கடுமையான சுட்டிக்காட்டி என்று கருதப்படுகிறது என, உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பதிவாளர் பொது மற்றும் மக்கள்தொகை கணக்காளர் அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய மாதிரி பதிவு ஆய்வு - எஸ்.ஆர்.எஸ். (SRS) அறிக்கை தரவுகள் கூறுகின்றன. கடந்த எஸ்.ஆர்.எஸ். அறிக்கை செப்டம்பர் 2017இல் வெளியாகி இருந்தது.

கடந்த 2017இல் இந்தியாவின் கிராமப்புறங்களில் ஐ.எம்.ஆர். விகிதம் 37 மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 23 என்றிருந்தது; இந்த இடைவெளியை நிரப்ப, தேசிய அளவிலான தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் - 2005 செயல்படுத்தியும் கூட, சுகாதார தரம் மற்றும் அணுகலில் வேறுபாடு இருப்பது வெளிப்படுகிறது.

Source: Sample Registration Survey 2019, 2007

இந்திய மாநிலங்களில், 2017 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகபட்சமாக (ஐ.எம்.ஆர். 47) உள்ளது; அடுத்து அசாம் (44), அருணாச்சல பிரதேசம் (42). மத்தியப்பிரதேசத்தின் ஐ.எம்.ஆர். விகிதம், மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜருக்கு சமமானது; இதன் 80% நிலப்பரப்பு சஹாரா பாலைவனத்தில் உள்ளது; ஐக்கிய நாடுகள் மனித வளர்ச்சி குறியீட்டு எண் -2018 இல் இது கடைசியாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய மாநிலங்களில் நன்கு செயல்பட்டவை என்று பார்த்தால், நாகாலாந்து 7 என்ற மிகக் குறைந்த ஐ.எம்.ஆர். விகிதம் கொண்டுள்ளது- இது, குவைத் மற்றும் லெபனான் ஆகியவற்றுக்கு நிகரானது - அடுத்த இடங்களில்கோவா (9), கேரளா (10) உள்ளன.

அதற்கடுத்த இடங்களில் சிறிய மாநிலங்களான புதுச்சேரி (11), சிக்கிம் (12), மணிப்பூர் (12) உள்ளன (இவை, ஒரு கோடிக்கும் குறைவாக உள்ள மக்கள் தொகை கொண்டவை); இதில் புதுச்சேரி, யூனியன் பிரதேசம் (கூட்டாட்சி நிர்வகிக்கப்பட்ட பகுதி) ஆகும்.

சில மாநிலங்களில் பெரிய முன்னேற்றம்

கடந்த 2006 எஸ்.ஆர்.எஸ் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பெரிய மாநிலங்கள் (ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை) உள்ள புதுடெல்லி, தமிழ்நாடு ஆகியன 57 என்ற குழந்தை இறப்பு விகிதம் - 2006ஆம் ஆண்டில் 37% என்பது, 2017இல் 16% ஆக குறைந்தது.

ஜம்மு-காஷ்மீர் (-56%), இமாச்சலப் பிரதேசம் (-56%) மற்றும் பஞ்சாப் (-52%) போன்ற பிற மாநிலங்களிளும் இதே போன்ற சரிவை காட்டியுள்ளன.

சிறிய மாநிலங்களை பொருத்தவரை நாகாலாந்து 2006ஆம் ஆண்டில் 20% ல் இருந்து 65% குறைந்து, 2017ஆம் ஆண்டில் 7% ஆக இருந்தது. அதை தொடர்ந்து சிறிய மாநிலமான சிக்கிம் (-64%) மற்றும் யூனியன் பிரதேசங்கள் தத்ரா & நகர் ஹவேலி (-63%) மற்றும் புதுச்சேரி (-61%) என்று உள்ளன.

மற்ற மாநிலங்களில் மெதுவான மாற்றம்

இதேபோல் மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் 2006 மற்றும் 2017ஆண்டுக்கு இடையே ஐ.எம்.ஆர் விகிதம் முறையே 11% முதல் 12 வரை மற்றும் மற்றும் 40 முதல் 42 என்று உயர்ந்தது.

உத்தரகண்ட் (-5%), மேற்கு வங்காளம் (-15.8%) மற்றும் திரிபுரா (-19.4%) ஆகியவை 2006 மற்றும் 2017 க்கு இடையே ஐ.எம்.ஆர். விகிதத்தில் மிகக்குறைந்த சரிவை காட்டுகின்றன.

Source: World Bank

அண்டை நாடுகளைவிட மோசமாக உள்ள இந்தியாவின் ஐ.எம்.ஆர்.

இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் - ஐ.எம்.ஆர். ஏற்கனவே நாம் கூறியபடி 33 என்று உள்ள நிலையில், இது அண்டை நாடுகளான நேபாளம் (28), வங்கதேசம் (27), பூட்டான் (26), இலங்கை (8) மற்றும் சீனா (8) ஆகியவற்றைவிட மோசமானதாகும். ஆனால் பாகிஸ்தான் (61) மற்றும் மியான்மார் (30) ஆகியவற்றைவிட சிறப்பானது.

வீட்டுச் செல்வமும், தாய்வழி கல்வியும், குழந்தை மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன; மேலும் கல்வி பயின்ற பெண்களின் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக உள்ளதாக, மார்ச் 20, 2017 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. மேலும், செல்வவள குறியீடாக மிக உயர்ந்த அடுக்குகளில் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தையானது, ஏழ்மையான வீடுகளில் பிறந்த ஒரு குழந்தைடன் ஒப்பிடுகையில், வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மூன்று மடங்கு அதிகம் என்று, ஜனவரி 2018இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

இந்திய பெண்களில் மூன்றில் ஒரு பங்கு (35.7%) எண்ணிக்கையினரே 10ஆம் வகுப்பு அல்லது அதைவிட அதிக கல்வி பெறுகின்றனர்; ஒன்பது தனிநபர்களிடம் நாட்டின் 50%க்கு சமமான சொத்து உள்ள நிலையில், அதிக சமத்துவமின்மை நிலவுகிறது.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.