புதுடெல்லி: "இனி கபடி விளையாட வேண்டாம்; அது நல்ல விளையாட்டே அல்ல. நம் கந்தானுக்கு [குடும்ப கவுரவத்திற்கு] கெட்டதாக தோன்றுகிறது," என, 19 வயது பஹீர் சவுதாரிக்கு அவரது 21 வயது சகோதரர் அறிவுரை கூறுகிறார். கடந்த நான்கு மாதங்களாக, மும்பையை சேர்ந்த லாபநோக்கற்ற சேவை அமைப்பான அப்நாலயாவில் ஆலோசகராக இருந்து வருகிறார்.

இந்த அமைப்பானது மும்பையின் பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான கோவந்தியில் வாழும் இளைஞர்களை கபடி விளையாட, வாழ்க்கைத் திறன் பெறுவதோடு, பாலின சமத்துவம், சுகாதாரம் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பற்றி கற்றுத் தருகிறது. தற்போதைய ஆலோசகர் பணி மூலம் சவுதாரியின் தன்னம்பிக்கை வளர்ந்திருப்பதை அவர் உணந்திருந்தாலும், கபடிக்கு தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அவருக்கு சகோதரர் கட்டுப்பாடு விதித்தது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்தது.

ஆனால், சீக்கிரமே சகோதரரின் பேச்சுக்கு பெற்றோர் உடன்பட்டு, கபடி விளையாட வேண்டாமென்று அவர்களும் சவுதாரியை கேட்டுக் கொண்டனர். அப்நாலயாவின் சமூக சேவகர்கள், சவுதாரியின் நண்பர்கள், அவரது பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றனர்; ஆனால் அவர்கள் சம்மதம் தரவில்லை.

கடைசியில், சவுதாரி தனது சகோதரரை சமாதானப்படுத்த, ஒரு மாத கால இடைவெளியை எடுத்துக்கொண்டார்; இறுதியில் வேலைக்கு திரும்பினார்.

"இது அவர் விளையாட்டை விளையாடுவது மட்டுமல்ல; குடும்பத்தினர் தங்கள் மகள்கள் அதிக பிடிவாதக்காரர்களாக இருப்பதாக காண்கிறார்கள் - அவர்கள் பேசுகிறார்கள், தங்கள் கருத்துக்களை கேட்கிறார்கள் " என்ற அப்நாலயாவின் சமூக சேவகரான மாலதி மடதிலெழாம், “ஆலோச வழிகாட்டிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே, இப்பெண்களிடம் நம்பிக்கை வைத்திருப்பது ஆண் குடும்ப உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அந்த நிலைமையை கேள்விக்கு உட்படுத்துகிறது" என்றார்.

வெளிப்படையான பேசுவது அல்லது பாரம்பரிய பாலின விதிகளை மீறுவது போன்றவற்றால், பின்னடைவு அல்லது எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ளும் பருவ வயது பெண்களுக்கு அது அசாதாரணமானது அல்ல என்று, மனிதநேய அமைப்பான தஸ்ரா, 2019 மார்ச் 6ல் வெளியிட்ட புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'வினை எதிர்வினை: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பின்னடைவை எதிர்த்து போராடுவது மற்றும் சமாளிப்பது' என்ற அந்த அறிக்கை, வளரிளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுடன் பணிபுரியும் 73 அமைப்புகளின் பதில்களை அடிப்படையாகக் கொண்டது.

குறைந்தபட்சம் பெண்களுக்கு எதிராக ஒரு சம்பவம் அல்லது பாலின பாரம்பரிய நெறிமுறைகளை மீறுதல் போன்றவை நடந்திருப்பதாக, 85% அமைப்புகள் கூறியதாக அறிக்கை தெரிவிக்க்கிறது.

பதிலளித்த அமைப்புகளில் (66%) மூன்றில் இரண்டு பங்கினர், பின்னடைவானது நிகழ்ச்சிகளை நடத்த வன்முறை அச்சுறுத்தல், கள பணியாளர்களுக்கு எதிரான உண்மையான வன்முறை மற்றும் சொத்து அழிப்பு வடிவில் அனுமதிக்கும்.

நிறுவனங்களின் மூன்றில் இரண்டு பங்கு (66%) பின்னடைவை சந்தித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது;மேலும் குழப்பம், பாகுபாடு, பள்ளியில் இருந்து வெளியேற்றுதல், கட்டாய திருமணம் மற்றும் வன்முறை என்ற வடிவில் இருந்தது. பெரும்பான்மையாக இளைஞர்கள் உள்ள நிறுவனங்கள் - இளைஞர்கள் மத்தியில் தலைமைத்துவம் மற்றும் வாழ்க்கைத் திறனைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துதல்; பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் பற்றி இளையவர்களுக்கு தகவல் கொடுங்கள்; மற்றும் இளைஞர்கள் தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தை திறன் உருவாக்கம் - பின்னடைவாகும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

"துறையில் பணிபுரியும் நிறுவனங்கள் அடிக்கடி எதிர்ப்பை எதிர்கொண்டன, ஆனால் அது ஒரு திட்டமிட்ட ஆவணமாவது இல்லை. இந்த அறிக்கை ஒரு வகை எதிர்வினைக்கு ஒரு திசையை காட்டுகிறது. அதையொட்டி எதிர்நோக்குவதற்கும் அதை சுற்றி செயல்படுவதற்கும் செய்ய வேண்டும் " என்று தஸ்ராவின் இணை இயக்குனர் பிரீதி பிரபுகேட் தெரிவித்தார்.

அமைப்பின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கூறுகையில், பள்ளிக்கு செல்லும் வழியில் பையனால் ஒரு பெண் துன்புறுத்தலுக்கு ஆளாகலாம் என்று அறிந்து மகளை பள்ளியில் இருந்து விலகிவிட்டதாகவும், ஏனெனில் அவளின் நற்பெயர் கெடும் என்று பெற்றோர் அஞ்சியதாகவும் தெரிவித்தனர். அதேபோல், 44% நிறுவனங்கள், ஆண் நண்பரை கொண்டிருந்ததால் பெற்றோர் அல்லது சகோதரரால் படிப்பை பாதியில் நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினர்.

அமைப்புகளின் பாதி பேர் (51%) எதிர்மறையான சமுதாய வினைகள் அல்லது பையன்களின் தொல்லை அல்லது விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகள் போன்றவற்றை எதிர்கொண்டவர்கள்.

எதிர்பார்ப்பும் எதார்த்தமும்

சிலசமயம், அதிகார தலையீடுகளால் விருப்பங்களை வெளிப்படுத்த முடியும், ஆனால், அதோடு இளம் பெண்களின் உண்மை நிலைகள் பொருந்தக்கூடாது.

இந்திய வளரிளம் பெண்களில் 10ல் ஏழு பேர் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்கவும், நான்கில் மூன்று பேர் தங்களின் தொழில் பற்றி சிந்திப்பதாகவும், நான்கில் மூன்று பேர் தாங்கள் 21 வயதுக்கு முன்பு மணம் முடிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்ததாக, 2018 அக்டோபரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது; இது, வளரிளம் பெண்கள் நலனுக்காக செயல்படும் நாந்தி அறக்கட்டளை சார்பில் நான்ஹி கலி எடுத்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சமுதாயத்திலும் வீட்டிலும் தங்களின் தற்போதைய நிலை கணிசமாக குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்பதை பெண்கள் காணலாம்; அவர்கள், தனியாக பயணம், ஸ்மார்ட் போன் பயன்படுத்துதல், கணினியில் ஆங்கிலத்தில் தட்ட்ச்சு செய்தல் போன்ற “புதிய கால திறங்கள்” உடன் அவர்கள் போராடலாம் என்று, நான்ஹி கலி ஆய்வு கண்டறிந்தது.

பள்ளிக்கு சைக்கிளில் செல்லுதல்: சாத்தியக்கூறு உள்ள உலகம், ஆனால் வாய்ப்புகள் இல்லை

கடந்த 2017 ஆய்வு, சைக்கிள் பெற்ற பெண்கள் தங்களுக்கு உயர் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை காட்டியது; ஆனால், அது இல்லாதவர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வேலைக்கு குறைந்த வாய்ப்பே இருந்தது.

"ஒரு சைக்கிளில் பெண் ஒரு பள்ளிக்கு செல்கிறாள் என்பது, அவர் மீதான சமுதாயத்தில் உள்ள மனப்பான்மையில் மாற்றத்தை குறிக்கிறது" என்று, பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ஷபனா மித்ரா, ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் கல்லெ மூனே எழுதியுள்ளார். இவர்கள், பீகார் அரசின் 2006 ஆம் ஆண்டு சைக்கிள் வழங்கும் திட்டத்தின் தாக்கத்தை மதிப்பிட்டு, 2017ல் அறிக்கை தயாரித்தனர்.

பீகார் அரசின் முதல்வரின் பாலிகா சைக்கிள் திட்டத்தின் கீழ், ஒன்பதாம் வகுப்பு பெண் குழந்தைகள், ரூ.2000 பெற்று, பள்ளிக்கு செல்ல சைக்கிளை வாங்கிக் கொள்ள வேண்டும். இத்திட்டம் பள்ளிக்கு பெண்கள் சேர்க்கை மேம்பாட்டில் வெற்றி பெற்றது - முதல் ஆண்டில், 30% அதிகரித்தது - இத்திட்டத்தில் விரயம் (பணத்தை சுரண்டுதல் போன்ற) 5% க்கும் குறைவாகவே இருந்ததாக வெவ்வேறு ஆய்வுகள் காட்டின.

திட்டம் தொடங்கிய பத்து ஆண்டுகளுக்கு பிறகு மித்ரா மற்றும் மூனே இருவரும், சமுதாயத்தில் பெண்களின் பங்கு பற்றி ஆண்கள் மற்றும் பெண்களின் மனப்பான்மையில் உள்ள மாற்றங்களை அறிந்தனர்.

உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் 10,000 பெண்களை ஒப்பிட்டதில் ஆராய்ச்சியாளர்கள் சைக்கிள் பெற்ற பெண் 10ஆம் வகுப்பை முடிக்க 30% வாய்ப்பு இருப்பதையும், 12ஆம் வகுப்பை முடிக்க 25% வாய்ப்புள்ளதையும் கண்டறிந்தனர். அதேபோல் பீகார் சூழலில் ஒரு சைக்கிள் பெற்ற பெண், கல்லூரி படிப்பை முடிக்க 5% அதிக வாய்ப்பிருப்பதும் தெரிய வந்தது.

அதேபோல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மற்றொன்று, சைக்கிள் பெற்ற பெண்கள் வேளாண் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு 4% குறைவு என்பதாகும். 45% பெண்கள், தாங்கள் பணிக்கு செல்ல விரும்புவதாகவும், ஆனால் குடும்பத்தினர் எதிர்ப்பதாகவும் கூறினர்; 10% பேர் தங்களுக்கு பொருத்தமான பணி கிடைக்கவில்லை என்றனர்.

பிரதான தொழிலான விவசாயத்தில் பணி வாய்ப்புகள் இருந்த போதும், குறைந்த கூலி போன்ற காரணங்களால் பெண்கள் தேர்வு செய்வதில்லை; ‘பொருத்தமான’ பணிக்கு காத்திருப்பதாக கூறியதாக, ஆய்வு ஆசிரியர்கள் எழுதியிருந்தனர்.

அதே நேரம் சைக்கிளை பெற்ற பெண்கள் தங்கள் திருமணத்தை குறைந்தபட்சம் 6 மாதங்கள் தள்ளிப்போட விரும்புவதும் இதில் தெரிய வந்துள்ளது.

"பெண்கள் பல வழிகளில் சக்தி வாய்ந்தவர்களாவர், ஆனால் இப்போது அவை சுதந்திரம் என்ற வடிவாக மாற்றப்பட வேண்டும். மாநிலத்தின் அதிக முயற்சிகள் மற்றும் புதிய கொள்கைகளுக்கு இது தேவைப்படுகிறது - மேலும் வேலைகளை உருவாக்குவதற்கும் கூட "என்று ஆய்வு ஆசிரியர்கள் எழுதினர்.

கல்வியின் பல மறைமுக, நீண்டகால பயன்கள் உள்ளன. உதாரணமாக, 12 ஆம் வகுப்பு முடித்த பெண்கள், 18 வயதுக்கு மேலானவர்கள் இளம் வயதில் கர்ப்பமாவதை குறைவாகவே விரும்புகின்றனர்; குழந்தைகளுக்கு இடையே குறுகிய இடைவெளி, இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களாக உள்ளனர் என்று, 2018 ஜனவரி 22ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், அதிகரித்த கல்வி பெரியளவில் தொழிலாளர் பங்களிப்புக்கு தானாகவே ஏற்படுத்துவதில்லை என்று, மேரிலாந்த் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சோனால்டி தேசாய், 2019 மார்ச் 7ல் தி இந்து நாளிதழில் எழுதியிருந்தார்.

கடந்த 1993-94 மற்றும் 2011-12 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே கிராமப்புறங்களில் கல்வியறிவு இல்லாத பெண்களின் பங்கேற்பு மற்றும் நகர்ப்புறங்களில் 5% புள்ளி குறைவு ஆகியவற்றில் இந்தியா 11.5% சரிவை கண்டது.ஆயினும், கல்லூரியில் கல்வி பயின்ற பெண்களிடமும் இதே போன்ற சரிவு காணப்பட்டது,; இது கிராமப்புற இந்தியாவில் 8%, நகர்ப்புற இந்தியாவில் 4% குறைந்திருந்ததாக, 2017 செப்டம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

"கட்டுமானத் தொழில், விவசாயத் தொழில் மற்றும் வேளாண் அல்லாத வேலை உட்பட தங்களது தாய்மார்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வித் துறையில் தங்கள் நம்பிக்கையை முதலீடு செய்துள்ள இரண்டாம்நிலை பள்ளி பட்டதாரிகளுக்கு சிறிய நம்பிக்கையை தருகின்றன. இருப்பினும், ஒயிட் காலர் பணி கிடைக்காதது அல்லது நீண்ட காத்திருப்பு தேவைப்படுவது மற்றும் பிரம்மாண்ட பொருளாதாரத்தில் சிறிய வேலை பாதுகாப்பை அளிக்கின்றன, " என்று தேசாய் தி இந்துவில் எழுதியிருந்தார்.

பின்னடைவை எதிர்கொள்வது எப்படி

இத்தகைய பின்னடைவுகளை முன்கூட்டியே எதிர்கொள்ள அல்லது எதிர்ப்பதற்கு, சமூகத்தில் கள ஊழியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது; மற்றும் தாமதமாக திருமணம் செய்து கொண்ட நேர்மறை முன்மாதிரிகளை மேற்கோள்காட்டி, கர்ப்பத்தை தாமதப்படுத்தி குடும்பத்தின் நற்பெயரை பாதிக்காமல் அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகள் செய்ய வேண்டும் என்று தஸ்ரா அறிக்கை கூறுகிறது.

பாரம்பரிய நெறிமுறைகள் பற்றி கேள்வி கேட்கும் முன்னோடிகளால் அடிக்கடி எதிர்ப்பை சந்திக்கும்போது, பெண்கள் மத்தியில் நடத்தைகள் புதிய வடிவங்களுக்கேற்ப மாற்றப்படுவதை அது சிதைகிறது என்று, அறிக்கை குறிப்பிடுகிறது.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.