புதுடெல்லி: குழந்தைகளின் நல்வாழ்வை மதிப்பிடும் ஒரு குறியீட்டில், உலகின் 176 நாடுகளில் 113 வது இடத்தில் இந்தியா உள்ளது. குழந்தைப் பருவத்தின் குறியீட்டு முடிவு என்பது, உலக குழந்தைப்பருவ அறிக்கையின் (Global Childhood Report) ஒரு பகுதியாக, குழந்தைகளின் நல உரிமைக்காக பணியாற்றும் லாப நோக்கமற்ற அமைப்பான ‘குழந்தைகளை காப்போம்’ (Save the Children) அமைப்பால், மே 28, 2019 இல் வெளியிடப்பட்டது.

இக்குறியீடானது எட்டு நாடுகளின் குறிகாட்டிகளை குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் (0-19 ஆண்டுகள்)நல்வாழ்வுக்காக மதிப்பிட்டது: அதாவது ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு, வளர்ச்சியைத் தூண்டும் கல்வி, குழந்தைத் தொழிலாளர், இளம் வயது திருமணம், இளம் வயது பிரசவம், மோதல்களால் இடம் பெயர்வு மற்றும் குழந்தைத் தற்கொலை ஆகியவற்றை மதிப்பிட்டது. இறுதியாக, 1,000 என்பதற்கான மதிப்பெண்கள் பெறப்பட்டு, அதன்படி நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டன.

கடந்த 2000 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் மதிப்பெண், முதல் 769 வரை என்று உயர்ந்தது.2018 ஆம் ஆண்டில் இந்தியா 172 நாடுகளில் 116ஆவது இடத்தை பெற்றிருந்தது, இந்தாண்டு 176 நாடுகளில் 113ஆம் இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும், 2000 ஆவது ஆண்டில், ஏறத்தாழ 97 கோடி குழந்தைகள் இக்காரணங்களால் தங்களது குழந்தை பருவத்தை இழந்தனர். நடப்பு 2019ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 29% வீழ்ச்சியடைந்தது 69 கோடியாக இருக்கும்.

உலகளாவிய சுகாதார மற்றும் கல்வி உறுதிப்படுத்த குழந்தைகளின் நல்வாழ்வை மேம்படுத்த உதவும் வகையில் பொது முதலீடுகளின் அதிகரிப்பு மற்றும் விளிம்புநிலை குழந்தைகளை இலக்காகக் கொண்ட திட்டங்கள் மூலம் விவாதிக்க வேண்டும் என்று, அந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது.

குழந்தைகளுக்கு உணர்தல் சமூக பாதுகாப்பு மூலம் அவர்களுக்கு குறைந்தபட்ச நிதி பாதுகாப்பு தேவையை, அரசு செயற்பட்டியலில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அந்த அறிக்கை, குழந்தைகளின் வறுமையை குறைப்பதற்கு அர்ப்பணித்த பட்ஜெட் திட்டங்களுடன் சேர்ந்து தேசிய நடவடிக்கை திட்டத்தை ஏற்க வேண்டும்; வறுமையில் இருந்து மீள்வது தொடர்பானமுன்னேற்றங்களை கண்காணிக்கும் அமைப்புகள் சிறந்த குழந்தை பருவ விளைவுகளை அடைவதற்கு உதவும். என்கிறது.

5 வயதுக்குட்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு இறப்பை ஏற்படுத்தும் தொற்று நோய்கள்

கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 55% குறைக்கப்பட்டுள்ளது; அதாவது, 2000 ஆம் ஆண்டில் 1000 இறப்புகளில் 88 என்றிருந்தது, 2017 ஆம் ஆண்டில் 1,000 பிரசவ இறப்புகளில் 39 மரணம் என்று குறைந்ததாக, இந்த 2018 அறிக்கையின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆயினும்கூட இது மில்லினியம் வளர்ச்சி குறிக்கோளான 1,000 பேருக்கு 25 அல்லது அதற்கு குறைவான இறப்புக்கள் என்ற நிலையை எட்டவில்லை.

இந்த மரணங்களுக்கு பெரும்பாலும் தடுக்கக்கூடிய தொற்றுநோய்களும், காயங்கள், மெனிசிடிஸ், தட்டம்மை மற்றும் மலேரியா போன்றவை காரணமாக உள்ளன.

அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இறப்பு விகிதம், அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போதுபாகிஸ்தானை விட(74.9) மட்டுமே இந்தியாவில் குறைவாக இருந்துள்ளது. இலங்கை (8.8), சீனா (9.3),பூட்டான் (30.8), நேபாளம் (33.7) மற்றும் வங்கதேசம் (32.4) ஆகியன இந்தியாவை விட சிறந்தது.

38.4% இந்திய குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடு

கடந்த 2000 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில், வளர்ச்சி குறைபாடு- அதாவது வயதுக்கேற்ற உயரமின்மையால் - பாதித்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை உலகளாவிய அளவில் 25%, அதாவது - 19.8 கோடி குழந்தைகள் என்பது 14.9 கோடியாக குறைந்துள்ளது. இந்த குறைப்புக்களில் 50%க்கும் அதிகமானவை சீனா, இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த 2018ன் படி, இந்தியாவில் 38.4% குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர்; அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் (40.8%) நாட்டிற்கு அடுத்ததாக, இரண்டாவது மோசமான செயல்திறன் இதுவாகும். இந்த பிராந்தியத்தில் சீனா (6%) குறைந்த விகிதத்தை கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து நேபாளம் (13.8%), இலங்கை (17.3%),வங்கதேசம் (17.4%) மற்றும் பூட்டான் (19.1%) என்று அறிக்கை கூறுகிறது.

இதில், இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே பரவலான வேறுபாடுகள் உள்ளன - பீகாரில் வளர்ச்சிக்குறைபாட்டால் 48.3% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஜார்கண்டில் 45.3%, சத்தீஸ்கரில் 37.6%, குறைந்தபட்சமாக கேரளா 19% என்ற விகிதத்தில் உள்ளது. தமிழ்நாடு (27.1%) என்ற விகிதத்தில் இருப்பதாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு, 2015-16 தரவுகள் கூறுகின்றன.

5இல் 1 இந்திய குழந்தைக பள்ளியில் இல்லை

இந்தியா, அதன் குழந்தைகளுக்கு இலவசமாக உலகளாவிய கல்வி வழங்குவதில் முன்னேற்றங்களை கண்டிருந்தாலும், அவர்களில் 20.2% (8-16 வயதிற்குட்பட்டவர்கள்) 2018 ஆம் ஆண்டு வரை பள்ளியில் சேரவில்லை என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதன் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தானை (40.8%)விட இந்தியா சிறப்பாக இருக்கிறது. அதேநேரம் இலங்கை (6.4%), நேபாளம் (13.8%), வங்கதேசம் (17.4%), பூட்டான் (19.1%) மற்றும்சீனா (7.6%) ஆகியன சிறந்து விளங்குகின்றன.

கடந்த 2018இல் உலகெங்கிலும் 15.2 கோடி குழந்தைகள், பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக கூறும் அந்த அறிக்கை, இத்தகைய குழந்தை தொழிலாளர்கள் மட்டுமே உருவாக்கும் ஒருநாடு உலகின் மக்கள் தொகையில் ஒன்பதாவது மிகப்பெரிய இடத்தை வகிப்பதாக அது தெரிவிக்கிறது.

உலகிலேயே அதிக குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று, 2017 ஜூன் 7இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது; இது அவர்களின் கல்வியை பறித்து, பாதுகாப்பற்ற மற்றும் மாசுபட்ட சுற்றுச்சூழலுக்கு அவர்களை உட்படுத்தி, - மீள முடியாத சுகாதார சேதத்திற்கு வழிவகுத்தது.

2000 - 2018 ஆண்டுக்கு இடையே இந்தியாவில் குழந்தை திருமணம் 51% சரிவு

கடந்த 2018 உடன் முடிந்த 18 ஆண்டுகளில் இந்தியா குழந்தை திருமணம் என்பது பாதியாக குறைந்தது. மற்றவர்களை போலவே ஏழை பெண்களின் குழந்தை திருமண விகிதங்கள் குறைந்துள்ளன என்று அறிக்கையின் தரவுகள் கூறுகின்றன. 15 வயதிற்கும் குறைவான பெண்கள் மத்தியில் இந்த வீழ்ச்சி மிக வேகமாக உள்ளது.

கடந்த 1978 ஆம் ஆண்டில், இந்தியாவில் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 15இல் 18 ஆகவும், ஆண்களுக்கு 18 வயது என்பது, 21 வயதாகவும் அதிகரிக்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளில் குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த, குழந்தைகள் திருமண தடை சட்டம் - 2006 என்பது போன்ற சட்டத்தின் மூலமாகவும்; ராஜிவ் காந்தி வளரிளம்பெண்களுக்கு அதிகாரம் தரும் திட்டம் ('சப்லா' என்று அழைக்கப்படுகிறது), கிஷோரி சக்தி யோஜனா மற்றும் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து திட்டம் போன்ற திட்டங்கள் வாயிலாகவும் இந்தியா பணிபுரிந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி, பெண்கள் கல்வி அதிகரிக்கும் விகிதங்கள் மற்றும் அரசின் செயல்திறன்மிக்க முதலீடுகள் போன்றவையே, இது குறைவதற்கு காரணம் என்கிறது அறிக்கை. சமூக அடிப்படையிலான தலையீடுகள்பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார தகவல், தொழில் பயிற்சி மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துதல் போன்ற முக்கியமான அம்சங்களும் முக்கிய காரணங்களாக இருந்தன. குழந்தைப் பருவ கல்வி கற்க, நிபந்தனைக்கு உட்பட்ட பண இடமாற்றங்கள் போன்ற திட்டங்களும், குழந்தை திருமணத்தை குறைக்க உதவியுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

20 ஆண்டுகளில் இந்தியாவில் பதின்ம வயது பிரசவம் 63% சரிவு

கடந்த 2000 ஆண்டு முதல் பருவ பிறப்புகளை இந்தியாவால் 63% குறைக்க முடிந்தது; இது 20 லட்சத்திற்கும் குறைவான இளம் தாய்மார்கள் உருவாவதை தடுத்தது. இந்தியாவில் மட்டும் பதின்பருவ பிரசவங்களில் உலகளாவிய குறைப்புக்களின் முன்னேற்றம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியாய் உள்ளது -அதாவது 1.6 கோடியில் இருந்து 1.3 கோடியாக குறைந்துள்ளது.

இளம் பதின்ம வயதில் குழந்தை பிரசவம் என்பது குழந்தைக்கு மட்டும் ஆபத்து விளைவிப்பதல்ல, தாயாக உள்ள 14 முதல் 19 வயது வரையிலான பெண்களின் மரணத்திற்கும் முக்கிய காரணியாக உள்ளது.

இந்தியாவின் முன்னேற்றம், அதன் சமூகநலத் திட்டங்களின் விளைவாக, அதிகமான பெண்கள் பள்ளியில் தங்குவதற்கு உதவியது, மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை அதிகரித்துள்ளது.

கடந்த 2018ன் படி, பதின்பருவ பெண்களின் பிரசவங்கள் - அதாவது 15- 19 வயதுக்குட்பட்டவர்கள் - இந்தியாவில் 1000 பேரில் 24.5 என்ற விழுக்காட்டில் சீனாவியை (6.5) அதிகமாக இருந்தது. இதில் இலங்கை (14.8) மற்றும் பூட்டான் (22.1) , மற்றும் பாகிஸ்தான் (37.7), நேபாளம் (62.1) மற்றும் வங்கதேசம் (84.4) என்ற விகிதத்தை கொண்டிருந்தன.

(சனா அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.