கேரளாவில் பண மதிப்பிழப்பு மந்தநிலைக்கு பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் மோசமான விளைவுகள்
பெரும்பாவூர் (கேரளா): எழுதப்படிக்க தெரியாத கட்டடத் தொழிலாளியான ஜலாலுதீன் ஷேக், தனது சிறப்பான எதிர்காலத்திற்காக, சொந்த ஊரான வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் இருந்து 2,500 கி.மீ. பயணம் செய்து, விவசாய உற்பத்தி, ஒட்டுப்பலகைகள் மற்றும் பல்வேறு சிறிய அளவிலான தொழில்களுக்கு நன்கு அறியப்படும் கேரளாவில் எழில்மிகு நதிக்கரையோர நகரான கொச்சிக்கு வந்தார்.
கேரளாவில் வளமான வாய்ப்புகளை அறிந்திருந்த ஜலாலுதுதீன்,40, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வரை மகிழ்ச்சியாகவே இருந்தார்; ஒவ்வொரு மாதமும் கட்டுமான பணிகள் மூலம் ரூ. 22,000 சம்பாதித்து, அதில் ரூ. 15,000 சேமிப்பு, தனது வீட்டிற்கு அனுப்புவதற்கு போதுமானதாக இருந்தது.
நாட்டில் 86% புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை, கடந்த 2016, நவம்பர் 8ஆம் தேதி செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பிறகு எல்லாமே மாறிவிட்டது.
ஜலாலுதீனின் வாழ்க்கை, 2017 ஜூனுக்கு பிறகு மிக மோசமானது, அதாவது ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரி (GST) - அவசரப்பட்டு பல குழப்பங்களுக்கு மத்தியில் செயல்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது - அது அமலுக்கு வந்த பிறகு திண்டாடினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சிக்கல் நிறைந்த ஜி.எஸ்.டி. அமலுக்கு பிறகு வர்த்தகங்கள் தேக்க நிலையை எட்டின; கணக்கிலடங்காத நிறுவனங்கள் மூடப்பட்டன.
கேரளாவின் வருமானத்தில் 36%, அரபு நாடுகளில் வசிக்கும் கேரளவாசிகள் மூலம் கிடைக்கிறது. கத்தாருக்கு எதிராக திரும்பிய அரபு நாடுகளின் நிலைப்பாட்டால் பதற்றம் ஏற்பட்டு, கேரளாவுக்கான வருவாய் சரிந்தது. 2010இல் எண்ணெய் வளம் வீழ்ச்சியடைந்தபோது, வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட மந்தநிலையால், நெருக்கடி உண்டானது. ஊதியங்கள் இல்லாது, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் வளைகுடாவில் இருந்து தடைபட்டதால், கேரளாவில் கட்டுமானத்துறை தடுமாறியது; இதன் மூலம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்குள் உள்ளாகினர்.
தனிநபர் வருவாயில் இந்திய அளவில் ஏழாவது பெரிய மாநிலமான உள்ள கேரளாவில், மொத்தமுள்ள 3.3 கோடி பேரில், 25 லட்சம் பேர் அதாவது, 14 பேரில் ஒருவர் புலம் பெயர்ந்த தொழிலாளி என, கேரள தொழிலாளர் நலத்துறைக்காக, Gulati Institute of Finance and Taxation என்ற அமைப்பு நடத்திய 2013 ஆய்வு தெரிவிக்கிறது. தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 17,500 கோடியை தாயகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அரசு இப்பொழுது மில்லியன் கணக்கில் குடியேறியவர்கள் பற்றி நம்புகிறது, இதில் கால் பகுதி எண்ணிக்கை 2018ஆம் ஆண்டிற்காக திட்டமிடப்பட்டது. ஆய்வின் துல்லியத்தன்மை குறித்து சில கேள்விகள் எழுந்தாலும், ஜலாலுதீன் போன்ற புலம் பெயர்ந்தவர்களுக்கான ஒரே தரவு இது தான்.
கேரளாவின் மிக அதிகளவில் தொழிலாளர்களை கொண்ட, கொச்சி காந்தி பஜார் எனப்படும் மார்க்கெட் பகுதியில் நின்றிருந்த ஜலாலுதீனை நாங்கள் சந்தித்தோம். பிரகாசமான மஞ்சள் நிறத்தில் சட்டை, கறை படிந்த கருப்பு நிற டிராயர் அணிந்து காணப்பட்ட ஜலாலுதீன் -- தற்போது திறமையான கொத்தனார் -- வருவாய், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 27% குறைந்து, ரூ.16,000 என்றளவில் சுருங்கிவிட்டது.
“முன்பு, சில போராட்டங்களுக்கு பிறகு நான் தினமும் வேலைக்கு சென்று வருவேன்” என்ற ஜலாலுதீன், "இப்போது அது ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் கிடைத்தாலே பெரியது" என்று சிக்கனமுடன் வாழ்கிறார்; தங்கும் அறைக்கு ரூ.750 கொடுத்து,சக வங்காள தொழிலாளர்கள் ஏழு பேருடன் அறையை பகிர்ந்து கொள்கிறார். அவருக்கு வேலை கிடைத்தால், அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு தான் திரும்புகிறார். இல்லையெனில் சந்தை தொடங்கும் காலை 9:00 மணி வரை அவர் காத்திருக்க வேண்டியுள்ளது.
வீட்டில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு அவர் அனுப்பி வந்த தொகை, மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது; நாங்கள் அவரை சந்தித்த காலை 7:30 முதல் 8:00 வரையிலான நேரத்தில், மற்ற தொழிலாளர்களை போல் - பெரும்பாலும் வங்காளம், அசாம் மாநிலத்தவர்கள் - வேலை ஒப்பந்ததாரருக்காக காத்திருந்தார்.
இந்தியாவின் முறைசாரா துறையில் வேலைவாய்ப்பு கண்காணித்து -- திறன்வாய்ந்த மற்றும் பகுதி திறன் கொண்ட தொழிலாளர்கள் ஒப்பந்த வேலையைக்கு கூடுமிடத்தில் -- எழுதப்படும் 11 பகுதிகளை கொண்ட தொடரில் இது மூன்றாவது கட்டுரையாகும். (நீங்கள் முதல் பகுதியை இங்கே மற்றும் இரண்டாவது பகுதியை இங்கே படிக்க முடியும்). இந்தியாவின் வேலையின்மை, அரைகுறையான கல்வி மற்றும் தகுதி வாய்ந்த ஆனால் வேலையில்லாத மக்களை உறிஞ்சும் இத்துறை, இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் 92% கொண்டிருக்கிறது என, அரசு புள்ளி விவரங்களை பகுப்பாய்வு செய்த, 2016 சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வு தெரிவிக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.டி.எஸ்டி ஆகியவற்றின் பின்னர் ஏற்பட்ட வேலை இழப்புக்கள், அது தொடர்பாக தேசிய சர்ச்சைகள் குறித்த ஒரு முன்னோட்டத்தை இத்தொடர் வழங்குகிறது. அகில இந்தியா உற்பத்தியாளர்கள் அமைப்பு நடத்திய ஆய்வின்படி, வேலைகள் எண்ணிக்கை, 2018 உடனான நான்கு ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது; இது, தனது3,00,000 உறுப்பினர்களில் 34,700 பேரிடம் வாக்கெடுப்பு நடத்தி, இந்த ஆய்வை வெளியிட்டு உள்ளது. 2018இல் மட்டும் 1.1 கோடி பேர், பெரும்பாலும் கிராமப்புற துறைகளில் வேலை இழந்ததாக, இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சி.எம்.ஐ.இ) தரவுகள் தெரிவிக்கின்றன.
காந்தி பஜாரின் வீழ்ச்சி
காந்தி பஜார் என்பது முற்றிலும் ஆண்களுக்கான பகுதி. இந்த சந்தையில் பெண்களால் பயன்படுத்தப்படும் -- புடவைகள் அல்லது வளையல்கள்-- அவர்களுக்கான பொருட்களும் இல்லை. நீலநிற தார்பாய்களுக்கு கீழ் கரும்பு சாறு, ஜிலேபி, சமோசா, பான் மசாலா, பீடி மற்றும் ஆண்களுக்கான பிற மலிவான பொருட்கள் விற்பனையாகின்றன.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு, தனது வார இறுதி நாள் விற்பனைக்காக இது முன்கூட்டியே திறக்கப்படுகிறது. தனிப்பட்ட வீடு உரிமையாளர்கள், குறுகிய தேவைக்காக அழைக்கும் கட்டட ஒப்பந்ததாரர், தொழிலாளர்களை ஏற்பாடு செய்வோர் ஆகியோர், காந்தி பஜாரில் கூடி நிற்கும் பிளம்ப, எலக்ட்ரீஷியன், வண்ணம் பூசுபவர்களை ஏற்பாடு செய்து வேலைக்கு அழைத்து செல்கின்றனர்.
"சில வருடங்களுக்கு முன்பு வரை சனிக்கிழமைகள் சந்தைகள் அதிகரித்தன" என்று, உள்ளூர் வியாபாரியான நஜீப்.கே தெரிவித்தார். அவரது, 20களின் ஆரம்பத்தில் இருந்ததை போலின்றி, 2016 ஆம் ஆண்டு முதல் நஜீபின் சனிக்கிழமை விற்பனை 46% என, 8,000 ரூபாயாக குறைந்துள்ளது. "மக்களுக்கு முன்பு இங்கு அநேகமாய் நகர முடிந்தது" என்ற நஜீப், "இப்போது மாறிவிட்டது" என்றார். இது பெரும்பாவூரில் பரவலாக காணப்பட்ட ஒருகாட்சி தான்.
கொச்சி பெரும்பாவூர் காந்தி பஜாரில் ரப்பர் செருப்பு விற்கும் நஜீப். கே, 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தனது விற்பனை 46% வீழ்ச்சியடைந்து ரூ.8000 என்றாகிவிட்டது. "சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சனிக்கிழமை சந்தைகள் கூட்டம் நிரம்பி காணப்படும்” என்ற அவர், "இப்போது மாறிவிட்டது" என்றார்.
“முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அடுத்து ஜி.எஸ்.டி. ஆகிய இரண்டும் எங்களை அழித்தது” என்று, சா மில் உரிமையாளர்கள் மற்றும் ப்ளைவுட் உற்பத்தியாளர்கள் சங்கம் (SOPMA) தலைவர் எம்.எம்.முஜீப் ரஹ்மான் தெரிவித்தார். பண மதிப்பிழப்பிற்கு பிறகு, தொழிலாளர்களுக்கு ப்ளைவுட் தொழில் துறை பணமாக ஊதியத்தை தர இயலாத நிலை ஏற்பட்டது என்று அவர் கூறினார். எனினும், "பொருளாதாரத்தின் சுருக்கம், பணப்பற்றாக்குறை, பணப்புழக்கம் குறைவு மற்றும் அதிகரித்து வரும் தீர்வு விகிதத்திற்கான அளவு போன்றவை, அலகுகளை இயக்குவதற்கு சாத்தியமற்றதாக இருக்கும்" என்றுஎதிர்பார்க்கவில்லை என ரஹ்மான் தெரிவித்தார்.
தனது 30 வயதில், இரு பிளைவுட் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இளம் தொழிலதிபரான 30 வயது ரியாஸ் முகமது இவ்வாறு கூறினார்: "இப்போது இதற்கான தேவையில்லை; பொருளாதார பணப்புழக்கம் இல்லை. உள் அலங்காரம் மற்றும் பணியை அழகுடன் முடிக்க ப்ளைவுட் தேவைப்படும். எந்த உள்கட்டமைப்பு திட்டங்களும் இல்லாதபோது, பிளைவுட் பலகையை யார் பயன்படுத்துவார்கள்? " என்றார்.
“பண மதிப்பிழப்பு போன்ற சீர்குலைவு நடவடிக்கைக்கு முன், நாம் போதிய உள்கட்டமைப்பு மற்றும் நிதியியல் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும்” என்ற முகமது, "இப்போதும் கூட, தனியார் வங்கிகளில் புலம் பெயர்ந்த மக்கள் வங்கி கணக்குகளைத் திறக்க முடியாது. ஏனெனில் அவர்கள் குறைந்த பணத்தையே கொண்டுள்ளனர். நாம் எப்படி அவர்களுக்கு பணத்தை செலுத்துவது? முதலில் ஒழுங்கற்ற இத்தகைய அமைப்பில் ஏற்படும் விளைவுகளை, அரசு கருத்தில் கொண்டிருக்க வேண்டும்"என்றார்.
ஜி.எஸ்.டி-யை பொறுத்தவரை, அது சிக்கலானது என்ற பொதுக்கருத்தை அவர் கொண்டிருக்கவில்லை: "இது எங்களுக்கு நல்லது. [இது] மிகவும் எளிதானது, ஆனால் எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லை" என்றனர்.
ரியல் எஸ்டேட் துறையை பொருத்தவரை, நாங்கள் கூறியதுபோல், வளைகுடாவின் கத்தார் நெருக்கடி மற்றும் எண்ணெய் விலையில் சரிவு ஆகியவற்றால் பணப்புழக்கம் இல்லை.
"[கத்தார்] நெருக்கடி ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில்துறையை மோசமாக பாதித்துள்ளது, மேலும் இது பலருக்கு நிதி ஆதாரமாக இருந்தது; தற்போது அது மிகவும் குறைந்துவிட்டது," என, கோழிக்கோட்டை சேர்ந்த மார்க்கெட்டிங் ஆலோசகர் வினோத் பால் தெரிவித்தார். “பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.இ. ஆகியன மிக மோசமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை பாதித்தது; ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் - ரேரா (RERA) மற்றும் அதன் கடுமையான விதிமுறைகளில் இப்போது டெவலப்பர்களும் கவனமாக, எச்சரிக்கையாக இருக்கிறார்கள்" என்றார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கேரளாவின் நில பரிவர்த்தனையில் 60% மதிப்பீட்டைக் குறைத்தது. ஜி.எஸ்.டி. ஆனது வாங்குபவர்களின் குழப்பம் மற்றும் தாமதமான கொள்முதல் முடிவுகளுக்கு வழி வகுத்தது. இது ரியஸ் எஸ்டேட்ச ந்தையில் துயரையும், ஒரு தற்காலிக மந்தநிலையை ஏற்படுத்தியது என வல்லுநர்கள் தெரிவித்தனர்.
"ரேரா ஒரு நல்ல விஷயம் தான்; ஆனால் இது கேரளாவில் முடங்கியிருக்கிறது," என்றார் பால். ரியல் எஸ்டேட் மந்தநிலை, பெரும்பாவூர் போன்ற பகுதிகளில், குறைந்த குடியேற்றத் தொழிலாளர்கள் தங்களது வேலைக்காக நம்பியிருக்கும் ப்ளைவுட் தொழிற்சாலைகளை பாதித்தது.
வங்காளிகள், அசாமியர் கேரளாவுக்கு வந்தது எப்படி?
இந்தியாவில் பிளைவுட் தொழில்துறையானது ரூ 12,000 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது; இதில் 70% அமைப்புசாரா நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. SOPMA கருத்துப்படி,இதில், 1,000 கோடி ரூபாய் கேரளாவில் இருந்து வருகிறது; 2018 இல் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இங்கு மர அடிப்படையிலான அலகுகள் 1,250, பிளைவுட் உற்பத்தி அலகுகள் 350 மற்றும் மேல் மரப்பூச்சு உற்பத்தி அலகுகள் 458 என்றளவில் உள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தினசரி கூலித் தொழிலாளர்கள் எண்ணிக்கை தெளிவாக இல்லை, ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1996இல் வனம் சார்ந்த தயாரிக்கப்படும் ப்ளைவுட் தொழிற்சாலைகளை தடை, உச்ச நீதிமன்றம் செய்தது, இதனால் அசாமில் இத்துறை தொழிலில் சரிவு ஏற்பட்டது; அங்கு, இத்தகைய 80% அலகுகள்இருந்தன. இதனல், அப்போது ப்ளைவுட் தொழிலில் வளர்ந்து வந்து கொண்டிருந்த கேரளாவுக்கு ஏராளமான அளவில் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் வரத் தொடங்கினர்.
அசாமில் இருந்து முதலில் புலம் பெயர்ந்தவர்களில் நாகோன் பகுதியை சேர்ந்த வங்காள முஸ்லீம்கள் பிரதானமாக இருந்தனர். 1990களின் பிற்பகுதியிலும், 2000களின் முற்பகுதியிலும் கேரளாவில் ஒரு "நுகர்வோர் எண்ணம்" கட்டுமான தொழில் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது, இது, தொழிலாளர்களின் தேவையை அதிகரித்தது.
"திறன் குறைந்த தொழிலாளர்கள் என்பது, உண்மையான ஒரு நெருக்கடி," என்று, ஆலுவாவில் உள்ள யு.ஜி. கல்லூரி பேராசிரியர் டிவின்ஸி வர்க்கீஸ், 1990களின் பிற்பகுதியை சுட்டிக்காட்டி குறிப்பிடுகிறார். ரூபினா பீராஸ் என்ற மாணவருடன் இணைந்து, கேரளாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை வர்க்கீஸ் நன்கு படித்தார்.
கல்வியறிவு பெற்ற கேரள இளைஞர்கள் வளைகுடாவில் திறன் குறைந்த வேலைகள் கிடைத்து அங்கு சென்றுவிட்ட நிலையில், கேரளாவில் திறன் குறைந்த, பகுதி திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சிறந்த ஊதியங்கள், சிறந்த வசதி, வேலை நேரங்களை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென்று வலுவான தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.ஊதியங்கள் உயர்ந்த நிலையில் குடியேறுபவர்கள் அதிகளவில் வந்தனர் எறு வர்கீஸ் கூறினார்.
வர்கீஸின் கருத்துப்படி, 2000 மற்றும் 2006ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஒரு "அதிகம் வந்தவர்கள் காலம்" என்று கூறலாம். அப்போது "கேரளாவுக்கு புலம்பெயர்ந்த உள்நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை உறுதியான அதிகரித்தது" என்றார். இந்த தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலை தொடங்கினர்; மேலும் பிளைவுட் போன்ற பிற தொழில்களில் இருந்து வெளியேறினர்.
"கேரளா மாநிலத்தின் பொருளாதாரத்தில் இடம்பெயர்வு என்பது குறிப்பிடத்தக்க ஊக்கியாக உள்ளது," என்று, இடம்பெயர்வு மற்றும் உள்ளடக்க மேம்பாடு மையம் (CMID) சேர்ந்த பெனாய் பீட்டர் மற்றும் விஷ்ணு நரேந்திரன் ஆகியோரின் ‘God’s Own Workforce: Unravelling Labour Migration to Kerala’ என்ற 2016-17 ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நாகோன் (அசாம்) - எர்ணாகுளம் மற்றும் முர்ஷிதாபாத் - எர்ணாகுளம் ஆகியன, கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் புலம்பெயர்ந்த மக்களுக்கான மிகப்பெரிய நீண்ட பெருவழித்தடம் என்று, சி.எம்.ஐ.டி. அடையாளம் கண்டுள்ளது. முர்ஷிதாபாத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் பெரும்பாவூர், அதன் சுற்றுப்பகுதிகளில் பணியாற்றுகின்றனர்; அதேநேரம் நாகோனை சேர்ந்தவர்கள் பிளைவுட் மற்றும் அதுசார்ந்த தொழில் அலகுகளில் வேலை செய்கின்றனர்.
ஆனால் இங்கு இரண்டற கலந்துவிட்ட புலம்பெயர்ந்த மக்களை கண்டறிவது கடினமான ஒன்று.
கூலியின்றி எவ்வளவு நாள் மக்கள் வேலை செய்வார்கள்?
தனது மோசமான வாழ்க்கை நிலையை, 33 வயதான பெரோஸ் ஷேக் விளக்குகிறார். இவர் ஒரு சிறிய தொழிலாளர் ஒப்பந்தக்காரர். புலம்பெயர்ந்த மக்களின் நிச்சயமற்ற வாழ்க்கையை உதாரணத்துடன் குறிப்பிட்டார்.
நாடியாவில் ஆறாம் வகுப்பு வரை படித்த வங்காளத்தை சேர்ந்த பெரோஸ், 19 ஆண்டுகளுக்கு முன், தனது 14 வயதில் கேரளாவிற்கு வந்தார். பணி ஒப்பந்ததாரராக ஆவதற்கு முன் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில், சொந்த ஊரில் அவரது திருமண முறிவுக்கு பிறகு அவர், மதுவுக்கு அடிமையானார். அவர் தனது பணத்தை முழுவதுமே குடிப்பதற்கு செல்விட்டார்; குடிக்காத நேரங்களில் அவரது கைகள் நடுகங்கத் தொடங்கின.
ஒரு தொழிலாளர் ஒப்பந்ததாரரான பெரோஸ் ஷேக் (இடது), 19 ஆண்டுகளுக்கு முன் கேரளாவுக்கு வந்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கு முன்பு வரை தொழிற்சாலை உரிமையாளர்கள் அலகு ஒன்றிற்கு 15-20 தொழிலாளர்களை உரிமையாளர்கள் கேட்டு வந்ததாக கூறும் அவர், தற்போது 5 பேரை தான் கேட்பதாக சொல்கிறார்; “அங்கு வேலை இல்லை”. வங்காளத்தை சேர்ந்த கட்டட உதவியாளரான ராஜு (வலது), 10 பேருடன் அறையை பகிர்ந்து கொண்டுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அவரது வருவாய் மூன்றில் ஒரு பங்காக சுருங்கிவிட்டது. அவருக்கு வாரம் ஐந்து நாள் வேலை கிடைத்த நிலை மாறி, இப்போது இரண்டு நாள் தான் கிடைக்கிறது. வீட்டுக்கு அனுப்ப அவரிடம் பணம் இல்லை.
ஷே எங்களிடம் நிதானமாக பேசினார். பண மதிப்பிழப்பிற்கு முன்பு வரை தொழிற்சாலை உரிமையாளர்கள் அலகு ஒன்றுக்கு 10-15 தொழிலாளர்களை கேட்பார்கள்; இப்போது அவர்கள் ஐந்துக்கும் குறைவாக கேட்கிறார்கள் என்றார். "அங்கு வேலை இல்லை," என்ற அவர், "சில ப்ளைவுட் அலகுகள் மூடப்பட்டன. வேறு சிலவற்றில் பணி நேரம் குறைக்கப்பட்டது. உரிய நேரத்தில் சம்பளம் தரப்படவில்லை. சம்பளமின்றி மக்கள் எவ்வளவு நாள் வேலை செய்வார்கள்?" என்றார்.
தன்னை சுற்றியுள்ள மற்றவர்களை போலவே ஷேக்கும், பெரும்பாவூரில் உள்ள பிளைவுட் தொழில்துறை மற்றும் கட்டுமானத்துறை நசிவுக்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. அறிமுகமாக்கலை குற்றம்சாட்டுகிறார்.
காந்தி பஜாரில் ஆண்களுக்கான சலூன் வைத்திருக்கும் --’டி’ என்பதை காணவில்லிய-- 27 வயது தாரீப் அகமது அசாமியர், வங்காளத்தவர்களின் வருகையின்றி கவலையடைந்தார். “இரு தரப்பினருமே இங்கிருந்து சென்றுவிட்டனர்” என்றார் அவர்.
எனினும், ராஜூ (அவர் தனது கடைசி பெயரைப் பயன்படுத்த விரும்பவில்லை) போன்ற ஒரு சிலர், இங்கிருந்து தனியே போராடுகிறனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அவரது வருமானம், உச்ச நேரத்தில் ரூ.4000 என்றும், ஒரு மாதத்திற்கு ரூ .12,000 வரை என வருவாய் குறைந்தது- இத்தனைக்கும் கூலியில் மாற்றமில்லை என்கிறார் -- வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை கிடைத்த நிலை மாறி, இப்போது இரண்டு நாட்களே கிடைப்பது அரிதாக இருக்கிறது என்கிறார்.
முர்ஷிதாபாத்தை சேர்ந்த 24 வயது கட்டிட உதவி தொழிலாளியாக இருப்பவர், தனது 17 வயதில் கேரளாவுக்கு வந்தார். குடும்பத்தில் உள்ள ஆறு பேரில் ராஜு தான் கடைசி நபர்; பெற்றோர் நெல் சாகுபடி செய்கின்றனர். ராஜு -- காந்தி பஜார் உணவு சங்கிலியில் ஒரு உதவியாளர் - 10 பேருடன் அறையை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்; கிடைக்கும் வருவாய் சாப்பாட்டிற்கே சரியாக இருக்கிறது. பணத்தை வீட்டுக்கு அனுப்ப முடியாது. அவரது உடைந்த செல்போனை பல ரப்பர் பேண்டுகள் போட்டு கட்டி வைத்துள்ளார்.
காந்தி பஜாரில் உள்ள மற்ற கூலித் தொழிலாளர்கள் கூறுகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, வேலைவாய்ப்பு விகிதங்கள் தொழிலாளர் சங்கத்தால் முடிவு செய்யப்பட்டது என்பதால் ஊதியம் பெருமளவில் மாறாமலேயே இருந்தது.இருப்பினும், கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு - பிளைவுட் பலகை மற்றும் மரம் உட்பட - வேலைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளைவுட் தொழில் சரிவே வேலைகள் வெளிப்படையான இழப்புக்கு முக்கியம் என்றார். “கேரளாவிற்கு அதிக புலம்பெயர்ந்தவர்கள் வருவதற்கு பிளைவு தொழில் முதல் காரணம், அடுத்து தான் கட்டுமானத்துறை”என்று மாநில தொழிலாளர் துறையின் தொழிலாளர் உதவி அலுவலர் நாஸர் டி.கே. தெரிவித்தார். “தற்போது பிளைவு தொழில் மோசமான வடிவில் உள்ளது” என்றார். பல அலகுகள் பாதிக்கப்பட்டன. கட்டுமானம் குறைந்துவிட்டது. அவர்களுக்கு எங்கே வேலை கிடைக்கும்? " என்றார் அவர் கூறினார்.
அரசிடம் சில சமூக பாதுகாப்பு வலைகள் உள்ளன, ஆனால் அது முதலில் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்: எத்தனை குடியேற்ற தொழிலாளர்கள் கேரளாவில் உள்ளனர்?
கேரளாவில் புலம்பெயர்ந்தோர் கண்காணிப்பு
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்காணிக்கும் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் செல்ல வேண்டும், பெரும்பாவூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் கே.ஜி. ஜெயகுமாரன் நாயர் சுட்டிக்காட்டினார். குடியேற்ற விவகாரங்களுக்கான பொறுப்பு, புலம் பெயர்ந்தவர்களை பதிவு செய்வது தான் என்று, நாயர் தெரிவித்தார்.
"ஆனால், அது அவ்வப்போது நடைமுறைக்கு வரவில்லை, ஏனெனில் அவர்கள் ஒரு இடத்தில் நீண்ட நாட்கள் வேலை செய்கின்றனர்; பதிவு செய்யும்படி நாங்கள் கூறினால், அடுத்த நாளே அவர்கள் மாயமாகிவிடுகிறார்கள் " என்ற நாயர் "அந்த பணியை நாங்கள் நிறுத்திவிட்டோம்" என்றார்.
இப்போது காவல் துறையினர் தொழிற்சாலைகள் தோறும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் விவரங்கள், அடையா அட்டைகளின் நகல்களை வைத்திருக்க, தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் கூட, கேரளாவிற்கு வந்து செல்வோர், தற்போது பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர் குறித்த "எவ்விதமான எண்ணிக்கையும்இல்லை". "ஆனால் நிச்சயமாக குடியேறியவர்கள் [தொழிலாளர்கள்] எண்ணிக்கை குறைந்து விட்டன," என்று அவர் கூறினார்.
கேரள மாநிலத்துக்கு இடையே புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சனைகளை கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (BOCW) நலவாரியம் மூலம் தீர்க்க முயற்சிக்கிறது. 2017ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து பெருமளவில் பி.ஓ.சி.டபிள்யு. (BOCW) சட்டத்தின் கீழ் 40,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்; 2018 ஜூன் வரை, 375,000 பேர் மாநிலம் வாரியாக பதிவு செய்ததாக, புலம் பெயர்ந்தவர்களின் பயோமெட்ரிக் அடையாள அட்டைகளை பதிவு செய்யும் தொழிலாளர் அலுவலர் நாசர் தெரிவித்தார்.
இந்த அடையாள அட்டை திட்டத்தில் புலம் பெயர்ந்தவர்களை அரசு சேர்ப்பதுடன், அவர்களுக்கு ஆண்டு மருத்துவக்காப்பீடாக உள்நோயாளிகளுக்கு ரூ.15,000; விபத்து இறப்புக்கு ரூ.2,00,000; ரூ.100 பிரீமியத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாதம் வழங்கும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பி.ஓ.சி.டபிள்யு. வாரியத்தின் கீழ், 2017இல் ஆவாஸ் சுகாதார திட்டம் தொடங்கப்பட்டது; இதுமாதிரியான திட்டத்தில் இது “இவ்வகையில் முதலாவது” என்று கூறப்படுகிறது. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் இத்திட்டத்தில் தங்களை பதிவு செய்ய விரும்பாததால் அது செயல்பாடின்றி இருப்பதாக, மாநில அரசு தற்போது கூறுகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 73,058-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்தனர்; இதில் 40,0000 பேர் பெரும்பாவூரில் இருந்து என்று, தொழிலாளர் நலத்துறை ஆவணங்களை இந்த நிருபர் பார்வையிட்டதில் தெரிய வந்தது.
தனது அதிகார எல்லைக்குள் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையில் "ஒரு எண்ணிக்கையை போடுவது கடினம்" என்பதை நாசர் ஒப்புக் கொண்டார். ஆனால் பெரும்பாவூரில் உள்ள அவரது துறை ஆய்வு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன், கட்டுமான பிரிவில் அலகு ஒவ்வொன்றிலும் சராசரி120-130 பேர் பணி புரிந்து வந்ததையும், 2019 பிப்ரவரியில் யூனிட்டிற்கு 50 பேர் இருந்ததை இது வெளிப்படுத்துகிறது.
வேலை என்று பார்த்தால், கேரளாவில் இனி ஒருபொழுதும் அவர்கள் நிலைத்திருக்க முடியாது. புலம் பெயர்ந்தவர்களின் ஒரே ஆதாரமாக உள்ள காந்தி பஜார், ஒரு காலத்தில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் இன்று மிகக் குறைவாக உள்ளது.
இத்தொடரின் 11 கட்டுரைகளில் இது மூன்றாவது. முந்தைய இந்தூர் மற்றும் ஜெய்ப்பூர் கட்டுரைகள் இங்கே.
(ஜோசப், பெங்களூரை சேர்ந்த பிரீலான்ஸ் எழுத்தாளர்; மற்றும் 101Reporters.com உறுப்பினராக உள்ளார்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.