அங்குல், ஒடிசா: 23 வயதான ரேவதி நாயக் கர்ப்பமாக இருந்தபோது, அவர் அரசின் துணை ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், வீட்டுக்கே உணவு வழங்கும் வகையில் சதுவா (உலர் பருப்பு வகை மற்றும் தானியங்களின் கலவை), உருண்டை, பாதாம் பருப்பு மற்றும் மாதத்திற்கு எட்டு முட்டைகள் ஆகியவற்றைப் பெற்றார். இது, அவருக்கு கிடைக்க வேண்டியதைவிட நான்கு முட்டைகள் குறைவாகும். இப்போது அவரது மகன் ஷியாம் நாயக்கிற்கு ஒன்பது மாதங்கள் ஆகிறது; அவர் உணவாக சூஜி (ரவை) பெறுகிறார்.

முட்டை என்பது செரிமான புரதம், வைட்டமின் ஏ மற்றும் பி 12, தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்துக்கு முக்கியமானது. ஒடிசாவில் உள்ள ஊட்டச்சத்து திட்டமானது, குழந்தைக்கு ஆறு மாத வயது வரை, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 12 முட்டைகளை வழங்குகிறது. குழந்தைக்கு 12 முட்டை கிடைக்கும் நிலையில், கர்ப்ப காலம் மற்றும் பாலூட்டும் காலத்தில், ரெபாட்டி நாயக்கிற்கு வழக்கத்தைவிட நான்கு முட்டைகள் குறைவாகவே கிடைத்தன. அந்த முட்டைகளும் முதலில் அவரது கணவர், மாமியார் மற்றும் இரண்டு மைத்துனர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். "எனக்கு ஒரு மாதத்திற்கு எட்டு முட்டைகள் கிடைக்கின்றன; அதை நாங்கள் ஒரு கறியாக தயாரித்து ஒன்றாக சாப்பிடுகிறோம்," என்று நாயக் கூறினார். அவர், அதை கடைசியாக சாப்பிடுவதால், ஊட்டச்சத்துக்களின் முக்கியமான சத்துகளை அவர் இழந்து விடுகிறார்.

ஒடிசாவில் உள்ள அங்குல் மாவட்டத்தில் இது மிகவும் முக்கியமானது - அங்கு ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 31.8% வளர்ச்சி குன்றியவர்கள் (அவர்களின் வயதிற்கேற்ற வளர்ச்சியின்மை), மற்றும் 37.4% பேர் 2015 இல் இரத்த சோகைக்கு ஆளானதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 (NFHS 4) இன் தரவு காட்டுகிறது. இந்தியா முழுவதும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து தேவை - இந்தியா முழுவதும் 38.4% குழந்தைகள் வளர்ச்சியின்மை, 35.8% எடை குறைந்தவர்கள், மற்றும் 2015-16 ஆம் ஆண்டில் 58.6% இரத்த சோகை இருந்ததாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 தரவு காட்டுகிறது.

கடந்த 1975இல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் - ஐ.சி.டி.எஸ் (ICDS) திட்டத்தின் கீழ் அரசின் துணை ஊட்டச்சத்து திட்டம், ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும், பாலூட்டும் தாய் மற்றும் குழந்தைக்கு, மூன்று முதல் ஆறு வயது வரை, வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவு மற்றும் சூடான சமைத்த உணவு ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு குழந்தையின் வளர்ச்சியும் அறிவாற்றல் வளர்ச்சியும் அதிகபட்சமாக இருக்கும் முதல் 1,000 நாட்களில் உணவு என்பது வளர்ச்சிக்கான ஒரு சாளரம்.

முட்டைகள் முக்கிய ஊட்டச்சத்துக்களை தருகிறது; ஆனால் சில பெண்கள், குழந்தைகளே இந்தியாவில் முட்டை உட்கொள்கின்றனர்

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ மற்றும் பி 12, ஹார்மோன்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் போன்ற எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதத்தின் சிறந்த ஆதாரமாக முட்டை உள்ளது, அவை பாலூட்டும் தாயின் உடலால் உடனடியாக உறிஞ்சப்பட்டு வளர்சிதை மாற்றப்படுகின்றன. முட்டைகளை சாப்பிடுவது தாய்ப்பாலின் சத்து மதிப்பை அதிகரிக்க உதவுகிறது, இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

முட்டை பெறுவது ஒப்பீட்டளவில் எளிதானது, பல வகையான சமையல் நுட்பங்களுக்கும் ஏற்றது மற்றும் அதிக செரிமான புரதம் எளிதாக கிடைக்கக் கூடியது என, கல்பனா பீசாபதுனி, ஸ்ருஜித் லிங்கலா மற்றும் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ஊட்டச்சத்து சிந்தனைக்குழுவான சைட் அண்ட் லைப் அமைப்பின் க்ளாஸ் க்ரேமர் ஆகியோரின் முட்டை உற்பத்தியின் நிலையான முறைகள் குறித்த 2018 ஆய்வு கூறுகிறது.

மிகவும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே முட்டையின் நுகர்வு மிகக்குறைவாக, குறிப்பாக ஏழ்மையில் உள்ள வீடுகளை சேர்ந்த பெண்கள் மத்தியில் குறைந்து இருப்பது, வாஷிங்டன் டி.சி.யை சேர்ந்த சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI), 2018 இன் ஆய்வில் கண்டறியப்பட்டது.

உலகில் மூன்றாவது பெரிய முட்டைகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா என்றாலும், 14.7% குழந்தைகள் கணக்கெடுப்புக்கு 24 மணி நேர காலத்திற்கு முன்பாக முட்டைகளை உட்கொண்டிருந்தனர்; இது மற்ற தெற்காசிய நாடுகளை விட (25%) மிகக் குறைவு என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற தெற்காசிய நாடுகளை விட இந்தியாவில் முட்டைகள் மலிவாக இருந்தபோதிலும், முட்டைகளை சாப்பிட்டதாகக் கூறிய தாய்மார்களில் 19% மட்டுமே, கணக்கெடுப்புக்கு 24 மணி நேர காலத்தில் ஒரு முட்டையை உட்கொண்டனர்.

முட்டைகளின் தேவைக்கான நிலையான வளர்ச்சி மற்ற தெற்காசிய நாடுகளை விட இந்தியாவில் அதன் விலைகளை குறைத்து வைத்திருக்கிறது - இது அரிசியை விட 4.7 மடங்கு விலை அதிகம், கோழிப்பண்ணிய தொழில் குறித்த ஆர்.ஜி. நம்பியார் மற்றும் டெல்லியை சேர்ந்த வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புக்கான ராஜேஷ் மேத்தா ஆகியோரின் 2007 ஆய்வு தெரிவிக்கிறது. தெற்காசியாவின் மற்ற பகுதிகளில், முட்டை விலை அரிசியை விட ஆறு மடங்கு அதிகம். உலகின் மிக ஏழ்மை பிராந்தியமான சஹாரா ஆப்பிரிக்காவில், தானியங்களை விட முட்டைகள் 9.5 மடங்கு விலை அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

In India, Only 14.7% of Children Consumed Eggs in a 24‐Hour Recall Period
Category Eggs available for consumption per capita per year Children, 6-23 months, who consumed an egg in a 24-hr recall period (In %) Ratio of egg price to cereal price
High-income countries 265 NA 2.3
Latin America and the Carribean 218 42.8 4.8
Middle East and North Africa 129 30.8 5.4
Eastern Europe and Central Asia 238 34 3.6
East Asia 241 20.8 7.1
South Asia excluding India 50 25 5.9
India 52 14.7 4.7
Sub- saharan Africa 40 12.6 9.5

Source: 2018, An egg for everyone: Pathways to Universal Access to One of Nature’s Most Nutritious Food, IFPRI

இந்தியாவில், அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை குழந்தைகளுக்கு வழங்குவது ஒடிசா

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் கொண்ட 10 மாநிலங்களில், துணை ஊட்டச்சத்து திட்டத்தின் ஒரு பகுதியாக பீகார், ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்படுகின்றன என்று, இந்தியா ஸ்பெண்ட் ஜூலை 2018 கட்டுரை தெரிவித்தது. முட்டைகளை வழங்கும் அனைத்து மாநிலங்களிலும், வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் 13வது அதிக விகிதத்தைக் கொண்டுள்ள ஒடிசா, அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை வழங்குகிறது.

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள நந்தாபூர் கிராமத்தில், ஒடிசா வாழ்வாதாரத் திட்டத்திற்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள மேக்-ஷிப்ட் மையத்தில் அங்கன்வாடி பணியாளர் சுஷ்மா ராவ் (இடது). இங்கு சேர்க்கப்பட்ட 22 குழந்தைகளில் 11 பேர் மட்டுமே வகுப்பில் இருந்தனர்; இம்மையம் வெகு தொலைவில் உள்ளதால், மீதமுள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்வதில்லை.

ஒடிசாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 34.1% உள்ளனர், உத்தரப்பிரதேசத்தின் 46.3% வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது இது குறைவு. ஆனால், இதுபோன்ற திட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் முட்டைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

வீட்டிற்கு உணவு எடுத்துச் செல்லும் பல பெண்கள், குழந்தைகள் சூடான சமைத்த உணவைப் பெறுவதில்லை

கிராம அங்கன்வாடி மையத்தில் இருந்து 4 கி.மீ தூரத்தில் ரேவதி நாயக் வசிக்கிறார். வீட்டிற்கு உணவு என்பது எப்போது விநியோகிக்கப்படுகிறது என்பது தனக்கு தெரியாது என்றும், பெரும்பாலும் தனது பங்கை பெற தாமதமாகும் என்றும் அவர் கூறினார். "உணவு விநியோகிக்கப்படும் போது அங்கன்வாடி தாதியால் நாங்கள் தெரிவிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் நாங்கள் மையத்தை அடையும் நேரத்தில், உணவு தீர்ந்துவிடுகிறது," என்று அவர் கூறினார்.

ஒடிசாவின் அங்குல் மாவட்டம், மான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி நாயக் (23) தனது ஒன்பது மாத குழந்தைக்கு உணவளிக்கிறார். அங்கன்வாடி மையத்தில் இலிருந்து வெகு தொலைவில் அவர் வசிப்பதால், அரசால் வழங்கப்பட்ட வீட்டிற்கு உணவு பொருள் எங்கு பதிவு செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. அங்கன்வாடியில் பதிவு செய்ய அவருக்கு மூன்று மாதங்கள் பிடித்தன.

நாயக் தன்னை அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்ய மூன்று மாதங்கள் ஆனது, அந்த மூன்று மாதங்களுக்கு அவருக்கு வீட்டுக்கான உணவுப் பொருட்கள் எதுவும் பெறவில்லை. "எங்கள் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இல்லை. எனவே எங்கு செல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை" என்று ரேவதியின் கணவரும் 28 வயதான விவசாய தொழிலாளியுமான பிஷு நாயக் கூறினார்.

ஒவ்வொரு மாதம் ஐந்தாம் தேதிக்கு முன், திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டுக்கு உணவு பொருட்களை பெறவில்லை என, திட்டத்தின் வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கினர், 20 ஆம் தேதிக்கு பிறகு, வீட்டுக்கான உணவு பொருட்களை பெறுகின்றனர்.

வீட்டுகள் தோறும் உணவு பொருட்கள் வினியோகிக்க அரசிடம் இருந்து டெண்டர் பெற்ற நிறுவனம் மூலம், மாதத்திற்கு ஒருமுறை முட்டைகள் பெறப்படுகின்றன.

"சூடான சமைத்த உணவுக்காக எங்களுக்கு, ஒரு குழந்தைக்கு ஒருநாளைக்கு ரூ. 7.70 மட்டுமே வழங்கப்படுகிறது" என்று அங்குல் மாவட்டத்தின் மான்பூர் கிராம அங்கன்வாடி தொழிலாளி அனிதா தாஸ், 40, கூறினார். "நாங்கள் திறந்த வெளி மார்க்கெட்டில் இருந்து ரூ.5 மற்றும் சில நேரங்களில் ரூ.6 க்கு முட்டைகளை வாங்க வேண்டும். இதில் மீதி எங்களுக்கு ரூ.2.70 மட்டுமே உள்ளது, அதில் காலை சிற்றுண்டி, அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் ஹால்தி ஆகியவற்றை நிர்வகிக்க வேண்டும்” என்றார்.

“முட்டைகளின் எண்ணிக்கையை 2018 ஆம் ஆண்டில் அரசு, எட்டில் இருந்து 12 ஆக உயர்த்தியது; ஆனால் அதற்கேற்ப விகிதங்கள் அதிகரிக்கப்படவில்லை. நாங்கள் சில நேரங்களில் வீட்டுக்கான உணவு பொருட்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்; ஆனால், மையத்திற்கு வரும் குழந்தைகள் பசியோடு இருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.

அங்குலின் நந்த்பூரில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில், மூன்று முதல் ஆறு வயது குழந்தைகள், கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் ஒடிசாவின் வாழ்வாதாரத்திட்டமான இதன் மூலம், மையத்தில் பதிவுசெய்யப்பட்ட 22 பேரில் 11 குழந்தைகள் மட்டுமே கலந்து கொண்டனர். கலந்துகொள்ளாத பெரும்பாலான குழந்தைகள், மற்றொரு கிராமமான நமோகோவை சேர்ந்தவர்கள்; 3 கி.மீ தூரத்தில் உள்ள அந்த கிராமத்திற்கென சொந்தமான அங்கன்வாடி இல்லை.

இந்த மையத்திற்கு தனியாக நடந்து செல்ல முடியாது என்பதால், குழந்தைகள்அவர்கள் காலை சிற்றுண்டி, முட்டை, சத்துவா மற்றும் ரவை போன்ற சூடான சமைத்த உணவை இழக்கிறார்கள். மீதமுள்ள முட்டைகள் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன என்று மையத்தில் அங்கன்வாடி பணியாளர் சுஷ்மா ராவ், 42, கூறினார். ஆனால் இதை தனிப்பட்ட முறைய்ல் உறுதிப்படுத்த முடியவில்லை.

முன்னதாக, இந்த அங்கன்வாடி ஒரு மரத்தின் கீழ் அல்லது ஒருவரின் வீட்டில் இயங்கியது, இப்போது அது ஒரு பஞ்சாயத்து (கிராமக் குழு) கூட்ட அரங்கில் இயங்குகிறது என்று ராவ் கூறினார். "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு பஞ்சாயத்து கூட்ட அரங்கம் ஒதுக்கப்பட்டது, எங்களுக்கு இன்னும் பிரத்யேக அங்கன்வாடி மைய கட்டடம் இல்லை. இதற்கு தீர்வு காண கிராமசபை தலைவர் (சர்பஞ்ச்) சந்தித்து பல முயற்சிகளை மேற்கொண்டேன்; அங்கன்வாடிக்கு நிலம் இல்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, ”என்று ராவ் கூறினார்.

நிலைமையை மறந்துவிட்ட கிராமத் தலைவரான அனிதா பிரதான், 39, இந்த விவகாரம் குறித்து தனது கணவரிடம் பேசும்படி கூறிவிட்டார். "நான் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரியிடம் பேசினேன். அங்கன்வாடி மையத்திற்கான நிலத்தை எங்களையே அடையாளம் காணும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அனிதா பிரதனின் கணவர் ஜெயந்த் பிரதான், 44, கூறினார். "ஆனால் கிராமத்தில் அங்கன்வாடிக்கு நிலம் எதுவும் இல்லை" என்றார் அவர்.

(அலி, இந்தியாஸ்பெண்ட் செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.