புதுடெல்லி: இந்தியாவின் ரத்தசோகை குறைபாடு சுமையைக் குறைக்க, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நடவடிக்கைகள் தவிர, பெண்களின் கல்வியை மேம்படுத்துவது மிக முக்கியமானது என்று, பி.எம்.ஜே. குளோபல் ஹெல்த் (BMJ Global Health) என்ற மருத்துவ சுகாதார இதழ் வெளியிட்ட 2018 ஆகஸ்ட் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு வாஷிங்டன்னை சார்ந்த சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) சார்ந்த வறுமை, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பிரிவு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற நிறுவனங்கள், இந்தியாவின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS) தரவுகள் - 2005-06 மற்றும் 2015-16 - இரண்டு சுற்றுகள் ஒப்பிட்டதில், 6 முதல் 24 மாத வயதுள்ள குழந்தைகள், கர்ப்பிணி மற்றும்15 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் பலருக்கு ரத்தசோகை இருப்பது தெரிய வந்தது.

கர்ப்ப காலத்தில் ரத்தசோகையை குறைப்பதில் பெண் கல்வி மிக முக்கியமான ஒரு காரணி என ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. குழந்தைகள் விஷயத்தில் இரும்புசத்து மாத்திரை, போலிக் அமிலம் (IFA) மாத்திரைகள் நுகர்வு, குடற்புழு நீக்கம், முழு நோய் தடுப்புமுறைகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் கூடுதல் சிறந்த பணியை செய்கின்றன.

அவர்கள் 30 காரணிகளில் மாற்றங்களை தேர்வு செய்து, ரத்தசோகை அளவில் மாற்றங்களிய புரியும் காரணிகளை கண்டறிய, புள்ளிவிவர செயல்முறையை பயன்படுத்தினர்.

ஒரு நபரின் ரத்தத்தில் சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாமால், ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லப்படுவது தடைபடுவது ரத்தசோகை நிலை ஆகும். பெண்களுக்கு இயல்பான ஹீமோகுளோபின் அளவு 12 கிராம்/ டெசிலிட்டர் (கி /டெ.லி.) மற்றும் ஆண்களுக்கு 13 கி/டெ.லி.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS) 2016 தரவுகளின்படி இந்தியாவில் பரவலாக குழந்தைகளில் 58.6%; பெண்களில் 53.2%; கர்ப்பிணிகளில் 50.4% பேருக்கு ரத்த சோகை இருப்பது தெரிய வந்தது. இந்தியாவில், 50 ஆண்டுகளாக ரத்தசோகை கட்டுப்பா திட்டம் இருந்த போதும், இந்நோய் மிகப்பெரிய சுமையாகவே இருந்து வருகிறது.

தற்போது இந்தியாவில் குழந்தைகளுக்கான போலிக் அமிலம் - ஐ.எப்.ஏ.(IFA) மற்றும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் என்பது மோசமான நிலையில் உள்ளது என, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவன (IFPRI) சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பிரிவு ஆராய்ச்சியாளரும், அறிக்கையின் இணை ஆசிரியருமான சாமுவேல் ஸ்காட் தெரிவித்தார். ஊட்டச்சத்து மற்றும் சுகாதார முயற்சிகள் "கண்காணிப்பை மேம்படுத்துதல் மற்றும் தரத்துடன் வழங்கலை உறுதிப்படுத்துதல்" ஆகியவற்ற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா ஸ்பெண்ட்டிற்கு அளித்த மின்னஞ்சல் நேர்காணலில் ஸ்காட் தெரிவித்தார். "கண்காணிப்பு பற்றிய தகவல்களை மேம்படுத்த, அனீமியா முக்த் பாரத் அபியான் (ரத்தசோகை இல்லாத இந்தியா பிரச்சாரம்) கீழ் முயற்சிகள் தீவிரமடையும்" என்றார் அவர்.

ரத்தசோகையானது, கர்ப்ப காலத்தில் மரண ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது; குழந்தைகளின் மெதுவான இயக்கம், மன வளர்ச்சி குறைபாட்டுக்கு வழிவகுக்கிறது. இது பெரியவர்களிடத்தில் அவர்களது உற்பத்தித்திறனை குறைக்கலாம்; இதன்மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% வரை இழப்பு ஏற்படலாம் என்கிறது ஆய்வு. அதாவது 113 பில்லியன் டாலர் அல்லது ரூ 7.8 லட்சம் கோடி இழப்பு என்று பொருள். இத்தொகை 2018-19ல் சுகாதார, கல்வி மற்றும் சமூக பாதுகாப்புக்கான இந்திய பட்ஜெட்டைவிட ஐந்து மடங்கு ஆகும்.

இந்தியாவில், 2015 உடன் முடிந்த 10 ஆண்டுகளில், இரும்புச்சத்து பற்றாட்டகுறையால் ஏற்பட்ட ரத்தசோகையே, உடல் இயலமாமைக்கு முதன்மையான காரணம் என்று, 2016 அக்டோபரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

ஹீமோகுளோபின் விகிதம் அதிகம்; ஆனால் நீடிக்கிறது ரத்த சோகை

கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து வயது குழுவினர் மத்தியிலும் சராசரியாக ஹீமோகுளோபின் விகிதம் அதிகரித்தாலும், இது ரத்தசோகை நோய் குறைய குறிப்பிடத்தக்க மாற்றத்தை போதுமானதாக இல்லை. ரத்தசோகை குறைவு விகிதம் அதிகபட்சமாக கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் காணப்பட்டது.

ஐ.எப்.பி.ஆர்.ஐ. ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படும் மாதிரிகள், குழந்தைகளில் ரத்தசோகை அளவுகளில் 49% மாற்றங்களையும், கர்ப்பிணிகளில் 66% வித்தியாசத்தையும் விளக்கலாம்.

குழந்தைகளில் ரத்தசோகை விகிதம் குறைவுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கண்காணிப்பு (18%); பெண்களின் கல்வி அதிகரிப்பு (10%), சமூக பொருளாதார நிலை (7%) காரணம் என்று விளக்கம் தரப்பட்டது. மாமிசம் மற்றும் மீன் நுகர்வு, மேம்பட்ட சுகாதார வசதிகள், தாய்வழி ரத்தசோகை மற்றும் குறைந்த உடல் நிறை குறியீட்டெண் மாற்றங்கள் ஒவ்வொருக்கும் 2-3% பங்களித்தது.

கர்ப்பிணி பெண்களை பொருத்தமட்டில், தாய்மைக் கல்வி (24%), சமூக பொருளாதார நிலை (17%), மற்றும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கண்காணிப்பு (7%) ஆகியன, ரத்தசோகை நோயில் பெரும் முன்னேற்றம் ஏற்படக் காரணங்கள் என்ற கூறப்பட்டது. மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு (9%), ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை (6%), தாய்வழி வயது (2%), மற்றும் இறைச்சி மற்றும் மீன் நுகர்வு (1%) ஆகிய மற்ற காரணிகளும் அடங்கும்.

சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தலையீடுகளின் மோசமான தடுப்புமுறை

குழந்தை பருவ பெண்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களை சுகாதாரத் தலையீடுகள் இலக்காக மேற்கொள்ளப்பட்டன - அதாவது ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் தலையீடுகள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை போலிக் அமில அட்டவணைகள் மற்றும் குடற்புழு நீக்க மருந்து வழங்கும் இலக்காகும். இது குழந்தைகள் ரத்தசோகை குறைப்புக்கு வழிவகுக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

இந்த சேவைகள் இப்போது அதிக அளவில் கிடைக்கின்றன, ஆனால் அவற்றின் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. 2016 ஆம் ஆண்டில் ஐ.எப்.ஏ. நுகர்வு கர்ப்பிணிகளில் 30%, குடற்புழு நீக்கம் 18% மற்றும் குழந்தை பருவகால கருவுறுதல் 32% என்றளவில் இருந்தது.

கடந்த 50 ஆண்டுகளாக தேசிய ஊட்டச்சத்து ரத்தசோகை தடுப்பு திட்டம் தொடர்ந்தாலும் ரத்தசோகை தொடர்ந்தது; ஏனெனில் போதுமான அளவிலான இரும்புச்சத்து மாத்திரைகள் தேவைப்படுவோரை முறையாக சென்றடையவில்லை; உண்மையில் அவர்கள் அனைவரும் இதை உட்கொண்டிருக்கவில்லை என்று, 2017 நவம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

அசைவ உணவு, காய்கறி உட்கொள்ளுதல் போதுமானதாக இல்லை

கடந்த 2005-06 மற்றும் 2015-16க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் வாராந்திர இறைச்சி மற்றும் மீன் நுகர்வு 7-9% புள்ளிகள் அதிகரிப்பு இருந்தது; இது, ரத்த சோகை சுமார் 2-3% சரிவுக்கு வழிவகுத்தது. இந்தியாவில் 80% ஆண்கள், 70% பெண்களும் மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை எப்போதாவது தான் உட்கொள்கின்றனர்; அவர்களில் 50%க்கும் குறைவானர்கள் தான் வாரந்தோறும் சாப்பிடுகின்றனர் என, 2018 மே மாதம் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

அசைவ உணவு சாப்பிடுவதால் அதிக செலவுபிடிக்கும் என்ற நிலையில் கீரை, காய்கறி ஆகிய ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரமாகவும், ரத்த சோகையை தடுக்கவும் முடியும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் கீரை காய்கறிகளின் தினசரி நுகர்வு 64% முதல் 48% வரை குறைந்துள்ளது என்று என்.எச்.எப்.எஸ். தரவுகள் தெரிவிக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் தேவை

பெண்களின் கல்வியானது, குழந்தைகள் மத்தியில் 10%, கர்ப்பிணி பெண்கள் இடையே 24% ரத்தசோகை குறைவதற்கு காரணமாக அமைந்தது. ஆனால் இந்தியாவில் இன்னமும் 31.6% பெண்கள் கல்வி அறிவு பெறாதவர்களாகவும், 35.7% மட்டுமே 10ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்களாகவும் உள்ளனர்.

கல்வியறிவு உள்ள பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றதாக, இந்தியா ஸ்பெண்ட் இங்கு, இங்கு மற்றும் இங்கு குறிப்பிட்டிருந்தது.

கருவுறுதல் என்பது ஓராண்டு தள்ளிப்போடுதல், திறந்தவெளியில் மலம் கழித்தலில் 10%குறைவு போன்றவை கர்ப்பிணி பெண்களில் ரத்தசோகை 3.5 முதல் 3.8% புள்ளிகள் குறைவுக்கு காரணமாக இருந்தது என, 2018 ஜூனில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

“பள்ளிப்படிப்பில் இருந்து பெண்கள் விலகுவதற்கு, முன்கூட்டியே அவர்களுக்கு திருமணம் செய்வது முதன்மை காரணமாகும்; எனவே, திருமணத்தை தாமதம் திட்டங்கள் நீண்ட காலத்திற்கு ரத்த சோகைக்கு பயனளிக்கும் " என்கிறார் ஸ்காட்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களின் ரத்தசோகை குறைப்பதில் மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் (9%) முக்கிய பங்கு வகிக்கிறது; எனினும் 50% குடும்பங்கள் மட்டுமே மேம்பட்ட சுகாதார வசதிகளை கொண்டுள்ளதாக, என்.எப்.எச்.எஸ்.-4 ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும், 2018 ஆம் ஆண்டில் ஜாதி பாகுபாடு மற்றும் மாசுபாடு பற்றிய சமூக நம்பிக்கைகள் 44% கிராமப்புற இந்தியர்களை திறந்தவெளி பயன்பாட்டை தூண்டியது என்று, 2019 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது. "பெண்களின் கல்வி, அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வீட்டுவசதிகளில் கூடுதல் முதலீடுகள் செய்வது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ரத்தசோகை குறைப்புக்கு உகந்ததாக இருக்கும்" என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடப்பட்ட வளர் இளம் பருவத்தினர்

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் மீது பெரும்பாலும் கவனம் செலுத்தி வந்தாலும், 2013 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய ரத்தசோகை திட்டமானது வளரிளம் பருவத்தினர் மீது ஐ.எப்.ஏ.வின் கூடுதல் திட்டமாக தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் பெண்களில் ரத்தசோகை 1.7% புள்ளி குறைப்பு (55.8% முதல் 54.1% வரை) மட்டுமே இருந்தது என்பது பயனற்றதாக இருக்கும்.

அதேபோல், 10 முதல் 14 வயது வரையில் உள்ளவர்களின் ரத்தசோகை நோய்த்தாக்கம் தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் சேர்க்கப்படவில்லை; ஆனால் மற்ற ஆய்வுகளில் இது 50-90% வரையிலான வளரிளம் பருவத்தினருக்கு பாதிப்பு இருப்பதை காட்டியதாக, ஐ.எப்.பி.ஆர்.ஐ. ஆராய்ச்சியாளர்கள் கூறினார்.

மேலும், 12 முதல் 14 வயதுக்கு இடையே இந்திய பெண்களுக்கு மாதவிடாய் தொடங்கும் நிலையில், அவர்களில் 8% பேர், 15 வயது முதல் 19 வயதிற்குள் தங்களஹ்டு முதல் குழந்தையை பெறுகின்றனர்; இதை தடுப்பதும்; இவ்வயது குழுவினரை கண்காணிப்பதும் முக்கியம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

"வளரிளம் பருவத்தினரும் வேகமாக வளர்ந்து வருகின்றனர்; அதிக ஊட்டச்சத்து அவர்களுக்கு தேவைப்படுகிறது. இதனால் அவர்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்; இது ரத்தசோகைக்கு வழி வகுக்கிறது” என்கிறார் ஸ்காட். "ஆரம்பகால இளமை பருவத்தினர் மத்தியில் நல்ல பழக்கங்களை உருவாக்குவது முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் பலர் இளம் வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். பருவ வயது வரை காத்திருப்பது அவர்களுக்கு மிகவும் தாமதமானதாக இருக்கலாம்” என்றார்.

ரத்தசோகைக்கு இரும்புச்சத்து குறைபாடு மட்டும் காரணமல்ல

குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், 15-25% பேரின் ரத்த சோகைக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட, அதிக பணவீக்கம் காரணமாகிறது என, உலகளாவிய ஊட்டச்சத்து தொடர்பான இதழ் நியூட்ரியண்ட்ஸ், 2016 ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி கட்டுரை வெளியிட்டிருந்தது.

இரும்புச் சத்து குறைபாடு, 75-85% ரத்தசோகைக்கு காரணமில்லாத போது, இரும்புச்சத்து பிரச்சனை இதற்கு தீர்வை தராது என்றார் ஸ்காட். கிருமி தொற்று, மலேரியா, ஊட்டச்சத்துகளிய குறிஞ்சும் நோய்த்தொற்றுகள், மரபியல் சார்ந்த ரத்த சிவப்பணுக்கள் பாதிப்பு, ரத்தப்போக்கு, இரும்புச்சத்து அல்லாத வைட்டமின் ஏ, பி12 போன்ற ஊட்டச்சத்துகள் பற்றாக்குறை போன்றவை, இதற்கு காரணமாகிறது.

ஃபோலிக் அமில குறைபாடு தவிர, ரத்தசோகைக்கான பிற காரணங்கள் ஐ.எப்.ஏ கூடுதல் செயல்பாடுகள் மூலம் தீர்க்கப்படவில்லை. “ திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்தும் ஐ.எப்.ஏ.வின் செயல்பாடுகள் தோல்வியடைய இதுவும் காரண்மாக இருக்கலாம்” எங்கிறார் ஸ்காட்.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.