மும்பை: கடந்த 1858 ஆம் ஆண்டு லண்டன் மற்றும் நியூயார்க் இடையே அட்லாண்டிக் பெருங்கடலுக்கு கீழே, முதல்முறையாக டெலிகிராப் கேபிள் அமைக்கப்பட்டது, தகவல் தொடர்புத்துறை வரலாற்றின் மேம்பட்ட தொழில் நுட்பமாக கருதப்பட்டது. இதன்மூலம் விரைவில் உலகம் முழுவதும் அமைதி பிறக்கும் என்றுஉற்சாகமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அது தெளிவாக நடக்கவில்லை.

வெறுமனே ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்ளும் திறன் வேகமாகியுள்ளது;இதை அடிக்கடி பயன்படுத்துவதால் பழமை மறைந்துவிட்டது என்று பொருளல்ல. அது, பிணைப்பை ஏற்படுத்தியது; அல்லது நம் இனங்களை மேலும் தன்னலமற்றதாக மாற்றியது.

இப்போது ஸ்மார்ட்போன் என்பது, இந்திய சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் ஊடுருவி சென்றுள்ளது என்கிறார், வெளியுறவு கொள்கை குறித்த உலகளாவிய இதழான ‘பாரின் பாலிசி’ ஆசிரியர் ரவி அகர்வால். இவர் ‘India Connected: How the Smartphone Is Transforming the World’s Largest Democracy’ என்ற நூலின் ஆசிரியரும் ஆவார். அதேநேரம் மில்லியன் கணக்கான மக்கள் முதல்முறையாக இணையதளத்தை அணுக இச்சாதனம் உதவுகிறது என்ற கூற்றை ஏற்க அவர் தயங்குகிறார்.

“நான் நம்பிக்கையற்றவனாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் நான் நிச்சயம் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். புள்ளி விவரங்கள் மேலை நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் ஸ்மார்ட்போன்கள் இந்தியா போன்ற நாடுகளில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுத்திவிடப் போகிறது என்ற எனது கவலையை இந்த நூலின் பின்புலம் பிரதிபலிக்கிறது” என்றுஇந்தியா ஸ்பெண்டிடம் அகர்வால் தெரிவித்தார்.

மொபைல்போன் இணையதள பயன்பாடு, 2016 டிசம்பரில் இருந்ததைவிட, 2018 ஜூனில் 17% அதிகரித்து, 478 மில்லியன் ஆக அதிகரித்ததாக, இந்திய இணையதளம் மற்றும் மொபைல்போன் கூட்டமைப்பு மற்றும் கந்தர் IMRB அமைப்பின் 2017 கூட்டுஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேற்கு நாடுகளில் போன் டயல்-அப் என தொடங்கி அகன்ற அலைவரிசை, 3ஜி என இணையதள வளர்ச்சி மெதுவாக உள்ளது. இந்தியாவிலோ கைக்கு அடக்கமான மலிவான ஸ்மார்ட்போன், குறைவான இணைய டேட்டா திட்டங்களால் நுகர்வோர் தவளைப்பாய்ச்சலாக வேகம் காட்டுகின்றனர்.

இதனால் எளிதாக மொபைல் வங்கி பரிமாற்றம் கல்வி தொடர்பாக இலவசமாக அணுகல் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கிறது; அதேநேரம், முதல்முறை பயன்படுத்துவோரின் போதிய இணைய அறிவால் குறைவால், போலி செய்திகளின் அச்சுறுத்தல், பகிரப்படும் தவறான தகவல்களால் அப்பாவிகள் கும்பல்களால் தாக்கப்படுதல் போன்ற பாதக அம்சங்களும் அதிகரிக்கின்றன.

ஹார்ட்வர்ட் பல்கலை பட்டதாரியான அகர்வால், முற்றிலும் நம்பிக்கை இழக்கவில்லை; ”ஒருவகை ஊக்கியாகவும், மாற்றங்கள் விரைவாக நிகழ்கிறது” என்று மொபைல்போனை நம்புகிறார். வறுமை, சமத்துவமின்மை, பலவீனமான உள்கட்டமைப்பை ஒருபோதும் சரி செய்யாது என்றாலும், அதற்கு சாதகமான செயல்பாடுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கவும் என்று அவர் கருதுகிறார்.

“நாட்டை சுற்றிய எனது எண்ணம், ஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்தியாவை உருமாற்றும் ஏதோவொரு பணியை ஸ்மார்ட்போன்கள் செய்யக்கூடும் என்பது தான். 2001-ல் எனது 18 வயதில் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, நாட்டில் 2% பேர் மட்டுமே கம்ப்யூட்டர் மற்றும் இணையதள பயன்பாட்டில் இருந்தனர். அந்த மாற்றமில்லாத நிலை சிறிது காலம் தான் என்று அறிந்திருந்தேன்” என்று அகர்வால் நினைவுகூர்ந்தார்.

”13 ஆண்டுகள் கழித்து திரும்பி வந்து பார்க்கும் போது மலிவான ஸ்மார்போன் சாதனம் முன் எப்போதையும் விட அதிக மக்களை இணையதள பயன்பாட்டில் இருக்க வைத்திருக்கிறது எனும் போது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. இதில் பன்மொழி கொண்டது. தட்டச்சு செய்ய வேண்டியதில்லை; பேசலாம். இந்தியாவில் என்ன நடக்க வேண்டும் என்று கற்பனை செய்திருந்தது எல்லாம், இப்போது இணையாக இதில் நடக்கிறது.

அகர்வால், சி.என்.என். தெற்காசிய பிரிவு மற்றும் நிருபராக 2014-ல் இந்தியா திரும்பினார். அதற்கு முன்பாக ஒளிபரப்பாளராக நியூயார்க் மற்றும் லண்டனில் பணியாற்றினார். அதுதான் அவர் பிறந்த இடமும் கூட. இந்தியாவில் தனது இரவை டெல்லியில் உள்ள ஓட்டல் அறையில் செலவிட்டார். அங்கு தான் அவர், ஸ்மார்ட்போன்கள் இந்தியாவையும் இந்தியர்களையும் எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை பதிவு செய்தார்.

“ஐடியா செல்லூர் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் அரசியல்வாதி வழக்கம் போல் மின்சாரம், தண்ணீர், சாலை வசதிக்கான வாக்குறுதி அளிக்கிறார். அப்போது, கூட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் தங்கள் மொபைனில் கூகுள் மூலம் அவர் கடந்த முறை அளித்த வாக்குறுதியின் வீடியோவை எடுத்து காண்பித்து, அரசியல்வாதிகள் எங்களை முட்டாள் என்று நினைக்கிறீர்களா என்று கேட்க, கூட்டத்தினரின் மனநிலை மாறுகிறது; கிடைத்ததை கொண்டு மேடையில் வீசுவதாக, அக்காட்சி உள்ளது.

“அந்த இளைஞன் அரசியல்வாதியின் பேச்சை நிறுத்துவதற்கு மொபைல்போன் பேச்சை காட்டி உண்மையை கூறுகிறார். கூகிள் மூலம் காகிதங்கள், ஆவணங்கள் இல்லாமல் உண்மையை சரிபார்த்து இளைஞர் கூற, மொபைல்போன் பயன்பட்டிருக்கிறது. இது ஏழை-பணக்காரர், கிராமப்புறம்- நகர்ப்புறம், ஆங்கிலம் தெரிந்தவர், தெரியாதவர் என்ற வித்தியாசமின்றி இந்தியாவில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் சென்றடைந்துள்ளது”

இந்த நேர்காணலில், ஸ்மார்ட்போன்களின் அதிவேக பெருக்கத்தால், உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து, அகர்வால் விவாதிக்கிறார்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

இந்தியாவில், 2016 ஆய்வின்படி வெறும் 3% பொறியியல் பட்டதாரிகளே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஸ்மார்ட்போன்கள் வாயிலாக இணையதள பயன்பாடு என்பது இந்திய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துமா? குறிப்பாக (நூலில் நீங்கள் சித்தரித்தது போல்) கல்வி மையங்கள் தேர்வுக்கான “துணிவு” மற்றும் “வெற்றி”யை நோக்கி செல்கின்றனவா?

நீதி வெளியேறிவிட்டது. ஒருபுறம், அப்துல் போன்ற புத்தகத்தின் (ராஜஸ்தானில் சுயமாக படித்து, பட்டம் பெறாதவர் ஐஐடி மனுதாரர்களுக்கு பிடித்தமானவராக திகழ்கிறார்) ஒரு பாத்திரமாக இருக்கிறீர்கள். அவர், மொபைல்போன் இலவச செயலி மூலம் ஆங்கிலம் கற்றார். அத்துடன் பல மொபைல்போன் வீடியோக்கல் மூலம் தன்னம்பிக்கை, சிறந்த போதனை முறைகளில் தேர்ந்தவரானார். மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம். ஆனால், கவனச்சிதறலை ஏற்படுத்தும் என்பதால் தனது வகுப்பறையில் மொபைல்போன் பயன்பாட்டிற்கு அப்துல் தடை விதித்துள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஒட்டுமொத்தமாக மொபைல்போன் வைக்குமிடத்தை பொருத்து, அது (படிப்புக்கு) தாக்கத்தை உதாரணத்துக்கு ‘ஏக் ஸ்டெப்’ (ஒரு லாபநோக்கற்ற கல்வித்தளம்) போன்று ஏற்படுத்தும் என்று கருதுகிறேன். அவர்கள் கல்வி முன்னேற்றத்துக்காக கள அளவில் பணிபுரிகின்றன; இது, ஊராட்சி பள்ளிகளில் மொபைல்போன் மென்பொருள் வாயிலாக திறமையாக பாடம் நடத்தும் இந்தியாவின் ஒரு பெரிய மனநிலையின் ஒருபகுதியாகும். மற்றவற்றோடு ஈடுபட முடியாத நிலையில் உள்ள இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இதுபோன்ற கருவிகள் பயனுள்ளதாக இருக்கும். இது அவர்களுக்கு கல்வியை ஒரு முழு கற்றல் அனுபவத்தை தரும்; தேர்வுகளை வெறும் வெற்றிக்கானதாக பார்க்காது. மொபைல் போன் தொட்டறிய முடியாத வழிகளில் உதவுகிறது. அதை அளவிடுதல் கடினம். உதாரணத்துக்கு என்னையும், உங்களையுமே பாருங்கள். வளர்ந்து வரும் காலத்தில் நாம் ஒரு கம்ப்யூட்டர் வைத்திருந்தது உதவியாக இருந்தது. இது நமக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஒப்பிடுதல், வேறுபாடு மற்றும் கூகுள் விஷயங்கள் போன்றவை நமக்கு உதவியது. இம்முறையிலான கற்றல் என்பது உங்கள் ஆர்வத்தை ஆராய்வதாகும்.

ஒவ்வொரு மாதமும் வேலை செய்யும் வயதுடையோரின் எண்ணிக்கை 1.3 மில்லியன் அதிகரித்து வரும் இந்தியாவில், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் யாவை? பிரம்மாண்ட பொருளாதாரத்தில் இன்னும் அதிகமான வேலைவாய்ப்புகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் கட்டுப்படுத்தப்படலாம். பாரம்பரிய, நிலையான இருக்கை பணிகளை விட அவர்கள் அதை விரும்பியிருக்கலாம் அல்லவா?

மீண்டும் எனது கணிப்பு இரண்டும் கலந்த கலவையாகவே உள்ளது. இந்த பிரம்மாண்ட பொருளாதாரம் “அனைத்தையும் சரி” செய்யும் என்று நான் கருதவில்லை. உபேர் கால் டாக்ஸி போன்றவற்றில் பயணம் செய்பவர்கள் பலரும் அதிக வருவாய் பிரிவினர்; மாதம் ஒரு லட்சம் ஈட்டுபவர்கள். பின்னர் வழிமுறைகள் மாற்றப்பட்டு வருமானம் ஒரு மாதத்திற்கு ரூ. 30,000 வீழ்ச்சியடைந்தது; அது உண்மையில் அவர்களுக்கு நியாயமற்றது. ஆனால், உபேர், அதன் போட்டியாளரான ஓலா ஆகியவற்றின் உரிமையாளர்களிடம் பேசியதில் அறிந்தது, இப்பணிக்கு இன்னமும் மக்கள் வரிசையில் காத்திக் கிடக்கிறார்கள் என்பது தான். பெரும் பொருளாதாரம் உருவாகிக் கொண்டிருக்க, இப்பணிக்கு பெரும் தேவை இருக்கிறது.

பெரிய வேலைவாய்ப்புகளுக்கான மிகப்பெரிய ஆதாரமாக பேக்கிங், கிடங்குகள் மற்றும் விநியோக சந்தைகள் இருக்கும். ஏனெனில் இந்தியாவில் மின்னணு வணிகம் இன்னமும் சிறிதாகவே உள்ளது. உண்மையில் இந்தியாவின் ஒரு ஆண்டு மின்னணு வணிக மதிப்பு, சீனாவின் வருடாந்திர பண்டிகை விடுமுறையான நவ.11-ல் நடக்கிறது. இதில், சீனாவைவிட இந்தியா குறைவாகவே உள்ளது. ஆனால், இத்துறையில் எப்படி வளர முடியும் என்ற ஒரு கண்ணோட்டத்தை இது தருகிறது.

இதில் சில தன்னியக்கம் உள்ளது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் பேக்கிங் மற்றும் வினியோக பணியாளர்களின் தேவை இருக்காது என்று கற்பனை செய்வது கடினமானது. ப்ளு காலர் பணியாளர்களுக்கும் இவ்வகையான பணிகள் தேவைப்படும். இவ்விவரங்களுடன் நன்கு பொருந்தக்கூடிய பணி வாய்ப்புகளை பிரம்மாண்ட பொருளாதாரம் உருவாக்கும். உலகின் மற்ற பகுதிகளை போலவே, இங்கும் சில செங்கல் மற்றும் மோட்டார் துறை பணிகள் சரியலாம். ஒன்று நிச்சயம், மின்னணு சகாப்தத்தில் நுழைந்துள்ள இந்தியா, போதிய வேலைவாய்ப்பு தோற்றுவிக்கும் வழியை கண்டறிய வேண்டும். அது தொடர்பான விவாதங்கள் போதுமானதா என்று எனக்கு தெரியவில்லை.

இந்தியா பொதுவாக ”குறைந்த நம்பகத்தன்மை” கொண்ட நாடு. உபேர் சவாரிக்கு பணம் செலுத்துவதில் உள்ள முரண்பாடு, ப்ரீ-பெய்டு திட்டத்தில் உள்ள பாதிப்பு குறித்து நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இதை மேம்படுத்த ஸ்மார்ட்போன் உதவுமா? எவ்வாறு உதவும்?

இந்தியாவில் நம்பகத்தன்மையின்மை என்பது பரவலாக உள்ளது. இது, உபேர் டாக்ஸிகளுக்கு பணம் செலுத்துவதில் இருந்து, குறிப்பிட்ட வகை நவீனத்துவம் மற்றும் மாற்றங்களை எதிப்பது என, பல விஷயங்களை விளக்குகிறது. ஆனால் உண்மையில் இந்நிலைமை அடிப்படையிலானது என்று நினைக்கிறேன்; பலரும் ஒரு குறிப்பிட்ட வழியில் இயங்குகின்ற ஒரு குறிப்பிட்ட முனையை அடைய, மற்றவர்களும் அதை பின்பற்ற வேண்டும்.

இந்தியா வளர்ந்த பொருளாதார, அதிக கல்வியறிவு, தொழில்மயமாக்கப்பட்ட குடும்ப மற்றும் பழங்குடியின அமைப்போடு குறைந்தும், நம்பிக்கையோடும் பிணைக்கப்பட்டுள்ள நாடு. இளம் இந்தியர்களுக்கான மாற்றத்திற்கான மையக் கருவாகவும், செயல்பாட்டு குறிக்கோளின் இயக்கமாகவும் (உண்மையில் கூட) ஸ்மார்ட்போன் உள்ளது. ஆனால், இது நம்பகமான கருவி என்பது மிகைப்படுத்தப்பட்டது - ஏனெனில், போலி மற்றும் எதிர்மறை செய்திகளை இது கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே நடக்கும் விஷயங்களை இது முடுக்கிவிடும். அத்துடன், தெற்கு இத்தாலியை போல், சில புள்ளியில் ஒரு உயர் நம்பிக்கை சமுதாயத்தை நோக்கி நாடு செல்வதற்கு உதவும். போன் என்பது வெறும் செயலாக்கம் மற்றும் செயலாக்க முடுக்கியாக உள்ளது.

மொபைல்போன் அணுகலுக்கான பாலின இடைவெளி, பெண்ணின் இளம் பருவத்தில் தொடங்குகிறது; அவளின் வாழ்நாள் முழுவதும் அது இடம் பிடிக்கிறது. பெண்களின் செயலற்ற தன்மை மற்றும் மொபைல்போன் மீதான “கவனம்’ கடமைகளில் இருந்து ஒரு திசைதிருப்பலாக இருப்பதும், இந்த இடைவெளிக்கு பெருமளவு காரணமாகும். இது அவர்களுக்கு ஆப்-லைன் வாழ்க்கையை போலவே தெரிகிறது. பெண்களுக்கான ஆன்லைன் வாய்ப்புகள், பழமைவாத கட்டுப்பாடுகளால் இன்னமும் தடுக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் நிகழ எவ்வளவு காலமாகும் என்று நினைக்கிறீர்கள்? முதலில் என்ன நடக்க வேண்டும்?

ஆண்கள் மாற வேண்டும். ஆண்கள் பல விஷயங்களில் வெறுமனே காவலாளிகள் தான். சில பரிமாணமுறை மாற்றங்கள் ஏற்பட்டு உலகம் தலைமை தாங்கி நிற்கும் போது, இது எவ்வளவு முட்டாள்த்தனமானது என்று

இளம் இந்தியர்கள் உணருவார்கள். ஆனால், இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த கேள்வி என்பதைவிட பெரியதானது, இது ஒரு சமுதாயம் சார்ந்த கேள்வி என்பதாகும்.

#மீ டூ இயக்கம் எவ்வாறு இந்தியாவில் இருந்து வருகிறது என்பதை பாருங்கள். ஆண்கள் ஒருகணம் சிந்திக்க வேண்டும், வாழ்க்கை எவ்வாறு சமத்துவமற்று உள்ளது, ஆழமான வேதனையை கொண்டது, பெண்களுக்கு புண்படுத்தும் விதமாக உள்ளது என்பதை. குறிப்பாக, தங்கள் சகோதரி, மனைவி, உறவினர்கள், நண்பர்களை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒருவேளை இது மிகைப்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால், இன்னும் கேட்க, மேலும் அறிய வேண்டும் என்பதை உணரக் கூடிய ஆண்கள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். பெண்களை அவர்கள் அச்சுறுத்தலாக பார்க்கக்கூடாது; பயனாளிகள், சக ஊழியர்கள், சக தொழிலாளர்கள், நண்பர்கள், பங்காளிகள் மற்றும் வழிகாட்டிகளாக கருத வேண்டும்.

#மீ டு இயக்கம் என்பது நகர்ப்புற மற்றும் இணையதள பயன்பாட்டளவில் உள்ளது. இது மேலும் பரவ வேண்டும். கலாச்சாரம் மற்றும் பாலின வேறுபாடுகள் ஆழ்ந்த உட்பார்வை என்பது, ஒரே இரவில் மாறாது. மீண்டும் கூறுகிறேன், இதையெல்லாம் மொபைல்போன் மாற்றிவிடாது; ஆனால், அதற்கான செயல்களுக்கு தூண்டுகோலாக இருக்கும்.

செயலி மூல்ம தனிப்பட்ட ஆன் -லைன் டேட்டிங் (குடும்ப விவரங்கள் எதிர்) போன்றவற்றில் நல்ல எண்ணத்தோடு அணுகுவதற்கு பார்ட்டனர்களுக்கு பெரிய சமநிலை வாய்ப்பு உள்ளது. ஆனால் இதிலும் சமூல எல்லைகளில் ஊடுருவி சாதி, சமுதாயம், வருவாய் அடிப்படையில் விருப்பங்களை வடிகட்டி தேடும் வாய்ப்புகள் பயனாளர்களின் முன்பாக உள்ளது. இதை தான் நீங்கள் “21ஆம் நூற்றாண்டிலும் இந்தியா இன்னமும் விக்டோரியா ராணி காலத்து மனநிலையில் உள்ளது?” என எழுதினீர்களா? அல்லது இந்தியாவில் டேட்டிங் அல்லது திருமணத்தில் ஸ்மார்ட்போன் பங்கு வகிக்கும் என்று நம்புகிறீர்களா?

நான் நீண்டகாலமாக இதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன், அதேபோல் பொதுவாக இந்தியாவையும் நம்புகிறேன். எனக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய விஷயம், ஸ்மார்ட்போனில் டேட்டிங் ஆப் பயன்படுத்தினாலும் அதில் வெவ்வேறு வகையான மக்களுடன் தான் தொடர்பு கொள்வார்கள்; சமூக, சாதி சார்ந்து இருக்காது என்று நம்பினேன். ஆனால், நான் நினைத்தது தவறு. சில சந்தர்ப்பங்களில் முன்பிருந்த அதே வழியில் போனை அணுக அனுமதிக்கப்பட்டுள்ளனர்; எனினும் முன்பைவிட சற்று மேம்பட்டுள்ளது.

எனவே என்ன கேள்வி எழுகிறது என்றால், ஸ்மார்ட்போன் இந்தியர்களை மேலும் மேற்கத்திய தாக்கத்தை ஏற்படுத்துமாஅல்லது இந்திய பழமை சிந்தனைகளை ஆழப்படுத்துமா என்பதாகும். இந்தியாவின் இணைய கதை ஒரு தனித்துவமான இந்திய கதை என்றே நினைக்கிறேன் - உதாரணமாக இந்தியர்கள் பாரம்பரிய ஜோதிடக்கலையை ஆன்லைன் வாயிலாக பயன்படுத்துவார்கள், மேலும் பல விஷயங்களை ஸ்மார்ட்போன் கொண்டு பாரம்பரிய வழியில் சிந்திக்கலாம். அது கெட்ட விஷயமல்ல. அத்துடன் இந்தியா, இந்தியாவாகவே இருக்க வேண்டும்; அதன் கலாச்சாரம், பாரம்பரியம் கொண்டாடப்பட வேண்டும். வேறு எதையும் சுமத்த நாம் யார்.

குறைந்தது இந்திய இளம் பெண்கள் இந்த தொழில் நுட்பத்தை அணுகுவர். மாற்று வழியை காணும் திறன் பெறுவர். ஒப்பீடு மற்றும் முரண்பாடாக, கிராம மற்றும் நகர்ப்புறங்களை விட உலகளவில் இதையெல்லாம் அவர்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு - எதை தேர்வு செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கே தெரியும். மார்வாரிகள், மார்வாரிகளையும், குஜராத்திகள் குஜராத்தியரையும் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். எனவே, அங்கு தீர்ப்பு வேண்டியதில்லை. இந்தியா மாறி வருகிறது; அதற்கான வாய்ப்புகளை ஸ்மார்ட் போன் வழங்கும்.

சமூகத்தில் பாலியல் மற்றும் வன்புணர்ச்சிக்கு இடையே உறுதியான தொடர்பு உள்ளது என்பதில் கல்வியாளர்கள் வேறுபட்டாலும், முதல்முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளைஞர் ஒருவர் இதுபோன்ற காட்சிகளை பார்க்கும் போதும்; அதை எதிர்பாலித்தவர் மீது செயல்பாடுத்த முற்பட வாய்ப்பு ஏற்படாதா? இது குறித்த உங்கள் கருத்து?

பெண்களுடன் ஆரோக்கியமான உறவு இல்லாமல் நீங்கள் வளர்ந்தால் (உதாரணத்துக்கு பெண்ணின் கால் அல்லது தோளைக்கூட பார்க்காமல் வளர்ந்த சிறுவன பள்ளியில் மற்ற சிறுவர்களை போல் பெண்களுடன் இயல்பாக பழக முடியாது) முதல்முறையாக ஸ்மார்ட்போனில் ஆபாசப்படம் அல்லது கருத்துகளை பார்க்கும் போது, அது மனதில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் என்று நினைக்கிறேன். ஆபாசத்தை பார்க்கிறார்களா அல்லது ஆபாசத்துடன் கற்பழிப்பு போன்றவற்றை சிறுவர்கள் பார்க்கிறார்களா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பெண்கள் குறித்து தெரிவித்தவர்கள், அவர்களின் உடலை தொட்டதால் தொந்தரவாக உணர்ந்தவர்கள் என நான் சந்தித்த மக்களின் கதைகளை நூலில் சேர்க்கவில்லை; இதற்கு ஸ்மார்ட்போனே காரணமாக உள்ளது. இந்தியாவின் பெரும்பகுதி கிராபிக் கற்பனைக்குரிய அணுகலை கொண்டிருக்க எந்த வழியும் இல்லை; ஆரோக்கியமான பாலியல் என்ன என்பது பற்றிய புரிதல் இல்லை எனில் வன்முறை, ஆபாசத்தால் அவர்கள் பாதிக்கப்படலாம் என்று நினைக்கிறேன். பெண்கள் பாலியல் மற்றும் அதுதொடர்பானவற்றை அறிந்திருந்தால் அவர்களின் வாழ்க்கையின் நெருக்கமான அனுபவம் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். அது என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது.

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டுடனான கடந்த ஆறு ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் இணையதள பயனர்கள் எண்ணிக்கை 324% (அதாவது 92 மில்லியனில் இருந்து 390 மில்லியன் ஆக) அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வரும் 2019-ல் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் தாக்கம் எப்படியிருக்கும்? தேர்தலை இவை எவ்வாறு மாறுபடுத்தி காட்டும்?

ஸ்மார்ட்போன்கள் வாயிலாக போலி செய்தி மற்றும் வதந்தி பரவுகிறது. உண்மையான செய்திகள், வீடியோக்கள் கூட, குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன. சமூக ஊடகங்களில் வதந்திகள் மற்றும் போலி செய்தி பரவுவது எனக்கு கவலையை தருகிறது. சமூக ஊடகங்களை மக்கள் நம்புவது ஒரு பிரச்சனையாகும். எந்த எண்ணிலிருந்தோ, யாரோ அனுப்பும் தகவல் இன்னும் மோசமாக்குகிறது.

சமூக ஊடகங்களில் பார்க்கும் எவற்றையுமே நம்பக்கூடாது; அவற்றில் போலி செய்திகளும் உள்ளன என்பது குறித்த விழிப்புணர்வும், டிஜிட்டல் கல்வியறிவும் இந்தியாவில் இன்னும் கவனம் செலுத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இவ்வகையான பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களில் அரசு முதலீடு செய்வது பொதுவானது; இந்தியாவில் இதற்கு முன்னுரிமை உள்ளது. வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவது போல் பாதுகாப்பான உடலுறவு குறித்தும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆனால், (அரசோ, தனியாரோ) டிஜிட்டல் விழிப்புணர்வு, கல்வியறிவு தொடர்பாகவோ, எத்தகைய சக்தி வாய்ந்த சாதனம் (நல்லதோ, கெட்டதோ) என்றோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. மலிவான ஜியோ போனில், எப்படி பாதுகாப்பாக இருப்பது, சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது என்ற எழுத்துவடிவ விழிப்புணர்வு கூட இல்லை என்பது கவலைக்குரியது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமூக ஊடகங்கள் மீதான விழிப்புணர்வில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தேர்தல் நேரத்தில் இந்தியா முழுவதும் சமூக ஊடங்களில் போலிச்செய்திகள் கட்டவிழ்த்து படலாம் என்று நான் கவலைப்படுகிறேன்.

குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய போலி செய்திகளால் 2017 ஜனவரியில் இருந்து 69 குழுத்தாக்குதல்களில் 33 பேர் கொல்லப்பட்டனர். மனிதாபிமானம் உள்ள மனிதர்களிடையே, இதுவரையில்லாதபடி விசித்திரமான இரட்டை நிலையை இதுபோன்ற வலைபின்னல்கள் ஏற்படுத்துவதாக தோன்றுகிறது. இந்தியாவில், தவறான தகவல், போலி செய்திகள் ஸ்மார்ட்போனில் பரப்புதலால் பிரிவினை உருவாக்கியுள்ளது. இதற்கு பதிலடி தரக்கூடிய தீர்வு இருப்பதாக கருதுகிறீர்களா? அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிதர்னம் என்று கருத வேண்டுமா?

இது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிதர்னமா என்பது என்னால் உறுதியாக கூற முடியாது. ஸ்மார்ட்போன்களால் இந்தியாவில் வதந்தி, போலி செய்திகள் பரவி வன்முறைக்கு வித்திடுகிறது. இதற்கு ஸ்மார்ட்போன் தீர்வாகாது; மாறாக அதை அதிகம் பரவச் செய்யும்; அது தான் நடக்கும். தொழில்நுட்பத்தால் இதெல்லாம் நடக்கும் என்பது ஆச்சரியமானது அல்ல. அதை குறைக்க முன்பே ஒரு கதவும் திறக்கப்பட்டுள்ளது. நான் முன்பே சொன்னது போல், சமூக ஊடக அறிவு மேம்படுத்தப்பட வேண்டும். சமூக ஊடங்களில் வரும் தகவல் புதியது; ஆனால், முன்பின் தெரியாத நபர் அனுப்பும் தகவல் உண்மையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணரும் மனப்பாங்கு தேவை. ஒவ்வொரு உலகளாவிய குடிமகனும் புதிய செய்தியை பார்க்கும் போது நிலையான சில கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்: அதில் தேதி உள்ளதா? யார் அதை எழுதினார்கள்? அதை வெளியிட யார் நிதி தந்தார்கள்? அவர்களின் விசுவாசம் என்ன? யார் இதற்கு பணம் செலுத்தினார்கள்?

வாட்ஸ் ஆப்பில் நீங்கள் தகவலை பார்க்கும் போதும் இதே கேள்விகளை முன் வைக்க வேண்டும். யார் அனுப்பினார்கள்? அதை எங்கிருந்து அவர்களுக்கு கிடைத்தது? ஊடகங்களில் இருக்கும் நமக்கு, இதில் சற்று புத்திசாலியாகவே இருப்பதாக நினைக்கிறேன். இந்த உணர்வை நாம் இந்தியா முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

(சங்கேரா, எழுத்தாளர் மற்றும்இந்தியா ஸ்பெண்ட்பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.