கொல்கத்தா: கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் வழக்குகளின் அதிகரிப்பு ஆகியன, தொற்றுநோய் கட்டுப்படுத்தும் நமது உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்தி இருப்பதாக, பொது சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்; இதுவரை இந்தியாவின் கோவிட் -19 நடவடிக்கைகள் முற்றிலும் குறைவு என்று கூறப்படும் சூழலில், அது சமூக பங்களிப்புக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

சமூக பங்களிப்பு பொது சுகாதாரத்திற்கு முக்கியமானது மற்றும் எபோலா போன்ற முந்தைய தொற்றுநோய்களுக்கு எதிரான போராட்டங்களில் மையமாக இருந்துள்ளது. தற்போதைய சூழலில், சமூகத்துடன் சுறுசுறுப்பாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை, இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனர் நாச்சிகேட் மோர் உட்பட பலர் எடுத்துரைத்துள்ளனர்.

பாதிக்கப்படக்கூடிய வீடுகளை அடையாளம் காணவும், வயதானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவை வழங்குவதற்கும், சிறந்த தகவல்தொடர்பு உத்திகளை உருவாக்குவதற்கும், தொடர்புத் தடமறிய உதவுவதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உள்ளூர் அளவிலான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் சமூக ஈடுபாடு முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று ஜிண்டால் பள்ளியின் அரசு மற்றும் பொதுக் கொள்கையின் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார இணை பேராசிரியர் இந்திரானில் முகோபாத்யாய் கூறினார்.

இவ்விஷயத்தில் நாடு முழுவதும் பரவலான சமூக முயற்சிகள் இருந்தபோதும், நகரங்களும் மாநிலங்களும் பயனுள்ள மற்றும் நீடித்த சமூக ஈடுபாட்டிற்கான முயற்சிகளை உருவாக்கி, அதை அளவிட வேண்டும் என்று, நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

சமூகமும் கோவிட்-19ம்

கோவிட் தொற்றுநோய் காலங்களில் சமூக இடைவெளியை பராமரித்தல், கை கழுவுதல் மற்றும் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு விதிகளைப் பின்பற்றுதல் போன்ற பெரிய அளவிலான நடத்தை மாற்ற நடவடிக்கைகளை அரசு பரிந்துரைத்துள்ளது. இத்தகைய செயல்பாடுகளை தீவிரமாக ஏற்று செயல்படும் அளவிற்கு சமூகம் முன்வராவிட்டால், இந்த நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருக்காது என்று திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரைதிருநாள் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி பொதுச்சுகாதார பேராசிரியர் ராகல் கெய்டோண்டே கூறினார்.

அரசின் பொது சுகாதார வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும், சமூக ஈடுபாடு என்ற தொடர்பு காணாமல் போயிருக்கலாம் என்று, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) சமூக மருத்துவம் மற்றும் சமூக சுகாதார மையத்தின் பொது சுகாதார பேராசிரியர் ரிது பிரியா கூறினார். சமூகத்தின் சொந்த நலம் மற்றும் நல்வாழ்வு பற்றிய முடிவுகளில் அவர்களை ஈடுபடுத்துவது ஒரு மாறுபாட்டை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

எடுத்துக்காட்டாக, எபோலா தொற்றுநோயை கையாண்ட அனுபவம், ஆபத்தான தகவல்களை விட சமூக ஈடுபாடு என்பது பரந்த அளவைக் கொண்டுள்ளதை காட்டுகிறது. 2014ம் ஆண்டில் எபோலா பரவியபோது சியரா லியோனின் மிகப்பெரிய சமூக ஈடுபாட்டு முயற்சியான சமூக அணிதிரட்டல் அதிரடி கூட்டமைப்பு, சமூகம் தலைமையிலான எபோலா நடவடிக்கை (CLEA) அணுகுமுறையை செயல்படுத்த 2,500 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தது. இந்த அணுகுமுறையில், தன்னார்வலர்கள் கட்டமைக்கப்பட்ட கருவிகளை (அதாவது எபோலாவின் முக்கிய அறிகுறிகளை அடையாளம் காண உடல் ரீதியான கண்காணிப்பு, ஆபத்து குறித்த விவாதம் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் அனுபவம் போன்றவற்றை) பயன்படுத்தி, சமூக நடவடிக்கையை தூண்டப்பட்டது. அவர்களது கூட்டங்களில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டு விவாதத்தின் மூலம், சமூகங்கள் நோய் பரவுவதைத் தடுப்பதற்கும், சுய உரிமையை ஊக்குவிப்பதற்கும் மற்றும் சமூக நிறுவனத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களது சொந்த செயல் திட்டங்கள் வரையப்பட்டன.

அவசர உணர்வைத் தவிர, பசி அல்லது வேலை இழப்பு போன்ற பிற சிக்கல்களை இந்த முன்னிலைப்படுத்த பயிற்சிகள் உதவின; தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சியரா லியோன் முன்முயற்சியானது, பாதுகாப்பற்ற உடல் அடக்கங்களை கணிசமான குறைப்பது மற்றும் அறிகுறிகளின் ஆரம்பகாலத்தை கண்டறிந்ததற்காக பாரட்டப்பட்டது. 2014ம் ஆண்டின் எபோலா தொற்றுநோயில் இருந்து மிகப்பெரிய படிப்பினை பற்றி சுட்டிக்காட்டிய உலக சுகாதார அமைப்பும் (WHO), “சமூக ஈடுபாடு என்பது மற்ற அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் வெற்றிகளையும் அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு காரணியாகும்” என்றது.

"உரிமைதாரராக சமூகத்தின் பங்கை அங்கீகரிப்பது இதில் முதலும் முக்கியமானதும் ஆகும். தவறு செய்பவர்கள், அறியாமை, அழுக்கு மற்றும் சுகாதாரமற்ற நபர்களின் தொகுப்பே சமூகம் என்று கருதுவதை நாம் நிறுத்த வேண்டும். மாறாக, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களாக நாம் அவர்களை ஒப்புக் கொள்ள வேண்டும்; அவர்களுக்கு சேவை செய்வதே நமது (மாநிலத்தின்) பங்கு ”என்று புதுடெல்லியைச் சேர்ந்த சமூக குழந்தை மருத்துவரும் பொது சுகாதார நிபுணருமான வந்தனா பிரசாத் பரிந்துரை செய்துள்ளார்.

இந்தியாவில், பலவிதமான அடையாளங்கள் மற்றும் நலன்களின் கலவையாக சமூகங்கள் இருக்கும் இந்தியாவில், சமூகம் தலைமையிலான எபோலா நடவடிக்கை (CLEA) அணுகுமுறை போன்ற ஒரு பயிற்சி, சரியான முறையில் தழுவி செயல்படுத்தப்பட்டால், தொற்றுநோய்களின் பல்வேறு பிரிவுகளின் குறிப்பிட்ட தேவைகளை வெளிப்படுத்தவும், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க உதவும் என்று ரிது பிரியா கூறினார். இது மற்றவர்களின் மாறுபட்ட தேவைகள் மற்றும் நிலைமைகள் குறித்து அதிக விழிப்புணர்வையும் உணர்திறனையும் உருவாக்கக்கூடும்; தொற்றுநோயைத் தடுக்கும் பொதுவான நோக்கத்தை நோக்கி நேரடி கூட்டு நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றார் அவர்.

சமூக ஈடுபாடு என்பது அரசின் தன்மையை பொறுத்தது என, பொது சுகாதார வள வலையமைப்பின் (PHRN- பி.எச்.ஆர்.என்) சுலட்சனா நந்தி கூறினார். "சித்தாந்தங்கள் பொது சுகாதார நடைமுறைகளை உந்துகின்றன; ஒரு உரையாடலில் ஈடுபடுவதற்கு சமூகங்கள் முக்கியமானவை என அரசுகள் கருதுகின்றனவா என்பதை தீர்மானிக்கிறது. கைதட்டுவது, தட்டி ஒலி எழுப்பது சமூகங்களை ஈடுபடுத்துவதற்கான வழியல்ல,”என்று அவர் குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மை, சமக்கூட்டு

இந்த தொற்றுநோய் ஒரு தொடர்ச்சியான தருணத்தை குறிப்பதாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பேராசிரியர் கெய்டோண்டே தெரிவித்தார். "பல தசாப்தங்களாக சீரற்ற மேம்பாட்டு கொள்கைகள் சமூகங்களுக்கு உள்ளும் இடையிலும் பிளவுகளை உருவாக்கியுள்ளன; எனவே, தொற்றுநோய்களின் போது ஏற்படும் சேவைகள் பாரபட்சமாக இருக்காது அல்லது வைரஸ் பரவுவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட மக்கள்தொகைக் குழுவும் பொறுப்பேற்காது என்ற தெளிவான செய்தியை பரப்பும் பொறுப்பு அரசிடம் உள்ளது,”என்று அவர் கூறினார்.

அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை அரசின் முன்முயற்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு இன்றியமையாதது; இந்த நம்பிக்கையை மக்கள் மையப்படுத்தி முடிவெடுத்தல் மற்றும் சமூகச்செயலில் ஈடுபாட்டுடன் செயல்படுவதன் மூலம் சம்பாதித்து பராமரிக்க வேண்டும். "நாடு தழுவிய ஊரடங்கு தொடர்பான மத்திய அரசின் முடிவில் அனைவரில் யார் ஈடுபட்டுடன் செயல்பட்டார்கள் என்று நமக்கு தெரியாது... ஆனால், நிச்சயம் சமூகங்களல்ல" என்று ரிது பிரியா கூறினார்.

இதற்கு மாறாக கெய்டோண்டே கருத்து உள்ளது. தொற்றுநோய் பரவலின் போது கேரள அரசு செவிலியர் சங்கங்கள், அரசு மருத்துவர் சங்கங்கள், தனியார் துறை, ஊராட்சி தலைவர்கள், முன்னணி தொழிலாளர்கள், உள்ளூர் சுய உதவிக்குழுக்கள், வர்த்தகர்கள் சங்கங்கள் மற்றும் பலவற்றை இதில் ஈடுபடுத்தியது என்பது அவரது கூற்று. "சமூகத்திற்குள் உள்ள பல ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் அரசின் நடவடிக்கையை அணுகுகின்றன; அவை அவ்வாறு கேட்கப்படுகின்றன; அத்துடன் தொற்றுநோய்க்கு பதிலளிக்கின்றன," என்றார் அவர்.

சமூகங்களுக்கு உள்ளும் இடையிலும் வளரும் பிளவு குறித்த கவலைகள் இருந்தபோதிலும், சமூகங்கள் ஒருவருக்கொருவர் உதவுவதற்கும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் ஒன்றாக வந்த சம்பவங்கள் உள்ளன. கேரளாவின் சமூக சமையலறைகள், மக்களால் ஏற்று ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களும் ஊரடங்கு காலத்தில் உள்ளூர் உணவு பாதுகாப்பு நெருக்கடிக்கு சாத்தியமான தீர்வாக இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டன. மகாராஷ்டிராவில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக நகர்ப்புற வீடுகளுக்கு வழங்குவதற்காக தொகுதி அதிகாரிகளின் உதவியுடன் ஒரு கூட்டுறவு ஏற்பாட்டை அமைத்ததாக ரிது பிரியா கூறினார்.

கேரளாவின் 1,00,000-க்கும் மேற்பட்ட இளம் தன்னார்வலர்களைக் கொண்ட சன்னாத சேனா, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பணியாற்றியது; வயதானவர்களுக்கு உதவியது. டெல்லியில், தொழிற்சங்கங்கள், உதவியையும் பராமரிப்பு பணிகளையும் குறிப்பாக குடிசைப்பகுதிகளில் வழங்கி உதவியதாக ஜிண்டால் பள்ளியின் முகோபாத்யாய் கூறினார். மாநில அரசு இயந்திரங்களுக்கு வரம்புகள் உள்ள இடங்களில், தகவல்களை பரப்புவதிலும் அவை பயனுள்ளதாக இருந்ததாக அவர் கூறினார். முன்னாள் ஊராட்சித் தலைவர் ஒருவர், மலிவு விலை சானிடிசரை வடிவமைத்தார்; தொடர்புள்ளவர்களை கண்டறியும் செயலி மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் ஆகியவற்றை இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உருவாக்குவது போன்ற அனைத்தும், தொற்றுநோய்களின் போது பங்கேற்பு மற்றும் ஒற்றுமைக்கான சிறந்த எடுத்துக்காட்டுகள்.எனினும், இவற்றில் பெரும்பாலானவை முறைசாரா முயற்சிகள் மற்றும் அவற்றின் முழுத்திறனையும் வெளிப்படுத்த அரசின் ஈடுபாடு தேவை என்பது, கெய்டோண்டேவின் கருத்தாகும். "இதுபோன்ற பதில்களை பெறுவது அரசின் வழிமுறைகளை வலுப்படுத்த உதவும்; அது இப்போது மிகவும் தேவைப்படுகிறது," என்று அவர் கூறினார்.

உள்ளூர் அளவிலான கட்டுப்பாட்டு நிர்வாகத்திற்கு பொறுப்பான உள்ளூர் நிர்வாக அமைப்புகள் இத்தகைய முயற்சிகளை எளிதாக்க வேண்டும்; உண்மையில் அவர்களிடம் இதை கேட்க வேண்டும் என்று ரிது பிரியா பரிந்துரைத்தார். "குடியிருப்பாளர் நலச்சங்கங்கள் தங்களது உறுப்பினர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த என்ன செய்து கொண்டிருந்தார்கள், அவர்கள் ஊதியம் அளிக்கிறார்களா மற்றும் பலவற்றை உள்ளூர் அமைப்புகள் பற்றி சரிபார்க்க முடியும்," என்று அவர் கூறினார்.

செயல்திறன் அடிப்படையில் இதுபோன்ற சமூக முயற்சிகளின் சிறந்த நடைமுறைகள் மாநில அல்லது தேசிய அளவில் கட்டுப்பாட்டு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக மாறக்கூடும் என்ற ரிது பிரியா, "நிர்வாகம் புரிய இந்த அளவிலான நிர்வாகத் தலைமை தேவைப்பட்டாலும், சமூகங்களால் புதுமையான யோசனைகளாக நெறிமுறைகள் ஊக்குவிக்க வேண்டும்" என்று மேலும் கூறினார்.

ஒரு நூற்றாண்டு முயற்சிகள் இருந்தபோதும் பெரியம்மை நோய்த்தடுப்பு திட்டத்தை ரிது பிரியா நினைவு கூ ர்ந்தார்; இது 1970 களில் மட்டுமே வேகத்தை அதிகரித்தது; உள்ளூர் பொது சுகாதார செயல்பாட்டாளர்கள் சமூகங்களுடன் இணைந்து உள்ளூர் சூழலுடன் குறிப்பாக அவர்களின் தலையீடுகளுக்கு ஏற்ப பணியாற்றியது; இறுதியாக அந்த நோய் அழிக்கப்பட்டது.

சின்னம்மை போன்ற தொற்றுநோயை கையாள்வதில் சமூகங்களிடம் உள்ள அறிவு, சமூகத்தின் விமர்சனமற்ற வழக்குகளை நிர்வகிப்பதில், சிக்கலான பொது சுகாதார அமைப்பில் இருந்து சுமைகளை குறைப்பதில் கைக்குள் வரக்கூடும் என்று, கவுஹாத்தியில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் (TISS - டிஐஎஸ்எஸ்) பொது சுகாதார ஆராய்ச்சியாளரும் இளங்கலை பாடத் தலைவருமான பிரசாந்த் கேஷர்வனி கூறினார்.

உண்மையில் சுய சமூக அளவில் நடவடிக்கை தேவைப்பட்டாலும், அது ஒரு வலுவான பொது சுகாதார உள்கட்டமைப்பால் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்று புதுடெல்லியை சேர்ந்த குழந்தைகள் நலமருத்துவர் பிரசாத் கூறினார். "தொற்றுநோயில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொண்டால், பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்; மேலும் தனியார்மயமாக்கலை தொடர்ந்து அனுமதிக்க மாட்டோம்," என்று அவர் குறிப்பிட்டார். சமூகம் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேவையான ஆதாரங்களை அணுகும்போது மட்டுமே அதன் முழு திறனுக்கும் செயல்பட முடியும். “நமது முயற்சிகள் இப்போது சுகாதாரத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் அடைய முற்படுவோரை கட்டுப்படுத்துவது, சுகாதாரம் உட்பட அனைத்து நிர்வாக வழிமுறைகளையும் பரவலாக்குவதற்கு என்று வழிநடத்தப்பட வேண்டும். தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தால் முன்மொழியப்பட்ட கண்ணோட்டம் ஒருபோதும் முழுமையாக உணரப்படவில்லை என்றாலும், அதை அடைவதற்கான சாத்தியமான வழிகளை நமக்கு வழங்க முடியும், ”என்றார் பிரசாத்.

முந்தைய தொற்றுநோய்கள் பொதுவாக பலவீனமான நிறுவன ஏற்பாடுகளின் விளைவாக உண்டாகும் ஆழமான நிர்வாக சிக்கல்களை, நெருக்கடிகளை காட்டுகின்றன. ஆனால் தேவைப்படும் காலங்களில் ஆளுமை திறனை மேம்படுத்துவதில் சமூக ஈடுபாடு ஒரு முக்கிய பங்காற்றும் என்பதையும் அவை நிரூபிக்கின்றன. எந்தவொரு ஜனநாயக அரசும், சமூகத்தின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விஷயங்களில் முடிவெடுப்பதில் சமமான கூட்டாண்மைக்கு உதவ வேண்டும் என்று ரிது பிரியா கூறினார்.

நேர்மறை தகவல்களின் சக்தி

இத்தகைய சமூக முயற்சிகளை எளிதாக்குவதற்கு அரசு முதலில் ஒரு நெறிமுறையை உருவாக்க வேண்டும் என்ற ரிது பிரியா. எச்.ஐ.வி திட்டங்களில் செயல்படுத்தும் சூழலில் இருந்து இந்தியா பாடம் கற்க எடுக்க முடியும் என்று பரிந்துரைத்தார். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பரிசோதனை மற்றும் ஆலோசனை போன்ற சுகாதார சேவைகளை எடுத்துக்கொள்வதற்கான தடைகளை நீக்குவதற்கும் சமூகங்களில் அவற்றின் செயல்திறனை அதிகரிப்பதற்கும் ஒரு செயல்பாட்டு சூழலை உருவாக்குவது மிக முக்கியமானது. சேவைகளின் கிடைக்கும் தன்மை, அணுகல் மற்றும் ஏற்றுக்கொள்ளலை மேம்படுத்துவதன் மூலமும், பழிச்சொல்லை ஊக்குவிப்பது போன்ற நேர்மறையான செய்திகள், தகவலை தெரிவிப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும்.

தற்போதைய தொற்றுநோய்களில், தேவையான ஆதரவை வழங்குவதோடு, “இது நாம் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை; எனவே, நாமே ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறும் அரசு, தேவையற்ற பீதிகளை தடுக்கலாம் மற்றும் ஒத்துழைப்புக்கான சாதகமான செய்தியை அனுப்பலாம் என்று ரிது பிரியா குறிப்பிட்டார்.இருப்பினும், கோவிட் -19 நெருக்கடியை எதிர்கொள்வதில் மத்திய அரசு தொடர்பான செய்திகளில் கேள்விகள் எழுந்துள்ளன. “நீங்கள் வீட்டில் உட்கார்ந்து இருங்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை கழுவ வேண்டும், எதையும் தொட வேண்டாம், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் … நீங்கள் எல்லோரையும் சந்தேகத்துடனும், சாத்தியமான பரவலாகவும் பார்க்கும் சூழலையும் உருவாக்குகிறீர்கள்,”என்று ரிது பிரியா குறிப்பிட்டார்.

அறியப்படாத அச்சத்தை தூண்டும் வகையிலான செய்திகள், தகவல்கள் ஏற்கனவே சமுதாயத்தை பாதிக்கத் தொடங்கியுள்ளன என்று டி.ஐ.எஸ்.எஸ். அமைப்பின் கேஷர்வானி கூறினார். “இந்த தொற்றுநோய் சமூகங்களுக்குள் உள்ள உறவுகளின் தன்மையை மாற்றுகிறது. நம்பிக்கையை அரிக்கிறது; மற்றவர்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் அவநம்பிக்கை ... இது மிகவும் பாரபட்சமான நடத்தைக்கு தூண்டுகிறது,” என்று அவர் கூறினார்.

^ புலம்பெயர்ந்தோர் மீதான அவச்சொல் மற்றும் வெளிநாட்டில் இருந்து திரும்பும் மக்கள் பிரச்சினையைச் சுற்றியுள்ள மவுனம் ஆகியவற்றை சுட்டிக்காட்டிய அவர், வெவ்வேறு குழுக்களுக்கு இந்தியாவின் பதில் நடவடிக்கை, ஒரு வர்க்க சார்பைக் காட்டிக் கொடுத்ததாக குறிப்பிட்டார். "பிரச்சனை என்னவென்றால், சமூக விலகல் சாத்தியமில்லாத வாழ்க்கை நிலைமைகளை புரிந்து கொள்ளவில்லை," என்று கேஷர்வானி மேலும் கூறினார். வீடமைப்பு, வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வளங்களுக்கான அணுகல் ஆகியவை தொற்றுநோய்களின் போது பொது சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க சமூகங்களின் திறனை கணிசமாக தீர்மானிப்பதாக, சமீபத்திய கட்டுரை தெரிவிக்கிறது.

மறுபுறம், நேர்மறையான அரசு செய்தி அளிப்பதற்கு உதாரணமாக கேரளா உள்ளது. அங்கு சமூக இடைவெளி மற்றும் தனிமனித இடைவெளியை மாநில முதலமைச்சர் வலியுறுத்தினார்; அதே நேரம் ‘சமூக’ இடைவெளி மீதான தவறாக கண்ணோட்டம் உந்துதலைக் குறைத்து மதிப்பிட்டார். “தொற்றுநோய் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதலமைச்சரின் வழக்கமான மாலை 6 மணி செய்தியை அனுப்புவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவு ஆகியன, செய்தியாளர் சந்திப்புகளை மிகவும் பயனுள்ளதாக அமைத்தது; இது ஒற்றுமையை உருவாக்குகிறது மற்றும் பீதி உண்டாவதை தடுக்கிறது, அதே நேரம் போலி, களங்கம் விளைவிக்கும், ஒரே மாதிரியான மற்றும் வகுப்புவாத செய்திகளைப் பரப்புவதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது,”என்று கெய்டோண்டே கூறினார்.

சமூகங்களில் பிற களங்கத்தை குறைப்பதில் இந்த வகையான தொடர்பு நீண்ட தூரம் செல்கிறது; ஒத்துழைப்பு மற்றும் நற்பண்பு உணர்வின் நெறிமுறைகளை உருவாக்க உதவுகிறது என்று ரிது பிரியா கூறினார்.

Volunteering to awareness generation: What communities contribute

Several landmark reports have emphasised the importance of community participation, including the Bhore Committee (1946), Srivastava Committee (1975) and Alma Ata Declaration of 1978. Recommendations of these committees include social orientation of medical practice, creating para-professionals or semi-professionals from the community and bringing community participation to the fore along with recognising rights and duties of people to participate in the planning and implementation of healthcare services.

In the present pandemic, governments should set up specific community engagement task-forces with dedicated staff to engage in dialogue with the communities, said a recently published paper in The Lancet. It further recommended involving communities to fight stigma and structural barriers at the lower levels while ensuring that the interest of the most marginalised is protected. Facilitating public participation encourages innovative tailored solutions, reveals policy gaps and prevents adoption of unpopular measures which risk low compliance, the paper noted.

Examples from different countries show how involving communities had helped in times of COVID. To educate people about the severity of the virus, communities, with the help of local leaders, participated in awareness campaigns in the Democratic Republic of Congo. Similar instances were observed in the United Kingdom and Spain. Bangladesh built an emergency assistance component into its municipal water supply and sanitation project when the COVID-19 outbreak began. Recognising the need for water to maintain hygiene, the project set up washing stations with liquid soap at strategic locations in 30 municipalities and deployed women from self-help groups to manage them.

(திவாரி, ஒரு சுதந்திர ஆராய்ச்சியாளர். தாஸ், மருத்துவர்; ஐச், ஜே.என்.யு.-வில் பொது சுகாதாரத்தில் பி.எச்.டி செய்து வருகிறார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.