மனநோயுடன் வாழும் நோயாளிகளை கோவிட்-19 நெருக்கடியுடன் மருத்துவமனைகள் எவ்வாறு எதிர்கொண்டன
புதுடெல்லி: கடந்த 14 ஆண்டுகளாகவே மீனாட்சி ராமன் (பெயர் மாற்றப்பட்டது), தனது தங்கை 46 வயதான ஸ்ருதியை (பெயர் மாற்றப்பட்டது), புதுடெல்லியில் உள்ள மனித நடத்தை & அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவன (IHBAS - ஐ.எச்.பி.ஏ.எஸ்) மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாதம் ஒருமுறை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஸ்ருதியின் தொழில்சார் சிகிச்சை மற்றும் அப்செசிவ் கம்பல்ஸிவ் கோளாறுக்கான ஆலோசனை (OCD- ஓ.சி.டி.), இருமுனை பாதிப்பு மற்றும் எல்லைக்கோட்டு ஆளுமை சீர்குலைவு பண்புகளுக்காக, இச்சகோதரிகள் நாளின் சிறந்த பகுதியை அங்கே செலவிடுவார்கள், கோவிட்-19 பரவியதை அடுத்து, ஊரடங்கு அமலுக்கு வந்ததும் மார்ச் மாதத்தில் அவர்களின் மாதாந்திர சிகிச்சை நடைமுறை திடீரென நிறுத்தப்பட்டது. ஒ.சி.டி அறிகுறிகள் மற்றும் கட்டாய நடத்தைகள் நோய்த்தொற்று குறித்த பயத்தால் ஸ்ருதியின் நிலை மோசமடைந்தன. சிகிச்சை மற்றும் வழக்கமான மருந்துகளின் அணுகல் இல்லாமல் -- ஐ.எச்.பி.ஏ.எஸ். மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் (OPD) மருந்து இலவசமாகக் கிடைக்கிறது-- ஸ்ருதியின் உடல்நிலை மோசமடைந்தது.
ஐ.எச்.பி.ஏ.எஸ். மருத்துவர்கள் ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ் அப்பில் ஸ்ருதிக்கு தேவையான மருந்து விவரங்களை புதுப்பித்தனர். இதன்மூலம் மீனாட்சி உள்ளூர் மருந்து கடைகளில் அவற்றை வாங்க முடியும். ஐ.எச்.பி.ஏ.எஸ்-இல் பெறப்பட்ட ஸ்ருதியின் மாதாந்திர டோஸ் ஹலோபெரிடோல் மருந்து மற்றும் ஊசி, கொள்முதல் செய்வது என்பது சவாலானது. மீனாட்சி எப்படியோ ஒரு தனியார் வினியோக நிறுவனத்திடம் இருந்து ஆன்லைனில் ஊசியை பெற்றார், உள்ளூர் மருத்துவரை கொண்டு, கிழக்கு டெல்லியில் உள்ள தங்களது வீட்டிற்கு சென்று தனது சகோதரிக்கு வழங்கினார். ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் ஐந்து மாதங்களில் மருந்துகள் மற்றும் ஊசி மருந்துகளுக்கு அவரது குடும்பம் ரூ. 15,000 ஐ செலவிட்டது. நாள்பட்ட மனநோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களில் ஸ்ருதியும் ஒருவர், அவர்களின் வாழ்க்கையும், அவர்களின் பராமரிப்பாளர்களின் வாழ்க்கையும், தொற்றுநோயால் முடங்கிப்போய், பெரும் சூறாவளியாக மாறியது. தொற்றுநோய்கள், மனநல சுகாதார நிலைமைகளை மேலும் அதிகரிக்கச் செய்வதாகவே அறியப்படுகிறது, மேலும் இந்தியாவின் மனநல சுகாதார அமைப்பு, கோவிட்-19 நெருக்கடியின் போது உரிய ஆலோசனைகளை வழங்கத் தவறிவிட்டது என்று, செப்டம்பர் மாத இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
எங்கள் மனநல பெல்லோஷிப்பின் ஒரு பகுதியாக தி ஹெல்த் கலெக்டிவ் (The Health Collective) உடன் இணைந்து, நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்கள் எவ்வாறு சமாளித்தன என்பதை இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு செய்தது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக, நாட்டில் உள்ள 43 அரசு மனநல மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் 15இல் உள்ள மனநல மருத்துவர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மனநல நிபுணர்களையும், சுதந்திர நிபுணர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுடன் பணிபுரியும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் உறுப்பினர்களையும் பேட்டி கண்டோம். ஏற்கனவே மிகைப்படுத்தப்பட்ட மற்றும் வளமற்ற மனநல சுகாதார அமைப்பானது, கோவிட் -19 நெருக்கடியால் அவிழ்க்கப்பட்ட, நிறுவனங்களையும் நோயாளிகளையும் மத்திய அல்லது மாநில அரசுகளின் சிறிய ஆதரவு மட்டுமே இருந்த சூழலில், நடுக்கடலில் விட்டுவிட்டது.
இந்த 15 அரசு மனநல மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் 13 மாநிலங்களில் சிறப்பு மூன்றாம் நிலை பராமரிப்பை வழங்குகின்றன. அந்த இடங்கள் - ஆந்திரா (விசாகப்பட்டினம்), அசாம் (தேஸ்பூர்), டெல்லி, குஜராத் (அகமதாபாத் மற்றும் பூஜ்), இமாச்சலப் பிரதேசம் (சிம்லா), ஜம்மு, கர்நாடகா (பெங்களூரு), கேரளா (கோழிக்கோடு), மகாராஷ்டிரா (தானே மற்றும் நாக்பாலா) ), நாகாலாந்து (கோஹிமா), தெலுங்கானா (ஹைதராபாத்) மற்றும் திரிபுரா (அகர்தலா) ஆகியன.
ஊரடங்கின் ஆரம்ப வாரங்களில் புறநோயாளிகள் பிரிவில், நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டாலும், மார்ச்-ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் சேவைகளை வழங்குவதற்காக, குறைவான பணியாளர்கள், அதிக சுமையுடனும் மோசமான நிலையில் உள்ள உபகரணங்களுடன் இருந்ததை கண்டதாக, அவர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். கோவிட்-19 பரவலால் செயல்பாடுகள் பாதிக்கும் மற்றும் சேவை விநியோகத்தால் அது பரவும் என்ற அச்சம் இருந்தது.
நாள்பட்ட மனநோய்களுடன் வாழும் மக்கள் கவனிப்புக்காக அரசு மனநல மருத்துவமனைகளை அணுக முடியவில்லை மற்றும் மருந்துகளை வாங்கவும் / அல்லது சார்ந்திருக்கவோ முடியவில்லை என்பதை கண்டறிந்தோம். அவர்கள் மருத்துவமனைகளை அணுகுவதற்கு முன்பே அது “வாரங்கள் முதல் மாதங்கள்”கணக்கு என்று இருந்தன, மேலும் பலர் மனநோய் சிகிச்சைக்கு செல்வதை மறுபரிசீலனை செய்தார்கள் அல்லது அனுபவித்தார்கள். ரயில் சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் காரணமாக, குறிப்பாக மாநில எல்லைகளில் உள்ள மருத்துவமனைகளை நம்பிய நோயாளிகளுக்கு பாதிப்பு இருந்தது. இதன் விளைவாக, பல நோயாளிகளை அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது, இந்த மருத்துவமனைகளில் மனநல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், படுக்கைகள் இல்லாததால் குறைந்த ஆதாரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து புதிய நோயாளிகள் விலகிச் செல்லப்பட்டனர், நிறுவனங்கள் மீட்கப்பட்ட நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய முடியாமல் போனதால், அவர்களாலும் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. காவல்துறையினரால் அல்லது மாஜிஸ்திரேட் உத்தரவுகளின்படி, வீடு இல்லாத அல்லது ஆதரவற்றவர்கள் போன்ற பாதிப்புள்ள நபர்கள் நிறுவனங்களுக்கு கொண்டு வரப்பட்டு, அவர்கள் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் ஆதாரமாக இருந்தனர், மேலும் நோய்த்தொற்று ஏற்படும்போது சிகிச்சை அளிப்பது சவாலாகவே இருந்தது. அத்தகைய அலைந்து திரிந்த நபர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது -- அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களைக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைக்கும் செயல்முறை -- ஒரு முழுமையான முடங்கியது, இது நிறுவனங்களின் பணிச்சுமையை அதிகரித்தது.
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறை செயலாளர் மற்றும் செயல் தலைமை ஆணையர் சகுந்தலா காம்லின் ஆகியோரை இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்டு, மனநல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கோவிட்-19ன் பாதகமான தாக்கத்தை குறைக்க மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பற்றி கேட்க முற்பட்டது.
இதுபற்றி 13 மாநிலங்களில் உள்ள சுகாதார அமைச்சகங்களையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். பதில் கிடைக்கப் பெறும்போது இந்த கட்டுரையை நாங்கள் புதுப்பிப்போம்.
கொஞ்சம் புரிதல், பெரும்பாலும் புறக்கணிப்பு
"மார்ச் 24 அன்று பிரதமர் தனது [நாடு தழுவிய ஊரடங்கு பற்றிய] உரையை முடிப்பதற்குள் நான் பீதியடைய ஆரம்பித்தேன்," என்று, மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை அமைப்பான சாமர்த்தியம் நிறுவனரும், தசைநார் திசு இறப்பு பிரச்சனையுடன் வாழ்பவரும், மத்திய அரசின் முதன்மை கொள்கை சிந்தனைக்குழுவான நிதி ஆயோக் உறுப்பினருமான அஞ்சலி அகர்வால் கூறினார். “ஊரடங்கு திடுதிடுப்பென திட்டமிடப்படாமல் [ஒருநாள் அறிவிப்பில்] தொடங்கியது. சுகாதார உள்கட்டமைப்பை அணுகும் ஊனமுற்றோர், குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடைசியாக சிந்திக்கப்பட வேண்டியவர்கள்” என்றார்.
ஊரடங்கு காலத்தில், மாற்றுத்திறன் உள்ளவர்களைப் பராமரிப்பவர்களுக்கு இ-பாஸை எளிதாக்குவதில் கருவியாக இருந்த அகர்வால்,அகர்வால், இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில், ஒரு நபர் குறைந்தது 40% உடலில் இயலாமை உள்ள்தாக சான்றிதழ் பெற்றவர் தான் மாற்றுத்திறனாளி என்பது, “பெஞ்ச்மார்க் குறைபாடுகள்” என்று கூறப்பட்டது, இது மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கான இந்தியாவின் பதிலாக கருதப்படுகிறது. மனநோய்கள் குறைபாடுகளது உரிமைகள் சட்டம் 2016ன் கீழ் அவர்கள் ஒரு ஊனமுற்றவராக அங்கீகரிக்கப்பட்ட போதும், இந்த சான்றிதழைப் பெறுவது ஒரு போராட்டமே என்று நிரூபித்துள்ளதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான மக்களின் அமைப்புகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தன.
மனநல குறைபாடாக மனநோயைப் பராமரிப்பது இரண்டு அமைச்சகங்களால் -- அதாவது சுகாதார & குடும்ப நல அமைச்சகம் (MoHFW) மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE) -- ஆகியவற்றின் செயல்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தீர்ப்பளிக்கப்படுகின்றன. சமூக அளவில் ஆரம்ப சுகாதார மையங்களில் (பி.எச்.சி) மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் அரசு மனநல மருத்துவமனைகளில் சிறப்பு மூன்றாம் நிலை சுகாதார பராமரிப்பு போன்ற சேவைகளை வழங்குவதை சுகாதார & குடும்ப நல அமைச்சகம் நிர்வகிக்கிறது. இந்த சேவைகளை வழங்குவது மாநில அரசுகளின் நேரடி பொறுப்பாகும், ஏனெனில் ஆரோக்கியம் என்பது ஒரு மாநிலம் சார்ந்த விஷயமாகும். மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு மற்றும் மனநோயுடன் வாழும் வீடற்ற நபர்களுக்கு வீட்டுவசதி போன்ற சமூக பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நிர்வகிக்கிறது.
இந்த பிரிவை பிரதிபலிக்கும் வகையில், மனநலம் தொடர்பான விஷயங்கள் மனநலப் பாதுகாப்புச் சட்டம்-2017 மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2017இன் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன.
மனநலம் என்பது மருத்துவ சிகிச்சை மற்றும் சமூக நலன் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது என்பதால், இரு அமைச்சகங்களுக்கும் இடையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு போதிய இடைநிலை ஒருங்கிணைப்பு இல்லை என்று, புனேவின் மனநல சட்டம் மற்றும் கொள்கை மையத்தின் (சி.எம்.எச்.எல்.பி) இயக்குனர் சவுமித்ரா பதரே கூறினார். அதற்கு பதிலாக, ஒரு மருத்துவமனையில் ஒரு மனநல மருத்துவரால் சிகிச்சையளிக்கப்பட வேண்டிய மருத்துவப்பிரச்சினையாக மனநோயைப் பற்றிய கருத்தில் மிகைப்படுத்தல் உள்ளது என்றார்.
இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் அல்லது மொத்தம் 19.73 கோடி மக்கள் மனநோயுடன் வாழ்கின்றனர் என்று 2019 குளோபல் பார்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வறிக்கை தெரிவித்தது. இது 1990 முதல் 2017 வரை இந்தியாவில் வெவ்வேறு மனநல கோளாறுகளுக்கான பரவல் மற்றும் மாநில-குறிப்பிட்ட போக்குகளை பகுப்பாய்வு செய்தது.
ஆயினும்கூட, மன நோய் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு கணக்கெடுப்பில் பதிலளித்த 3,556 பேரில் 62% பேர் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை ‘பைத்தியம்’, ‘கிறுக்கு’, ‘முட்டாள்’, ‘கவனமில்லாதவர்’ மற்றும் ‘பொறுப்பற்றவர்’ போன்ற சொற்கள் பயன்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளது. தற்கொலை பற்றிய சிக்கலான அறிக்கையில் இருந்து சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கின் காட்சி வரை, மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு உண்மையான பொது சுகாதார நெருக்கடி வெளிவருகையில், நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்று பதரே கூறினார்.
மனநல குறைபாடுகள் உள்ள 10 பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்தியாவில் சான்றுகள் அடிப்படையிலான சிகிச்சைகள் கிடைக்கும் என்று கருதப்படுவாதாக, சமீபத்திய தேசிய மனநல ஆய்வு (என்எம்எச்எஸ்) 2016 அறிக்கையில் கண்டறியப்பட்டது. 68-98% நோயாளிகள், மாவட்ட அல்லது மூன்றாம் நிலை மனநல மருத்துவமனையில் முதன்முறையாக கவனிப்பை அணுக முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்ல.
மனநல சுகாதார வசதிகள் மாவட்ட அளவில் இல்லாததே இதற்கு ஒரு காரணம் என்று நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். மாவட்ட மனநல திட்டம் (DMHP - டி.எம்.எச்.பி) 1996 இல் தேசிய மனநல திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது, இது மாவட்ட குழுவின் மேற்பார்வையில், சிகிச்சையை பரவலாக்குவதற்கும், சமூகத்திற்குள் பொது சுகாதாரத்துடன் ஒருங்கிணைந்து மாவட்ட, தொகுதி மற்றும் பி.எச்.சி மட்டங்களில் மனநல சுகாதாரத்தை வழங்குவதற்கும் வழிவகுக்கிறது.
தொற்றுநோய் பரவலின்போது, பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ் - NIMHANS) மனநல சுகாதார அமைப்புகளுக்கான கோவிட்-19 வழிகாட்டுதல்களை ஏப்ரல் 13 அன்று, சுகாதார & குடும்ப நல அமைச்சகம் சார்பில் வெளியிட்டது. மாவட்ட மனநல திட்டம் போன்ற தற்போதைய சமூக மேம்பாட்டு திட்டங்கள் மூலம் கடும் மனநல குறைபாடுகள் உள்ள, வீட்டு நோயாளிகளின் மேலாண்மை மற்றும் சமூக பராமரிப்பை வழிகாட்டுதல்களை, இது முன்மொழிகின்றன.
கோவிட்-19 தாக்கும் போது, மாவட்ட மனநல திட்டத்தில் பதில் பெரும்பாலும் கோவிட்-19 நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவை முன்னுரிமை அளிப்பதன் மூலம் தொற்றுநோயால் ஏற்படும் மன உளைச்சலை சரிசெய்வதை உள்ளடக்கியது. வழக்கமான மாவட்ட மனநல திட்டம் நடவடிக்கைகளுக்கு கூடுதலாக ஹெல்ப்லைன்கள் அமைக்கப்பட்டதாக ஆந்திரா, அசாம், டெல்லி, குஜராத், கேரளா மற்றும் திரிபுராவில் உள்ள மனநல வல்லுநர்கள் மற்றும் மாநில நோடல் அதிகாரிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். ஆதரவற்றோருக்கு வீடுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடி சமூகங்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தொடர்ந்து மருந்துகள் வழங்கப்படுவதையும் இலக்கு வைக்கப்பட்ட உளவியல் சமூக ஆதரவையும் இந்த பதில் கவனம் செலுத்தியது.
எவ்வாறாயினும், மாவட்ட மனநல திட்டமானது வரையறுக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது என்று என்.எம்.எச்.எஸ். கூறியுள்ளது. "மாவட்ட மனநல திட்டத்தை 3 தசாப்தங்களாக செயல்படுத்தப்பட்டு வந்த போதும், அதன் கீழ் உள்ள மாவட்டங்களின் விகிதம் பஞ்சாபில் 13.64% முதல் கேரளாவில் 100% வரை…கணக்கெடுக்கப்பட்ட மாநிலங்களில் 1/3 மட்டுமே மக்கள்தொகையில் 50% க்கும் அதிகமானோர் மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் இருந்தனர்.
இந்த நடைமுறை தேசிய தலைநகரில் கூட போதுமானதாக இல்லை, அங்கு இந்த முயற்சி மனித நடத்தை & அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. மனித நடத்தை & அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தின் மாவட்ட மனநல திட்டக்குழு டெல்லியின் 11 மாவட்டங்களில் ஆறில் நியமிக்கப்பட்ட கிளினிக்குகளுக்கு வாராந்திர வருகை தருகிறது. "ஜஹாங்கிர்புரி மற்றும் சத்தர்பூர் ஆகியன அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளன, எனவே நாங்கள் வாரத்திற்கு இரண்டு முறை வருகை தருகிறோம்" என்று மாவட்ட மனநல திட்டத்தில் உள்ள மனநல சமூக சேவகர் பிரவீன் யன்னவார் கூறினார். "ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சமூக மேம்பாட்டுத் திட்டம் இருக்க வேண்டும்" என்றார்.
ஒருங்கிணைந்த மனநல சுகாதாரமின்மை மற்றும் மூன்றாம் நிலை மாநில மருத்துவமனைகளில் அதிகப்படியான அக்கறை இல்லாதது, இந்த மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் பயனர்களுக்கு கோவிட்-19 ஊரடங்கு விதிக்கப்பட்ட சில மாதங்களில் ஒரு நெருக்கடிக்கு வழிவகுத்ததை, இந்தியா ஸ்பெண்ட் கண்டறிந்தது.
"கோவிட்-19 நெருக்கடி புதிய குறைபாடுகளை உருவாக்கவில்லை" என்று சி.எம்.எச்.எல்.பி-இன் பதரே கூறினார். "இந்த நெருக்கடி பல ஆண்டுகளாக மனநல அமைப்பை பாதித்துள்ள தற்போதைய குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது" என்றார்.
ஊழியர்களுக்கு பாதிப்பு, நிரம்பும் மருத்துவமனை படுக்கைகள்
கோவிட்-19 நெருக்கடியால் மனநல நிறுவனங்களில் ஏற்பட்ட தாக்கம் உடனடியாக மூன்று அம்சங்களில் வெளிப்படுகிறது: ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையே கோவிட்-19 நோய்த்தொற்றுகள்; புறநோயாளிகள் பிரிவு வருகையில் சரிவு; படுக்கைகள் இல்லாததால் புதிய மனநல நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்துதல் ஆகியவற்றை இந்தியா ஸ்பெண்ட் கண்டறிந்தது.
அத்துடன், 15 மருத்துவமனைகளில் எட்டு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுடன், கோவிட்-19 நோய்த்தொற்றுகளை பற்றி இந்தியா ஸ்பெண்ட் பேசியது; நோய்த்தொற்று நோயாளிகளை விட ஊழியர்களிடையே அதிகமாக உள்ளது.
3 மற்றும் 4ம் வகை தொழிலாளர்கள், அதாவது எழுத்தர்கள், வார்டு உதவியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கிளீனர்கள் ஆகியோர் அதிக கோவிட் -19 நோய்த்தொற்றுகள் இருப்பது தெரிந்தது. உதாரணமாக, மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள பிராந்திய மனநல மருத்துவமனையில் (ஆர்.எம்.எச்), ஜூன் 19 க்குள் ஒன்பது ஊழியர்கள் கோவிட் நேர்மறை கண்டறியப்பட்டதாக, மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சஞ்சய் போத்தாட் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். ஆகஸ்ட் 11 ஆம் தேதி, ஆர்.எம்.எச். தானேவில் ஏழு பெண் உள்நோயாளிகள், அங்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருபவர்கள், கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது, பின்னர் அவர்கள் சிவில் மருத்துவமனையின் கோவிட் மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
மும்பையின் புறநகர்ப்பகுதிகளில் இருந்து பல ஊழியர்கள் பயணம் செய்கிறார்கள், அங்கு அவர்கள் கூட்டமாக இருக்கும் வசிப்பிடங்களில் வாழ்கின்றனர், அதில் சமூக இடைவெளி என்பது சாத்தியமில்லை என்று போத்தேட் கூறினார்.
"பொருளாதார கட்டாயமும் உள்ளது ... பல மருத்துவமனைகள் ஒப்பந்த ஊழியர்களை ஊதியத்துடன் விடுப்பு பெறாத மற்றும் வேலையை தவற முடியாத பணியாளர்களை நியமிக்கின்றன," என்று, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் உளவியல் துறைத் தலைவர் பிரதிமா மூர்த்தி, ஆகஸ்ட் மாதம் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, 23 நோயாளிகள் மற்றும் 34 ஊழியர்கள் கோவிட்-19 க்கு, டெல்லி மனித நடத்தை & அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் நேர்மறை கண்டறியப்பட்டதாக, கண்காணிப்பாளர் தீபக் குமார் தெரிவித்தார். ஊழியர்களில், பெரும்பாலானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடற்ற நபர்களுடன் தொடர்பு கொண்ட உதவியாளர்கள் மற்றும் செவிலியர்கள் அல்லது அவசரகால அல்லது கோவிட் -19 தனிமைப்படுத்தும் வார்டில் பணிபுரிபவர்கள் என்று அவர் கூறினார். அவர்களில் பலர் அறிகுறியற்றவர்களாக இருந்தனர், மேலும் சக ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு தொற்று பரவியது.
இந்தியா ஸ்பெண்ட் பேசிய அனைத்து 15 மனநல மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில், மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து ஆகஸ்ட் நடுப்பகுதிக்கு வரை, ஊரடங்கு மற்றும் பொதுப்போக்குவரத்தை நிறுத்தியதால், புற நோயாளிகள் பிரிவில் 20-50% சரிவு ஏற்பட்டது.
நிறுவனத்தின் பதிவுகளின்படி, பிப்ரவரி (25,943) உடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாதத்தில் (21 நாள் ஊரடங்கு காலத்தில் இருந்தபோது 5,401) புற நோயாளிகளின் எண்ணிக்கை 80% வீழ்ச்சி ஏற்பட்டதாக, மனித நடத்தை & அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு தொடங்கியபோது, 16,924 நோயாளிகள், மனித நடத்தை & அறிவியல் நிறுவனத்தின் புற நோயாளிகள் பிரிவு மூலம் சென்றனர். "நாங்கள் முடிந்தவரை சமூக இடைவெளியை பராமரிக்க முயற்சிக்கிறோம், ஆனால் புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் இது 600 ஆக இருந்தது, பின்னர் 800 ஆக உயர்ந்து இன்று அது 1,060 ஆக ஆனது”என்று குமார், ஆகஸ்ட் 8 அன்று இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். பராமரிப்பாளர்கள் உட்பட, இது 2,000 க்கும் மேற்பட்டவர்களை கொண்டிருந்தது, நோயாளிகளின் வரிசை, மனித நடத்தை & அறிவியல் நிறுவன வளாகத்தில் இருந்து வெளியே தெரு வரை நீண்டது.
"நாங்கள் முடிந்தவரை சமூக இடைவெளியை பராமரிக்க முயற்சிக்கிறோம். ஆனால் புறநோயாளிகள் பிரிவில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என்று மனித நடத்தை & அறிவியல் நிறுவனத்தின் தீபக் குமார் கூறுகிறார். புகைப்படம்: ஐ.எச்.பி.ஏ.எஸ். ஊழியர்கள்.
புறநோயாளிகள் பிரிவில் சரிவு ஏற்பட்ட நிலையில், ஆல்கஹால் மற்றும் ஓபியாய்டு திரும்பப் பெறுவதற்கான அவசர சேர்க்கைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது என்று மனித நடத்தை & அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம், தேசிய மனநலம் & நரம்பியல் நிறுவனம், ஹிமாச்சல் மனநல மற்றும் மறுவாழ்வு மருத்துவமனை (HHMHR) சிம்லா, தெலுங்காவின் ஹைதராபாத்தில் உள்ள மனநல நிறுவனம் (ஐ.எம்.எச்) மற்றும் குஜராத்தில் உள்ள மனநல சுகாதார மருத்துவமனை (எச்.எம்.எச்) பூஜ் ஆகியவற்றின் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினர்.
ஜூலை மாதத்தின் பிற்பகுதியிலும், ஆகஸ்ட் மாத தொடக்கத்திலும், இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்ட 15 மனநல மருத்துவமனைகளில் பெரும்பாலான உள்நோயாளிகள் வார்டுகள் கூட்டம் அதிகமாக இருந்தன அல்லது முழு திறனை எட்டின, மேலும் புதிய நோயாளிகள் அனுப்பப்பட்டதாக, விலகிச் செல்லப்பட்டனர். மனநல மருத்துவமனைகள் உள்நோயாளிகளின் சேர்க்கையை "வீட்டிலேயே நிர்வகிக்க முடியாத" மிகக் கடுமையான சூழலில் மட்டுமே அனுமதித்தன; மேலும் சேர்க்கைக்கு முன்னர் புதிய நோயாளிகளைத் தனிமைப்படுத்தவும் பரிசோதிக்கவும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை உருவாக்கியதாக, 15 மாநில மனநல மருத்துவமனைகளை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
50 மனநல மற்றும் 12 புனர்வாழ்வு படுக்கைகளைக் கொண்ட எச்.எச்.எம்.எச்.ஆர் சிம்லாவில், ஜூலை இறுதி வரை வார்டுகள் நிரம்பியிருந்தன என்று மூத்த மருத்துவ கண்காணிப்பாளர் சஞ்சய் பதக், இந்தியா ஸ்பெண்டிடம் மின்னஞ்சலில் தெரிவித்தார். ஏனென்றால், மறு ஒருங்கிணைப்பு -- உள்நோயாளிகளை அவர்களது குடும்பத்தாரிடம் டிஸ்சார்ஜ் செய்வது-- சாத்தியமற்றது மற்றும் புதிய நோயாளிகளை படுக்கைகள் இல்லாததால் அனுமதிக்க முடியவில்லை.
40 படுக்கைகள் கொண்ட பூஜ் எச்.எம்.எச் மருத்துவமனையிலும் படுக்கைகள் நிரம்பியிருந்தன; ஜம்முவின் மனநல நோய் மருத்துவமனையில் (பி.எஸ்.டி) உள்ள அனைத்து 15 நோயாளிகளும் ஜூலை பிற்பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு வார்டுக்கு மாற்றப்பட்டனர், ஏனெனில் பி.எஸ்.டி ஒரு கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டது என்று அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
ஏழு வடகிழக்கு மாநிலங்களில், நான்கு அரசு மருத்துவமனைகளும் - அசாமின் தேஸ்பூரில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் பிராந்திய மனநல சுகாதார நிறுவனம் (LGBRIMH); திரிபுராவின் அகர்தலாவில் உள்ள நவீன மனநல மருத்துவமனை (MPH); மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள மேகாலயா மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (MIMHANS); மற்றும் நாகாலாந்தில் உள்ள கோஹிமா மாநில மனநல நிறுவனம் (SMHIK) - ஆகியவற்றில் படுக்கைகள் நிரம்பி, அதிக சுமையை எதிர்கொண்டதாக, மனநல மருத்துவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள் மற்றும் டி.எம்.எச்.பி அதிகாரிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
தேஜ்பூர் எல்ஜிபிஆர்ஐஎம் மருத்துவமனைக்கு பிறகு வடகிழக்கில் இரண்டாவது பெரிய மனநல மருத்துவமனையான 50 படுக்கைகள் கொண்ட திரிபுரா எம்.பி.எச். மருத்துவமனை படுக்கைகளும் நிரம்பியுள்ளது. "எந்த நேரத்திலும் மருத்துவமனையில் சுமார் 250 உள்நோயாளிகள் உள்ளனர் ... இது வழக்கத்தைவிட ஐந்து மடங்கு அதிகம்" என்று திரிபுராவில் டி.எம்.எச்.பியின் மாநில நோடல் அதிகாரி உதயன் மஜும்தார் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "வெறும் 50 படுக்கைகளுடன், எல்லாவற்றையும் சமரசம் செய்ய வேண்டும். எங்களுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு தேவை" என்றார்.
ஷில்லாங்கில் உள்ள மிம்ஹான்ஸில், 150 படுக்கைகளில் 130 படுக்கைகள் ஜூலை மாத இறுதியில் 16 படுக்கைகளுடன் ஒரு கோவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றி விடப்பட்டதாக மருத்துவமனையின் மனநல மருத்துவர் எஸ்.லிங்வா தெரிவித்தார். மிஹான்ஸ் மேகாலயாவிலிருந்து மட்டுமல்ல, நாகாலாந்து மற்றும் அசாமில் இருந்தும் மக்களுக்கு சேவை புரிகிறது.
திரிபுராவின் அகர்தலாவில் உள்ள 50 படுக்கைகள் கொண்ட நவீன மனநல மருத்துவமனையில், எப்போதும் சுமார் 250 நோயாளிகள் உள்ளனர். புகைப்படம், திரிபுராவின் மாவட்ட மனநல திட்ட மாநில நோடல் அதிகாரி உதயன் மஜும்தாரால் வழங்கப்பட்டது.
கோவிட்-19ல் அதிக சுமை கொண்ட ஊழியர்கள்
கடந்த 2019ம் ஆண்டு முதல் மிம்ஹான்ஸில் உள்ள ஒரே மனநல மருத்துவமனையில் மற்ற மனநல மருத்துவர் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது, லிங்க்வா மருத்துவராக இருந்து வருவதாக, கண்காணிப்பாளர் பதிரா மவ்லாங் தெரிவித்தார். மிம்ஹான்ஸ் மற்றொரு மனநல மருத்துவரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறது, ஆனால் மேகாலயாவில் மிகக் குறைவானவர்கள் மட்டுமே உள்ளனர் ”என்று மவ்லாங் கூறினார்.
"இங்குள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு நெருக்கமான பராமரிப்பு தேவைப்படுகிறது மற்றும் சுமை மிகவும் கனமானது" என்று லிங்வா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார், "மனநலம் பற்றி சில யோசனைகளைக் கொண்ட இரண்டு மருத்துவ அதிகாரிகள் மற்றும் 30 நர்சிங் ஊழியர்களுடன்" அவர் பணியாற்றுகிறார்.
மனநல மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் பற்றாக்குறை, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்திற்கு க்கு தனித்துவமானது அல்ல. டெல்லியின் மனித நடத்தை & அறிவியல் நிறுவனம், “அனுமதிக்கப்பட்ட 23% படுக்கைகளுடன் இயங்குகிறது”, என்று, மனநல சமூகப் பணிகளின் தலைவரான ஜஹனாரா கஜேந்திரகாட் தெரிவித்தார். இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்ட 15 அரசு மனநல மருத்துவமனைகளில் 11, மார்ச் முதல் ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டதாக தெரிவித்தன.
இந்த குறைபாடு நாட்டின் மக்கள்தொகைக்கு மனநல நிபுணர்களின் மோசமான விகிதத்தில் பிரதிபலிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் 2017 இந்தியா சுயவிவரத்தின்படி, 100,000 பேருக்கு, இந்தியாவில் சுமார் 0.29 மனநல மருத்துவர்கள், 0.07 மருத்துவ உளவியலாளர்கள், 0.06 சமூக சேவையாளர்கள் மற்றும் 0.80 செவிலியர்களே உள்ளனர்.
Mental Health Professionals In BRICS Countries, 2016 | |||
---|---|---|---|
Country | Psychiatrists (per 100,000 population) | Nurses (per 100,000 population) | Social workers (per 100,000 population) |
Brazil | 3.2 | 35 | 6.6 |
Russia | 8.5 | N/A | 2.4 |
India | 0.3 | 0.8 | 0.06 |
China | 2.2 | 5.4 | N/A |
South Africa | 1.5 | N/A | N/A |
Source: World Health Organization
Note: Data for Brazil and China are as of 2015.
கோவிட்19 பணிக்காக ஊழியர்கள் மேலும் திருப்பி விடப்பட்டனர், அதன்பிறகு அவர்கள் 10-14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருந்தது, மேலும் பலரும் பணிக்கு செல்ல முடியவில்லை; ஏனெனில் ஊரடங்கு 1.0 இன் போது பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது என்று, கண்காணிப்பாளர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். கோவிட் -19 பரவல் ஆரம்ப மாதங்களில் கிடைக்கக்கூடிய ஊழியர்களின் கவனிப்பு சுமை மிகப்பெரியது என்று அவர்கள் தெரிவித்தனர்.
"பெரும்பாலான ஊழியர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர்," என்று கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அரசு மனநல மையத்தின் (GHMC) கண்காணிப்பாளர் வி.வி. ஆஷா தெரிவித்தார்; இம்மையத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து பணியாளர் பதவிகளும் நிரப்பப்பட்டிருந்தன, ஆனால் ஊழியர்கள் கோவிட் -19 பராமரிப்பு மையங்களுக்கு திருப்பி விடப்பட்டனர்.
முழுமையான ஊரடங்கின் போது, எச்.எச்.எம்.எச்.ஆர் சிம்லா 50% பணியாளர் பலத்துடன் செயல்பட்டதாக பதக் கூறினார். எஸ்.எம்.ஹெச் நாகாலாந்தில், மூன்று மருத்துவர்களில் ஒருவர் மற்றும் வகுப்பு -3 ஊழியர்களிளும், ஆரம்பத்தில் கோவிட் -19 பணியில் ஆகஸ்ட் வரை ஈடுபட்டதாக மருத்துவ கண்காணிப்பாளர் டி.வபாங் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
தொலைதூர ஆலோசனை, நீண்ட கால மருந்துகள்
மனநல மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் பொது போக்குவரத்து பற்றாக்குறையால் பயணிக்க முடியாத நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு தொலை தொடர்பு வாயிலாக ஆலோசனை பெறுவதன் மூலம் நெருக்கடியை கையாண்டன.
ஊரடங்கின் போது தொடர்ச்சி கவனிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் மூர்த்தி கூறினார்: வழக்கமான நோயாளிகளின் தொடர்பு எண்கள் கிடைத்ததால்,தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் தங்கள் உள்ளூர் சமூக அமைப்பான ப்ரூஹத் பெங்களூரு மகாநகர பலிகேயின் மருந்தகங்களுடன் அவற்றை இணைத்தது, அங்கு மருந்துகள் கிடைத்தன. "மருந்தகங்களில் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பது [அதனால் அவர்கள் மனநல நோயாளிகளுடன் தொடர்பு கொள்ள முடியும்] எளிமையானது" என்று மூர்த்தி கூறினார். "இந்தியாவில் மனநல மருத்துவர்களின் பற்றாக்குறையைப் பொறுத்தவரை, மருத்துவ ஊழியர்களின் அனைத்து பணியாளர்களுக்கும் மன நோய் குறித்து சில யோசனைகள் இருக்க வேண்டும். இந்த பயிற்சியையும் மருந்தையும் கோவிட்டுக்கு அப்பால் கூட நாடு முழுவதும் உள்ள உள்ளூர் சமூக சுகாதார மையங்களில் கிடைக்கச் செய்வது மிக முக்கியம்” என்றார். அடிப்படை மன ஆரோக்கியம் குறித்து மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது மாவட்ட மனநல திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அத்துடன், சில மருத்துவர்கள் நாள்பட்ட மற்றும் கடுமையான மனநல நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு, சற்று நீண்டகால மருந்துகளை எழுதினர். உதாரணமாக, ஏப்ரல் மாதத்தில் புறநோயாளிகள் பிரிவில் வருகை 400 இல் இருந்து சராசரியாக 80 ஆகக் குறைந்துவிட்டதால், ஆந்திராவின் மனநல பராமரிப்பு மருத்துவமனை (ஜிஹெச்எம்சி) விசாகப்பட்டினத்தின் மருத்துவர்கள், 15 க்கு பதிலாக ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை - வாட்ஸ் அப்பில் அனுப்பத் தொடங்கியதாக, மருத்துவ கண்காணிப்பாளர் ராதா ராணி தெரிவித்துள்ளார்.
நீண்ட மருந்துகள் சாத்தியமான ஆபத்துக்களைக் கொண்டுள்ளன, எனவே ஒரே மாதிரியாக நடைமுறை வழக்கம் இல்லை. "ஐ.எம்.எச் ஹைதராபாத்தில், மருந்து ஒரு மாதத்திற்கு மேல் பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் அது எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்று எங்களுக்குத் தெரியாது," என்று மருத்துவ கண்காணிப்பாளர் உமா சங்கர் விளக்கினார்.
விடுவிப்பு, மறு ஒருங்கிணைப்பு மந்தம்; மறுவாழ்வு நிறுத்தப்பட்டது
நோயாளிகள் விடுவிடுப்பு குறைந்து, அலைந்து திரிந்த அல்லது வீடற்ற நோயாளிகளின் மறு ஒருங்கிணைப்பு நிறுத்தப்பட்டது என்று, 15 மருத்துவமனைகளில் ஏழு, இந்தியா ஸ்பெண்டிடம் கூறின.
"நீண்டகால உள்நோயாளிகளின் குடும்பங்கள் அவர்களை மருத்துவமனையில் பார்க்கவோ அல்லது வெளியேற்றவோ முடியவில்லை" என்று அகமதாபாத் மனநல மருத்துவமனை (எச்.எம்.எச்) மருத்துவ கண்காணிப்பாளர் அஜய் சவுகான் கூறினார். “இது ஓரளவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாகவும், [தொற்றுநோயைக் குறைக்கும்] பயம் காரணமாகவும் இருந்தது. பல வாரங்களாக தங்கள் குடும்பத்தினரை சந்திக்காததால் நோயாளிகள் வருத்தப்படுகிறார்கள் ” என்றார்.
தொழில்சார் சிகிச்சை மற்றும் தொழிற்கல்வி சிகிச்சை --மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் பொருளாதார ரீதியாக சுயமாக இருப்பதற்கும் அவசியம் -- அவர்கள் சமூக வாழ்வில் மீண்டும் ஒன்றிணைக்க உதவுகிறது. கோவிட்-19 எச்சரிக்கையின் காரணமாக இந்த சிகிச்சைகள் மற்றும் மறுவாழ்வு சேவைகள் நிறுத்தப்பட்டன. "சமூக மற்றும் உடல் ரீதியான இடைவெளி இதற்கு [சிகிச்சையின் போது சமூகமயமாக்குதலுக்கு] எதிரானது" என்று தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் மூர்த்தி கூறினார். "நாம் ஐந்து மாதங்களை இழந்துவிட்டோம்" என்றார் . இந்த சேவைகள் வெவ்வேறு மாநிலங்களில் மாறுபட்ட வேகத்திலும் அளவிலும் மறுதொடக்கம் செய்யப்படுவதாக, பல்வேறு நிறுவனங்களிடம் இர்ந்து எங்களுக்கான ஆதாரங்கள் தெரிவித்தன.
அக்டோபர் நடுப்பகுதி வரை சில மையங்களில் தொழில் சிகிச்சை நிறுத்தப்பட்டது.
நோயாளிகளுக்கு மறு ஒருங்கிணைப்புகள் நிறுத்தப்பட்டன, பொதுவாக நோயாளிகள் அலைந்து திரிவது அல்லது வீடற்றவர்கள் என்பதால், அவர்களின் குடும்பத்தினர் கண்டுபிடிக்க முடியாதவர்கள். ஜி.எம்.எச்.சி. கோழிக்கோட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்களை அலைந்து திரிந்தவர்கள் அல்லது வீடற்றவர்கள் என்று, ‘டிஸ்சார்ஜ் அதாலத்’ (நீதிமன்றம்) கண்டறிந்துள்ளது. எந்த நேரத்திலும் மருத்துவமனையில் இதுபோன்ற 60-90 உள்நோயாளிகள் உள்ளனர் என்று கண்காணிப்பாளர் ஆஷா கூறினார். "கோவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்தது முதல், மீட்கப்பட்ட நோயாளிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவர்களது ஊறவினர்களால் பயணம் செய்யக்கூட முடியவில்லை"என்றார். அக்டோபர் நடுப்பகுதியில், டெல்லியில் உள்ள ஐ.எச்.பி.ஏ.எஸ், பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம், அகமதாபாத்தில் எச்.எம்.எச்.எம், ஷில்லாங்கில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் மற்றும் இன்னும் சில இடங்களில் மறு ஒருங்கிணைப்புகள் மீண்டும் தொடங்கின.
தானேவின் பிராந்திய மனநல மருத்துவமனையில் மீண்டும் ஒன்றிணைவதை மேற்பார்வையிடும் பார்வையாளர்கள் குழுவின் நடவடிக்கைகள் ஏப்ரல் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, போத்தேட் கூறினார். 1,850 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை, ஜூலை பிற்பகுதி வரை கூட்டமாகவே இருந்தது.
"மருத்துவமனையில் மூன்று மாதங்கள் கழித்த பின்னர் நோயாளிகள் அமைதியற்றவர்கள்," என்று மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிராந்திய மனநல மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மாதுரி தோரத் கூறினார். "ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் குறைந்துவிடும் என்ற எண்ணத்தில் நாங்கள் இருந்தோம்," என்று ஜூலை மாதம் இந்தியா ஸ்பெண்டிடம் அவர் கூறினார்.
டிஸ்சார்ஜ் குழு அக்டோபரில் செயல்பட்டு வந்தது என்று தோரத் கூறினார். "அறியப்பட்ட பராமரிப்பாளர்களுடன் கிட்டத்தட்ட அனைத்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்; போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஆம்புலன்ஸ் பயன்படுத்த கட்டாயப்படுத்தியுள்ளன. வீடற்ற நோயாளிகளில் பெரும்பாலோர் இன்னும் மருத்துவமனையில் இருக்கும்போது, அசாம் மற்றும் பீகாரில் இதுபோன்ற இரண்டு நபர்கள் மீண்டும் இணைக்கப்பட்டனர். ஆர்.எம்.எச். நாக்பூர் ஆகஸ்டில் இருந்த கூட்ட நெரிசலை எதிர்கொள்ளவில்லை” என்றார்.
மனநல சுகாதாரச்சட்டம் 2017 சட்டத்தின்படி, கட்டுப்படுத்தப்பட்ட மனநல ஸ்தாபனங்களில் "பகுதி வழி வீடுகள், குழு வீடுகள் மற்றும் இனி சிகிச்சை தேவைப்படாத நபர்களுக்கு போன்றவை உட்பட குறைந்த கட்டுப்பாட்டு சமூக அடிப்படையிலான நிறுவனங்கள்" தேவைப்பட்டது.
இத்தகைய மறுவாழ்வு வசதிகள் இந்தியாவின் மனநல சுகாதார சேவைகளின் நிலப்பரப்பில் காணவில்லை அல்லது போதுமானதாக இல்லை என்று, ஆலோசகர்கள் மற்றும் பங்குதாரர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். இதுபோன்ற பகுதிவழி வீடுகளை அமைக்க அல்லது விரிவாக்க, 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்னும் இணங்கவில்லை. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலங்கள் செயல்படுத்துவதற்கான திட்ட வரைபடத்தை வழங்கி உள்ளன.
அடிமட்ட உத்திகள் செயல்படுகின்றன
இந்தியாவில் மனநல சுகாதார விநியோகம் எதிர்கொள்ளும் பல முக்கியமான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மாவட்ட மனநல திட்டம் திறம்பட செயல்படுத்துவது முக்கியமானது என்று மனநல வல்லுநர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
என்.எம்.எச்.எஸ். திட்டத்தின்படி 14 மாவட்டங்களிலும் 100% மாவட்ட மனநல திட்ட பாதுகாப்பு உள்ள ஒரே மாநிலமான கேரளா, ஒரு விஷயமாகத் தெரிவிக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் பொது மருத்துவமனை அல்லது மாவட்ட மருத்துவமனை மற்றும் ஒரு சில ஒன்றியங்களில் ஒரு மனநல பிரிவு உள்ளது.
மாநிலத்தில் உள்ள மாவட்ட மனநல திட்டம் கண்ணோட்டத்தின்படி செயல்படுகிறது: அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷாக்கள்) அந்தந்த சமூகங்களில் மனநல நிகழ்வுகளை கண்காணிக்கும் ஒரு அடிமட்ட முயற்சியாகும். ஆரம்ப சுகாதார மையங்கள் (PHC), குடும்ப சுகாதார மையங்கள் (FHC) அல்லது சமூக சுகாதார மையங்களில் (CHC) மருத்துவர்களிடம் இவற்றை தெரிவிக்கிறார்கள். மருத்துவர்கள் உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மூன்று மூன்றாம்நிலை மாநில அளவிலான மனநல மருத்துவமனைகள் ஒன்றில் உள்ள மாதாந்திர மாவட்ட மனநல திட்ட கிளினிக்குகளுக்கு நோயாளிகளைக் குறிப்பிடுகிறார்கள்.
"மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 40,000 நோயாளிகள் மாவட்ட மனநல திட்ட கிளினிக்குகளுக்கு [PHC/FHC/CHC] வருகிறார்கள்" என்று மாவட்ட மனநல திட்டத்தின் மாநில நோடல் அதிகாரி பி.எஸ். கிரண் தெரிவித்தார்.
சிகிச்சை மையங்களுக்கான இத்தகைய உள்ளூர் அணுகல், அரசு நடத்தும் மனநல மருத்துவமனைகள் உள்ளிட்ட மூன்றாம் நிலை பராமரிப்பு பிரிவுகளின் அழுத்தத்தை எளிதாக்கியுள்ளது. கோவிட்-19 க்கு முன்பே, பெரும்பாலான நோயாளிகள் [ஜி.எச்.எம்.சி. கோழிக்கோடு] மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவுக்கு வரவில்லை; ஏனென்றால் அவர்கள் அந்தந்த [மாவட்ட மனநல திட்ட] மையங்களில் கவனிக்கப்பட்டு வருகின்றன,” என்று ஆஷா கூறினார். மார்ச் 24 முதல் மே 17 வரை முழுமையான ஊரடங்கின் போது கூட நோயாளிகள் 14 மாவட்டங்களில், மாவட்ட மனநல திட்ட கிளினிக்குகள் மற்றும் மாநிலத்தின் மனநலத்திற்கான அனைத்து திட்டத்தின் கீழ் உள்ள தினப்பராமரிப்பு மையங்களான சம்பூர்ண மனசிகரோகம் மூடப்பட்டபோது அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளைப் பெற முடிந்தது. "[ஊரடங்கு காலத்தில்] [நோயாளிகளின்] எண்ணிக்கை அதிகமாக இல்லை" என்று கிரண் கூறினார்.
மாநிலத்தின் மூன்று மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் ஒன்றான ஜி.எம்.எச்.சி கோழிக்கோட்டில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் இத்தகைய அடிமட்ட அணுகுமுறை பயனுள்ளதாக இருக்கும் என்பது தெளிவாகிறது. கோவிட்-19 க்கு முன்பு ஒருநாளைக்கு சராசரியாக 200 புறநோயாளிகள் வருகை தந்தனர் என்று ஆஷா கூறுகிறார். "இப்போதும் [ஆகஸ்ட் பிற்பகுதியில்], எங்களிடம் ஒரு நாளைக்கு சுமார் 150 பேர் உள்ளனர்" என்றார்.
கோவிட்-19 நெருக்கடியில் இருந்து படிப்பினைகள்
ஒருங்கிணைந்த மனநல சுகாதாரத்திற்கு கோவிட்-19 தொற்றுநோய் ஒரு வலுவான வழக்கை உருவாக்கியுள்ளது என்று சி.எம்.எச்.எல்.பி.- ன் பதரே கூறினார். "நமக்கு இரு விஷயங்கள் தேவை: முதலாவதாக, இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மாதிரியாகக் கொண்ட ஒரு மனநல சுகாதார அமைப்பு - கிராம மட்டத்தில் தொடங்கி மூன்றாம் நிலை மருத்துவமனைகளுக்குச் செல்லும் சேவைகள் தேவை" என்று அவர் கூறினார். "இரண்டாவதாக, மனநலத்திற்கும் அரசின் சமூக நலத் துறைகளுக்கும் இடையில் நமக்கு நல்ல ஒருங்கிணைப்பு தேவை" என்றார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவுக்கு "சமூகத்தில் தொடர்ந்து வாழ மக்களை ஆதரிக்கும் திட்டங்கள்" தேவை என்று அவர் கூறினார். உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பை ஒன்றாக வழங்கும் பன்யான் ஹோம் அகெய்ன் (The Banyan’s Home Again) திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, என்றார்.
நிறுவனங்களில் இருந்து சமூகங்களுக்கு கவனிப்பை மாற்றுவது கோவிட்-19 மற்றும் மன ஆரோக்கியம் குறித்த ஐ.நா. கொள்கை சுருக்கமும் பரிந்துரைத்தது.
தி பன்யானின் கேரள பிரிவின், பிந்தைய பராமரிப்பு சேவைகளை வழிநடத்தும் பின்சி பி சாக்கோ, இந்தியா ஸ்பெண்டிடம் கூறும்போது, நாடு புற நோயாளிகள் சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றார். தீவிர கவனிப்பு தேவைப்படும் மனநோயுடன் வாழும் நபர்களை நிறுவனமயமாக்குவதற்குப் பதிலாக பகல்நேரங்களில் கவனித்துக் கொள்ளக்கூடிய தினப்பராமரிப்பு நிலையங்கள் உள்ளன. இந்த நீண்டகால புனர்வாழ்வு உத்தி குறித்து, இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 2018 இல் கட்டுரை வெளியிட்டு இருந்தது.
உண்மையில், ஒரு பணிக்குழு 2019 ஆம் ஆண்டில் மனநல பிரச்சினைகள் உள்ளவர்களை உள்ளடக்கிய மற்றும் சமூக அடிப்படையிலான வாழ்க்கைக்கான தேசிய மனநல அறிக்கையில் ஒரு தேசிய மூலோபாயத்தை முன்மொழிந்தது. இது நாட்டின் 43 அரசு மனநல மருத்துவமனைகளில் ஒரு கள ஆய்வை நடத்தியது மற்றும் 6.1% உள்நோயாளிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மனநல மருத்துவமனைகளில் தங்கியிருப்பதைக் கண்டறிந்தது.
வீடற்ற தன்மை அல்லது நீண்டகால நிறுவனமயமாக்கலுக்கு மீண்டும் நுழைவதைத் தடுப்பதற்காக சமூக பாதுகாப்புத் துறையுடன் இணைந்த ஒரு விரிவான சமூக பராமரிப்பு அமைப்பு, மருத்துவமனைகளில் இருந்து நபர் மையமாகக் கொண்ட சமூக வாழ்க்கை நோக்கி வரையறுக்கப்பட்ட பாதைகளுக்கான குறிப்பிட்ட முதலீடுகள், உள்ளிட்ட நிறுவனமயமாக்கலுக்கான ஒரு செயல் திட்டம், மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு தொகை மற்றும் வாக்களிக்கும் உரிமைகள் போன்ற முக்கிய சமூக உரிமைகளுக்கான ஆதரவு, மற்றும் மூன்றாம் நிலை முதல் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான மருத்துவமனைகளுக்கு படுக்கை திறன்களை பரவலாக்குதல் போன்றவற்றை அறிக்கை கோடிட்டுக் காட்டியது.
நடப்பு 2020 ஆம் ஆண்டில் சுகாதாரத்துறையின் கவனம் முழுவதும் கோவிட்-19 மீது திருப்பிவிடப்பட்டதால், பரிந்துரைகள் ஏட்டளவில் உள்ளன. ஆயினும்கூட, கோவிட்19 ஒரு மனநல சுகாதார அமைப்பின் ஆபத்துக்களை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது, இது முதன்மையாக அதிக சுமை கொண்ட மூன்றாம் நிலை மனநல மருத்துவமனைகளை சார்ந்துள்ளது. இது மாவட்ட மனநல திட்ட மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதோடு தேசிய உத்தியின் செயல் திட்டத்தையும் காணவுள்ளது.
(ரித்தி தஸ்திதார், டெல்லியை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர். அவர்கள் டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பாலின ஆய்வில் எம்.ஏ. முடித்தவர், அவரது ஆராய்ச்சியானது பெண்கள் மற்றும் வினோதமான நபர்களில் உருவகம் மற்றும் நாள்பட்ட மனநல குறைபாடு குறித்து கவனம் செலுத்தியது. அவருக்கு ஒ.சி.டி. உள்ள சூழலில், மாற்றுத்திறனாள் நீதி, பாலினம் மற்றும் கலாச்சாரத்தில் கவனம் செலுத்துகிறது. மரிஷா கார்வா, இதை திருத்தினார்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.