இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 2031க்குள் 13% எட்ட குடும்பக்கட்டுப்பாடு எப்படி உயர்த்த தரமுடியும்
புதுடெல்லி: குடும்பக்கட்டுப்பாடு கொள்கைகளுக்கு தீவிர முன்னுரிமையை தந்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2031 ஆம் ஆண்டில் 13% அதிகரிக்கும் என்று, புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இது, 29 லட்சம் சிசுக்களின் இறப்புகளையும், 12 லட்சம் பிரசவித்த தாய்மார்களின் மரணங்களையும் தடுக்கலாம்; பிரசவம், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தல் போன்ற குடும்பங்களின் சுகாதார செலவினம் ரூ.77,600 கோடியை (20%) சேமிக்கும் என்று, அது மேலும் கூறுகிறது.
தற்போது, இந்திய தேசிய சுகாதாரத் திட்டத்தில் இருந்து, குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்திற்கு வெறும் 4%க்கும் குறைவான நிதியே பெறப்படுகிறது. இந்த தொகையும் பல ஆண்டுகளாக தேக்க நிலையில் உள்ளது.
இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை என்ற அமைப்பு, 'இந்தியாவில் குடும்பக்கட்டுப்பாடு செலவுகள்: சுகாதார மற்றும் பொருளாதார விளைவுகளின் பகுப்பாய்வு' என்ற தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இது, தேசிய அளவில் குடும்பக்கட்டுப்பாட்டிற்கான செலவு மற்றும் நான்கு பின்தங்கிய மாநிலங்களான - பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகியவற்றின் செலவினங்களை பகுப்பாய்வு செய்து மதிப்பிட்டது. இந்த மாநிலங்கள் நாட்டின் மக்கள்தொகையில் 37%ஐ கொண்டுள்ளன.
பொருளாதார பலன்களை உறுதிப்படுத்துவதற்காக பின்வரும் மக்கள்தொகை பெருக்க சுகாதார உத்திகளை இந்தியா செயல்படுத்த வேண்டும் என்று ஆய்வு காட்டியது:
- இலக்கு, வளரிளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள்;
- மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதார பட்ஜெட்டில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்திற்கு அதிக நிதி ஆதாரங்களை உறுதிப்படுத்துதல்;
- பல்துறை மற்றும் சமுதாய ஈடுபாட்டை ஏற்றுக்கொள்;
- தரமான மக்கள் தொகை பெருக்க சுகாதார சேவைகள் கிடைப்பது மற்றும் அணுகுதலை உறுதி செய்தல்;
- பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முதலீடு செய்தல்.
இத்தகைய உத்திகள் மூலம் கிடைக்கும் பலன்கள் மக்கள்தொகை அதிகமுள்ள நான்கு மாநிலங்களில் நிச்சயம் மிகவும் பேசப்படும் என்று ஆய்வு மதிப்பிடுகிறது.
குடும்ப நலத்திட்டத்தை மேலும் ஊக்கப்படுத்துதல் என்பது, தேசிய சுகாதார இயக்கத்திற்கான பட்ஜெட்டில் ரூ.27,000 கோடிக்கு, மொத்த சேமிப்பை ஏற்படுத்தலாம்.
பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்தை குடும்பக்கட்டுப்பாடு ஏன் ஒருங்கிணைக்கிறது
இந்தியா, தற்போதுள்ள கொள்கைகளான தாய் மற்றும் சேய் இறப்பை தடுத்தல், பாதுகாப்பான கருக்கலைப்பு மற்றும் திட்டமிடப்படாத கருவுறுதலை ஒட்டுமொத்த குறைத்தல் போன்றவற்றை முழுமையாக செயல்படுத்தினால், ஒரு உறுதியான மற்றும் நிலையான முன்னேற்றத்தை காண முடியும் என்கிறது அந்த ஆய்வு. இவை உடனடி நிதிசார்ந்த தாக்கத்தை விட அதிக நன்மைகளை தரும்.
உலகளவில், பாதுகாப்பான, சுய விருப்ப குடும்பக்கட்டுப்பாடு அணுகல் என்பது ஒரு மனித உரிமையாககருதப்படுகிறது; பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரத்தின் மைய கருத்துகளாகவும் உள்ளது. இது ஆரோக்கியமான இளைஞர்களின் சமூக பொருளாதார திறனை கட்டவிழ்த்துவிட மிக பயனுள்ள பாதை என்பது ஹார்வர்ட் பொருளாதார வல்லுனர்களான டேவிட் ப்ளூம் மற்றும் டேவிட் கேனிங் ஆகியோரில் ஆய்வில் நிரூபிக்கப்பட்டது.
கிழக்கு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பகுதியினர், சிறு அளவிலான குடும்பத்தை கொண்டிருக்கும் மக்கள் தொகை மற்றும் வயது உடையவரால் மாற்றங்களுக்கு வரக்கூடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. மதிப்பீடுகளின்படி இந்த “மக்கள் தொகை பங்கீடு” கென்யா, நைஜீரியா, செனகல் போன்ற நாடுகளில் காண முடியும்; குடும்பக்கட்டுப்பாட்டுக்கான அவசியமான தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம், இவற்றின் தனிநபர் வருமானம், 2050 ஆம் ஆண்டுக்குள் 47%இல் இருந்து 87% ஆக அதிகரிக்கும்.
குடும்பக்கட்டுப்பாடு என்பது, முதலீட்டிற்கான வருவாயை 120 மடங்கு அதிகரிக்கிறது; இது சுகாதார நலன்களைக் கொண்ட பொருளாதார பலன்களை தரும் என, கோபன்ஹேகன் மக்கள்தொகை மையத்தின் 2014 ஆய்வு வெளியீடுகள் கூறுகின்றன. உலக அளவில் குடும்பக்கட்டுப்பாடு என்பது “சிறந்த வாங்குதல்” என்ற சந்தை வாசகமாக கருதப்படுகிறது.
குடும்பக்கட்டுப்பாடு இந்தியா கோரும் மக்கள்தொகை பங்கீட்டை தருகிறது
தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள செல்வந்த நாடுகள் விரைவாக வயதான மக்களின் பொருளாதார தாக்கத்தை கையாளுகின்றன; ஆனால் இந்தியாவோ, இதுவரை உலகம் கண்டிராத அளவுக்கு இளைஞர்களை கொண்டுள்ளது. உலக மொத்த மக்கள் தொகையில் வளரிளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் (10- 24 வயது) 182 கோடி (அல்லது 26.3%); இதனுடன் ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்தியாவில் 36.46 கோடி பேர் (30.1%) இளைஞர்கள்.
இந்தியாவில் இளைஞர்களை கொண்ட மக்கள் தொகை அமைப்பானது அதன் மிகப்பெரிய சொத்தாகும். மாநில வளங்கள் அது வேறுபட்ட சார்பு குழுக்களை ஆதரிக்க பயன்படும். இந்த ஆதார வளங்களை தங்கள் உற்பத்தி மேம்படுத்த மற்றும் பொருளாதார வளர்ச்சி உருவாக்குவதற்கான முதலீடுகளாக முடியும் என்று ஆய்வு கூறுகிறது.
இளைஞர்களை கொண்டு உற்பத்தியை குடும்பக்கட்டுப்பாடு உத்தி எவ்வாறு உறுதி செய்கிறது? இது ஆரோக்கியமான மற்றும் இனப்பெருக்க, பாலியல் மற்றும் மனநல பிரச்சினையின்றி இருக்க அனுமதிக்கிறது; முழுமையான கல்விக்காக அவர்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்கிறது. வேலைவாய்ப்பு சந்தையில் நுழைய அல்லது சொந்தமாக அவர்கள் நிறுவனம் தொடங்குவதற்கு சுதந்திரம் தருகிறது; பணியில் அதிக உற்பத்தித்திறன், சேமிப்புளை அதிகரிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் விஷயங்களுக்கு செலவிட முன்னுரிமை தருகிறது. இது இளம் வயதில் ஒரு குடும்ப வாழ்க்கையை அனுமதிப்பதன் மூலம், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்க முடியும்.
குடும்ப கட்டுப்பாடு திட்டம் மீது அதிகரிக்கும் முதலீடுகளில் இருந்து பெறப்பட்ட லாபம், அரசு பட்ஜெட் செலவினம், தனிநபர் வருவாய், குடும்பங்களில் செலவினம் மீதான சேமிப்புகள் அதிகரிக்கிறது என்று, இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
- Rs 27,000 crore: Cumulative savings to the National Health Mission budget
- Rs 77,600 crore: Households savings from out-of-pocket health expenditure
- Rs 6,000 crore: Maternal health programmes
- Rs 3,000 crore: Immunisation costs
- Rs 300 crore: Child health programmes
- Up to Rs 550 crore: Rashtriya Bal Swasthya Karyakram
- Rs 79 crore: Adolescent health programmes
- Rs 4,250 crore: Savings on medical supplies and equipment for maternal, child and adolescent health
திருமணம், மகப்பேறு தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் தேவை
கடந்த 1952 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியா, குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை முன்னெடுத்தது. இன்று, இந்தியா குடும்ப கட்டுப்பாடு விஷயத்தில் "சுயவிருப்ப அணுகுமுறை" கொண்டிருக்கிறது; வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எட்டு கர்ப்பம் விருப்பங்கள் என - அது பல்வேறு தேர்வுகளை வழங்குகிறது. இதில் ஆறு இடைவெளி முறைகள்; இரு நிரந்தர முறைகள் உள்ளன.சமீப ஆண்டுகளில் அரசு குடும்ப கட்டுப்பாடு முதலீடுகளை அதிகரிப்பதாகவும் உறுதியளித்துள்ளது. குடும்பக்கட்டுப்பாடு தொடர்பான 2012 லண்டன் உச்சி மாநாட்டில், இப்பணிக்காக 200 கோடி டாலர் முதலீடு செய்வதாக உறுதி அளித்ததோடு, 2017ல் இதற்காக 300 கோடி டாலர் என்று அதை புதுப்பித்தது.
குடும்பக்கட்டுப்பாடு திட்டத்திற்கு கிடைக்கும் நிதியில் 80% கருத்தரிப்பை தடுப்பு முனைய முறை, குறிப்பாக பெண் கருத்தரித்தலை நோக்கி செலவிடப்படுகிறது. ஆனால் குடும்பக்கட்டுப்பாடு முதலீடுகள் பெண்களின் விருப்ப தேர்வுகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்; அதாவது, குழந்தை திருமணம், திருமண வயது மற்றும் குழந்தை பிறப்புக்கு இடையே போதுமான இடைவெளி போன்ற பிரச்சனைகளை களைய வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.
நீடித்த ஈடுபாட்டிற்காக, குடும்பக்கட்டுப்பாடு திட்டத்திற்கான ஒதுக்கீடுகளை, குறிப்பாக அதிக கருவுறுதல் விகிதம் கொண்டுள்ள மாநிலங்களில் அதிகரிக்க வேண்டும். சமூக மற்றும் நடத்தை மாற்ற முயற்சிகளில் இருந்து சிறந்தவற்றை ஒருங்கிணைத்துஒரே நேரத்தில் ஈடுபட முயற்சிகள் தேவை. இளைஞர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதற்கான இடைவெளிகளுக்கு பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டும்.
முடிவை தீர்மானிப்பவராக ஆண், பெண் இருவருமே இருக்க வேண்டும்
பொதுத்துறை ஆட்குறைப்புகளைவிட செயல்திறன் மற்றும் முடிவுகள் சார்ந்த அணுகுமுறை விட அதிகமாக உள்ளது. ஆனால், ஒரு குடும்பத்தில் முடிவு எடுப்பதில் ஆண்கள், பெண்களுக்கு சம உரிமை தேவை என்னும் மனப்போக்கை வெளிப்படையாக ஏற்பது அவசியம் என்று, இந்திய குடும்பக்கட்டுப்பாட்டுக்கான பயனிலா செலவு என்ற ஆய்வு தெரிவிக்கிறது. முன்னதாக குறிப்பிடப்பட்ட 120 முறை முடிவை இது உறுதி செய்யலாம்.
இந்தியா ஒரு மகத்தான இனப்பெருக்க வயது மக்களை கொண்டுள்ளது; கொள்கைகள் மற்றும் உதவி ஆகியவற்றை படிப்படியாக புதுப்பிக்க முடியாது என்று ஆய்வு தெரிவிக்கிறது. வேகமான தாக்கத்திற்கு தலையீட்டின் முதல் வரி பாதுகாப்பையும்,இனப்பெருக்க சுகாதார அணுகலையும் தர வேண்டும். ஆனால் குடும்பக்கட்டுப்பாடு தலையீடுகளின் வேகமும் அளவும் அதிகரிக்க வேண்டும், முதலீடுகளில் கணிசமான அதிகரிப்புடன், அணுகல் மற்றும் சேவைகளின் தரத்தை, குறிப்பாக கருத்தடை இடைவெளி முறைகளை மேம்படுத்த வேண்டும்.
(பூனம் முத்ரெஜா, இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.