புதுடெல்லி:இந்தியாவின் கடற்கரையோரத்தில் நில பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் சட்ட வரைவு, பொது உள்ளீட்டிற்காக மூடப்பட்ட பின்னர், சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) அதை நீர்த்துப்போகச் செய்தது என்படு இந்தியா ஸ்பெண்ட்விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு-2019, சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து, கடலோர நகரங்களில் கட்டிடத்திற்கான கட்டுப்பாடுகளை எதிர்காலத்தில் தளர்த்துவதற்கும், கடலோர கிராமங்களின் ‘தரிசு நிலங்களில்’ விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கும் அனுமதி தந்துள்ளது.

தகவல் அறியும் விண்ணப்பத்தின் மூலம் இந்தியா ஸ்பெண்ட் பிரத்தியேகமாக அணுகிய ஆவணங்கள், சட்ட வரைவில் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள் அமைச்சகத்திற்குள் தீவிரமாக விவாதிக்கப்பட்டதுடன், பிரதமர் அலுவலக (PMO) அளவில் விவாதிக்கப்பட்டதையும் காட்டுகின்றன. இது தொடர்பான நீர்த்தங்கள்:

  • நகர்ப்புற கடலோரப்பகுதிகளில் கட்டுமான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு எதிர்கால வாய்ப்பு
  • கிராமப்புற கடலோரப் பகுதிகளில் தரிசு நிலங்கள் / சாகுபடி செய்ய முடியாத நிலங்களில் விமான நிலையங்களை உருவாக்குதல்.

கடந்த ஆண்டு வெளியான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அறிவிக்கை-2019 வரைவை எதிர்க்கும் 90% பிரதிநிதித்துவங்களை புறக்கணிக்கப்பட்டது என, இந்தியா ஸ்பெண்ட்2020 பிப்ரவரி கட்டுரைதெரிவித்துள்ளது. சட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக 2014 இல் அமைக்கப்பட்ட ஷைலேஷ் நாயக் குழுவானது பொதுமக்களின் கவலைகளை ஏற்கனவே பூர்த்தி செய்ததாகக்கூறி, அமைச்சகம் இதை நியாயப்படுத்தி இருந்தது. இக்குழுவானது கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மட்டுமே கலந்தாலோசித்தது; பொது உள்ளீடுகளை பெறவில்லை என்பதை எங்களது கட்டுரை காட்டுகிறது.

சுற்றுச்சூழல் அமைச்சகம் பொது உள்ளீடுகளை புறக்கணித்ததோடு மட்டுமின்றி, வரைவில் இல்லாத பல புதிய விதிகளையும் இறுதிச்சட்டத்தில் சேர்த்ததை கண்டறிந்தோம். சேர்க்கப்பட்டுள்ள புதிய விதிகள், கடலோரப்பகுதிகளில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இடங்களை மாற்றி, பாரம்பரிய கடலோர வசிப்பிடங்களையும், காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட பேரிடரை எதிர்கொள்வதற்காக ஆயத்த நிலையையும் அச்சுறுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

(சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) தொகுத்த கருத்துகளின் பட்டியலை இங்கேகாணலாம்).

நகரமயமாக்கல் மற்றும் கடற்கரையை ஒட்டி மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகள், ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய கடலோர மக்கள் சுமார் 3.6 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, அதிகமான வெள்ள அபாயத்தை ஏற்படுத்துவதாக நாங்கள் தெரிவித்தோம். விளிம்புநிலையில் உள்ள பல பாரம்பரிய சமூகங்களின் எதிர்காலம், கடற்கரை பேரிடருக்கு தயார்நிலை என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளதாக, இந்தியா ஸ்பெண்ட்2019 அக்டோபர் கட்டுரைதெரிவித்துள்ளது.

சட்டத்தை இவ்வாறு நீர்த்துப் போகச் செய்வது, சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகரிக்கும், அத்துடன் பாரம்பரிய கடலோரமக்களின் வாழ்வாதார பாதுகாப்பை பாதிக்கும் என்பதை தவிர்த்து, கொள்கை வகுப்பாளர் பார்வையில் இருந்து, குறிப்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) குறித்த புதிய சட்டம், பொது உள்ளீடுகளுக்காக திறந்திருக்கும் இந்நேரத்தில், பொருத்தமற்றவை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, ஆறு மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கடலோர ஒழுங்குமுறை ஆணைய மண்டல இணை செயலாளருக்கு பல கேள்விகளை எழுப்பி, இந்தியா ஸ்பெண்ட்மின்னஞ்சல் அனுப்பியது. பொது உள்ளீட்டிற்காக வரைவு மூடப்பட்ட பிறகு, சட்டத்தில் ஏன் மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதை விளக்குமாறு கேட்டு, மற்றொரு மின்னஞ்சலும், அத்துடன் மூன்று முறை தொலைபேசி அழைப்புகளும் செய்யப்பட்டன. எனினும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. பதில் கிடைக்கும்போது, இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

பொது ஆய்வைத் தவிர்ப்பது

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை- 2011 சட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட திருத்தங்கள்; சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிவிக்கை- 2011 இல் 30-க்கும் மேற்பட்ட திருத்தங்கள்- பொது அறிவிப்பு செய்யாமல் மேற்கொள்ளப்பட்டன. வரைவுக்கொள்கை ஆய்வுக்குத் திறக்கப்பட்டு இருந்தாலும்கூட, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை விஷயத்தில் பொதுக்கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டது.

கடந்த 2018இல் வெளியான இந்த வரைவு, கடற்கரையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகள், நகர்ப்புறங்களில் தீவிர வளர்ச்சி, கிராமப்புறங்களுக்கான வளர்ச்சி கட்டுப்பாடுகளை குறைத்தல் ஆகியவற்றை பரிந்துரைத்தது. மீனவர்கள்சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கடல் வல்லுநர்கள், நகர்ப்புற திட்டமிடுபவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், இந்த வரைவைநிராகரித்தனர்.

இந்த வரைவு மசோதா வெளியாகி இருக்கும் நேரம், பரபரப்பான ஒரு சூழலில் அமைந்திருந்தது - அதாவது பாரம்பரிய கடலோரச்சமூகங்கள் பொது விசாரணையில்கலந்துகொள்வதிலும், வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்டங்களில் உள்ள பிழைகளைஎடுத்துக்காட்டுவதிலும் இருந்தன, அவை ஒவ்வொரு மாநிலமும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையை செயல்படுத்த மாவட்ட வாரியாக வெளியிட்டன. இந்த திட்டங்கள் மற்றும் அதில் வரையறுக்கப்பட்ட நில பயன்பாடு என, கடற்கரைக்கான வளர்ச்சி, ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க முடிவுகளை எடுக்கும் கட்டுப்பாட்டாளர்கள் குறிப்பிடும் ஆவணங்கள் ஆகும். மீனவர்கள் தங்கள் கிராமங்கள் மற்றும் படகு நிறுத்தும் பகுதிகள், மீன்களை உலர்த்துவதற்கான இடங்கள் உள்ளிட்டவை கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடங்கள் மற்றும் திட்டங்களில் சரியாகக் குறிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) வரைவை, 2019 ஜனவரியில் இறுதிசெய்தது, அவ்வாறு செய்ததால், அது சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நழுவின, இது நாம் முன்பு குறிப்பிட்டபடி, கடற்கரையின் சுற்றுச்சூழல், பின்னடைவு மற்றும் பாரம்பரிய வாழ்வாதாரங்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தியது. வரைவு தொடர்பான கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு மூடப்பட்ட பிறகு, நீர்த்துப்போகச் செய்யும் இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டதால், பொதுமக்கள் அவற்றை மதிப்பாய்வு செய்து கருத்து தெரிவிக்க இயலவில்லை.

அதிக கட்டமைப்பிற்கான நோக்கம் அதிகரிப்பு

தள இடைவெளியி குறியீடு (FSI) மற்றும் தள பகுதி விகிதம் (FAR) என்ற இரு நடவடிக்கைகள், ஒரு சொத்தின் மொத்த அளவைக் காட்டிலும் அனைத்து தளங்களையும் உள்ளடக்கிய மொத்த மூடப்பட்ட பகுதியை தீர்மானிக்கிறது. 2011 சட்டத்தில், இந்த கட்டிட மேம்பாட்டுத் தரங்கள் 1991 நிலைக்கு நிர்ணயிக்கப்பட்டன. நகர்ப்புறங்களில் கட்டுமானங்கள் மற்றும் புனரமைப்புகளுக்கான அறிவிப்பின் போது அவற்றை முடக்குவதற்கும், எஃப்எஸ்ஐ / எஃப்ஏஆர் விகிதத்தை பயன்படுத்துவதற்கும் வரைவு முன்மொழிந்தது. இறுதி அறிவிப்பிலோ இப்பகுதி மாறவில்லை, ஆனால் ஒரு மாநில / யூனியன் பிரதேசம் இந்த தரங்களை மேலும் மாற்ற முற்பட்டால், அது மத்திய அரசை அணுக வேண்டும் என்ற சொற்றொடர் சேர்க்கப்பட்டது. கிடைக்கக்கூடிய “பொது வசதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்” போன்ற பல்வேறு அம்சங்களை மத்திய அரசு ஆராய்ந்து முடிவை எடுக்கும்.

ஆகஸ்ட் 8, 2018 அன்று, அப்போதைய இணை செயலாளர் ரித்தேஷ் குமார் சிங் கையெழுத்திட்ட உள்குறிப்பு, உள்ளூர் நகர மற்றும் நாட்டு திட்டமிடல் விதிமுறைகள் எஃப்.எஸ்.ஐ விதிமுறைகளை தீர்மானிக்க, ஷைலேஷ் நாயக் குழு பரிந்துரைத்ததாக கூறப்பட்டிருந்தது. ஒழுங்குமுறை மண்டல சட்ட வரைவு, எதிர்காலத்தில் உள்ளூர் விதிமுறைகளின்படி ‘தானாக’ சரிசெய்யப்படாது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள் மற்றும் உள்ளூர் கட்டிட விதிமுறைகளை சீரமைக்காதது குறித்து மாநில அரசுகள் குறைபட்டுக் கொண்டதில் குறிப்பாக மகாராஷ்டிராவின் குறிப்பு, கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. "இந்த அறிவிப்பின் தேதிப்படி நிலவும்"என்ற சொல் "அவ்வப்போது நிலவும்" என்று மாற்றப்பட வேண்டும் என்று, மகாராஷ்டிரா பரிந்துரைத்தது. குறிப்பின்படி, இது ஷைலேஷ் நாயக் குழு அறிக்கையின்படி அறிவிப்பை கொண்டு வரும்.

இருப்பினும், அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக இருந்த அருண்குமார் மேத்தா, இதை ஏற்கவில்லை. இக்குறிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, கடலோரப்பகுதிகள் அதிக மக்கள் தொகை கொண்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்த எஃப்எஸ்ஐ முடக்கம் தேவை என்று அவர்நியாயப்படுத்தினார், ஏனெனில் அவை "தீவிர வானிலை நிகழ்வுகள் / கடல் மட்ட உயர்வு போன்றவற்றுக்கு உட்படும்" என்றார். இப்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும், கடற்கரையில் மக்கள் எண்ணிக்கை இன்னும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு அவர் இரண்டு காரணங்களை தெரிவித்தார்: பாதிக்கப்படக்கூடிய மக்கள் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் மாசுபாடு அளவை குறைப்பது என்பதாகும். எனவே இந்த விதிமுறை அறிவிப்பின் தேதியுடன் இணைக்கப்பட வேண்டும் அதாவது “அறிவிக்கை தேதியின்படி எப்.எஸ்.ஐ. / எப்.ஏ.ஆர். -ஐ முடக்கம்” என்று அவர் பரிந்துரைத்தார்.

எனினும், ஆகஸ்ட் 2018 இறுதி வரை பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஹர்ஷ் வர்தன் ஒரு நடுநிலை வழியை கண்டுபிடித்தார்: இந்த அறிவிப்பு எப்.எஸ்.ஐ. /எப்.ஏ.ஆர். 2019 நிலைக்கு முடக்க வைக்கும் அதே வேளையில், மாற்றம் தேவைப்பட்டால், மாநில அரசுகள் கடலோர அதிகாரிகள் மூலம் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை அணுகலாம் என்று அவர் பரிந்துரைத்தார். இந்த மாற்றத்துடன் இறுதிக் குறிப்பு 2018 ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

அடர்த்தியான நகர்ப்புற வளர்ச்சி செலவில் வரும்

பெரும்பாலான நகரங்களில், பைலாக்கள் கட்டுதல் மற்றும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதாக, நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டிஉள்ளனர். உதாரணமாக, மும்பையில் நகர்ப்புற கட்டுமானங்களின் கண்மூடித்தனமான அதிகரிப்பு, அடிக்கடி நிகழும் வாய்ப்புள்ள புயல்களுக்கு எதிரான நகரத்தின் தயார்நிலையை விட்டுக் கொடுப்பதாக, இந்தியா ஸ்பெண்ட்ஜூன் 2020 கட்டுரைதெரிவித்தது. தண்ணீர் வினியோகம், கழிவுநீர் அகற்றுதல் மற்றும் திறந்த பொது இடங்கள் போன்ற உள்கட்டமைப்பிற்கான எந்தவொரு திட்டமும் இல்லாமல், இது மேற்கொள்ளப்படுகிறது; மேலும் மோசமான வாழ்க்கை நிலைமைகளை இயல்பாக்கி, குடியிருப்பு இடங்கள் அதிகமாக இருக்கும் அபாயங்களை உண்டாக்குகிறது.

கோலிவாடாஸ்என அழைக்கப்படும் மும்பை மீன்பிடி கிராமங்கள், நகர்ப்புற இடத்தில் அமைந்திருந்தாலும், 2011 சட்டத்தால்கடலோர ஒழுங்குமுறை மண்டலம்- III அந்தஸ்து வழங்கப்பட்டது; நடைமுறையில் குடிசைப்பகுதிகளாக இருந்தவைக்கு பதிலாக அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாமல்பல மாடி கட்டிடங்களில் மீன்பிடி சமூகங்களை "மறுவாழ்வு" அமர்த்துவதில் இருந்து அது காப்பாற்றியது. தற்போது அந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

"கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு 2019ல் மும்பையின் கோலிவாடாக்கள் கடலோர ஒழுங்குமுறை மண்டல வகை, III (கிராமப்புற) இல் இருந்து, கடலோர ஒழுங்குமுறை மண்டலம் II (நகர்ப்புற) வகைக்கு மாற்றப்பட்டது தன்னிச்சையானது," என்று மும்பையின் கம்லா ரஹேஜா வித்யாநிதி கட்டிடக்கலை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான இணை பேராசிரியர் ஸ்வேதா வாக் கூறினார். "இது பாரம்பரிய கடலோர குடியிருப்புகளுக்கு சட்டத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பை பறித்தது" என்றார்.

மேலும், 2019 சட்டம் அவர்களின் பாதுகாப்பான கோலிவாடாக்களை அகற்றியதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் எஃப்எஸ்ஐ / எஃப்ஏஆரில் அதிகரிப்புக்கான வாய்ப்பை அனுமதிப்பதன் மூலம், கடலோர சமூகங்களுக்கு மேலும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. "மும்பை மேம்பாட்டு கட்டுப்பாடு மற்றும் ஊக்குவிப்பு ஒழுங்குமுறை- 2034, அனுமதிக்கப்பட்ட தள இடைவெளி குறியீட்டை சாலை அகலத்துடன் இணைக்கிறது; உயரமான வளர்ச்சிக்கு தள்ளுகிறது" என்று வாக் கூறினார். "நகர்ப்புறங்களில் எஃப்.எஸ்.ஐ / எஃப்.ஐ.ஆர் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் மும்பைக்கு திட்டமிடப்பட்ட நகர்ப்புற புதுப்பித்தல் திட்டங்கள் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும். ஆனால் இவை அனைத்தும் மீன்பிடி கிராமங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான துறைமுக நிலங்கள் அல்லது சவால்கள் போன்றவற்றை மாற்றியமைக்கும், அவை தற்போது உயரம் குறைந்த கட்டிடங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு பாதிப்புக்குள்ளாகும்” என்றார்.

மும்பையில் உள்ள வொர்லி, லோயர் பரேல், நைகான் மற்றும் சேவ்ரி பகுதிகள் முழுவதும் 1921 மற்றும் 1925ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை பம்பாய் மேம்பாட்டு இயக்குநரகத்தின் (பி.டி.டி)எதிர்த்து முறையிட்டுள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு ஆணையம்இந்த பகுதிகளை மீண்டும் மேம்பாடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. மும்பை கொலாபா முதல் வதாலா வரை ஈஸ்ட் வாட்டர்ஃபிரண்டில் 750 ஹெக்டேருக்கு மேற்பட்ட பொது நிலங்கள் மும்பை துறைமுக கழக டிரஸ்டிஷிப்பிடம்உள்ளன. மும்பை போர்ட் டிரஸ்ட் வளாகத்திற்கான வரைவு மாஸ்டர் திட்டத்தின்மூலம், தற்போது கொலாபாகோலிவாடாஉள்ளிட்ட பெரிய முறைசாரா குடியிருப்புகளைக் கொண்ட இந்த துறைமுக நிலங்கள் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன. மறுவடிவமைப்பு திட்டத்தில் ஒரு நிதி மையம், ஹோட்டல், வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்கள் மற்றும் ஒரு சுற்றுலா மையம் கொண்ட ஒரு செயற்கைக்கோள் நகரம்அடங்கும்.

கடலோர ‘தரிசு நிலங்களில்’ விமான நிலையங்கள்

கடலோரப் பகுதிகளில், தரிசு நிலங்களாகக்குறிக்கப்படுவது நதி கரையோரங்கள், உப்புத் தொட்டிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகள் ஆகும்; அவை நிலத்தடி நீர் செறிவூட்டுதல்மற்றும் புயல்களில் இருந்து பாதுகாப்பதில்பங்கு வகிக்கின்றன. இவை தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்துடன் அதிக உற்பத்தி செய்யும் பகுதிகள் மற்றும் வாழ்வாதாரத்தின் ஆதாரமாகும்.

‘தரிசு நிலம்’ என்ற சொல் தனிமனித சொத்துரிமை ஆட்சியில் தோன்றியுள்ளது என்று குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியை சேர்ந்த அரசு சாரா அமைப்பான பவுண்டேஷன் பார் ஈகாலஜிகல் செக்யூரிட்டி-யின் திட்ட இயக்குநர் சுப்ரதா சிங் கூறினார். இது இயற்கை வளங்களை பாதுகாக்க சமூகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. "இதுபோன்ற நிலங்களின் சமூக பயன்பாடு, அவை பொது, காலனித்துவ காலத்தில் இருந்து அரசு பதிவுகளில் பதிவு செய்யப்படவில்லை" என்றார்.

"விவசாயத்திற்கு என பெரும்பாலான சமதள நிலங்கள் பயன்பாட்டில் இருப்பதால், நிலப்பரப்புகளை விட கரையோரப்பகுதிகளில் பொதுவான நிலங்கள் மிகக்குறைவாகவே கிடைக்கிறது. எனினும், சில பொதுவான நிலங்கள் எதிர்கால விரிவாக்கம் மற்றும் மக்கள்தொகை அதிகரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது,”என்று சிங் கூறினார். இத்தகைய பொதுவானது முக்கியமான சுற்றுச்சூழல் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது என்ற அவர், "அவற்றின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடு ஆவணப்படுத்தப்படவில்லை என்றாலும், பெரிய அளவிலான மக்கள் மீன், விறகு மற்றும் தீவனம் மற்றும் நிலத்தடி செறிவூட்டுதல் போன்ற வளங்களை சார்ந்துள்ளனர்" என்றார்.

கடந்த 2011 கடலோர ஒழுங்குமுறை மண்டல சட்டம், அத்தகைய தளங்களுக்கு பாதுகாப்பு அளித்தது; ஆனால் உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக்குஆதரவாக கடலோர ஒழுங்குமுறை மண்டல சட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகள்பெரிய அளவிலான கடலோர ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுத்தன. நகர புறநகர் பகுதிகளில் பல நீர்நிலைகள் மற்றும் ஆக்கிரமிப்பு ‘தரிசு நிலங்களில்’ வெள்ளம் ஏற்பட்ட சென்னை நகரின் உதாரணத்தை, சிங் மேற்கோள் காட்டினார்.

கடலோர தரிசு நிலங்களில் விமான நிலையங்களை நிர்மாணிப்பது கடலோர ஒழுங்குமுறை மண்டல சட்டம்-2011 இன் கீழ் அனுமதிக்கப்பட்ட செயலாக இருக்கவில்லை. இது, 2018 இல் வெளியான வரைவின்ஒரு பகுதியாக இல்லை. 2019 இறுதிச்சட்டத்தில், கடலோர ஒழுங்குமுறை மண்டலம்- III (கிராமப்புற) பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கையாக “தரிசு நிலங்கள் / சாகுபடி செய்ய முடியாத நிலங்களில் விமான நிலையங்களின் வளர்ச்சி” சேர்க்கப்பட்டது.

கடந்த 2018 நவம்பரில், பிரதமர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், பிரதமரின் முதன்மை செயலாளர் முன்னிலையில், கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் வரைவில் ‘லேசான’ திருத்தங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டது, அணுகப்பட்ட ஆவணங்களின்படிதெரிகிறது. கடலோர ஒழுங்குமுறை மண்டலம் - III பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களில் விமான நிலையங்களை “சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உட்பட்டு” உருவாக்குவது இதில் ஒன்று.

வேளாண்மை, சுற்றுலா, கப்பல் போக்குவரத்து, சாலை போக்குவரத்து, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சுரங்கங்கள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், பூமி அறிவியல், அணுசக்தி, நீர்வளம் மற்றும் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை என பல அமைச்சக செயலாளர்கள் அழைக்கப்பட்டனர். இதில், அமைச்சக செயலாளர்கள் / கூடுதல் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவ்வாறு சேர்க்கப்பட்ட அம்சத்தை நியாப்படுத்துவது எவ்வாறு என்றால், “உலகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் விமான நிலையங்கள் உள்ளன” மற்றும் நவி மும்பையின் கடலோர ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில் ஒரு ‘சிறப்பு நிர்வாகமாக’ ஒரு விமான நிலையம் ஏற்கனவே 2011 சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. எனவே, அறிவிப்பின் சீரான தன்மைக்கு, "சிறப்பு நிர்வாகங்கள் முடிந்தவரை அகற்றப்படுகின்றன" என்று அந்த குறிப்பு கொண்டு வாதிடப்பட்டது.

நவி மும்பை விமான நிலையத்தைப் பொறுத்தவரையில், விமான நிலையத் திட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள ஈரநிலங்கள் மற்றும் சதுப்புநிலங்கள் அழிக்கப்படுவதால், ‘பறவை மோதும்’ அபாயம் குறித்து தற்போது பிரதமர் அலுவலகம் ஆய்வுசெய்வதில் தீவிரமாக உள்ளது, இது ‘தரிசு நிலங்கள்’ என்று அழைக்கப்படுவதற்கு அருகில் விமான நிலையங்களை நிறுவுவதில் உள்ள சிக்கலைக் குறிக்கிறது.

‘மக்கள் பங்களிப்புக்கு எந்த முயற்சியும் இல்லை’

கடந்த ஐந்து ஆண்டுகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையில் திருத்தம் ரகசியமாகமேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிவிலக்கல்ல என்று கேரளாவைச் சேர்ந்த கொள்கை ஆய்வாளர் பி.எஸ். அருண் குறிப்பிட்டார். "கொள்கைகளில் இதுபோன்ற பல நிகழ்வுகள் உள்ளன: திருநங்கைகள் மசோதா, தேர்தல் பத்திர திட்டம் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை" என்று அவர் கூறினார். "தற்போதுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு-2020 கூட, மக்கள் பங்களிப்பை உறுதி செய்வதற்காக பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்க அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. உண்மையில், உலகளாவிய தொற்றுநோய் மற்றும் தேசிய அளவில் ஊரங்கின் போது வரைவு மசோதாவை வெளியிடுவதன் மூலம் உண்மையான பொது உள்ளீடுகள் சமரசம் செய்யப்பட்டன. கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையை மாற்றியமைத்தல் என்பது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கும் என்ன நடக்கும் என்பதற்கான அறிகுறியாகும்” என்றார் அவர்.

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், மார்ச் 23, 2020 தேதியிட்ட வரைவு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிக்கையை, ஏப்ரல் 11 அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டது. ஆரம்பத்தில், இது சட்டத்தின்படி இரு மாதங்களுக்கு பொது உள்ளீடுகளுக்கு வரைவை கிடைக்கும் வகையில் செய்திருந்தாலும், தற்போதுள்ள மோசமான சூழல் குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டதால், காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. எனினும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், பொதுமக்கள் கருத்துக்களுக்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 11 வரை மத்திய அரசு நீட்டித்தது. இச்சட்டத்தை பிராந்திய மொழிகளில் வெளியிடுமாறு, கர்நாடக உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரவிட்டது. அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டு உள்ள 22 பிராந்திய மொழிகளிலும், சுற்றுச்சூழல் தாக்க வரைவு மசோதா- 2020 மொழிபெயர்ப்பு இன்னும் கிடைக்காததால், செப்டம்பர் 7 வரை இறுதி அதன் அறிவிப்பை வெளியிட மத்திய அரசுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது.

(கபூர், சுற்றுச்சூழல் கொள்கையில் ஒரு சுயாதீன ஆராய்ச்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.