மும்பை: கடந்த 2019 ஜனவரி 31இல், இடைக்கால பட்ஜெட்-2019 கூட்டத்திற்காக நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இந்தியாவில் 1,16,000 கிராமங்கள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது; 40,000 கிராம ஊராட்சிகளுக்கு வைபை (WiFi) ஹாட்ஸ்பாட்டு மற்றும் அனைத்து கிராம் ஊராட்சிகளும் 2,12,000 பொதுச்சேவை மையங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சியானது, அத்தகைய டிஜிட்டல் உள்கட்டமைப்பு கிடைக்கப்பெறுவதுடன் இடைவெளியை மூடுகின்றது; அடுத்த கட்டம் - கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை தருகிறது; இதன் மூலம் இணையதளம் வாயிலாக (ஆன்லைன்) கிடைக்கும் அரசு சேவைகள், வசதிகளையும் அவர்கள் நேரடியாக அணுக முடியும். அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் கீழ் செயல்படும், மும்பையை சேர்ந்த நகர அறிவு செயல்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு - புகர் (Partners for Urban Knowledge Action and Research - PUKAR), மகாராஷ்டிரா பழங்குடி கிராமங்களில் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் மின்-ஆளுமை அணுகலை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் சமீபத்தில் உருவாக்கப்பட்ட பால்கர் மாவட்டத்தின் தலைமையிடமான பால்கர், மாநில தலைநகரான மும்பைக்கு 100 கி.மீ. தொலைவில் உள்ளது. மாவட்டத்தில் மூன்று இனக்குழுக்கள் - ஆக்ரி, குன்பி (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ) மற்றும் பழங்குடியினர் என உள்ளன. இதில், முதல் இரண்டு குழுவை சேர்ந்தவர்கள் நில உரிமையாளர்களாவும், அதே நேரம் 35% பேர் உள்ள பழங்குடியினர், விவசாயத் தொழிலாளர்களாகவும் வேலை செய்து வருகின்றனர். பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் பழங்குடி மக்களுக்கென ‘பதா’ என்ற தனியான பகுதி உள்ளது. கிராமத்தின் பிற பகுதிகளை போல் இந்த பதா பகுதிக்கு ள்கட்டமைப்பு வசதிகள், சேவைகள் இல்லை.

கடந்த 2014 இல் கிராமப்புற பால்கர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம், புகர் திட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவுகளை மேம்படுத்தவும், 1992 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 73 வது திருத்தத்தை புரிந்து கொள்ளவும், கிராமப்புற சமுதாயங்கள், ஊராட்சிகள், கிராம சபாக்கள் ஆகியவற்றிற்கு அதிகாரமளித்து, உள்ளூர் இளைஞர்களை ‘இ-சேவக்’ அதாது மின்னணு சேவகர்களாக்கி, கிராம மக்களுக்கு மின் ஆளுமை மூலம் அரசு நலத்திட்டங்களை அணுகுவதற்கு உதவுகிறது.

பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் கிராம மக்களின் நன்மைகளைப் பாதுகாப்பதே புகர் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. ஊராட்சிகள் மற்றும் கிராம சபாக்கள் ஆகியவற்றில் பங்கு பெறச் செய்வதன் மூல்ம பெண்களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அத்ன மூலம் அவர்களின் உரிமைகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள செய்வதாகும்.

பழங்குடி கிராமங்களில் டிஜிட்டல் கல்வியறிவு விரிவாக்கம்

பஹதோலி கிராமத்தில் பால்கர் சிறப்பு திட்டம் துவங்கிய போது, அங்கு 75% மக்கள் பழங்குடி இனத்தவர்களாக இருந்தனர். இந்த கிராமங்கள், மும்பை பெருநகர நகரத்தில் இருந்து 80-100 கி.மீ. தொலைவில் தான் இருப்பினும், ஆதார் அட்டை திருத்தம் அல்லது வருமானவரி நிரந்தர கணக்கு எண்ணுக்கான பான் அட்டையை (PAN) ஆதாருடன் இணைத்தல் மற்றும் சமையல் எரிவாயு மானியம் மற்றும் வங்கிச் சேவைகளை அணுகுவது போன்ற அடிப்படை ஆன்லைன் சேவைகள் கூட கிடைக்கவில்லை என்று, புகர் அமைப்பின் நிரல் இயக்குனர் கிரண் சாவத் மற்றும் இணை இயக்குனர் ஸ்ருதிகா ஷிதொல் தெரிவித்தனர்.

பல்காரில் உள்ள 14 கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு கணினி மையத்தை புகர் அமைத்து, ‘இ-சேவகர்’ இளைஞர்களுக்கு, மகாராஷ்டிரா அரசின் ஆபிள் சர்க்கார் (Aaple Sarkar - உங்கள் அரசு) என்ற திட்டத்தில் மின் ஆளுமை வலைத்தளத்தில் கிடைக்கும் அரசு வசதிகள் மற்றும் திட்டங்களை கிராமவாசிகள் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து பயிற்சி தரப்பட்டது. இதில் ஆதார் அட்டை திருத்தம் ஆதாரை பான் அட்டையுடன் இணைத்தல், அரசு திட்டங்களை பெறுவது உள்ளிட்ட பயிற்சிகள் அடங்கும். ஊராட்சி அலுவலகத்தில் மையங்கள் அமைக்கப்பட்டு கிராமப்புற மக்கள் எப்போது வேண்டுமானாலும் அதை பயன்படுத்தலாம்.

ஆன்லைன் சேவைகளை அணுக, படிப்படியான தகவலை வழங்குவதன் மூலம் இ- சேவகர்களை பயிற்றுவிப்பதற்கு, புகர் அமைப்பு பல்வேறு அச்சு மற்றும் வீடியோ தொகுதிகளை உருவாக்கியுள்ளது. இந்த இ - சேவகர்கள் வீட்டுக்கு வீடு சென்று தன்னார்வ முகாம்களை நடத்துகின்றன; ஊராட்சிகளில் அடிப்படை வசதி, தளவாடங்கள் மற்றும் மின்சாரம் போன்ற தேவைகளுக்கு உதவுகின்றனர்.

கடந்த 2018 அக்டோபர் வரை, 31 கிராமங்களில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த 64 இ-சேவகர்களுடன் பயிற்சி பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுடன் சேர்ந்து உதவியதில், 30,000 க்கும் அதிகமான கிராம மக்கள் அரசின் சேவைகள், தகவல்களை பெற்றுள்ளனர். இதன் இலக்கு, தன்னம்பிக்கை மிக்க கிராமத்தையும், இளைஞர்களையும் உருவாக்குவது ஆகும்.

இந்த கிராமவாசிகள், ஆட்சி, விவசாயம், வீட்டுவசதி, மானியங்கள் மற்றும் அரசு சான்றிதழ்கள் தொடர்பான 65க்கும் மேற்பட்ட அரசுத் திட்டங்களைப் பற்றி அணுக மற்றும் தகவல் பெற முடிந்தது. இந்த மையங்களை அணுகுவதன் மூலம் ஒரு கிராமவாசி பலமுறை தாலுகா அலுவலகம் சென்று வருவதற்கு ரூ.1,600 வீதம் என - இது கிராமப்புற விவசாய தொழிலாளியின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 1,525ஐ விட அதிகம் - 30,000 பயனாளர்களுக்கான செலவு ரூ.4.8 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என புகர் அறிக்கை தெரிவிக்கிறது.

இலக்குள்ள கிராமங்களில் சமூக சேவை நிகழ்வுகளை புகர் நடத்துகிறது; யுன்னாதி என்ற கூட்டுறவு மற்றும் ஒரு மின்-ஆளுமை உதவி மையத்தையும் செயல்படுத்துகிறது. 48 மணி நேரத்திற்குள் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுகிறது. இது 80க்கும் மேற்பட்ட கிராமங்களை சென்றடைகிறது.

இந்த பழங்குடி கிராமங்கள் ஒரு அழுத்தமான கவலையை சத்பாரா அல்லது நில பதிவுகளை அணுக உதவுகிறது. மகாராஷ்டிரா உட்பட 16 மாநிலங்களில் வனப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்த 2019 பிப்ரவரி 13ஆம் தேதி ன் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இது சிறப்பாக பொருந்துகிறது. புகர் திட்டத்தின் மூலம், பால்கார் பகுதியில் உள்ள 31 கிராமங்களை சேர்ந்த 1,875 பழங்குடி மக்கள், தங்களது நிலப்பகுதி குறித்த பதிவுகளை அணுக முடிந்தது; இதன் மூலம் அப்பகுதியில் இருந்து , வெளியேற்றும் உத்தரவிற்கு விலக்கு பெற, அவர்களுக்கு இது முக்கியமான படிநிலை ஆகும்.

புகரின் சமூகம் சார்ந்த பங்களிப்பு நடவடிக்கை ஆராய்ச்சி வழிமுறையானது, சுய உதவி குழுக்களை சேர்ந்த 360 பெண்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்களை டிஜிட்டல் திறன் கொண்டவர்களாக்க உதவியுள்ளது. இந்த பெண்கள் தற்போது மின் கட்டணத்தை ஆன்-லைன் மூலம் செலுத்துகின்றனர்; ஆன்லைனில் அவர்களின் சத்பாரா அல்லது நில பதிவேடுகளை அணுக முடிகிறது. இதேபோல், 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் ஐ.சி.டி. பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அதிகாரம்

பழங்குடி கிராமமான தந்தல்வாடியில், இரண்டு ஆண்டு இ-சேவக் பயிற்சி பெற்ற ஆறு இளம் பெண்களை, இந்தியா ஸ்பெண்ட் குழு சந்தித்தது. அவர்கள் இப்போது கண்டுபிடிப்பாளர்களாக மாறிவிட்டனர். மற்ற மின்-சேவகர்களால் அவர்களின் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது. இக்குழு கிராமமக்களுக்கு யுன்னாதி போன்ற கூட்டுறவு குழுக்களை உருவாக்க உதவுகின்றனர்.

இந்த இளம் பெண்கள் விழிப்புணர்வு மற்றும் அனுமதிகளை பெற்று பல்வேறு பணிகளை அதாவது முகாம் நடத்துதல், பதிவு செய்தல், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை என அவற்றை விரிவுபடுத்த வேண்டும். பெண்கள் பஞ்சாயத்துத் தேர்தல்களில் போட்டியிடவும், கிராமப்புற சபாவில் பங்கேற்கவும் இ-சேவகர்கள் ஊக்குவிக்கிறார்கள்.

அவர்களின் உதவியானது கிராமம் கிராமமாக ஒரு புகைப்படக் கலைஞரை அழைத்து செல்கிறது. "ஜெராக்ஸ் இயந்திரம் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க உதவுகிறது. இல்லையெனில், ஒரு சில நகல்களுக்கு, ஒருநபர் பல இடங்களை கடந்து செல்ல வேண்டும். பாஸ்போர்ட்அளவிலான புகைப்படம் எடுக்க அவர்களுக்கு உதவுவோம்; இது அவர்களுக்கு நிறைய பணத்தை சேமிக்கிறது. அவர்கள், ஆன்லைன் ஷாப்பிங்கிற்காகவும் இப்போது மொபைல் போன் பயன்படுத்துகின்றனர்.ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு ஸ்மார்ட்போனாவது உள்ளது, " என்று, ஒரு பயிற்சியாளரான வைஷாலி தெரிவித்தார்.

தண்டல்வாடியை சேர்ந்த இல்லத்தரசியும் மற்றும் கிராம சபா பங்கேற்பாளருமான மனிஷா நரேஷ் குரு, தனது சொந்த பெயரில் ஒரு ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு மற்றும் ஏடிஎம் வைத்திருக்கிறார். அவருக்கு மின் கட்டணத்தை ஆன் லைன் மூலம் செலுத்த தெரியும்; அது கொஞ்சம் கடினமாக இருப்பதை அவர் காண்கிறார். மனிஷாவுக்கு வாட்ஸ் அப் பயன்படுத்தி தொலைவில் உள்ள தனது குடும்பத்தாரை தொடர்பு கொள்ளவும், ஒருசில ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை பயன்படுத்தவும் தெரியும். அவர் தண்டல்வாடி கிராம சபாவின் உறுப்பினர்; கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்கிறார்.

அவர், “Sabha mein accha lagta hai. Panchayat sabki baat sunti hai aur kaam kar ke deti hai. Koi kaam baaki nahi rehta,” என்கிறார்; அதன் பொருள், "நான் கிராமசபா கூட்டத்தில் பங்கேற்க விரும்புகிறேன். ஊராட்சிகள் எங்கள் கவலையை சுட்டிக்காட்டுகிறது மற்றும் எங்கள் வேலை அனைத்தையும் செய்கிறது; எதுவும் நிலுவை இல்லை" என்பதாகும்.

மனீஷாவின் தோழி வந்தனா கூறுகையில், இப்போது எங்களால் சமையல் எரிவாயு மானியத்தை பெற முடிகிறது. வாக்காளர் அடையாள அட்டை எங்களால் பெற முடிகிறது. இ - சேவகர்களின் உதவியால் சப்ரா எனப்படும் நில பதிவுகள் மற்றும் ஓய்வூதிய திட்டங்களை அணுகுவது பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம் என்றார். புகர் பால்கர் திட்டம் தொடங்கியதில் இருந்து மலைவாழ் இன பெண்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்களின் சாட்சியாக மனிஷாவும், வந்தனாவும் திகழ்கின்றனர். மனிஷா, “Ye log humaare bacchon ko padhaate bhi hain,” என்கிறார்; அதன் பொருள் தன்னார்வ தொண்டர்கள் கூட கிராம குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்கள் என்பதாகும்.

தன்னார்வ தொண்டர்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பார்கள்; முகாம்களில் நடத்தவும், அரசியலமைப்பைப் பற்றி விவாதிக்கவும் செய்கிறார்கள். இதெல்லாம் புகர் திட்டத்தின் பணிகளின் விளைவுகள் ஆகும்.

டிஜிட்டல் எழுத்தறிவு என்பது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் கருவியாகும், இது டிஜிட்டல் சாகி மற்றும் இண்டர்நெட் ஷாதி போன்ற முயற்சிகளில் மூல்ம் தெளிவாக தெரிகிறது. முகநூல் நிறுவனம் அண்மையில் கோல் (GOAL-Going Online As Leaders) அதாவது, தலைவர்களை போல் செல்லும் ஆன்- லைன் என்ற பொருளிலான திட்டத்தை அறிவித்தது. இதன் நோக்கம், இந்திய பழங்குடி பெண்களை தங்களது கிராம அளவில் டிஜிட்டல் நுட்பத்தை கையாண்டு இளம் தலைவர்களாக வளரச் செய்வது தான்.

புகரின் இத்தகைய முயற்சிகள் பெண்களுக்கு மட்டுமின்றி, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கிடைக்கிறது.

"இப்போது கிராமத்தினருக்கு எந்த விசாரிப்புக்கு யாரை அணுக வேண்டும் என்று நன்கு தெரியும்," என்று பெருமிதத்துடன் வைஷாலி கூறினார்.

(பானர்ஜி, வதோதராவில் உள்ள எம்.எஸ்.யு.வின் அரசியல் அறிவியல் முதுகலை மாணவர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.