புதுடெல்லி: மக்களவையில் உள்ள பட்டியல் சாதியினர் (எஸ்.சி) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) ஆகியோரைச் சேர்ந்த சில அவை உறுப்பினர்கள் பல்வேறு குழுக்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள், முன்மொழியப்பட்ட சட்டங்களைப் பற்றி அந்த குழுக்கள் விவாதித்து பகுப்பாய்வு செய்கின்றன, செலவுகள் மற்றும் கொள்கைகளை ஆராய்கின்றன, பொதுவாக அப்போதைய அரசை பொறுப்பேற்கச் செய்ய வைக்கின்றன என்பது, பாராளுமன்ற தரவு பற்றிய எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.

மக்களவையில் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு என்பது, ஏழு தசாப்தங்களாக உள்ளது. மக்களவையில் எஸ்சி / எஸ்டி உறுப்பினர்களின் விகிதாசாரப் பங்கு, பல்வேறு குழுக்களில் அவர்களின் இருப்பு இல்லை என்பதைக் காண்கிறோம், இது எஸ்சி / எஸ்டி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டின் மிக உயர்ந்த சட்டமியற்றும் குழுவிற்குள் குறைந்த செல்வாக்கையும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.

கடந்த 1951-52ல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில், ஐந்தில் ஒரு பங்கு --489 இடங்களில் 20.04% -- எஸ்சி (72) மற்றும் எஸ்.டி (26) சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஏழு தசாப்தங்களாக, இடஒதுக்கீடு --இப்போது 24.13% அல்லது 543 மக்களவை இடங்களில் 131 ஆக உள்ளது -- பாராளுமன்றத்தில் எஸ்சி / எஸ்டி உறுப்பினர்களின் செல்வாக்கை பாதித்திருக்கிறதா என்பதை ஆராய வேண்டியது அவசியம்; பாராளுமன்றத்திற்குள் பிரச்சினைகளை எழுப்ப அவர்களுக்கு வாய்ப்பு உள்ளதா என்பதையும்; குழுத் தலைவர்களாக முக்கியமான முடிவெடுக்கும் பதவிகளுக்கு அவர்களுக்கு அணுகல் உள்ளதா என்பதையும்; அவர்கள் மாறுபட்ட நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினர்களாக இருக்கிறார்களா, மற்றும் பலவற்றை ஆராய வேண்டும்.

அனைத்து நிலைக்குழுக்களும் எஸ்சி / எஸ்டி எம்.பி.க்களுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்று சபை விஷயங்கள் குறித்து செய்தி வெளியிடும் மத்யம் என்ற அமைப்பின் நிறுவனர் மான்சி வர்மா கூறினார். "குழுக்களில் பிரதிநிதித்துவத்தின் பற்றாக்குறை எஸ்சி / எஸ்டி எம்.பி.க்களை இரண்டு வழிகளில் சிறுபான்மையினராக்கலாம் " என்று அவர் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "ஒன்று, அவர்கள் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட இடங்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவம் தருவது. இரண்டாவதாக, அவர்கள் வரையறுக்கப்பட்ட நிலைக்குழுக்களின் உறுப்பினர்களாக ஒரு குறுகிய சிக்கல்களை மட்டுமே எழுப்ப முடியும்" என்றார்.

குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள்

பாராளுமன்றத்தில், 24 துறை சார்ந்த நிலைக்குழுக்கள் (DRSC - டி.ஆர்.எஸ்.சி) உள்ளன - அவை சம்மந்தப்பட்ட அமைச்சகங்களைக் கையாளும் குழுக்கள். உதாரணமாக, வேளாண்மை தொடர்பான குழு, விவசாய அமைச்சகம் தொடர்பான விஷயங்களை கையாளும். 24 துறை சார்ந்த நிலைக்குழுக்ககளில், 16 ஐ மக்களவை செயலகமும், எட்டு மாநிலங்களவையாலும் கையாளப்படுகின்றன.

24 துறை சார்ந்த நிலைக்குழுக்களைத் தவிர, மூன்று நிதிக் குழுக்கள் -- மதிப்பீடுகள், பொதுக் கணக்குகள் மற்றும் பொது நிறுவனங்கள் -- ஆகியன, பொது நிதிகளை ஆராய்கின்றன. இவை நிதிக் குழுவில் இருந்து வேறுபட்டவை, இவை நிதி அமைச்சகத்தின் செலவுகளை ஆராய்கின்றன.

மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் தத்தமது அவையில் துறை சார்ந்த நிலைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை பரிந்துரைக்கின்றனர். சபாநாயகர் / மாநிலங்களவைத் தலைவர் அந்தந்த அவையில் உள்ள குழுக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை (எம்.பி.க்கள்) பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்படுகின்றன. மூன்று நிதிக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் மட்டுமே இரு அவைகளின் எம்.பி.க்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

குழுக்களுக்கு ஒரு வருட கால அவகாசம் உள்ளது. உறுப்பினர்கள் பொதுவாக தங்கள் குழுவிற்கு தங்கள் அறிவையும் அனுபவத்தையும் மேம்படுத்துவதற்காக அதே குழுவிற்கு மீண்டும் பரிந்துரைக்கப்படுவார்கள் என்று வர்மா கூறினார்.

குழுக்களில் மோசமான பிரதிநிதித்துவம்

17 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 543 உறுப்பினர்களில், 138 - அல்லது 25.4% - எஸ்சி / எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; இது மாநிலங்களவயில் எஸ்சி / எஸ்டி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் விகிதத்தை விட (24.13%) ஒரு சதவீதம் அதிகமாகும்.

அதேபோல், 17 வது மக்களவையில் 25.4% எஸ்சி / எஸ்டி உறுப்பினர்களுமே, 24 நிலைக்குழுக்கள் மற்றும் மூன்று நிதிக் குழுக்களில், எஸ்சி / எஸ்டி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம் பெற்று, விகிதாசார அதிகரிப்பாக மாற்றப்படவில்லை என்பது, பாராளுமன்றக் குழு உறுப்பினர் குறித்த இந்தியாஸ்பெண்டின் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

உதாரணமாக, 17 வது மக்களவையில் எஸ்சி / எஸ்டி எம்.பி.க்களின் 25.4% பிரதிநிதித்துவத்தை, 27 குழுக்களில் வெறும் எட்டில் மட்டுமே (24 துறை சார்ந்த நிலைக்குழுக்கள் + மூன்று நிதிக் குழுக்கள்) கொண்டுள்ள அல்லது விஞ்சியிருக்கின்றன. இது (27 குழுக்களில் எட்டில் எஸ்சி / எஸ்டி எம்.பி.க்களின் விகிதாசார பிரதிநிதித்துவம்) என்பது, 15 (2009-14) மற்றும் 16 வது மக்களவை (2014-19) முதல் நிலையானதாகவே உள்ளது.

17 வது மக்களவையில் இந்த எட்டு குழுக்கள் வெளிவிவகாரங்கள், சமூக நீதி, ரசாயனங்கள், நிலக்கரி மற்றும் எஃகு, தொழிலாளர், நீர்வளம், சட்டம் மற்றும் நீதி மற்றும் சுற்றுலா தொடர்பானவை. 17 வது மக்களவையில் எஸ்சி / எஸ்டி எம்.பி.க்களின் மிக அதிகபட்ச விகிதமான 59.5% என்பது, சமூக நீதிக்குழுவில் உள்ளது; மிகக்குறைந்த விகிதம் (6.67%) பொதுக் கணக்குக் குழுவில் உள்ளதாக, தரவு காட்டுகிறது.

பாதுகாப்புக் குழுவில், அவர்களது உறுப்பினர் விகிதாச்சாரம் 21.4% ஆக உள்ளது. கடந்த மூன்று மக்களவைகளில் நிதிக்குழு தொடர்ந்து 9.5% எஸ்சி / எஸ்டி எம்.பிக்களே இருந்து வந்துள்ளனர்.

'பெரிய 4 அமைச்சகங்களில்' வெளிவிவகாரக் குழு மட்டுமே, நான்கில் ஒரு பங்கு (28.5%) எஸ்சி / எஸ்டி எம்.பி.க்கள் உள்ளதாக, தரவு காட்டுகிறது; பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை (உள்துறை குழு மாநிலங்களவையின் கீழ் வருகிறது) மற்ற மூன்று ஆகும்.

இந்த 'பெரிய 4' குழுக்களில் எஸ்சி / எஸ்டி எம்.பி.க்களின் உறுப்பினர் எண்ணிக்கை 15 மற்றும் 16 வது மக்களவைகளுடன் ஒப்பிடும்போது, 17 வது மக்களவையின் கீழ் அதிகமாக உள்ளதை தரவு காட்டுகிறது.


வரம்புக்குட்டப்பட்ட தாக்கம்

எஸ்சி / எஸ்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று மக்களவையில் சமூக நீதிக் குழுவில் 50% க்கும் அதிகமான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர் - 15 வது மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 67.7%; 16 வது மக்களவையில் மொத்த உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (50.5%); மற்றும் 17 வது மக்களவையில் 59.5% ஆகும்.

பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகளை ஆய்வு செய்யக்கூடிய பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நலன், கூட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கும் இது பொருந்தும். 17வது மக்களவையில் அதன் உறுப்பினர் 95% எஸ்சி / எஸ்டி எம்.பிக்கள். இது 16 ஆம் ஆண்டில் 100% மற்றும் 15 வது மக்களவையில் 98% ஆகும்.

ஒரு எம்.பி. ஒன்றுக்கு மேற்பட்ட நிலைக்குழுவில் உறுப்பினராக இருப்பது என்பது, கிட்டத்தட்ட ஒருபோதும் இல்லை என்று, பெயர் வெளியிட விரும்பாத மக்களவை செயலக அதிகாரி ஒருவர், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். எஸ்சி / எஸ்டி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் சமூக நீதிக்குழுவில் நியமிக்கப்பட்டால், இந்த எம்.பி.க்களுக்கு சமூக நீதி தொடர்பான விசயங்களைத் தவிர வேறு விஷயங்களில் ஆழமாக சிந்திக்க வாய்ப்பு கிடைக்காது என்று அந்த அதிகாரி கூறினார்.

மேலும், கடந்த பத்தாண்டுகளில் ஒரு சில எஸ்சி / எஸ்டி எம்.பி.க்கள் நிலைக்குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை, எங்கள் பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் 331D விதிப்படி, 16 குழுக்களுக்கான தலைவர் பதவிகளுக்கு எஸ்சி / எஸ்டி எம்.பி.க்கள் (மக்களவை சபாநாயகரால்) பரிசீலிக்கப்படலாம்.

ஒரு எஸ்சி / எஸ்டி எம்.பி. - அதாவது முன்னாள் பழங்குடியினர் விவகார அமைச்சர் ஜூவல் ஓரம் - 17 வது மக்களவையில் அமைக்கப்பட்ட 16 நிலைக்குழுக்களில் ஒன்றான பாதுகாப்புக் குழுவின் தலைவராக பணியாற்றுகிறார் என்று தரவு காட்டுகிறது. எஸ்.சி / எஸ்.டி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவை துறை சார்ந்த நிலைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் நிதிக் குழுத் தலைவர்களில் 7.3% (240 இல் 21) 2009 ஆம் ஆண்டு முதல் 2020 வரை இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.

தலைவர் அந்தக் குழுவின் நிகழ்ச்சி நிரலையும் வழிநடத்துதலையும் அமைத்துக்கொள்கிறார். தீர்மானிக்கும் வாக்குகளை அளிக்கவும், அறிக்கைகளில் உள்ள பிழைகளை சரிசெய்யவும், பாராளுமன்ற சொற்கள் அல்லது சொற்றொடர்களை அகற்றவும் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

ஒரு குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதில் உறுப்பினராக உள்ள அனுபவம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று வர்மா கூறினார். "ஒரு குழுவின் பணி மிகவும் தொழில்நுட்பமானது, மசோதாக்களை படிப்பது முதல், ஒரு குறிப்பிட்ட அமைச்சகத்திற்கான மானியக் கோரிக்கையை மறுஆய்வு செய்வது வரை, மற்றும் விவாதங்களில் தலைவர் முக்கிய பங்கு வகிக்கிறார்" என்றார் வர்மா.

அவை அனுபவம் இல்லாதது எஸ்சி / எஸ்டி எம்.பி.க்கள் குழுத்தலைவர் பதவிகளுக்கு மட்டுமல்லாமல், மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாக சேர்க்கப்படுவதற்கும் வழிவகுக்கும். தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி -2 அரசில், 54 அமைச்சர்களில் ஆறு பேர் மட்டுமே அதாவது 11% அமைச்சர்கள் - எஸ்சி / எஸ்டி எம்.பி ஆவர்.

எஸ்சி / எஸ்டி எம்.பி.க்களைப் பொறுத்தவரை, தலைமைப் பதவிகள் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் குறைவாகவே இருக்கிறது. இந்த சமூகங்களைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் தங்கள் அரசியல் கட்சிகளுக்குத் தலைமை தாங்குகிறார்கள். தற்போதைய 17 வது மக்களவையில் குறைந்தது மூன்று எம்.பி.க்களைக் கொண்ட 17 அரசியல் கட்சிகளில், ஒன்றில் மட்டுமே எஸ்சி / எஸ்டியை சேர்ந்தவர் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக இருப்பதாக தரவு காட்டுகிறது. 16 வது மக்களவையில் (2014-19), குறைந்தது 3 எம்.பி.க்களை கொண்ட 18 அரசியல் கட்சிகளில் இரண்டு கட்சிகள் மட்டுமே எஸ்சி / எஸ்டி எம்.பி.க்களை கட்சி நாடாளுமன்றத் தலைவராக கொண்டிருந்தன.

அனைத்து கட்சித் தலைவர்களும், சபாநாயகரும் அடங்கிய வணிக ஆலோசனைக் குழுவின் (பிஏசி) உறுப்பினருடன் வருவதால் கட்சியின் தலைவராக இருப்பது முக்கியம், இது பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலையும் கால அட்டவணையையும் அமைக்கிறது.

ஓசையில்லாத குரல்கள்

எஸ்சி / எஸ்டி எம்.பி.க்கள், அவர்களின் அரசியல் கட்சி தொடர்பைப் பொருட்படுத்தாமல், பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளனர். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்சி / எஸ்டி எம்.பி.க்கள், 15 வது மக்களவையில் (2009-14) ஆண்டுக்கு 10 முறை பேசியதாக, நாடாளுமன்ற செயல்பாட்டைக் கண்காணிக்கும் ஆராய்ச்சி அமைப்பான பி.ஆர்.எஸ் அவை ஆராய்ச்சி (பி.ஆர்.எஸ்) இன் தரவு பற்றிய எங்கள் பகுப்பாய்வு கூறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்) இன் எஸ்சி / எஸ்டி எம்.பி.க்கள் 16 வது மக்களவையில் (2014-19) ஆண்டுக்கு 44 முறை பேசினர். தற்போதைய 17 வது மக்களவைக்கான தரவு தற்போது வரை கிடைக்கவில்லை.


எஸ்சி / எஸ்டி எம்.பி.க்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்புவதற்கும், தங்கள் தொகுதிகளில் இருந்து பிரச்சினைகளை எழுப்புவதற்கும் விவாதங்களில் பங்கேற்றனர். 15 வது மக்களவையில் (2009-14) மக்களவை விவாதங்களில் அதிக அளவில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினராக பிகானேர் தொகுதியை சேர்ந்த எஸ்சி / எஸ்டி எம்.பி. அர்ஜுன் ராம் மேக்வால் என்று, பி.ஆர்.எஸ். தரவு தெரிவிக்கிறது. முதல் ஐந்து எம்.பி.க்களில் மற்ற நான்கு பேர் - ஷைலேந்திர குமார் (கவுஷாம்பி), பி.எல். புனியா (பாராபங்கி) மற்றும் வீரேந்திர குமார் (டிக்காம்கர்) - அதே காலகட்டத்தில் விவாதங்களில் பங்கேற்ற, தனித்தொகுதி எம்.பி.க்கள்.

கடந்த 16 வது மக்களவையில் (2014-2019), பிஆர்எஸ் தரவுகளின்படி, விவாதங்களில் பங்கேற்ற முதல் 10 எம்.பி.க்களில் இருவர் எஸ்சி / எஸ்டி சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இதேபோன்ற தகவல் 17 வது மக்களவைக்கு கிடைக்கவில்லை, ஏனெனில் அதன் பதவிக்காலம் இன்னும் நடப்பில் உள்ளது.

அவையில் கேள்விகளைக் கேட்பது ஒரு எம்.பி.யின் செல்வாக்கை உயர்த்தப் பயன்படுத்துவதற்கும், அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கும் மற்றொரு கருவியாகும். 15 வது மக்களவையில் (2009-14) நாடாளுமன்றத்தில் அதிக கேள்விகளைக் கேட்ட முதல் 10ல் இரு எம்.பி.க்கள் மற்றும் முதல் 30 எம்.பி.க்களில் ஏழு பேர் முறையே எஸ்.சி / எஸ்.டி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று, பி.ஆர்.எஸ் தரவுகள் கூறுகிறது. அவையில் அதிக எண்ணிக்கையிலான கேள்விகளை எழுப்பிய எம்.பி. - அகமதாபாத் மேற்கு பகுதியைச் சேர்ந்த கிரிட் சோலங்கி - தனித்தொகுதியின் பிரதிநிதி ஆவார். 16 வது மக்களவையில், அதிக கேள்வி எழுப்பிய முதல் 30 எம்.பி.க்களில் நான்கு பேர் எஸ்சி / எஸ்டி சமூகங்களைச் சேர்ந்தவர்கள். 17 வது மக்களவைக்கான ஆயுள் காலம் இருப்பதால், இந்த தகவல் தற்போது கிடைக்கவில்லை.

பாராளுமன்றத்தில் பேசுவது என்பது, சாதாரணமாக பேசுவதற்கு சமமானதல்ல. கட்சித்தாவல் தடை சட்டம் என்று நன்கு அறியப்பட்ட பத்தாவது அட்டவணையின்படி, எஸ்சி/எஸ்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காத்தார்கள்; தங்கள் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக வாக்களிப்பதையோ அல்லது கட்சியின் "உறுப்பினர்களை தானாக முன்வந்து விட்டுக்கொடுப்பதை" வெளிப்படையாக இந்த சட்டம் தடை செய்கிறது.

"தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே பாராளுமன்றத்திற்குள் அமைதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "தங்கள் சமூகத்திற்கு எதிரான அநீதிகளை முன்னிலைப்படுத்த அவர்களின் [எஸ்சி / எஸ்டி எம்.பி.க்களின்] வாய்ப்பு என்பது ஹத்ராஸ் போன்ற முன்னிலைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் போது அல்லது ஜீரோ ஹவர் போது, லாட்டரி அதிர்ஷ்டம் போல் எப்போதாவது வருகிறது. கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவிப்பவர், அரசியல் தனிமைக்கு ஆளாக நேரிடும்" என்றார் அவர்.

வாய்ப்புகள் குறைந்துவிட்டன

எஸ்சி / எஸ்டி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் - பேசுவது, விவாதங்களில் பங்கேற்பது அல்லது கேள்விகளை எழுப்புவது- என்பது, அதே தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட தங்கள் அரசியல் கட்சியிடம் இருந்து கிடைத்த வாய்ப்பைப் பாதிப்பதை சார்ந்துள்ளது. உதாரணமாக, 2019 பொதுத் தேர்தலில் போட்டியிட பாஜக, தங்களது எஸ்சி / எஸ்டி எம்.பி.க்களில் 53.7% பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை என்பது, தேர்தல் ஆணையத்தில் இருந்து கிடைக்கக்கூடிய தரவுகளை, இந்தியாஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது. 2014 பொதுத் தேர்தலில், பாஜக தங்களது எஸ்சி / எஸ்டி எம்.பி.க்களில் 28% பேருக்கும், காங்கிரஸ் 26% எஸ்.சி / எஸ்.டி எம்.பி.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு தர மறுத்துவிட்டன.


மீண்டும் போட்டியிடுவதற்கான இந்த மோசமான வாய்ப்பு அவர்களின் வாய்ப்புகளுக்கு தடையாக இருப்பதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக நீண்டகால பங்களிப்பையும் அளிக்கும் என்று மாதியத்தின் வர்மா கூறினார்.

(திருத்தியவர், மரிஷா கார்வா)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.