புதுடெல்லி: கிழக்கு டெல்லியில் ஆனந்த் விஹார் பகுதியை சேர்ந்த தெருவோர வியாபாரியான நரேஷ் உபாத்யாய், டிசம்பர் 2020 ல் கிழக்கு டெல்லி நகராட்சி கார்ப்பரேஷனில் இருந்து சிபாரிசு கடிதம் (LOR) வேண்டி விண்ணப்பித்தார். இந்த கடிதம், தெரு விற்பனையாளர்கள் தங்கள் தொழில்களை முறைப்படுத்த உதவவும் அரசு மைக்ரோ கடன் திட்டமான, பிரதமரின் SVANidhi திட்டத்தின் கீழ், ரூ 10,000 கடன் பெற உதவியது.

இந்தியாவில் லட்சக்கணக்கான தெருவோர வியாபாரிகளில் உபாத்யாயும் ஒருவர், அவர்களின் தொழில், பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. லாக்டவுன் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டபோது, அவர் தனது சிறு கடையை மூட வேண்டியிருந்தது, ஜனவரி 2021-ல் மீண்டும் திறக்கப்பட்டபோதும், அவர் விற்ற ஆடைகள் மற்றும் அணிகலன்களை வாங்க, கொஞ்சம் வாடிக்கையாளர்களே இருந்தனர்.

உபாத்யாயாவுக்கு சிபாரிசு கடிதம் வந்தபோது, ​​ அது பிழைகள் நிறைந்ததாக இருந்தது. அவர் ஒரு 'நிலையான' (நிரந்தர) விற்பனையாளர் என்று குறிப்பிட்டப்பட்டு இருந்தது மற்றும் அவர் கொடுத்திருந்த முகவரியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கடை இயங்குவதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால், சிபாரிசு கடிதத்தில், 'புதுடெல்லி மாநகர பகுதியில்' தனது 'நடமாடும்' வியாபாரி என்பதை காட்டுவதற்கு போராட வேண்டியிருந்தது.

பொய்யான தகவல் கொடுத்ததாக தன் மீது குற்றச்சாட்டு எழும் என்ற கவலையில், உபாத்யாய், அரசின் கடன் வாங்கும் தனது திட்டத்தை கைவிட்டார். பல சிறிய வியாபாரிகளும் இதுபோன்ற தவறான சிபாரிசு கடிதங்களுடன் பிரச்சனை எதிர்கொள்வதாக, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் கூறினார்.

உபாத்யாயின் அனுபவம், இரண்டு ஆண்டுகால பிரதமரின் Svanidhi திட்டத்தின் இரண்டாம் கட்டம்-- இதன் முதல் கட்டம், ஜூன் 2020 இல் தொடங்கப்பட்டது-- மோசமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, தெரு விற்பனையாளர்களின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவில், மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று, முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் குடியேற்றங்கள் தொடர்பாக பணிபுரியும் சிவில் சமுதாய அமைப்பான, உலகளாவிய சமூக சேவை சங்கம் (IGSSS) நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சி மற்றும் டி வகைகளில் விழும் தெரு விற்பனையாளர்கள் இந்த திட்டத்தின் சான்றிதழ்களைக் கொண்டிருக்கின்றனர் - அவர்கள் பொலிசார் அல்லது நகராட்சி அதிகாரிகளால் அச்சுறுத்தல் அல்லது இடப்பெயர்ச்சி அச்சுறுத்தல் இல்லாமல் செயல்பட அனுமதிக்கின்றனர்.

கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட விற்பனையாளர்களில் 75% வரை பாதிக்கப்படக்கூடிய சி மற்றும் டி வகையில் இருந்தனர் மற்றும் பதிலளித்தவர்களில் 11% பேர், ரூ 10,000 கடன் பெற்றனர். இந்த ஆய்வில், 10 மாநிலங்களில் 15 நகரங்களில் இருந்து 1,600 பேர் பதிலளித்தனர், இது, முறைசாரா துறையில் பணிபுரியும் ஒரு வாழ்வாதார நெருக்கடியை ஏற்படுத்திய, தொற்றுநோயின் இரண்டாவது எழுச்சிக்கு முன்னர் நடத்தியது.

சி மற்றும் டி பிரிவில், தெருவோர வியாபாரிகள், தினக்கூலிகளாக உள்ளனர். பல்வேறு நகரங்களில் சமூக-பொருளாதார சுயவிவரத்தை ஆய்வு செய்த முந்தைய ஆய்வுகள் பல்வேறு நகரங்களில் (பெண்கள் விற்பனையாளர்களிடம் பிரத்தியேகமாக கவனம் செலுத்தும் சில ஆய்வுகள்) பெரும்பாலான தெருவோர வியாபாரிகள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதை உணர்த்தியுள்ளன; அண்டை கிராமப்புற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் இருந்து வெளியேறும் குடியேற்ற தொழிலாளர்கள் ஆவர். அவர்களது அன்றாட பரிவர்த்தனைகள், பரபரப்பான சந்தைகள் மற்றும் நேருக்கு நேர் பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது, அவை ஊரடங்கில் அனுமதிக்கப்படவில்லை.

வியாபாரிகள் மத்தியில், திட்டம் குறித்து குறைந்த விழிப்புணர்வு, சிக்கலான ஆன்லைன் நடைமுறைகள், வங்கிகளில் தாமதங்கள் மற்றும் ஆவணங்களுக்கான நகர்ப்புற உள்ளூர் அமைப்புகளின் சார்பற்ற தன்மை - இந்த காரணிகள் கடன் திட்டத்தின் அடையை, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய தெருவோர வியாபாரிகளை எட்டுவதற்கு வியாபாரிகளுக்கு தடையாக உள்ளது என, உலகளாவிய சமூக சேவை சங்கம் (IGSSS) ஆய்வு முடிவுக்கு வந்தது.

இந்தியாவில், தெருவோர வியாபாரிகள் சுமார் 10 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது, இதில் நகர்ப்புற தொழிலாளர்கள் சுமார் 11% ஆகும், மேலும் அதன் நகரங்களின் வாழ்க்கையில் பல்வேறு பங்குகளை வகிக்கின்றனர். விபாயார பொருளாதாரம் ஒரு நாளைக்கு 80 கோடி ரூபாயாக உள்ளது, ஒவ்வொரு தெருவோர தொழில்முனைவோர் அல்லது வியாபாரி, தன்னை சுற்றி பங்குதாரர்கள் அல்லது தொழிலாளர்கள் என சராசரி மூன்று பேருக்கு பணி தருகிறார்.

நான்கில் ஒரு பங்கே உள்ளடக்கி இருக்கிறது

இந்தியாவில், மதிப்பிடப்பட்டுள்ள 10 மில்லியன் தெரு விற்பனையாளர்களில், SVANidhi திட்டம் பாதியளவு அதாவது, 5 மில்லியன் பேரை இலக்காக உள்ளது. பயனாளிகள் "வியாபாரிகள், தெலேவாலா, ரெஹ்ரிவாலா, தெலிபட்வாலா போன்ற பல்வேறு பகுதிகளில் மற்றும் சூழல்களில்" அறியப்படுவதாக, திட்டத்தின் வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் காய்கறிகள், பழங்கள், தெரு உணவு, தேநீர், பக்கோடாக்கள், ரொட்டி, முட்டை, ஆடை, காலணி, கைவினை பொருட்கள், புத்தகங்கள்/எழுதுபொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள், மேலும் "முடிதிருத்தும் கடைகள், கூழாங்கற்கள், பான்பீடா கடைகள், சலவைக்கடை" போன்ற சேவைகளை வழங்குகிறார்கள்.

இருப்பினும், ஐ.ஜி.எஸ்.எஸ்.எஸ். ஆய்வில் பதிலளித்தவர்களில் 62% பேர், கட்டாய தெருவோர வியாபாரிகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை, இது முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் டவுன் வெண்டிங் கமிட்டி (டிவிஎஸ்) ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்படுகிறது, இது தெரு விற்பனையாளர்கள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெரு விற்பனையை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்- 2014ன்படி, விற்பனையாளர்கள் (40%) மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை உள்ளடக்கியது. கடன் விண்ணப்பங்களுக்கு தேவையான அடையாள ஆவணங்களை விற்பனையாளர்களுக்கு வழங்க, இந்த ஆய்வு பயன்படுத்தப்படுகிறது.

பதிலளித்தவர்களில் 25% மட்டுமே சில வகையான அடையாளங்களை அதாவது வியாபாரி சான்றிதழ்கள்/விற்பனையாளர் அடையாள அட்டை/சர்வே ஸ்லிப் போன்றவற்றை கொண்டுள்ளனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், விற்பனையாளர்கள் தேசிய ஹாக்கர்ஸ் கூட்டமைப்பு மற்றும் ஷாஹீத் பகத் சிங் ஹாக்கர்ஸ் யூனியன், ஏக்தா ஹாக்கர்ஸ் யூனியன் போன்ற ஹாக்கர் யூனியன்களால் வழங்கப்பட்ட தற்காலிக சர்வே ஸ்லிப் அல்லது உறுப்பினர் அட்டைகளை வைத்திருந்தனர். ஆனால் நகராட்சி மற்றும் டிவிசி வழங்கிய சான்றிதழ்கள் அவர்களிடம் இல்லை.

கிட்டத்தட்ட 40% பதிலளித்தவர்களுக்கு, கடன் திட்டம் பற்றி தெரியாது. மொத்த விற்பனையாளர்களில் 51% பேர், திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்கவில்லை. கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமை, கடனுக்கு எப்படி அல்லது எங்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அதன் தகுதி நிலைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் விண்ணப்ப செயல்முறைக்கு எந்த உதவியும் கிடைக்காதது போன்றவையே இதர்கு காரணங்கள்.

இந்த கண்டுபிடிப்புகள் பெரிய நகரங்கள், மாநில தலைநகரங்கள் (என்ஜிஓக்கள் கணிசமான அளவில் இருப்பது), சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஹாக்கர் யூனியன்கள் இவை போன்ற திட்டங்களைப் பெற தெரு விற்பனையாளர்களுக்கு வழிகாட்டவும், ஒழுங்கமைக்கவும் மற்றும் உதவவும் உள்ளன. சிறிய நகரங்கள் மற்றும் டவுன்களில் உள்ள விற்பனையாளர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

வங்கிகள் தயங்குகின்றன

SSVANidhi கடன் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட 85% பேர் தங்கள் உள்ளூர் நகராட்சி அமைப்புகளிடம் இருந்து சிபாரிசு கடிதம் இல்லை, இக்கடிதம் கடன் விண்ணப்பத்திற்கு முக்கியமானதாகும் என்று கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

2.4 மில்லியனுக்கும் அதிகமான கடன்கள் (5 மில்லியன் இலக்குகளில் கிட்டத்தட்ட 50%) வழங்கப்பட்டுள்ளன என்று திட்ட வலைத்தளத்தின் தரவு கூறுகிறது, ஆனால் பாதிக்கப்படக்கூடிய வியாபாரிகளுக்கு கடன்களை வழங்க வங்கிகள் தயங்குகின்றன. தனிப்பட்ட கணக்கெடுப்பாளர்களால் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின்படி, பெரும்பாலான வியாபாரிகள் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.

உதாரணமாக, சிபாரிசு கடிதங்களுடன் சில தெருவோர வியாபாரிகள், SVANidhi திட்டத்தின் தகுதி வழிகாட்டுதலின் கீழ், தேவையில்லாத ஆவணங்களை வழங்குமாறு வங்கிகளால் கூறப்பட்டனர் - உதாரணமாக, கணவர்களின் அடையாள அட்டைகள் (பெண்களின் விஷயத்தில்), உறவினர்களுக்கான முகவரி சான்று, கிராம முகவரிகள் மற்றும் பலவற்றை கணக்கெடுப்பாளர்கள் கண்டறிந்தனர். இந்த கோரிக்கை மனுக்கள், பல விண்ணப்பதாரர்களை வங்கிகளால் திருப்பி அனுப்பப்பட்டன.

உதய்பூரில், 60 விற்பனையாளர்கள் குழு, நகராட்சி நிறுவனம் சிபாரிசு கடிதங்களை வழங்குவதற்கு முன்பே வெளியேற்றப்பட்டது என்று ஐ.ஜி.எஸ்.எஸ்.எஸ் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் மாநகராட்சி அல்லது வங்கிகளை அணுகுவதற்கு முன்பு அவர்களின் பெயர்கள், டிவிசி கணக்கெடுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட பானங்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஷிவ் கூறுகையில், "எங்கள் பொருட்களை விற்கக்கூட இடம் இல்லாத போது எங்களுக்கு கடன் தேவையில்லை" என்றார்.

அமைப்பு மாற்றங்கள் தேவை

வியாபாரிகள், தங்கள் திருப்பிச் செலுத்தும் கால தவணைகளில் பற்றிக் கொள்வது மற்றும் பணம் செலுத்துவதில் தாமதமானால் நினைவூட்டல்களுக்கு பதிலளிப்பது, SVANidhi திட்ட கடன்களை எளிதாக்க தெரு வியாபாரிகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைக்கும் என்று, அத்யாதி டெக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி விநாயக் ஜெயின் கூறினார். "இது பொதுவாக அரசாங்க ஆதரவு கடன் திட்டங்களைப் பெறுபவர்களிடையே காணப்படாத ஒன்று" என்றார்.

வியாபாரிகள் திருப்பிச் செலுத்த நெருக்கடி தரப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் முதல்முறையாக குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் முறையான வங்கி முறைக்குள் நுழைந்துள்ளனர் என்று ஜெயின் கூறினார். பெரும்பாலான வியாபாரிகள் தனியார் நிறுவனங்களிடம் அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க முனைகின்றனர்.

கடன் திட்டத்தின் இரண்டாவது கட்டத் தொகை, வியாபாரிக்கு ஆகஸ்ட் 2021 முதல் கிடைக்கும் (முதல் கட்டத்தொகை வழங்கப்பட்ட ஒரு வருடம் கழித்து), திட்டத்தின் படி, அவர்கள் முதல் கட்டத் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் அவர்களுக்கு அதிக நிதி கிடைக்கும். இருப்பினும், 2021 இல் தொற்றுநோயின் இரண்டாவது அலை முறைசாரா துறை தொழிலாளர்களின் வளங்களை மேலும் குறைத்துவிட்டது, பல வியாபாரிகள் இரண்டாவது கட்ட கடன் தொகையை பெற தகுதியற்றவர்களாக உள்ளனர். இதனால்தான், ஹாக்கர் தொழிற்சங்கத் தலைவர்கள் இத்திட்டம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் குறுகிய கால நெருக்கடி நடவடிக்கையாக முடிவுக்கு வரக்கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

வலுவான கடன் வசூலிக்கும் முறையை ஏற்படுத்தினால், கடன் திட்டம் நிரந்தரமாக இருக்கும் என்று, அத்யாதி டெக் (Atyati Tech) அமைப்பின் நிதி அதிகாரிகள் கூறினர். இதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள், சங்கங்கள் வங்கிகளுடன் இணைப்பு நடைமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். "நீங்கள் ஒரு வங்கிக்குச் சென்று உங்கள் நிலுவைத் தொகையை செலுத்த விரும்புவதில்லை, குறிப்பாக நீங்கள் ஒரு தெருவோர வியாபாரியாக இருந்தால், வங்கியில் அனுபவம் இல்லாதவர்கள். வியாபாரிகள் குழு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வங்கிகளுக்கான வசூல் முகவர்களாக பணியாற்ற வேண்டும் மற்றும் வியாபாரிகள் செலுத்தக்கூடிய தொகையை, சிறிய அளவில் வாராந்தோறும் அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வசூலிக்க வேண்டும்," என்று ஜெயின் கூறினார். அதே யோசனை, தேசிய ஹாக்கர் கூட்டமைப்பால், 2020 இல் திட்டம் தொடங்கப்பட்டபோது முன்மொழியப்பட்டது, ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை.

ரொக்க நிவாரணம்

தொற்றின் இரண்டாவது அலையில், கர்நாடகா, உத்தரபிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற ஒரு சில மாநில அரசுகள், தெருவோர வியாபாரிகளுக்கு ரொக்க நிவாரணத்தை அறிவித்தன-தற்போதைய நெருக்கடியை சமாளிக்க அவர்களுக்கு 1,000-2,000 ரூபாய் தொகையை ஒருமுறை ரொக்கப் பரிமாற்றமாக தரப்பட்டது. இருப்பினும், இந்த நிவாரண நடவடிக்கைகள், SVANidhi திட்டத்தின் பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் (ULB) கணக்கெடுக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மட்டுமே கிடைத்தன.

கணக்கெடுப்பின்படி, தெருவோர வியாபாரிகளுக்கு மாநில மற்றும் உள்ளூர் நிர்வாகங்களால் தேவையற்ற கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. முதல் ஊரடங்கிற்கு பிறகு, பெரும்பாலான உணவு, ஆடை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரத்தை மீண்டும் தொடங்க முடியவில்லை. 2021 ஜனவரியில் பூட்டுதலுக்கு முந்தைய நிலைக்கு திரும்பியவர்களுக்கு, இரண்டாவது அலை பேரழிவை தந்தது. வரவிருக்கும் மூன்றாவது அலை அச்சுறுத்தலுடன், எதிர்காலமும் இருண்டதாகத் தெரிவதாக, அறிக்கை கூறுகிறது.

SVANidhi திட்டம் அறிவிக்கப்பட்டதும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெருவோர வியாபாரிகளை 'அத்தியாவசிய சேவை வழங்குபவர்கள்' என்று அறிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 65% வரை தொந்தரவு அல்லது வெளியேற்றத்தை அவர்கள் எதிர்கொண்டதாக, கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

முன்னோக்கிய பாதை

தேசிய ஹாக்கர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் சக்திமான் கோஷ் மற்றும் தெருவோர வியாபாரிகளின் பிரச்சினைகளை நன்கு அறிந்த மூத்தவர் ஒருவரின் ஆலோசனைகள் இங்கே:

பிரதமர் SVANidhi திட்டம் நிரந்தரமாக இருக்க வேண்டும்: இது ஒரு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான, ஒரு குறுகிய கால நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் 'அதி-நுண் தொழில்கள்' (தெருவோய வியாபாரிகள்) ஒரு நிரந்தர மேம்பாட்டுத் திட்டமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இது அவர்களுக்கு நிரந்தர அடிப்படையில் கடன் பெற அனுமதிக்கும்.

அனைத்து விற்பனையாளர்களுக்கும் சிபாரிசு கடிதம் வழங்குதல்: வியாபாரிகளில் சி மற்றும் டி பிரிவினர், இந்த திட்டத்தில் இருந்து விடுபட்டுள்ளன, இவர்கள், கணக்கெடுப்புக்கு குறைவாக உள்ளவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து விற்பனை சான்றிதழ் இல்லாதவர்கள் மற்றும் ஒரு சிபாரிசு கடிதம் தேவை. இந்த கணக்கெடுப்புகள் மற்றும் தங்களை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நகராட்சி நிறுவனங்களை, வியாபாரிகள் முழுமையாக நம்பியுள்ளனர். இந்த திட்டத்தின் தொடக்க ஆண்டில் உள்ளூர் அரசுகள் தடையாக இருப்பதை கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.

அனைத்து இந்திய விற்பனையாளர் பிரதிநிதிகளையும் கண்காணிப்புக் குழுக்களில் சேர்த்தல்: SVANidhi திட்ட வழிகாட்டுதலின் பிரிவு-19 (அதன் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு மத்திய, மாநில மற்றும் உள்ளூர் கண்காணிப்புக் குழுக்களை நிறுவுதல்) வியாபாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். அவர்கள் திட்டத்தின் கருத்தாக்கத்தில் ஈடுபட்டனர், எனவே அதை செயல்படுத்துவதிலும் சேர்க்கப்பட வேண்டும்.

தெரு வியாபாரிகள் சட்டத்தின்படி உள்ளூர் நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்: பொது இடங்களில் தெரு வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இயற்றப்பட்ட தெரு வியாபாரிகள் சட்டம்-2014 க்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த சட்டம், தெரு விற்பனையாளரை "தினசரி உபயோகிக்கும் பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபடும் அல்லது பொது மக்களுக்கு, எந்தவொரு பொது இடத்திலும் அல்லது தனியார் பகுதியிலும், தற்காலிகமாக கட்டப்பட்ட கட்டமைப்பில் இருந்து அல்லது இடம் விட்டு இடம் நகர்த்துவதன் மூலம் சேவைகளை வழங்கும் நபர்" என்று வரையறுக்கிறது. அரசால் அடையாளம் காணப்பட்ட அனைத்து தெரு விற்பனையாளர்களும், விதிமுறைகளுக்கு உட்பட்டு விற்பனை மண்டலங்களில் தங்க வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பல்வேறு மாவட்டங்களில் TVC களை உருவாக்க, இந்தச் சட்டம் திட்டமிட்டுள்ளது. பரவலான வெளியேற்றங்கள் மற்றும் வியாபாரிகளை துன்புறுத்துவதைத் தவிர்க்க, இந்தத் திட்டம், விற்பனை மண்டலங்களை அறிவித்தல், மாநில விதிகளை உருவாக்குதல், திட்டங்கள் மற்றும் துணை சட்டங்கள் போன்ற தொடர்புடைய நடைமுறைகளுடன் இந்தச் சட்டத்தின் சூழலில் கையாளப்பட வேண்டும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.