பாலின பாகுபாட்டைக் குறைப்பதற்கான கொள்கைகள் எவ்வாறு எதிர் விளைவை ஏற்படுத்தும்
அனைத்து பெண் காவல் நிலையங்களும் பெண்கள் புகார் செய்வதை கடினமாக்கியுள்ளது; இது, பாரம்பரிய உரிமைகள் உள்ள பெண்கள் மத்தியில் அதிக குழந்தை இறப்புக்கு வழிவகுத்தன; மற்றும் கருவில் பாலினம் தேர்ந்தெடுத்து கருக்கலைப்பு மீதான தடை உள்ளிட்டவை, சிறுமிகளின் உயர்நிலைப் பள்ளி நிறைவு மற்றும் பல்கலைக்கழக சேர்க்கை ஆகியவற்றைக் குறைத்துள்ளன, அதே நேரத்தில் பாதுகாப்பான கருக்கலைப்புக்கான அணுகலையும் குறைப்பதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜெய்ப்பூர்: பாலின பாகுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள், அவர்கள் அதிகாரமளிக்க முற்படும் மக்கள் - பெண்கள் - கலாச்சார விதிமுறைகளை கவனத்தில் கொள்ளாவிட்டால், எதிர்பாராத எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பாலினக் கொள்கைகளை சிறப்பாகத் திட்டமிடுவதற்கும் சமூகத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கும் அழைப்பு விடுப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்வோருக்கான நிதி ஊக்கத்தொகை, மகன் என்ற வாய்ப்பை தேர்வு பெற்றோர்கள் செய்யும் நிகழ்தகவை அதிகரித்தது; அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் பெண்கள் தொடர்பான குற்றங்களை புகாரளிப்பதை எளிதாக்குவதற்கு பதிலாக, அதை கடினமாக்கியுள்ளன; பெண்களுக்கான பரம்பரை உரிமைகள் அதிக குழந்தை இறப்புக்கு வழிவகுத்தன; மற்றும் கருவில் பாலினம் தேர்வு செய்து கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதன் விளைவாக பெண்களின் உயர்நிலைப் பள்ளி நிறைவு மற்றும் பல்கலைக்கழக சேர்க்கை குறைந்துள்ளது, அதே நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு செய்வதற்கான அணுகலைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீங்கள் நிலைமையை மாற்ற முயற்சிக்கும்போது, ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து "பின்னடைவு" காண்பதாக, இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் (PFI) நிர்வாக இயக்குனர் பூனம் முத்ரேஜா கூறினார், பாலினக் கொள்கைகள் ஏன் திட்டமிடப்படாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் அவர் விளக்குகிறது.
"இது [ஒரு கொள்கை] கவனமாக வடிவமைக்கப்படவில்லை என்றாலோ, அல்லது அது கவனமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலோ கூட, செயல்படுத்தல் மோசமாக இருந்தால், அரசியல் அர்ப்பணிப்பு இல்லை என்றால், அது தோல்வியடையக்கூடும்" என்று அவர் கூறினார். "பாலின பிரச்சினைகள் [நடவடிக்கை] இரண்டு படிகள் முன்னோக்கி மற்றும் ஒன்றரை படிகள் பின்தங்கிய நிலையில் இருப்பதைப் போன்றது. பின்னர் அந்த அரை-படி ஆதாயத்தைத் தக்கவைக்க நேரத்தைச் செலவிடுகிறோம்" என்றார்.
கொள்கைகளை வடிவமைக்கும்போது திட்டமிடப்படாத விளைவுகளை முயற்சிப்பது மற்றும் எதிர்பார்ப்பது முக்கியம், மேலும் செயல்பாட்டின் கீழ் உள்ள திட்டங்களை மதிப்பீடு செய்வது, குறிப்பாக பாலின கொள்கைகளுக்கு ஆழமாக வேரூன்றிய கலாச்சார விதிமுறைகளை மாற்ற முயற்சிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பாலினக் கொள்கைகள் ஏன் திட்டமிடப்படாத தாக்கங்களை ஏற்படுத்தும்
பெண்கள் மத்தியில் பாலின சார்பு இந்தியாவில் ஆழமாக இயங்குகிறது; 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கும் இடையில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள்தொகையில் 1.72% பெண்களுக்கு எதிரான பாலின சார்பு இல்லை, 2005-2009 ஆம் ஆண்டில் பாலின சார்பு இல்லாத மக்கள் தொகையில் 8.6% ஆக இருந்தது என்று, ஐக்கிய நாடுகளின் பாலின சமூகநெறி குறியீடு கண்டறிந்துள்ளது. வெறும் 3% பெண்களுக்கு பாலின சார்பு இல்லை என்று கணக்கெடுப்பு அறிந்துள்ளது.
இது இந்தியாவின் வளைந்த பாலின விகிதத்தில் வெளிப்படுகிறது; 1,000 சிறுவர்களுக்கு 896 பெண்கள் பிறக்கிறார்கள் - 2015-17 ஆம் ஆண்டு மாதிரி பதிவு முறையில் இருந்து தரவு காட்டுகிறது. 2014-16 ஆம் ஆண்டில், ஒவ்வொரு 1,000 சிறுவர்களுக்கும் 898 பெண்கள் பிறந்தனர்.
பெண்கள் மற்றும் சிறுமியர் மற்றும் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியோருக்கு சமமான சிகிச்சையை அமல்படுத்த முற்படும் திட்டங்கள் மற்றும் கொள்கைகள், இந்த நில யதார்த்தத்தை அறியாமல், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை வேறு வழிகளில் தவிர்த்துவிடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
உதாரணமாக, ஒரு கருவின் பாலினத்தை தீர்மானிக்க அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்திற்கான அணுகல் இந்தியாவின் பாலின விகிதத்தைத் திசைதிருப்பியது, ஏனெனில் பெற்றோர்கள் மகன்களை பெறுவதையும் சிறுமியரை கருக்கலைப்பதையும் தேர்வு செய்வார்கள். 1996 ஆம் ஆண்டில் மத்திய அரசு பாலியல்-கருக்கலைப்பை தடை செய்தபோது, பெற்றோர்கள் பிற்கால வாழ்க்கையில் சிறுமியருக்கு பாகுபாடு காட்டிதாக, ஆராய்ச்சியாளர் கரிமா ரஸ்தோகி மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் அனிஷா சர்மா ஆகியோரால் 2020 செப்டம்பர் கட்டுரையில் தெரியவந்தது. இந்தத்தடை பாலின விகிதத்தை மேம்படுத்தி இருந்தாலும், பேர் X வகுப்பு, XIIம் வகுப்பை முடித்து பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் பிறப்பு -- 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசப் பகுதிகளில் -- 2.3, 3.5 மற்றும் 3.2 சதவிகிதம் குறைவு என்று கட்டுரை ஆசிரியர்கள் எழுதினார்.
"நாம் பெரும்பாலும் ஒருவகையான பாகுபாட்டை இன்னொருவருக்கு மாற்றிக்கொள்வோம்" என்று ஷர்மா, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "மகனுக்குத்தான் முன்னுரிமை என்பது நம் மக்களிடம் மிக ஆழமாகப் பதிந்திருப்பதால், இதற்கு முந்தைய பிறந்த பாகுபாடு, பிறப்புக்கு முந்தைய பாகுபாடுகளுக்கு மாற்றப்படுகிறது" என்றார்.
பாலியல் தேர்வு கருக்கலைப்புக்கான தடை அதிக வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சர்மா கூறினார். "இந்த வீடுகளில் தடையைத் தவிர்த்து, தொடர்ந்து பாலியல் தேர்வு செய்ய முடிகிறது, அவர்களுக்கு மகள்கள் இருக்கும்போது, அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதில்லை" என்றார்.
இந்த பாகுபாடு நனவாக இருக்காது. நான்கு மாநிலங்களில் --ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா -- மகன்கள் மற்றும் மகள்களுக்கு சமமான பரம்பரை உரிமைகளின் தாக்கத்தை ஆராய்ந்த ஒரு மாதிரி பகுப்பாய்வு குறித்த கட்டுரை, சட்ட சீர்திருத்தம் பெண்களின் சுயாட்சி, கல்வி நிலை மற்றும் திருமண வயதை அதிகரித்தது, இது அந்த மாநிலங்களில் பெண் குழந்தை இறப்பையும் அதிகரித்தது.
"பெற்றோர்கள் உணர்வுபூர்வமாக தங்கள் பெண் குழந்தையை கொல்ல முயற்சிப்பதால் [பரம்பரைச் சட்டத்தின் காரணமாக] பெண் குழந்தை இறப்பு அதிகரிப்பு ஏற்படுகிறது என்பதை இது குறிக்கவில்லை. மாறாக, ஊட்டச்சத்து அல்லது சுகாதார சேவைகளில் ஒரு நுட்பமான வீழ்ச்சியின் விளைவாக இருக்கலாம், இது ஒரு குழந்தை இறக்கும் நிகழ்தகவை சற்று உயர்த்துகிறது, "என்று கனடாவின் டல்ஹெளசி பல்கலைக்கழகத்தின் எழுத்தாளரும் மேம்பாட்டு பொருளாதார வல்லுனருமான டேனியல் ரோசன்ப்ளம், 2014 ஆய்வறிக்கையில் எழுதினார்.
இந்தியாவில், மகன்கள் பெற்றோருடன் வாழ முனைகிறார்கள், மேலும் வயதான காலத்தில் அவர்களை கவனித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பெற்றோர்கள் மகன்களது மண்ணில் வாழ விரும்புவார்கள். மகளின் கணவர் திருமணத்திற்குப் பின் தங்கள் நிலத்தை கட்டுப்படுத்துவார் என்றும் மகள் நிலத்தில் இருந்து பயனடையக்கூடாது என்றும் அவர்கள் அஞ்சலாம். எனவே, மகள்கள் மற்றும் மகன்கள் இருவருக்கும் சமமான பரம்பரை சொத்து கொடுக்க அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டால், அவர்கள் சிறுமியரை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள் என்பதைப் பாதிக்கலாம்.
இதேபோல், பாலின தேர்வு செய்து கருக்கலைப்பு செய்யத்தடை விதிக்கப்படுவது, முறையான கருக்கலைப்புகளை நடத்துவதில டாக்டர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கும், பெண்களை பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு தள்ளுவதற்கும் வழிவகுத்தது.
கொள்கை வடிவமைப்பு முக்கியமானது
குறைபாடுள்ள கொள்கை வடிவமைப்பும், எதிர்பாராத விளைவுகளுக்கு பங்களிக்கும். வட மாநிலமான ஹரியானா, காவல் நிலையங்களை அணுகவும், வழக்கு பதிவு செய்ய ஏதுவாக பெண்கள் பணியாற்றும் மகளிர் காவல் நிலையங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அனைத்து மகளிர் காவல் நிலையங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தீர்க்கப்பட்ட வழக்குகளின் விகிதத்தில், அதிகரிப்புக்கு வழிவகுக்கவில்லை அல்லது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அறிக்கையை அதிகரிக்கவில்லை என்று, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் நிர்விகர் ஜாசலின் 2020 ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறிந்தார்.
வழக்கமான காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க செல்லும் பெண்கள், மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர், இது வழக்குகளை பதிவு செய்வதில் சிரமத்தை அதிகரித்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பாலின வன்முறை வழக்குகளில் அனைத்து காவல் நிலையங்களிலும் முப்பது சதவீத பாலினம் சார்ந்த வழக்குகள் காவல்துறையினரால் "ரத்து செய்யப்படுகிறது" என்று ஜசால் எழுதினார். வழக்குகள் வழக்கமாக "ரத்து செய்யப்படுகின்றன". ஏனெனில் பாதிக்கப்பட்டவர் பொய் சொல்கிறார் என்று அதிகாரிகள் நம்புவது அல்லது பெரும்பாலும் குடும்பம் அல்லது சமூகத்தின் அழுத்தத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் வழக்கை வாபஸ் பெறுவதாக, ஆய்வின் ஆசிரியர் எழுதினார்.
அதே நேரத்தில், சிறப்பு காவல் நிலையங்களில் உள்ள காவல்துறையினர் வழக்கமான காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டிருப்பதை விட, இங்கு பலவிதமான விசாரணைப் பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
"கூட்டுச் சூழலில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் காவல்துறையினரை பாலின சார்புடையவர்களாக உணர்த்துகிறார்கள், ஆனால் காவல்துறையினர் உடல் ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பிரிக்கப்பட்டால், ஆணாதிக்க விதிமுறைகள் மாறாமல் இருக்கலாம்" என்று, ஆய்வின் ஆசிரியர் அறிக்கையில் எழுதினார். மறுபுறம், அரசியல் பதவிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற உள்ளடக்கிய கொள்கைகள், பெண்களைப் பிரிக்கும் கொள்கைகளை விட பாலின தடைகளை உடைப்பதில் சிறப்பாக செயல்படுகின்றன என்று ஜசால் பரிந்துரைத்தார்.
குறைபாடுள்ள கொள்கை வடிவமைப்பின் மற்றொரு எடுத்துக்காட்டு ஹரியானாவின் தேவி ரூபக் திட்டம், இது கருவுறுதலைக் குறைக்கவும் (சிறிய குடும்பங்களை ஊக்குவிக்கவும்) மற்றும் பாலின விகிதத்தை மேம்படுத்தவும் (பெண் குழந்தை பெற மக்களை ஊக்குவிக்கிறது). இந்த திட்டம், தம்பதிகளுக்கு ஆண் அல்லது பெண் கருத்தடை செய்ய விரும்பினால், அவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையை வழங்குகிறது. ஊக்கத்தொகை கருத்தடை நேரத்தில் தம்பதியினரின் எண்ணிக்கை மற்றும் பாலினத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. தம்பதியருக்கு ஒரு குழந்தை இருந்தால், அவர்களுக்கு ஒரு மகளுக்கு மாதத்திற்கு ரூ.500 மற்றும் ஒரு மகன் எனில் மாதத்திற்கு ரூ .200 கொடுக்கிறது. தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருந்தால், அவர்களும் மாதம் ரூ. 200 பெறுகிறார்கள்.
ஹரியானாவில், ஆண் குழந்தைகள் மீதான வலுவான விருப்பம் இருப்பதால், இந்த திட்டத்தின் வடிவமைப்பு தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை ஊக்குவித்தது, மற்றும் தம்பதியினருக்கு ஒரேயொரு பையன், 5 முதல் 11% வரை இருப்பதற்கான நிகழ்தகவை அதிகரித்துள்ளது என, உலக வங்கியின் பொருளாதார வல்லுநரான எஸ்.அனுக்ரிதி மேற்கொண்ட 2018 ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரே ஒரு மகன் பெறுவதற்கான ஊக்கத்தை நீக்குவது, முதல் பிறப்பிலேயே பாலியல் தேர்வுகளின் இந்த எதிர்பாராத தாக்கத்தை குறைக்கும் என்று அவர் பரிந்துரைத்தார். "பொதுவாக, தேவி ரூபக் போன்ற திட்டங்களின் கட்டமைப்பானது திட்டமிடப்படாத விளைவுகளை தவிர்க்க கவனமாக வடிவமைக்கப்பட வேண்டும்" என்று ஜூன் 2018 கட்டுரையில் அவர் எழுதினார்.
நடத்தை மாற்றம்
இந்த திட்டமிடப்படாத தாக்கங்கள் "ஆண் குழந்தை விருப்பம் மற்றும் ஆணாதிக்கம் போன்ற அடிப்படை விதிமுறைகளை சட்ட மாற்றங்கள் பாதிக்கிறதா?" என்று, அசோகா பல்கலைக்கழகத்தின் சர்மா கேள்வி எழுப்பினார்.
"ஒரு கொள்கை அல்லது ஒரு திட்டம் உருவாக்கப்படும்போது, பெண்களின் பாதிப்பு மற்றும் வறுமையின் பாலின இயல்பு, பெண்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட கட்டமைப்பு தடைகள், சமூக விதிமுறைகள் மற்றும் பாலின உறவுகள் ஆகியவற்றின் அங்கீகாரமும் இருக்க வேண்டும்" என்று முத்ரேஜா கூறினார்.
உதாரணமாக, 1994 ஆம் ஆண்டில் ஹரியானாவில் தொடங்கிய அப்னி பேட்டி அப்னா தன் (எங்கள் மகள்கள், எங்கள் செல்வம், இது பின்னர் ஆப்கி பேட்டி ஹமாரி பேட்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது) திட்டம், தம்பதிகளுக்கு ரூ.500 ரொக்கப் பரிமாற்றத்தை வழங்குவதன் மூலம் "பாலின மாற்றத்தை" ஏற்படுத்த முயன்றது. ஒரு பெண் குழந்தை பிறந்தால், சிறுமிக்கு 18 வயதாகி திருமணமாகாதபோது, ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கும்.
பெண்கள் மீதான சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் இத்தகைய திட்டத்தின் மதிப்பீட்டில், சிறுமி 18 வயதை எட்டியபோது பணப்பரிமாற்றம் "ஒரு பெண்ணின் திருமணத்தின் சுமையை" போக்கும் பணமாகக் காணப்பட்டது, பெரும்பாலான பணம் பயன்படுத்தப்பட்டு அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது திருமண செலவுகளுக்கு ஆகும். இந்த திட்டம் எட்டாம் வகுப்பு வரை ஒரு பெண் கல்வி கற்பதற்கான நிகழ்தகவை அதிகரித்தது, ஆனால் இது "சிறுமிகள் ஒரு சுமை மற்றும் வரதட்சணை என்பது அவரது திருமண வீட்டிற்கு இந்த சுமையை அங்கீகரிப்பதில் இன்றியமையாத அம்சமாகும்" என்று பாலின கட்டமைப்பை வலுப்படுத்தியது.
அப்னி பேட்டி அப்னா தன் திட்டம் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான பொருளாதார அம்சத்தைப் பார்த்தது, வரதட்சணை மீண்டும் உறுதிப்படுத்த வழிவகுத்தது, முத்ரேஜா விளக்கினார். அத்தகைய "ஒரு பகுதியில் குறுகிய அல்லது விகிதாசார கவனம்" பெரும்பாலும் திட்டமிடப்படாத விளைவுகளுக்கு வழிவகுக்கும். "நாங்கள் எப்போது சமூக விதிமுறைகளை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்பது பற்றி பணிபுரியாத போதுதான் இதுதான் நடக்கும்".
மற்ற ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யை சேர்ந்த, நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையத்தில், தாய்வழி உடல்நலம் மற்றும் குழந்தை பருவ தலையீடுகள் குறித்து கவனம் செலுத்தும் அரிந்தம் நந்தி, "எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இல்லை" என்று விளக்கினார், மேலும், சமூக-பொருளாதார கொள்கைகள் ஒன்றாக பிரச்சினைகளை குறிவைக்க பயன்படுத்தப்படலாம் என்று விளக்கினார்.
ஆழமாக பதிந்துவிட்ட பாலின விதிமுறைகளை மாற்ற ஊடக ஆலோசனை மற்றும் பொழுதுபோக்கு கல்வி, பிற திட்டங்களுடன் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதற்கான உதாரணத்தை முத்ரேஜா தருகிறார். மெயின் குச் பி கார் சக்தி ஹன் (என்னால் எதையும் செய்ய முடியும்) என்று அழைக்கப்படும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, நகரத்தில் இருந்து தனது கிராமத்திற்குத் திரும்பும் ஒரு மருத்துவரது கதை வாயிலாக பாலின விதிமுறைகளை மாற்ற முயற்சித்தது. இந்த திட்டம் பார்வையாளர்கள் மத்தியில் ஆணுறைகளை ஏற்றுக்கொள்வதையும், இளைஞர்களுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார ஆலோசனையை வழங்குவதையும் அதிகரித்தது என்று, PFI இன் மதிப்பீடு கண்டறியப்பட்டது.
பிற வெற்றிகளில் இருந்து படிப்பினை
கொள்கைகளின் நீண்டகால மற்றும் திட்டமிடப்படாத விளைவுகளை சிந்திக்க ஒரு வழி, கல்வியாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையிலான இடைவெளியை தடுப்பதாகும், அவர்கள் ஏற்கனவே இருக்கும் ஆராய்ச்சியைப் படித்து, எதிர்பாராத தாக்கங்களை - நேர்மறை மற்றும் எதிர்மறையை எதிர்பார்க்கலாம் என்று, கனடாவில் உள்ள ஹாலிஃபாக்ஸை தளமாகக் கொண்ட டல்ஹெளசி பல்கலைக்கழகத்தின் ரோசன்ப்ளம் பரிந்துரைத்தார்
இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இந்தியாவுக்கு மட்டும் தனித்துவமானவை அல்ல என்பதை நந்தி சுட்டிக்காட்டினார். "கொள்கைகளின் திட்டமிடப்படாத நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்கள் குறித்து பணக்கார தரவுத்தளங்கள் மற்றும் சூழல்கள் உள்ளன [புதிய கொள்கைகளை உருவாக்கும் போது இந்தியா குறிப்பிட வேண்டும்]," என்று அவர் கூறினார். மெக்ஸிகோ மற்றும் பிரேசிலில் நிபந்தனைக்குட்பட்ட பணப் பரிமாற்றங்களின் எடுத்துக்காட்டுகளை அவர் மேற்கோள் காட்டினார்.
இந்த பணப் பரிமாற்றங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதார விளைவுகளை மேம்படுத்தினாலும், அவை வீடுகளுக்குள் அல்லது வீட்டிற்கு வெளியே பணிபுரியும் பெண்கள் மீது அவர்களின் சுயாட்சிக்கு மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தையே ஏற்படுத்தின. பெண்களுக்கு பணப் பரிமாற்றம் வழங்கப்பட்டதோடு, குழந்தையின் பள்ளி வருகை அல்லது மருத்துவ பரிசோதனைகள் போன்ற சில நிபந்தனைகளுடன் அவை இணைக்கப்பட்டதால், இந்த நடவடிக்கைகள் தாயுடன் இணைக்கப்பட்டன, மேலும் "தந்தையர் / கணவர்கள் திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஓரளவுதான், இது குழந்தைகளின் பராமரிப்பில் இருந்து ஓரங்கட்டப்படுவதற்கு சமம்" என்று சமூகவியலாளர் மாக்சின் மோலிநியூக்ஸ், எழுதினார்.
மகள்களை பள்ளிக்கு அனுப்பி இருக்கும் குடும்பங்களுக்கு பண ஊக்கத்தொகையுடன் பாலினம் தேர்வு செய்து கருக்கலைப்புகளுக்கான தடையை இணைப்பது அல்லது சிறுமிகளுக்கு மிதிவண்டிகளைக் கொடுக்கும் கொள்கை போன்ற கொள்கைகளின் சாத்தியமான எதிர்மறையான விளைவுகளை ஈடுசெய்யக்கூடிய திட்டங்களுக்கு, அவர்கள் பள்ளிகளை அடைய அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று, சர்மா பரிந்துரைத்தார்.
கொள்கை வகுப்பாளர்களும் வெற்றிகரமான திட்டங்களில் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். உதாரணமாக, பீகாரில் முகமந்திரி பாலிகா சைக்கிள் யோஜனா (சிறுமிகளுக்கான முதலமைச்சரின் சுழற்சி திட்டம்) சிறுமிகளுக்கான கல்விக்கான அணுகலை அதிகரித்து, அவர்களை மேலும் நடமாட்டம் கொண்டிருக்கச் செய்தது. "பீகார் நிலப்பிரபுத்துவ மற்றும் ஆணாதிக்க சமுதாயமாக இருந்தபோதிலும், பள்ளியில் பெண்கள் சேர்ப்பது இதனால் பெருமளவில் அதிகரித்தது," என்று முத்ரேஜா கூறினார். இந்த திட்டத்திற்கு பீகார் முதலமைச்சரிடம் இருந்து அரசியல் பலன் இருந்தது, அவர் கொள்கைகளை வடிவமைத்தது மட்டுமல்லாமல் அவற்றை கண்காணிக்கும் பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்களுடன் ஒருங்கிணைந்த குழுவை அமைத்தார்.
மற்றொரு திட்டம், 1988 மஹிளா சமக்யா முயற்சி, கிராமப்புறங்களில், குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட குழுக்களிடம் இருந்து பெண்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது, உடல்நலம், கல்வி மற்றும் ஆரம்பகால திருமணம் மற்றும் வீட்டிற்கு வெளியே பணிபுரியும் பெண்கள் மீது ஒன்றிணைந்த தாக்கங்களை அடைய முடிந்தது. இந்த திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் மாநில அரசுகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் மகளிர் குழுக்களின் ஒத்துழைப்புடன் வடிவமைத்துள்ளது.
(திருத்தியவர், மரிஷா கார்வா).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.