‘குழந்தைகள் ஊட்டச்சத்துக்காக, குடும்பச்சொத்தை விட தாயின் கல்வி மிக முக்கியம்’
புதுடெல்லி: புதிய ஆய்வுக்காக கணக்கெடுக்கப்பட்ட இரண்டு வயதிற்கு உட்பட்ட இந்திய குழந்தைகளில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் பல்வகைப்பட்ட உணவை உண்ணவில்லை என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டு சொத்தை விட குழந்தைகள் ஊட்டச்சத்துடன் நன்றாக சாப்பிடுகிறார்களா என்பதை தாயின் கல்விதான் தீர்மானிப்பதாக, அந்த ஆய்வு நிறைவு செய்கிறது.
6-23 மாத வயதுடைய குழந்தைகளில் 23% பேர் மட்டுமே போதிய பல்வகை உணவை பெற்றுள்ளனர் என்று, டாடா அறக்கட்டளயை சேர்ந்த சுதாபா அகர்வால், ராக்லி கிம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான ஹார்வர்ட் மையத்தின் எஸ்.வி. சுப்ரமணியம் மற்றும் பலரின் ஆய்வு முடிவுகள், ஐரோப்பிய ஜேர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷியன் இதழின் பிப்ரவரி 2019 பதிப்பில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
ஏழ்மையான வீடுகளில், 18% குழந்தைகளே போதிய பல்வகைப்பட்ட உணவைக் கொண்டிருந்தனர்; இது பணக்கார குடும்பங்களின் 28% குழந்தைகள் என்பதுடன் ஒப்பிடும்போது, 10% புள்ளிகள் குறைவு. அதே நேரம், கல்வி இல்லாத தாய்மார்களின் குழந்தைகளில், 17% மட்டுமே பலதரப்பட்ட உணவை உட்கொள்கின்றனர். உயர்நிலை அல்லது மேல்நிலைக்கல்வி கொண்ட தாய்மார்களுடன் ஒப்பிடும்போது, இது 30% ஆகும். இது 13 சதவீத புள்ளிகளின் வித்தியாசம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
"போதுமான பன்முகப்படுத்தப்பட்ட உணவு" என்பது ஆய்வின் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் ஏழு உணவுக்குழுக்களில் குறைந்தது நான்கு பொருட்களை உட்கொள்ள வேண்டும் - தானியங்கள், கிழங்குகள், பருப்பு வகைகள் மற்றும் பால் பொருட்கள், சதை உணவுகள் (இறைச்சி), வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள், பிற பழங்கள் மற்றும் காய்கறிகள்.
ஊட்டச்சத்தின் அளவு மற்றும் தரத்தை விட, மாறுபட்ட உணவை உட்கொள்வது மிகவும் முக்கியமானது. ஆய்வில், பெரும்பாலான குழந்தைகளுக்கு தானியங்கள் நுகர்வு அதிகளவிலும், பழங்கள் மற்றும் காய்கறிகள், கடலைகள் மற்றும் பருப்பு வகைகள், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றின் நுகர்வு மோசமாகவும் இருந்தது.
"விலங்கு மற்றும் தாவரங்களை விட - கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளுக்கு இடையிலான சமநிலை தொடர்பான மேக்ரோ ஊட்டச்சத்துக்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்," என்று, ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவரான சுப்பிரமணியம் மின் அஞ்சலில் தெரிவித்தார். "இளம் குழந்தைகள் கொழுப்பு உணவு முக்கியம். புரதங்களில் கவனம் செலுத்துவதற்கு தேவையான அங்கீகாரமாக உள்ளது; ஆனால் சிறிய குழந்தைகள் கொழுப்பு நிறைந்த உணவு உட்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் சுமையை நிவர்த்தி செய்ய - பால் நுகர்வு முக்கியமானது” என்றார் அவர்.
செல்வம் மற்றும் கல்வி இடைவெளி
"ஏழ்மையான அடுக்குகளுக்கு இது மலிவு மற்றும் அணுகக்கூடியது, அதே சமயம் சிறந்த அடுக்குக்கு இது அறியாமையாகும்," என்று, ஆய்வின் கண்டுபிடிப்புகளை விளக்கி சுப்பிரமணியம் கூறினார். உணவு இப்போது ஒரு தொழிற்துறையாகும், மேலும், ஒரே மாதிரியான உணவை நோக்கிய உலகளாவிய போக்குகளின் பெரிய சூழலில் நல்வாழ்வில் உள்ள உணவு விருப்பங்களை விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலகின் ஐந்து வயதுக்குட்பட்ட (46.6 மில்லியன்) குழந்தைகளில் மூன்றில் ஒருவர் வளர்ச்சி குறைபாடு உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் 2025 உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை அடைவதற்கான பாதையில் இந்தியா இல்லை என்று, 2019 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
இரண்டு வயதிற்குட்பட்ட இந்திய குழந்தைகளில், 90.4% பேர் போதுமான உணவைப் பெறவில்லை என தேசிய குடும்ப சுகாதார ஆய்வு -4 (NFHS-4) 2015-16 ஆய்வில் கண்டறியப்பட்டது. 6-23 மாத வயதுடைய குழந்தைகளில் 18% பேர் இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டனர்; இந்த வயதிற்குட்பட்ட பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இரத்த சோகை உள்ளவர்கள். சுமார் 54% பேர் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உட்கொள்கின்றன. குழந்தை பருவத்தில் இச்சத்து இல்லாமல் போனால் பார்வை குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
உணவு பன்முகத்தன்மை குறித்த தற்போதைய ஆய்வில், என்.எப்.எச்.எஸ்.- 4 தரவுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் தாய்மார்கள் முந்தைய 24 மணி நேரத்தில் தங்களது குழந்தைகளுக்கு வழங்கிய 21 உணவுப் பொருட்களின் பட்டியல் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அதன் பிறகு பொருட்கள் ஏழு உணவு குழுக்களாக பிரிக்கப்பட்டன: தானியங்கள், கிழங்குகள், பருப்பு வகைகள் மற்றும் பருப்புகள் , பால் பொருட்கள், சதை (இறைச்சி) உணவுகள், வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற பழங்கள்.
இந்திய குழந்தைகளின் உணவு பன்முகத்தன்மையின் சராசரி மதிப்பெண் 0-7 அளவில் 2.26 எனக் கண்டறியப்பட்டது, இங்கு 0 என்பது 21 உணவுப் பொருட்களில் எதையுமே குழந்தைகளுக்கு உணவளிக்கவில்லை என்பதோடு 7 என்பது ஏழு குழுக்களிலிருந்தும் குறைந்தபட்சம் ஒன்றுக்கு உணவளிக்கப்படுகிறது.
வெவ்வேறு செல்வந்தக்குழுக்களின் குழந்தைகளுக்கு இடையேயான மிகப் பெரிய வேறுபாடு, பால் பொருட்களின் நுகர்வுதான் - பணக்கார வீடுகளில் உள்ள குழந்தைகள் பால் பொருட்கள் நுகர்வு, ஏழ்மையான குடும்ப குழந்தைகள் உட்கொள்வதைவிட மூன்று மடங்கு அதிகம்.
அதேநேரம், உயர்நிலைப்பள்ளி அல்லது உயர் கல்வி கொண்ட தாய்மார்களின் குழந்தைகள், ஏழு குழுவில் உள்ள உணவுகளை உட்கொள்வதற்கான அதிக வாய்ப்பைக் கொண்டிருந்தனர்; மேலும் கல்வி இல்லாத தாய்மார்களைக் காட்டிலும் போதுமான அளவு பலதரப்பட்ட உணவை உட்கொள்வதில் இரு மடங்கு சாதக வாய்ப்புகள் இருந்தன.
தானியங்கள் அதிகளவு நுகர்வு
ஏழு உணவு குழுக்களில், பெரும்பாலும் தானியங்கள் சாப்பிடுகின்றன - 74% கிழங்குகள், 55% பால் பொருட்கள், 37% பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் 29% வைட்டமின் ஏ- நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை உட்கொண்டதாக தெரிவித்தது.
குழந்தைகள் நுகர்வில் முட்டை மிகவும் குறைவாக (பதிலளித்தவர்களில் 14%) இருந்தது; பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகள் (13%), மற்றும் சதை உணவுகள் (10%), ஆய்வு கண்டறியப்பட்டது.
பணக்கார மற்றும் ஏழ்மையான குடும்பங்களுக்கு இடையில், பால் பொருட்களின் நுகர்வு வித்தியாசம் மிக அதிகமாக இருந்தது (ஏழ்மையான வீடுகளில் 39% மற்றும் பணக்கார வீடுகளில் 72%), அடுத்து வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் (26% vs 33%), மற்றும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் (34% vs 40%).
பால் உற்பத்திகளின் நுகர்வு தாய்மார்களின் கல்வி மட்டத்தில் - 44% படிக்காதவர்களுக்கு எதிராக 73% படித்தவர்கள் - மிகவும் மாறுபட்டது - - வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளால் பின்பற்றப்படுகிறது (25% vs 34%), மற்றும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் (32% Vs 43%).
2006 உடன் ஒப்பிடும்போது 2016 ஆம் ஆண்டில் உணவு பன்முகத்தன்மை அதிகரித்த போதிலும், இது முழுவதும் மோசமாக இருந்தது மற்றும் உண்மையில் மேல் இரண்டு செல்வக் குழுக்களில் (ஐந்தில்) குறைந்தது.
இடைவெளி குறைந்து இருந்தபோதும், கீழ்மட்ட குழுக்களில் இருந்ததை விட மேல்மட்ட குழு குழந்தைகள் 2-4 மடங்கு பன்முகப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டன.
வீட்டுச் செல்வத்தை விட சில உணவுப் பொருட்களின் நுகர்வு தாய்வழி கல்வியால் அதிகம் பாதிக்கப்பட்டது. அவை பின்வருமாறு: பூசணி, கேரட், பழச்சாறு, கீரை காய்கறிகள், கல்லீரல், இதயம், உறுப்பு இறைச்சி, மீன், பருப்பு வகைகள் மற்றும் சதை உணவு (இறைச்சிகள்).
பாக்கெட் பழச்சாறுகள் போன்ற பொட்டல உணவு பொருட்களின் நுகர்வு செல்வந்த மற்றும் தாயின் கல்வி அதிகமுள்ளவர்கள் மத்தியில் அதிகரித்தது, இதை ஆராய்ச்சியாளர்கள் “ஆபத்தான” என்று அழைத்தனர். இந்தியாவில் மலிவான உணவுப்பொருட்களான பூசணி, கேரட் மற்றும் அடர் பச்சை இலை காய்கறிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.
அதிக இறைச்சி உதவ முடியுமா?
உணவு பன்முகத்தன்மையை மேம்படுத்த, குழந்தைகள் அதிக இறைச்சி வாயிலாக உணவுகளை சாப்பிட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட 459 கிராம் எதிராக, இந்தியர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் முறையே 194 கிராம் மற்றும் 242 கிராம் புரதத்தை உட்கொள்வதாக, ஜனவரி 2019 இல் லைவ்மிண்ட் ஆய்வு தெரிவிக்கிறது.
சில குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் உள்ளதைவிட பால் மற்றும் கோழி இறைச்சிகள் இந்தியாவில் மலிவானவை என்றாலும், அவை அநேகம் பேரை சென்றடையவில்லை. இங்கே, பண இடமாற்றங்கள் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன; 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் குழந்தை உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றிய, விவசாய ஆராய்ச்சி குழு சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) ஆய்வு, மேட்டர்னர் அண்ட் சைல்ட் நியூட்ரீஷியன் இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.
சிறு குழந்தைகளிடையே இறைச்சி நுகர்வுக்கான கலாச்சார தடைகளை நீக்குவதும் முக்கியம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்கு புரதத்தை உட்கொள்ளாத மூன்றில் ஒரு பங்கு வீடுகளில், பருப்பு வகைகள் / கொட்டைகள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் நுகர்வு மேம்படுத்த உதவும் என்று,ஐ.எப்.பி.ஆர்.ஐ. ஆய்வின் இணை ஆசிரியர் புவோங் நுயென் மின் அஞ்சலில் தெரிவித்தார்.
ஐ.எப்.பி.ஆர்.ஐ. (IFPRI) இன் மற்றொரு ஆய்வில், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து கல்வி 2006 ல் 3.2 சதவீதத்திலிருந்து 2016 ல் 21 சதவீதமாக மூன்று மடங்கு அதிகரித்த போதிலும், ஏழ்மையான தாய்மார்கள் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சேவைகளின் இரண்டாவது மோசமான பாதுகாப்பு (பணக்காரக் குழுவிற்குப் பிறகு) என்று கண்டறியப்பட்டதாக, 2019 மார்ச் மாதம் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).