டெல்லி: உயர் பொருளாதார வளர்ச்சி என்பது சிறந்த வேலைகளுக்கு வழிவகுக்காது, மேலும் பாலின சமத்துவத்தை சிறப்பாகச் செய்யும் மாநிலங்கள் புதிய வேலைவாய்ப்பு குறியீட்டில் சிறப்பாக செயல்படுகின்றன.

ஆந்திரா (தெலுங்கானா உட்பட), மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள், அவை வழங்கும் வேலைகளின் தரம் மற்றும் அளவில், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழி நடத்துவதாக உள்ளன. அதே நேரம் பீகார், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் (உ.பி.) ஆகியன கடைசி இடங்களில் இருப்பதாக, குறியீடு தெரிவிக்கிறது.

"நல்ல ஊதியங்களை வழங்கும் நல்ல தரமான உற்பத்தி பணிகள், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தூண்டுதலாகும்," என்று, ஜஸ்ட்ஜாப்ஸ் நெட்வொர்க் ஆராய்ச்சி நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான சபீனா திவான், எ ஜஸ்ட் ஜாப்ஸ் இன்டெக்ஸ் பார் இந்தியா ( A Just Jobs Index for India,) அட்டவணையை, ஜூன் 21, 2019இல் வெளியிட்டு பேசினார்.

சிந்தனை அமைப்பான, கொள்கை ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆதரவோடு, வேலைவாய்ப்பு, சம்பிரதாயம், நன்மைகள், வருமான சமத்துவம் மற்றும் பாலின சமத்துவம் ஆகிய குறிகாட்டிகளின் தொகுப்பின் அடிப்படையில் மாநிலங்களின் செயல்திறனை, இந்த அட்டவணை கண்காணிக்கிறது.

பொருளாதார வளர்ச்சி இருந்த போதும், வேலைவாய்ப்பு உருவாக்கும் வேகம் மெதுவாக உள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது. அமைப்புசாரா துறையில் பணிபுரியும் 71% தொழிலாளர்களுடன், அதிகரித்து வரும் வேலையின்மையை நாடு எதிர்கொள்கிறது; மேலும் மாநிலங்கள் முழுவதும் சீரற்ற வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.

இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 6.1% - கிராமப்புற (5.3%) மற்றும் நகர்ப்புற (7.8%) - என மே 31, 2019 அன்று வெளியிடப்பட்ட அரசு காலநிலை தொழிலாளர் திறன் ஆய்வு - பி.எல்.எஃப்.எஸ் (PLFS) தெரிவிக்கிறது.

கடந்த 2012-13 முதல், 2016-17 வரையிலான காலகட்டத்தில் நிகர மாநில மதிப்பு - என்எஸ்விஏ (NSVA) கூட்டப்பட்ட வளர்ச்சி விகிதங்களை 10% அல்லது அதற்கும் அதிகமாக “தொடர்ந்து பராமரித்து வரும்” குஜராத் மாநிலமானது, தரமான வேலைகளை உருவாக்குவதில், குறியீட்டில் 18வது இடத்தில் உள்ளது.

Source: JustJobs Index, 2019
Note: Data for Andhra Pradesh are pre-bifurcation, and include those for Telangana.

நாம் முன்பு கூறியது போல், 57.3 புள்ளிகளுடன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியன இதில் முன்னிலை வகிக்கின்றன; அதை தொடர்ந்து மகாராஷ்டிரா (57.2), சத்தீஸ்கர் (56.39) உள்ள நிலையில், பட்டியலில் உத்திரப்பிரதேசம் (32.04), பீகார் (37.28) மற்றும் ஒடிசா (37.70) ஆகியன கீழே உள்ளன.

ஒவ்வொரு குறிகாட்டிகளுக்கும், தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம், தொழிலாளர் பணியகம், தொழில்களின் வருடாந்திர கணக்கெடுப்பு, ரிசர்வ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா மற்றும் பி.எல்.எஃப்.எஸ். போன்ற பல்வேறு அரசு ஆதார மூலங்களில் இருந்து தரவுகளை பயன்படுத்தி, 2010-2018 குறியீடானது கிடைக்கக்கூடிய மதிப்புகளின் சராசரியைப் பயன்படுத்துகிறது.

கிடைக்கக்கூடிய தரவுகள் சிறிய அளவிலான மாதிரிகளாக இருந்ததால், ஏழு வடகிழக்கு மாநிலங்கள், இக்குறியீட்டில் கருத்தில் கொள்ளப்படவில்லை.

வேலைவாய்ப்பு, சம்பிரதாயம், நன்மைகள், வருமான சமத்துவம் மற்றும் பாலின சமத்துவம் போன்ற “தேவைக்கான பக்கத்தின்” பரிமாணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன; ஏனெனில் அவை வேலைகளின் தரம் மற்றும் அளவை மதிப்பீடு செய்கின்றன. மேலும் கல்வி மற்றும் திறன் நிலைகள் போன்ற “வழங்கல் பக்க” குறிகாட்டிகளை, ஜஸ்ட்ஜோப்ஸ் நெட்வொர்க்கின் ஆராய்ச்சி கூட்டாளியான திவான் மற்றும் திவ்யா பிரகாஷ் ஆகியோர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பாலின சமத்துவம் சிறந்த ஒட்டுமொத்த மதிப்பெண்ணை வழங்குகிறது

இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 24% ஆகும். இது உலக வங்கியின் 2018 கணக்கின்படி, 131 நாடுகளில் 120வது இடத்தில் உள்ளது. பாலின சமத்துவத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் சிறந்த ஒட்டுமொத்த மதிப்பெண்ணுடன் தொடர்புடையவை என்று பணி குறியீடு கண்டறிந்துள்ளது.

பாலின சமத்துவத்தில் இமாச்சலப் பிரதேசம் (72.9) முதலிடத்திலும், பீகார் (13.5) முதலிடத்திலும் உள்ளன.

வேலைவாய்ப்பில் பாலின ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, குறைந்த பெண் தொழிலாளர் பங்களிப்பு உள்ள மாநிலங்கள், பொது இடங்கள், வீடு மற்றும் பணியிடங்களை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும். மேலும் தேவைப்பட்டால் பெண்கள் நகரங்களுக்கு குடிபெயர வேண்டும் என்று, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சேம்பர்ஸ் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலீப் செனோய், அறிக்கை துவக்கத்தின் போது கூறினார்.

சத்தீஸ்கர் (95.29) அதிக தொழிலாளர் பங்களிப்பு வீதத்தின் காரணமாக வேலைவாய்ப்பு பரிமாணத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டது. அதிக இளைஞர் வேலையின்மை காரணமாக, கோவா குறைந்தபட்ச (15.88) மதிப்பெண் பெற்றது (இது, 2018 இல் 28.7%).

அமைப்புசார்ந்த வேலைகளின் விகிதத்தை அளவிடும் குறியீட்டின் ஒரு பகுதியிலேயே எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்துடன் கூடிய தொழிலாளர்களின் பெரும்பகுதியை கொண்ட ஒரு மாநிலம், உயர்ந்த இடத்தில் இருந்தது.இந்த மதிப்பெண்ணில் கோவா (87.59) முதலிடத்தில் உள்ளது; உத்தரபிரதேசம் (16.92) கீழே தள்ளப்பட்டது.

தொழிற்சங்க சங்கம், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியை ஓய்வூதியத்திற்காக அதிக செலவிடுதல் மற்றும் ஓய்வூதியம் / வருங்கால வைப்பு நிதி கொண்டிருக்கும் தொழிலாளர்களின் அதிக பங்கு என, தொழிலாளர்களுக்கு அதிக சலுகைகள் மற்றும் பாதுகாப்பு உள்ள மாநிலங்கள், உயர்ந்த இடத்தில் உள்ளன.

பயங்களின் பரிமாணத்தில் ஜம்மு-காஷ்மீர் (55.47), டெல்லி (52.47) மற்றும் கேரளா (51.99) முதலிடத்தில் உள்ளன; இது ஓய்வூதியம் மற்றும் தொழிற்சங்க பங்களிப்புக்கான ஒப்பீட்டளவில் அதிகம் செலவிடும் மாநிலங்கள் என்று அறிக்கையின் ஆசிரியர்கள் காரணம் காட்டுகின்றனர். தொழிற்சங்க பங்கேற்பு குறைவாக இருந்ததால் ராஜஸ்தான் (17.19), சத்தீஸ்கர் (14.14), குஜராத் (12.67) ஆகியவை கீழே தள்ளப்பட்டன.

வருமான சமத்துவமின்மைக்கு, குறைந்தபட்ச ஊதியங்களின் சராசரி ஊதியத்திற்கு அதிக விகிதம், குறைந்த கினி இணை செயல்திறன் - சமத்துவமின்மையின் ஒரு குறிகாட்டி - நுகர்வு மற்றும் முறையான ஊதியங்களுக்கு முறைசாரா ஊதியங்களின் உயர் விகிதம் ஆகியவற்றை குறியீடு கருதுகிறது. இதில் சத்தீஸ்கர் (83.03), மகாராஷ்டிரா (76.84), உத்தரகண்ட் (73.39) ஆகியவை முதலிடத்திலும்; உத்தரபிரதேசம் (39.45), ஜம்மு & காஷ்மீர் (36.24), கேரளா (36.24) ஆகியன கடைசி இடங்களிலும் உள்ளன.

நிகழ்நேர தரவு மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறை: ஆய்வு ஆசிரியர்கள்

இந்தியாவின் தொழிலாளர் சந்தைகள் பற்றிய நிகழ்நேர தரவுகளின் பற்றாக்குறை மற்றும் சிறந்த குறிகாட்டிகளின் பற்றாக்குறை ஆகியவை மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஈஸி ஆஃப் டூயிங் பிசினஸ் தரவரிசைக்கு வழிவகுத்தன - இதில் 190 நாடுகளில் இந்தியா 77 வது இடத்தில் உள்ளது என்று குறிப்பிடும் அறிக்கையின் ஆசிரியர்கள், வேலை உருவாக்கத்திற்கான குறிகாட்டிகளாக மாற்றப்பட வேண்டும் என்றனர்.

"பொது களத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை, மாநில அரசு பொறுப்புக்கூற வைத்து, அதிக உற்பத்தி வேலைகளை வழங்குவதற்கும், இளைஞர்களுக்கு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அவர்களைத் தள்ளும்" என்று அரசின் சிந்தனைக்குழுவான நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறினார்.

திறன் மேம்பாட்டிற்கான கல்வியை புத்துயிர் பெற காந்த் பரிந்துரைத்தார், “எதிர்காலத்திற்கான திறன்கள்” - டிஜிட்டல் கல்வியறிவு, தொலைதூர பகுதிகளில் உள்ளவர்களுக்கு பயிற்சி மற்றும் மொபைல் அடிப்படையிலான பயிற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இது கிராமப்புற இளைஞர்களை வேலை தேடுபவர்களை விட வேலை உருவாக்குபவர்களாக மாற உதவும் என்றார்.

(சர்மா, புனேவின் சிம்பியோசிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்.சி மாணவர். இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.