பள்ளிகள் மீண்டும் திறக்க என்ன செய்ய வேண்டும்
சிறிய ஒரு வகுப்பறை பள்ளி என்பதில் தொடங்கி, வளம் நிறைந்த நகர்ப்புற தனியார் பள்ளிகள் என வேறுபாடு கொண்ட, இந்தியாவின் பள்ளிகள், ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு நேரடி கல்விக்காக மீண்டும் திறக்கப்படுகின்றன. கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றி, அனைவரும் வகுப்பறை கற்றலுக்காக பாதுகாப்பாக அவற்றால் மீண்டும் இயங்க முடியுமா என்பதை நாங்கள் ஆராய்கிறோம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில், அரசு மேல்நிலைப் பள்ளி முற்றத்தில் உள்ள ஒரு பெரிய தண்ணீர் தொட்டி, குடிப்பதற்கும் கைகளை கழுவுவதற்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கழிப்பறைகளில் செல்லக்கூடிய தண்ணீர் இல்லை. ஏறக்குறைய 57 குழந்தைகளை கொண்ட அந்த பள்ளியில், எல்-வடிவ, ஒரு மாடி கட்டிடம், ஏழு சிறிய வகுப்பறைகள் மற்றும் நான்கு ஆசிரியர்கள், ஒரு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
"நாம் பள்ளியை ஷிப்டு முறையில் நடத்தினால் அல்லது ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கல் மட்டுமே வந்தால், கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எளிதாக பின்பற்றலாம்," என்று, பள்ளி முதல்வர் கெம்சந்த் தன்வர், ஆகஸ்ட் 2021 இல் இந்தியாஸ்பெண்டிடம் கூறினார், ராஜஸ்தான் அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பாடங்களை நடத்த அனுமதித்துள்ளது.
நகர்ப்புற ஜெய்ப்பூரில் உள்ள மற்றொரு அரசுப் பள்ளியை பார்ப்போம். இந்தப் பள்ளி மத்தியில் ஒரு முற்றத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது; அதே வளாகம் காலையில் ஒரு மேல்நிலைப் பள்ளியாகவும், மாலையில் ஒரு தொடக்கப் பள்ளியாகவும் பயன்படுத்தப்படுகிறது. கழிப்பறைகளில் தண்ணீர் வசதியும், குடிநீருக்காக தனி வசதியும் உள்ளது.
"ஆமாம், மாணவர்கள் பள்ளிக்கு மீண்டும் திரும்ப வேண்டும், ஆனால், நேர்மையாக, எல்லா கோவிட் -19 வழிகாட்டுதல்களையும் எப்போதும் பின்பற்ற முடியும் என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியாது … சில நேரங்களில் நாம் கவனிப்பதற்கு முன்பே, அவர்கள் [குழந்தைகள்] தங்கள் தண்ணீர் பாட்டிலைப் பகிர்ந்து கொண்டிருப்பார்கள்," என்று, பள்ளியின் ஆசிரியர்களில் ஒருவரான சுனிதா (அவர், ஒரு பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.
தொற்றுநோய் காரணமாக இந்தியாவில் பள்ளிகள், பல மாநிலங்கள் ஜூலை 2021 இல் மீண்டும் திறக்க அனுமதிப்பதற்கு முன்பு வரை, சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தன. பள்ளி மூடப்பட்டதால், குழந்தைகள் நேரடி கற்றலை இழந்துவிட்டனர்; ஏழை மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு ஆன்லைன் வகுப்பு எனப்படும் டிஜிட்டல் கல்விக்கான வசதி வாய்ப்பு இல்லாதது, இதில் சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது; குழந்தைகள் சமூக மற்றும் சக கற்றல் சூழல் மற்றும் நட்பை இழந்துவிட்டனர், குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சியில் தொற்றுநோயின் தாக்கம் குறித்த எங்கள் தொடரான 'சீர்குலைந்த கல்வி' (Education Disrupted) என்ற தொடரி முதல் பகுதியில் தெரிவித்திருந்தோம். பள்ளிகள் மூடப்பட்டிருப்பது, பெரும்பாலானோர் குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணம் மற்றும் அத்துமீறல்கள் ஆகியவற்றால் குழந்தைகளை மிகவும் பாதிக்கக்கூடியவர்களாக ஆக்குகின்றன, ஏனெனில் பள்ளிகள் பெரும்பாலும் ஆபத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால், பல்வேறு வகையான பள்ளிகளுக்கு கிடைக்கும் பல்வேறு வளங்களைக் கருத்தில் கொண்டு, கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் அவற்றை திறப்பது (அல்லது மீண்டும் மூடுவது) என்ற முடிவை, அந்தந்த தனிப்பட்ட பள்ளிகள் மற்றும் அவை இருக்கும் மாவட்ட நிர்வாகங்களே எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர். குறைந்தபட்சம், நன்கு காற்றோட்டமான வகுப்பறைகள், சமூக இடைவெளி-- வாரத்தின் வெவ்வேறு நாட்களில், பல ஷிப்டுகள் முறை அல்லது வெவ்வேறு வகுப்புகளுக்கு பாடம் நடத்துதல்-- முகக்கவசம் அணிதல், பள்ளி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் சுகாதாரம் மற்றும் கை கழுவுதல் என்ற நெறிமுறைகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும், குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, அங்கு பாதுகாப்பாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
"ஒவ்வொரு பள்ளியும் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த வெவ்வேறு திறன்களைக் கொண்டிருக்கும்" என்று, ஜெய்ப்பூரைச் சேர்ந்த குழந்தை மருத்துவ நிபுணரும், இந்திய குழந்தை மருத்துவ அகாடமியின், 'Guidelines on School Reopening, Remote Learning and Curriculum in and After the COVID-19 Pandemic' என்ற தலைப்பிலான அக்டோபர் 2020 ஆய்வின் இணை ஆசிரியருமான சுவாதி காட், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். முக்கிய விஷயம் என்னவென்றால், "பள்ளிகள், கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு பதிலாக, சமூக தொடர்பு மற்றும் சமூக கற்றல் இடங்களாக பார்க்க வேண்டும்" என்று காட் கூறினார். பள்ளிகள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குழந்தைகளுக்கு பாடம் நடத்த முடிந்தாலும், அதுவே ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்... தொற்றுநோய் காலத்தில் பல மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகள் கோவிட் -19 க்கு எதிராக நெகிழ்ச்சியுடன் இருப்பதைக் காண்கிறோம்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்கள், அனைத்து மாணவர்களும் தனிப்பட்ட முறையில் பள்ளிக்குத் திரும்பியதாக, உலக வங்கி, ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு ஆகியவற்றின் பிப்ரவரி மற்றும் மே 2021 இடையே ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. "ஆரம்ப மற்றும் இரண்டாம் வகுப்புக்கு கீழே உள்ள குழந்தைகளின் கற்றல், "முக்கியமாக அதிக வருமானம் கொண்ட நாடுகள் " இழப்புகளை அளவிட, உரிய நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்று கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
பள்ளிகளை மீண்டும் திறக்க சர்வதேச, தேசிய மற்றும் மாநில கோவிட் -19 வழிகாட்டுதல்கள் என்ன பரிந்துரைக்கின்றன
மத்திய அரசு கடந்த செப்டம்பரில் பள்ளிகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது, இது டிஜிட்டலை நேரில் கற்றுக்கொள்வதை ஆதரித்தது. வகுப்பில் கற்பிக்கும் போது, குழந்தைகள் முகக்கவசம் அணிந்து, குறைந்தபட்சம் ஆறு அடி இடைவெளியில், ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்துதல் அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை வகுப்புகள் நடத்துதல், முடிந்தவரை திறந்தவெளிகளைப் பயன்படுத்துதல், சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தரங்களைப் பேணுதல் மற்றும் பள்ளிகளில் கூட்டம் அல்லது நிகழ்வுகளைத் தவிர்ப்பது உள்ளிட்டவற்றை, அது பரிந்துரைத்தது. குழந்தை அல்லது ஊழியருக்கு கோவிட் -19 தொற்று கண்டறியப்பட்டால், மருத்துவர் அல்லது மாவட்ட குழுவானது, அபாயத்தை மதிப்பிட வேண்டும், தொடர்ந்து கண்காணிப்பதுடன், பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற மத்திய அரசு, பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு மாநிலங்கள் தங்களுக்கான விதிகளைத் தயாரித்துக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
சில மாநிலங்கள், முதல் மற்றும் இரண்டாவது கோவிட் -19 அலைகளுக்கு இடைப்பட்டு, தொற்று பரவல் குறைந்த சூழலில், உயர்நிலைப் பள்ளி வகுப்புகளை திறந்தன. இரண்டாவது அலைக்குப் பிறகு, பல மாநிலங்கள் வழிகாட்டுதல்களை அமைத்து ஜூலை 2021 இல் பள்ளிகளைத் திறத்தன. உதாரணமாக, மத்தியப் பிரதேசம் 50% வருகையுடன் ஜூலை 26 முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறந்தது; பஞ்சாபில் அனைத்து வகுப்புகளும் ஆகஸ்ட் 2 முதல்; மற்றும் உத்தரபிரதேசத்தில் ஆகஸ்ட் 16 முதல், 9 முதல் 12ம் வகுப்பு வரை, 50% வருகையுடன் திறப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் சமக்ரா ஷிக்ஷா துறை, ஜூலை மாதம் பள்ளி ஆண்டு தொடக்கத்தில் இருந்து பள்ளி மேலாண்மை குழு மற்றும் குடும்பங்களின் அனுமதியுடன், சமூக இடைவெளியுடன் திறந்த வெளியில் குழந்தைகளுக்கான 'மொஹல்லா வகுப்புகள்' ஏற்பாடு செய்யும்படி, அனைத்து பள்ளிகளையும் கேட்டுக் கொண்டது. ஜூலை 7 அன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும், வரையப்பட்ட வட்டங்களில் மாணவர்கள் அமர வேண்டும், போதிய இடைவெளியுடன் இருக்க வேண்டும், மற்றும் ஆசிரியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போட வேண்டும் என்று, அத்துறை கேட்டுக் கொண்டது.
சில பள்ளிகள் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஒரே நேரத்தில் ஒரு வகுப்பில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளை அனுமதிக்கவில்லை என்று, சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியின் பொறுப்பாளரும் முதுநிலை ஆசிரியர் பயிற்சியாளருமான மிலிந்த் சந்திரா, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். சில கிராமங்களில், கிராம பஞ்சாயத்துகள் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கவில்லை என்றார்.
இந்திய குழந்தை மருத்துவ அகாடமி (ஐஏபி) அக்டோபர் 2020 இல் வழிகாட்டுதல்களை வெளியிட்டது, கோவிட் -19 நெறிமுறைகளை அமல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு இருக்கும்போது பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பள்ளிக்கு வெளியே தங்கள் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்திய குழந்தை மருத்துவ அகாடமியின் வழிகாட்டுதல்கள், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு சந்திக்க வேண்டிய மூன்று தொற்றுநோயியல் அளவுகோல்களைக் குறிப்பிடுகின்றன: புதிய கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய வேண்டும், முந்தைய இரண்டு வாரங்களுக்கு தினசரி வழக்குகள் 100,000 மக்கள்தொகைக்கு 20-க்கும் குறைவாக இருக்க வேண்டும், மேலும் மாவட்டத்தின் சோதனை நேர்மறை விகிதம் -- பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் நேர்மறையான சோதனைகளின் விகிதம்-- 5 க்கும் குறைவாக இருக்க வேண்டும், இந்த வழிகாட்டுதல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும், அனைத்து பள்ளி ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடுவதன் அவசியம் மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைப் பாதுகாக்க மாவட்டத்தின் மக்கள்தொகையின் எந்த விகிதம் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தொற்றுநோயியல் குறிப்பான் சேர்க்கப்படும் என்று காட் கூறினார்.
உலக சுகாதார நிறுவனம் (WHO), ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய பரிந்துரைக்கிறது, அந்த வயதில் தான் வளர்ச்சி என்பது மைல்கற்களை எட்டுவதாகும். மூளை வளர்ச்சி குறைபாடு, சுவாசம் அல்லது பிற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணியக் கூடாது. ஐந்து முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, சமூகத்தில் கோவிட் -19 பரவுதலின் தீவிரம், முகக்கவசத்தை நிர்வகிக்கும் குழந்தையின் திறன் மற்றும் குழந்தை கற்றல் மற்றும் அவர்களின் வளர்ச்சி அடிப்படையில், முகமூடி அணிவதன் தாக்கம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் முகக்கவசம் அணிவதை, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
"முகக்கவசம் பற்றி விழிப்புணர்வு உள்ளது, ஆனால் முகக்கவசம் கடைபிடிப்பது பள்ளிகளுக்கு இடையே மாறுபடும்" என்று சந்திரா கூறினார்.
சமூட இடைவெளியை பொருத்தவரை, உலக சுகாதார நிறுவனம் குழந்தைகளுக்கு இடையே ஒரு அடி தூரத்தை பரிந்துரைக்கிறது, அதே நேரத்தில் இந்திய அரசின் வழிகாட்டுதல்கள், ஆறு அடி என்று பரிந்துரைக்கிறது. பிரிட்டன் இனி மாணவர்கள் இடையே சமூக இடைவெளியை கேட்காது, அதே நேரத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கிடையில் மூன்று அடி தூரத்தையும், ஊழியர்களுக்கிடையில் மற்றும் ஊழியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஆறு அடி தூரத்தை அமெரிக்கா பரிந்துரைக்கிறது. இந்திய அரசின் வழிகாட்டுதல்களைப் போலவே, அவர்கள் பள்ளி பேருந்துகளில் மாற்று இருக்கைகளையும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக மாணவர்களின் வருகையையும் குறைத்து நிறுத்துகிறார்கள்.
"ஐந்து வகுப்புகளுக்கு இங்கு ஐந்து வகுப்பறைகள் கூட இல்லாத சில பள்ளிகள் உள்ளன," சந்திரா கூறினார், இந்த பள்ளிகள் முன்னெச்சரிக்கையுடன் மீண்டும் திறப்பது கடினம்.
ஜெய்ப்பூருக்கு அருகேயுள்ள ஹடோட்டாவில் உள்ள சில பள்ளிகளில், பெரிய சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறைகள் உள்ளன. இங்கு கோவிட் -19 நெறிமுறைகளை பின்பற்றலாம். மற்றவை, சிறியவை, அதை பின்பற்றுவது கடினமாக இருக்கலாம்.
பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு முன்பு, பள்ளிகள் மற்றும் அரசுகளுக்கான சரிபார்ப்பு பட்டியலையும் யுனிசெஃப் வழங்குகிறது.
"குழந்தைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற செய்வது என்பது, சொல்லுவதைவிட கடினமானது," என்று, சுகாதார ஆராய்ச்சி இலாப நோக்கற்ற இன்கெலன் டிரஸ்ட் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநரும், நோய்த்தடுப்புக்கான கோவிட் -19 தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவருமான என்.கே. அரோரா, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். "ஆனால் நெரிசலைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம், மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.
ஒரு வகுப்பில் 50% மாணவர்கள் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு பள்ளி அந்த முடிவை எடுக்க அனுமதிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். உதாரணமாக, பெரிய வகுப்பறைகள் கொண்ட பள்ளிகள் அதிக மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்கலாம், அதே நேரத்தில் சிறிய வகுப்பறைகள் வகுப்பில் பாதிக்கும் குறைவான மாணவர்களுடன் சமூக இடைவெளியை நிர்வகிக்க முடியாது.
கூடுதலாக, மாற்று நாள் வகுப்புகள், திடீரென பள்ளி மூடல் சாத்தியம் மற்றும் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வர இயலாது என்ற சாத்தியம் இருப்பதால், பள்ளிகள் கலவையான மாதிரியுடன் தொடர வேண்டும் - டிஜிட்டல் பாடங்கள் மற்றும் வீட்டுப்பாடங்கள் மற்றும் நேரடி கற்பித்தலை இணைக்க வேண்டும் என்று, அரோரா கூறினார்.
வளமற்ற பள்ளிகள் கோவிட் -19 சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவது கடினம்
அனைத்து வழிகாட்டுதல்களும் --இந்தியா அல்லது பிற நாடுகளில் இருந்து-- சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை, குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பு அடிக்கடி கை கழுவுதல், சுத்தமான கழிவறைகள் மற்றும் பள்ளி சூழல்களை, அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்தியாவில் உள்ள பள்ளிகளில் (95%) பயன்பாட்டில் உள்ள கழிவறைகள் இருப்பதாகவும், 80% மின் இணைப்புகள் இருப்பதாகவும் அரசு தரவுகள் காட்டுகின்றன. 93% வரை பயன்பாட்டில் குடிநீர் வசதிகள் உள்ளன, ஆனால் இவற்றில் கை பம்புகள் மற்றும் கிணறுகளும் அடங்கும் என்று, 2019-20 கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு (District Information System for Education Plus) நிகழ்ச்சியின் தரவு காட்டுகிறது. 90% பள்ளிகளில் கை கழுவும் வசதி உள்ளது.
ராஜஸ்தானில் உள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், குழந்தைகள் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வர அறிவுறுத்தப்பட வேண்டும் மற்றும் தண்ணீர் பாட்டில்களைப் பகிர்வதைத் தடுக்க வேண்டும் என்று கூறுகிறது. வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வர முடியாத குழந்தைகளுக்கு, சுத்தமான நீர் ஒரு நிலையான, சுகாதாரமான இடத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும்.
"வெளிப்படையாக சொல்வதானால், பல இந்தியப் பள்ளிகளில் இத்தகைய அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் பல இடங்களில் குடிநீர் அல்லது நல்ல கழிப்பறை வசதிகள் கூட இல்லை" என்று காட் கூறினார். குழந்தைகள் எப்படி அமர்வார்கள் மற்றும் வகுப்பு நேரங்களை மாற்றுவது போன்றவற்றில், மாற்றங்களைச் செய்வது "முற்றிலும் போதாது".
"இது ஒரு பள்ளியின் பிரச்சினைகளின் உண்மையான அளவை வெளிப்படுத்தும்" என்று சந்திரா கூறினார். அனைத்து பள்ளிகளிலும் குறைந்தபட்ச வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய, பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும், என்றார்.
உதாரணமாக, ராஜஸ்தானில், பள்ளிகள் மற்றும் அனைத்து வசதிகளையும் தூய்மையாக வைத்திருப்பதற்கு பள்ளிகள் 10% கூட்டுப் பள்ளி மானியத்தில் இருந்து நிதி பயன்படுத்த வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
ஆனால், பள்ளி மீண்டும் திறப்பதை தாமதப்படுத்துவதை விட இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று, அரோரா கூறினார், தீர்வுகள் உள்ளூரிலேயே இருக்க வேண்டும். உதாரணமாக, சுமார் 45% பள்ளிகளில் கை பம்புகள் இருப்பதாக இந்த நிருபர் குறிப்பிடும் நிலையில், கைப் பம்ப் இயக்குவதை ஒருவர் கவனித்துக் கொண்டால், பல குழந்தைகளின் பிரச்சினையைத் தீர்க்க, கை பம்பை இயக்க முடியும் என்று அரோரா கூறினார்.
மேலும், நாட்டின் பிற பகுதிகளான சந்தைகள் மற்றும் மால்கள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் குழந்தைகள் மற்றவர்களை, முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் கூட சந்திக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பள்ளிகளை ஏன் திறக்கக்கூடாது என்று, ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மேலாளர் கேட்டார்.
பள்ளியை மீண்டும் திறப்பதற்கு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை என்று, இன்லன் அறக்கட்டளையின் அரோரா கூறினார். ஏனென்றால், தொற்றுநோயியல் நிபுணரும் பொது சுகாதார நிபுணருமான சந்திரகாந்த் லஹாரியா விளக்கியபடி, குழந்தைகள் கோவிட் -19 இல் இருந்து குறைந்த நோய் அபாயத்தில் உள்ளனர். "குழந்தைகள் தொற்றுநோயை அவர்களுக்கு பரப்பினால் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்" என்று அரோரா கூறினார். "அவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும், ஆனால் அவர்களுக்கு முதல் டோஸ் கிடைத்திருந்தாலும், அது ஒரு நல்ல தொடக்கம்" என்றார்
ஆகஸ்ட் 25 அன்று, இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, செப்டம்பர் 5 -க்கு முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதலாக 20 மில்லியன் தடுப்பூசி அளவுகளை வழங்கும் என்று கூறினார். இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சத்தீஸ்கரின் செலூட்டில் உள்ள அரசுப் பள்ளியில், குழந்தைகள் உள்ள குடும்பங்கள் உட்பட பெரும்பாலான பெரியவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர் என்று சந்திரா கூறினார். "நான் இதை என் பள்ளியில் கண்காணிக்கிறேன் ஆனால் எல்லா பள்ளிகள் பற்றி தெரியாது. இது செய்யக்கூடிய ஒன்று" என்று அவர் கூறினார்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைத்தவுடன், 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை, நோய்த்தொற்று உள்ள குழந்தைகளை, முதலில் தடுப்பூசிகளுக்கு தகுதியுள்ளவர்களாக அரசு ஆக்கும். ஏனென்றால் அவர்களுக்கு கடுமையான தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரோரா கூறினார்.
இங்கிலாந்து வழிகாட்டுதல்கள் குழந்தைகள் மற்றும் ஊழியர்களுக்கு, வாரத்திற்கு இரண்டு முறை துரித கோவிட் -19 சோதனைகளை பரிந்துரைக்கிறது, அதே நேரத்தில் அமெரிக்க வழிகாட்டுதல்கள் சில பள்ளிகள் தோராயமாக மாணவர்கள் மற்றும் குழந்தைகளை பரிசோதிக்கலாம் என்று கூறுகின்றன.
"[சீரற்ற, வழக்கமான] சோதனை தேவையில்லை, அது நடைமுறைக்குரியது அல்ல," என்று காட் கூறினார். "நாங்கள் ஒரு வளம் இல்லாத நாடு, எனவே நமது அமைப்பு அடிப்படைத் தேவைகளுக்கு முன்னதாகவே செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. அறிகுறி உள்ளவர்களுக்கும் தொடர்பு தடமறிபவர்களுக்கும் சோதனை செய்யப்பட வேண்டும்," என்று அவர் விளக்கினார். அதற்கு பதிலாக, "பள்ளிகள் திறக்கும் போது, அறிகுறிகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்-இது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் செல்ல வேண்டிய செய்தி" என்றார்.
உதாரணமாக, ராஜஸ்தானில் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களில் வழக்கமான சோதனைகள் இல்லை, ஆனால் அவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் கோவிட் -19 இன் அறிகுறிகளையும் அறிகுறி கண்டறியும் மேற்பார்வைக் குழுவை வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள், கிராமவாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மற்றும் எந்த அறிகுறிகளும் உள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என்பதை இக்குழு உறுதிப்படுத்தும்.
உள்ளூர் அளவில் முடிவெடுப்பது சிறந்தது
சமூகத்தில் மிகக்குறைவான கோவிட் -19 வழக்குகள் இருக்கும் சூழ்நிலையில், பள்ளிக்குள் ஒரு சில வழக்குகளில் பள்ளி மூடல் பற்றிய முடிவுகள் பள்ளி, பெற்றோர்-ஆசிரியர் குழுக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டும், லஹரியா கூறினார்.
பள்ளிகள் திறக்கப்பட வேண்டுமா அல்லது மூடப்பட வேண்டுமா என்று முடிவெடுக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இருக்க வேண்டும் என்று, இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் பூனம் முத்ரேஜா ஜூலை 2021 இல், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.
மூன்று துறைகளும் --கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சுகாதாரம் -- மாநிலத்தில் வழிகாட்டுதல்களை உருவாக்க ஒன்றாக வேலை செய்ய வேண்டும், மேலும் கோவிட் -19 அல்லது பிற பரவும் நோய்கள் ஏற்பட்டால் மாவட்டத்திற்கு ஒரு திட்டம் இருக்க வேண்டும் என்று அரோரா கூறினார்.
உதாரணமாக, அருகிலுள்ள பள்ளியில், குழந்தை அல்லது ஆசிரியருக்கு கோவிட் -19 தெரிய வந்தால், அந்த பள்ளியானது சத்தீஸ்கரில் 15-20 நாட்களுக்கு மூடப்படும் என்று சந்திரா கூறினார்.
மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்ட போதிலும், ஆறு-ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 57.2% மற்றும் 10-17 வயதுக்குட்பட்டவர்களில் 61.6% பேர் கோவிட் -19 நோயெதிர்ப்புகளை கொண்டிருந்தனர், இது பெரியவர்களின் விகிதத்திற்கு (தடுப்பூசியால் தூண்டப்பட்ட ஆன்டிபாடிகள் உட்பட) கிட்டத்தட்ட சமம் என்று, ஜூன்-ஜூலை 2021 இல் நடத்தப்பட்ட நான்காவது தேசிய செரோ சர்வே காட்டுகிறது. இருப்பினும், கோவிட் -19 இலிருந்து குழந்தைகளில் தீவிர நோய் மற்றும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது, நாங்கள் மே 2021 இல் கட்டுரை வெளியிட்டோம். கோவிட் -19 க்கு பிந்தைய தொற்று, குழந்தைகளில் மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் அல்லது எம்ஐஎஸ்-சி என்று அழைக்கப்படுகிறது, இது சரியான நேரத்தில் பிடிக்கப்படாவிட்டால் ஆபத்தானது என்று நாங்கள் தெரிவித்தோம். சரியான மருத்துவ வசதிகளுடன், எம்ஐஎஸ்-சி சிகிச்சை அளிக்கக்கூடியது என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறினர்.
ஆனால் கோவிட் -19 அல்லது எம்ஐஎஸ்-சி உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருத்துவ நிபுணத்துவம், உபகரணங்கள் மற்றும் அணுகுமுறை தனித்துவமானது மற்றும் இது இந்தியாவில் ஒரு சவாலாகும், இங்கு பல தசாப்தங்களாக நிதி மற்றும் புறக்கணிப்பால் சுகாதார உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று, நாங்கள் மே 2021 இல் கட்டுரை வெளியிட்டோம்.
தெர்மோமீட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை அரசு பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டும், இதனால் பள்ளியிலேயே நமக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கும் என்று, ராஜஸ்தான், புகலாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரான மம்தா (அவர் ஒரு பெயரைப் பயன்படுத்துகிறார்) கூறினார். "குழந்தைகளின் வாழ்க்கையுடன் நாம் விளையாட முடியாது (அவர்களின் உடல்நலம் அல்லது கல்வி). வீட்டில் தங்குவது குழந்தைகளை எப்படி மாற்றியது என்பதை நாம் பார்க்கலாம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்புவதற்கு அரசு அனைத்து சாத்தியமான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்,"என்று மம்தா கூறினார்.
கோவிட் -19 முன்னெச்சரிக்கைகள் தவிர, "பள்ளிகள் ஆலோசகர்களை நியமித்து பள்ளிகளில் உளவியல் ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டும்" என்று அரோரா கூறினார்.
பள்ளிகளுக்கு முகக்கவசம் இல்லாத எதிர்காலம் சாத்தியமா?
கோவிட் -19 வழக்குகள் இப்பகுதியில் கட்டுப்பாட்டில் இருப்பதால் முகமூடி மற்றும் உடல் ரீதியான விலகல் விதிகள் குறைவாக முக்கியத்துவம் பெறுகின்றன, மேலும் அதிகமான பெரியவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்படுவதாக லஹரியா கூறினார்.
உதாரணமாக, இங்கிலாந்தில், ஜூலை 2020 முதல் பள்ளி மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் முகக்கவசம் மற்றும் 'முகமூடி'களை பரிந்துரைத்தன. இப்போது, அதிகமான மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருப்பதால், 18.5 வயதுக்குட்பட்டவர்கள் பள்ளியில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை, வகுப்பறைகள் அல்லது பொதுப் பகுதிகளில் பார்வையாளர்கள் வருவதில்லை, மேலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர் கோவிட்19 தொற்றின் நேர்மறையை சோதனையில் கண்டறிந்தாலும், அக்குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. நெரிசலான இடங்களில், பொது இடங்களில் மற்றும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது மட்டுமே முகக்கவசம் அணிவது பரிந்துரைக்கப்படுகின்றன.
பள்ளிகள் குழந்தைகள் திறந்தவெளியில் முகக்கவசம் அணியக்கூடிய சூழ்நிலையை நோக்கமாகக் கொள்ள வேண்டும், பின்னர் சமூக இடைவெளியில் முகக்கவசம் முழுவதுமாக அகற்றலாம். இதனால் குழந்தைகள் சுதந்திரமாக படிக்கவும் தொடர்பு கொள்ளவும் முடியும், லஹரியா கூறினார். "குழந்தைகளுக்கிடையேயான நெருக்கமான தொடர்புகளின் நன்மைகள் கோவிட் -19 இன் அபாயங்களை விட அதிகமாக, குறிப்பாக 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் உள்ளது" என்றார்.
எல்லா நிபுணர்களும் அவ்வளவு உறுதியாக இல்லை. முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி தொடர்ந்து முக்கியமானதாக இருக்கும் என்று காட் கூறினார். "முதல் மற்றும் இரண்டாவது கோவிட் -19 அலைக்கு இடையேயான வழக்குகளில் இது ஒரு அமைதியாக இருக்கலாம்," என்று, அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மற்றும் புளோரிடா மாநிலங்களின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, முகக்கவசம் கட்டாயமில்லை மற்றும் குழந்தைகளில் கோவிட் -19 உயர்வுக்கு பங்களித்திருக்கலாம் என்று கூறினார்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.