புதுடெல்லி: அது, ஜார்க்கண்டின் கிழக்கில் உள்ள, ராம்கார்க் மாவட்டம். கடந்த 2018, ஜூலை 27ஆம் தேதி, 40 வயதான ராஜேந்திர பிர்ஹோர் என்ற ஆதிவாசி, பட்டினியால் உயிரிழந்தார். அவர், “குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடியின குழு”வை (PVTG), சேர்ந்தவர். அரசின் இரு நலத்திட்ட உதவிகளை அணுகி, அவருக்கு கிடைத்திருந்தால், அவரது உயிர் காப்பற்றப்பட்டிருக்கும். ஒன்று, ஓய்வூதிய அட்டை; மற்றொன்று, ரேஷன் அட்டை.

இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில், 13 பேர் பட்டினிச்சாவு அடைந்துள்ளதாக, உணவுக்கான உரிமை (RTF) பிரசார குழுவின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவருமே, இந்தியாவின் ஏழ்மை மக்களுக்கு ரேஷன் உணவு பொருட்களை வழங்கும், அந்தோத்யாய் அன்ன யோஜனா (AAY) திட்ட பயனாளிகளாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், பெரும்பாலானவர்களும் பட்டினியால் உயிரிழந்ததாக கூறப்படுவதை ஜார்க்கண்ட் அரசு மறுத்துள்ளது. (அந்த மறுப்புகளையும் இங்கே, இங்கே நீங்கள் இங்கேயே படிக்கலாம்). இந்த இறப்புகளோடு பட்டினியை தொடர்புபடுத்தி, சமூக ஆர்வலர்கள் சிலர், அரசியல் விளையாட்டு ஆடுவதாக, மாநில உணவுத்துறை அமைச்சர் சர்யூ ராய் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த இறப்பு தொடர்பாக, மருத்துவ நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இந்தியா ஸ்பெண்ட் கருத்து கேட்டது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது, ஊட்டச்சத்து மற்றும் பட்டினிக்கு இடையே உள்ள தொடர்பு என, இரண்டு அம்சங்களை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

  • மருத்துவ ரீதியாக, இந்த இறப்புக்கள் பெரும்பாலும் தொற்றுநோய்கள் மற்றும் நோய்களால் ஏற்படுகின்றன. ஆனால் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, இதனால் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு உடல் உட்படுகிறது;
  • வறுமை, அரசின் அக்கறையின்மை, ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பது கட்டாயம் போன்றவையும். ஆதாருடன் ரேஷன் அட்டையை இணைக்காத ஏழை பயனாளிகள், உணவு தானியம் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது, ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழி வகுத்து, கடைசியில் இறப்பில் முடிகிறது.

கீழேயுள்ள அட்டவணையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2017 செப்டம்பர் மாதத்தில் இருந்து, 2018 ஜூலை வரை இறந்தவர்களில் பாதிப்பேர், உணவின்று மடிந்துள்ளனர். அவர்கள், பொதுவினியோக திட்டம் (PDS) அல்லது அன்ன யோஜனா திட்டத்தில் ரேஷன் பொருட்களை பெறாதவர்கள்.

ரேஷன் அட்டை மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்துவதால் எழுந்த சிக்கல்களே இதற்கு காரணம் என்று உணவு உரிமை (RTF) ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆதார் என்பது, 12 இலக்க எண்ணுடன் கூடிய, அரசால் வழங்கப்படும் அடையாள அட்டை; அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற, இந்த எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Starvation Deaths in Jharkhand, September 2017 To July 2018
Name of victim Age (In years) Block, District Date of death Details
1 Santoshi Kumari* 11 Jaldega, Simdega Sep 28, 2017 Family denied ration for five months as its ration card was cancelled for want of a link to Aadhaar.
2 Baijnath Ravidas 40 Jharia, Dhanbad Oct 21, 2017 Despite repeated applications, the family did not get a ration card.
3 Ruplal Marandi* 60 Mohanpur, Deoghar Oct 23, 2017 Family denied ration for two months as the thumbprint of Ruplal and his daughter did not work in the Aadhaar-based biometric authentication (ABBA) point-of-sale machine.
4 Premani Kunwar* 64 Danda, Garhwa Dec 1, 2017 After September 2017, Premani’s pension was redirected to someone else’s bank account linked with her Aadhaar. Premani did not receive her ration in November 2017 even though she successfully authenticated herself through ABBA. MGNREGS work unavailable.
5 Etwariya Devi* 67 Majhiaon, Garhwa Dec 25, 2017 The family did not get ration from October to December 2017 due to ABBA failure. Etwariya’s old pension was not credited in her account in November. In December, the Common Service Point operator did not give her the pension as the internet connection was disrupted just after she authenticated through ABBA. MGNREGS work unavailable.
6 Budhni Soren 40 Tisri, Giridih Jan 13, 2018 The family was not issued a ration card (presumably as it did not have Aadhaar). Budhni Soren was also not issued a widow pension.
7 Lukhi Murmu* 30 Hiranpur, Pakur Jan 23, 2018 The family was denied its PDS rice since October 2017 due to ABBA failure. In June 2017, the family’s Antyodaya Anna Yojana card was converted into a priority ration card without its knowledge. No MGNREGS work available in the village.
8 Sarthi Mahtain* Exact age not available Dhanbad Apr-18 She was denied her ration and pension for several months as she could not go to the ration shop and bank for Aadhaar-based biometric authentication due to illness.
9 Yurai Devi Exact age not available Ramna, Garhwa May-18 Denied ration
10 Savitri Devi* 60 Dumri, Giridih Jun-18 Did not have a ration card despite having applied for it. She was sanctioned a widow pension in 2014, but the first pension instalment was transferred in her account in only April 2018 as her Aadhaar was not linked with her bank account. No MGNREGS work available in the village for the past two years.
11 Mina Musahar 45 Itkhori, Chatra Jun-18 Did not have ration card or shelter. Was forced to beg for food and was hungry for four days.
12 Chintaman Malhar 50 Mandu, Ramgarh Jun-18 Was not issued a ration card or particularly vulnerable tribal group pension. Lived in makeshift shelter. No MGNREGS work available. Lived in state of semi-starvation.
13 Lalji Mahto 70 Narayanpur, Jamtara Jul-18 Did not receive pension for the last three months
14 Rajendra Birhor 40 Mandu, Ramgarh Jul-18 Was not issued a ration card and particularly vulnerable tribal group pension.

Source: Right To Food Campaign
* Cases where Aadhaar-related failures clearly contributed to starvation

அரசு கூறினாலும், ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் தொடர்கிறது

பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ், 2016 ஜூலை மாதம், காகித நடைமுறையற்ற பொதுவினியோக திட்டத்தை ஜார்க்கண்ட் அரசு அறிவித்தது. அதன்படி ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிடப்பட்டதாக, தி வயர், ஜூலை18, 2018ல் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த நடைமுறைக்கு இரண்டு தேவைகள் உள்ளன. ஒன்று, ஒவ்வொரு ஓய்வூதிய மற்றும் ரேஷன் அட்டைகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். இரண்டாவது, பொதுவினியோக திட்டத்தில் ஒவ்வொரு முறை ரேஷன் பொருள் வாங்கும் போதும், பயனாளர் தனது கைவிரல் ரேகையை, ரேஷன் கடையில் உள்ள பாயிண்ட் ஆப் சேல் என்ற கருவியில் பதிய வேண்டும். இந்த சரிபார்ப்புக்கு பிறகே பொருளை பெற முடியும். பாயிண்ட் ஆப் சேல் என்ற இந்த கருவி, ஒவ்வொரு ரேஷன் கடையிலும் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பரிவர்த்தனையும் அங்கீகரிக்கப்படுகிறது.

ரேஷன்கார்டு – ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்ற நடைமுறைக்கு பின் இரண்டு மாதத்தில், ராஞ்சி மாவட்டத்தில், 49% அல்லது பாதியளவுக்கே பொருட்களை பெற்றுள்ளது, அரசுக்காக 2016 ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில், பகுப்பாய்வு பொருளாதார வல்லுனர் ஜீன் டிரெஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உணவு தானியங்கள் மறுக்கப்பட்டது (இங்கு, இங்கு, அதாவது இங்கு மட்டுமே) குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவினியோக திட்டத்தில் உணவு பொருட்களை வாங்க, ஆதார் கட்டாயமில்லை என்று, 2017 அக்டோபரில் ஜார்க்கண்ட் அரசு தெரிவித்தது. எனினும், மாநிலத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள், ஆதார் கட்டாயம் என்று நிர்பந்தம் செய்வதாக, சமூகநல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பிர்ஹார் வழக்கிலும் இதுவே நடந்தது.

”உணவு அமைச்சரோ, மற்றவர்களோ ஆதார் இணைப்பு கட்டாயமில்லை என்று ஊடகங்களில் கூறினாலும், ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற முடிவில் இருந்து ஜார்க்கண்ட் அரசு பின்வாங்கவில்லை,” என்று ராஞ்சி பல்கலைக்கழக பேராசியர் டிராஸ், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

ஏழைகளை துயரில் இருந்து காப்பாற்ற, ஓய்வூதிய திட்டம், ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார் எண் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராஞ்சியை சேர்ந்த, உணவு உரிமைகள் அமைப்பை சேர்ந்த ஸ்வாதி நாராயணன் கூறும்போது, “ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த பட்டினிச் சாவுகளுக்கு பின்னால், ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பு உள்ளது,” என்றார்.

”ஜார்க்கண்ட் அரசு உடனடியாக, கிராமப்புறத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்களுக்கு உணவுப்பொருட்கள் சென்றடைவதை, 86% என்பதை 100% ஆக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்வாதி, கடந்த ஓராண்டாக இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உணவு பாதுகாப்பு தொகையை, வழங்க வேண்டும். இதன்மூலம், இனியேனும் பட்டினி சாவுகள் ஏற்படுவதை தடுக்க முடியும்,” என்றார்.

ஜார்க்கண்ட் மாநில உணவு மற்றும் வினியோகத்துறை அமைச்சர் ராய், 14 பேரின் இறப்புக்கும், பட்டினிக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார். ”அரசு திட்டங்களில் ஏற்பட்ட இடைவெளியால், அவர்களிடம் ரேஷன் அட்டை இல்லாமல் போனது. ஆனால், பட்டினியால் அவர்கள் இறக்கவில்லை,” என்று, இந்தியா ஸ்பெண்டிடம், அவர் கூறினார். “உணவு உரிமை ஆர்வலர்களில் பலர் பாரதிய ஜனதா அரசுகளுக்கு எதிரான உந்துசக்தியாக, களத்தில் உள்ளனர். அவர்கள், டெல்லியில் பட்டினிச்சாவு பற்றி பேசுவதில்லை,” என்றார்.

கடந்த ஜூலை 27, 2018-ல், டெல்லி மந்தாவெலி பகுதியில், மூன்று சகோதரிகள் இறந்து கிடந்தனர். ஊட்டச்சத்துயின்மை அல்லது பட்டினியால் அவர்கள் இறந்திருக்கலாம் என, பிரேதப்பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்தன.

இந்திய மக்கள் தொகையில் சமத்துவமின்மை காரணமாக, அதாவது இந்திய செல்வத்தில் 73%-ல் 1% என்று இருக்கும் போது, பின்தங்கிய மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து வழங்குவதற்கான பொறுப்பு அரசை சேர்ந்தத் என்று, டெல்லியை சேர்ந்த ஆர்.டி.எப் ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தெரிவித்தார். “டெல்லி மற்றும் ஜார்க்கண்டில் அரசியல் விருப்பங்கள் குறைவு; நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசலாம். ஆனால், ஆதார் இணைப்பு கெடுபிடியால், மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்,” என்றார்.

ஆனால், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினரும், புரூக்கிங் இந்தியா நிறுவன ஆராய்ச்சி இயக்குனருமான ஷமிகா ரவி, ”ஆதார் இணைப்பை குறை சொல்லக்கூடாது; இதில் உள்ள அமைப்பு ரீதியான பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்,” என்றார்.

”ஒரு பிழையால் அல்லது வழக்கால், எந்தவொரு நபருக்கும் அரசின் நலத்திட்ட உதவி மறுக்கப்படுவதை ஏற்க முடியாது; அதை நியாயப்படுத்த முடியாது,” என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார். “எனினும், ஆதார் பணிகளில் கவனம் செலுத்தி, அதை வலுப்படுத்த வேண்டும். சில தவறுகள் இருக்கலாம். ஆனால், எந்த நிலையில் தவறு ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. அங்கீகார சரிபார்ப்பில் பிரச்சனையா? அல்லது பொதுவினியோக திட்டத்துடன் ஆதாரை இணைத்ததில் பிரச்சனை எழுந்துள்ளதா? சமூக ஆர்வலர்கள் பலருக்கு, ஆதார் என்பது சாட்டை போல் மாறிவிட்டது. ஆனால், இதில் எங்கு வலி உண்டாகிறது என்பதை அறிந்து, இத்திட்டத்தை வலுப்பெற செய்யவேண்டும்,” என்றார்.

ரவியின் கருத்துடன் பாதியளவு டிரேஸ் உடன்படுகிறார். ”நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்றால், அது உண்மையான பயனாளிகளை சென்றடைவதாக, நோக்கம் இருக்க வேண்டும். அதே நேரம், நம்பகமாகவும், கட்டாயப்படுத்தாமல் செய்ய முடியும்,” என்று அவர் கூறுகிறார். ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையை கட்டாயப்படுத்தக்கூடாது என்பதும், அவரது கருத்தாகும்.

பட்டினி சாவை சமூக, மருத்துவ அறிக்கைகளால் நிலை நிறுத்தத்தப்பட வேண்டும்; பிரேத பரிசோதனை அறிக்கையல்ல – சமூக ஆர்வலர்கள்

கடந்த ஜூன் 2018-ல், பட்டினியால் இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்றது ஜார்கண்ட் அரசு. ஆனால், பட்டியால் தான் இறந்தனரா என்பதை நிரூபிக்க, இது சரியான முறையல்ல என்று, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இறந்தவர்களுக்கான பிரேதப்பரிசோதனை அறிக்கையை விட, அவர்கள் வசித்த பகுதிகள் குறித்த சமூக, மருத்துவ அறிக்கைகள் மிக முக்கியம் என்று, நாராயணன் சுட்டிக் காட்டுகிறார். "ஓராண்டுக்கு பிறகு, இறுதியாக பட்டினி பற்றிய வரையறைகளை ஜார்க்கண்ட் அரசு மாற்றி கொண்டது. ஆனால் வேறு எதையும் செய்யவில்லை," என்று, அவர் மேலும் கூறினார்.

கடந்த 2018 மார்ச்சில், 9 உறுப்பினர்களை கொண்ட குழுவை ஏற்படுத்தியது. இது, பட்டினி சாவு என்பதை அதிகாரபூர்வமாக வரையறை செய்வதற்கான அளவீடுகளை தெரிவிக்கும். எனினும், 2வது முறை காலக்கெடு நிர்ணயித்தும், இக்குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று, 2018, ஜூலை 31-ஆம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

"எனக்கு தெரிந்தவரை, தகவல்களை குழு பகுப்பாய்வு செய்துள்ளது மற்றும் (அதன்) கிட்டத்தட்ட அறிக்கையில் தன் அறிக்கையுடன் செய்யப்படுகிறது," என்று ஜார்க்கண்ட் மந்திரி ராய் தெரிவித்தார். “இக்குழு விரைவில் இறுதி அறிக்கை வெளியிடும்; எனினும், சரியான தேதியை என்னால் கூற இயலாது. ஏனெனில், சுய அதிகாரம் கொண்ட அக்குழுவே, முடிவெடுக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

“உணவு பற்றாக்குறை, பட்டினி குறித்து, ஒரு குழுவொன்றை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இப்பிரச்சனை குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது என்று, திட்டக்குழு முன்னாள் செயலாளரும், உணவு மற்றும் பசி பற்றிய உச்ச நீதிமன்ற கண்காணிப்பு குழுவின் முன்னாள் ஆணையருமான, என்.சி.சக்ஸீனா தெரிவித்தார்.

”என் அனுபவத்தில், ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி குறித்து, ஜார்க்கண்ட் அரசு வழக்கம் போல் செயல்படுகிறது. முறையான, சரியான தகவல்களை சேகரிப்பதில் தங்கள் சக்தியை செலவிட வேண்டும். குழந்தைளுக்கு மோசமான ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டது எப்படியென்றும், அவர்களை அடையாளம் கண்டு, கலந்துரையாட வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஊட்டச்சத்தும் நோய் பாதிப்பு

கடந்த 2017, செப்டம்பர் மாதம், 11 வயது சந்தோஷி என்ற சிறுமியின் இறப்புக்கு பட்டினி தான் காரணம் என்று கூறப்பட்டது. ரேஷன் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று கூறி, அச்சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், ரேசன் பொருட்கள் மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், மலேரியாவால் தான் அவர் இறந்ததாக, பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமீத் மால்வியா, இறப்புக்கு எவ்வகையிலும் பட்டினி காரணமில்லை என்றார்.

எனினும், இந்தியா ஸ்பெண்டிடம் கருத்து கூறிய நிபுணர்கள், ”ஊட்டச்சத்து குறைபாடும், நோயும் ஒன்றையொன்று தொடர்புடையவை; அவற்றை பிரிப்பது கஷ்டம். 2016ஆம் ஆண்டு அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு நோய் தாக்க, ஊட்டச்சத்து குறைபாடும் முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

”போதிய ஊட்டசத்து இல்லாதது அல்லது குறைபாடு இருப்பது, நோய் பாதிப்பை ஏற்படுத்தி, உயிருக்கே அச்சுறுத்தலாக மாறிவிடும்,” என்று, போபால் எய்ம்ஸ் மருத்துவமனை சிறுநீரக பிரிவு மருத்துவர் பாவ்னா திங்ரா தெரிவித்தார். “எனினும், நோய் தாக்கங்கள் குழந்தைகளின் பசியை போக்கலாம்; ஏற்கனவே ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலைமையை இது மேலும் பாதிக்கும்,” என்றார்.

இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் கூடுதல் பேராசிரியரும், தொற்றுநோய் நிபுணருமான கிரிதர் ஆர்.பாபு, உடலை பலவீனப்படுத்த ஊட்டச்சத்து எப்படி வேலை செய்கிறது என்று விளக்கியுள்ளார். அதன்படி, கொழுப்பு குறைவால், குறுகிய காலத்தில் எடையிழப்பிற்கு ஊட்டச்சத்து குறைபாடு வழிவகுக்கிறது. இதில், தசைகளும், சில உறுப்புகளும் அடங்கும். நீடித்த குறைந்த உணவு உட்கொள்ளும் என்பது, செயல்பாட்டுக்கான ஆற்றல் இருப்பு மற்றும் உடல் அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களை குறைத்துவிடுகிறது,” என்றார்.

”இறப்புக்கு பட்டினி அரிதான காரணமாக உள்ளது; ஆனால், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது” என்கிறார், குஜராத் மாநிலம் பூஜ் பகுதியை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் நேஹல் வைத்யா.

”ஒருவேளை, பல நாட்களுக்கு குழந்தை பட்டினி கிடந்து, ஊட்டச்சத்து குறைபாடு இருக்குமெனில், முதலில், அக்குழந்தையின் உடல் மற்றும் பசித்தன்மையை ஆய்வு செய்து, மருத்துவ மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும். பின்னர் சரியான விசாரித்து, குழந்தைக்கு உணவளிப்பது குறித்து, பெற்றோருக்கு அறிவுரை வழங்க வேண்டும்," என்றார். எனினும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில், உள்கட்டமைப்பின்மை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இத்தகைய பிரச்சனைகளை சமாளிக்க சிறப்பு மருத்துவர்கள், குழந்தைநல மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் தேவை,” என்றார்.

ஜார்க்கண்ட் மாநில ஊட்டச்சத்து சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு கடும் ஊட்டக்குறைவு இருப்பதும், நோயில் இருந்து மீள்வதில் தாமதம், ஆற்றல் குறைவு, அதிக எண்ணிக்கையில் உடல்நல பாதிப்பு இருப்பது, 2018ஆம் ஆண்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் ஊட்டச்சத்து பற்றாக்குறை என்பது, மிகுந்த விளைவுகளை ஏற்படுத்தலாம், இது தனிநபரின் வேகம், உணர்ச்சி, அறிவாற்றல், சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை பாதிக்கும் என்று, ஜூலை 22, 2017 அன்று இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்திருந்தது.

2017ஆம் ஆண்டு கிராமப்புற சுகாதார புள்ளி விபரங்களின்படி, ஜார்க்கண்டில் உள்ள சமூக சுகாதார மையங்களில் (அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவர், மருத்துவர்கள், குழந்தை மருத்துவர்கள்) 90% பற்றாக்குறை உள்ளது. இந்தியாவில் மருத்துவர், நோயாளிகள் விகிதம், 1: 1,674 என்று உள்ளது. இது, அர்ஜெண்டீனாவை விட 75%; அமெரிக்காவை விட 70% குறைவு என்று, நவம்பர் 16, 2016 அன்று இந்தியா ஸ்பெண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

சமுதாய சுகாதார மையங்கள் (சி.எச்.சி), இரண்டாம் நிலை அளவிலான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் முதன்மை சுகாதார மையங்களில் இருந்து குறிப்பிடப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் அளிக்கின்றன. இவை, பழங்குடியின, மலைப்பிரதேச அல்லது பாலைவன பகுதிகளை சேர்ந்த சுமார் 80,000 பேர், சமவெளி பகுதியை சேர்ந்த, 1,20,000 பேர் சமுதாய சுகாதார மையங்களால் பலன் பெறுகின்றனர்.

(தேவனிக் சஹா, அமெரிக்காவில் உள்ள சக்சஸ் பல்கலைக்கழகத்தில், இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸில், ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார். மேலும், டில்லியில், கொள்கை மற்றும் மேம்பாட்டு ஆலோசனைக் குழுவில், ஆலோசகராகவும் உள்ளார்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.