இந்த ஆண்டு நவம்பரில், ஐக்கிய நாடுகள் சபையின் பருவ நிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு (COP26) நடைபெறுவதற்கு முன்னதாக, காலநிலை நெருக்கடி வெளிப்படையாக தெரிவதாலும், அரசுகள் செயல்படுவதற்கான நிர்பந்தம் அதிகரிப்பதாலும், இந்த வாரம் எங்கள் தரவுக்காட்சி தொடரானது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவல் மற்றும் இந்தியாவில் உற்பத்தியின் நிலையை ஆராய்கிறது.

கடந்த 2020-21 நிதியாண்டில் ஜனவரி 2021 வரை, இந்தியா 123 பில்லியன் யூனிட் (1 யூனிட் 1 கிலோவாட் மணிநேரம்) புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்தது, இது மொத்த மின் உற்பத்தியில் 10.85% ஐ குறிக்கிறது-இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 6.76% ஆக இருந்தது.

இதில், மாநிலங்களுக்கு இடையே உற்பத்தி மற்றும் நுகர்வில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறைந்ததாக" கருதப்படும் மாநிலங்களில், மொத்த நுகர்வுக்கு புதுப்பிக்கத்த ஆற்றல் நுகர்வு சதவீதம் மிக அதிகமாக உள்ளது - கர்நாடகாவில் 43% ஆகவும், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் 20% க்கும் அதிகமாகவும் உள்ளது.

மறுபுறம், உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் ஹரியானா போன்ற பல பெரிய நுகர்வோர் மாநிலங்கள், புதுப்பிக்கத்த ஆற்றலில் இருந்து 4%, 1.4% மற்றும் 1.3% ஆற்றல் நுகர்வுக்கு மேல் இல்லை.

தரவுக்காட்சி வடிவமைப்பை, கோகுலானந்தா நந்தன் மற்றும் குலால் சலில் மேற்கொண்டனர்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.