இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை மேலும் அதிகரிப்பதற்கான மிக முக்கியமான சவால், மின் விநியோக நிறுவனங்களின் (டிஸ்காம்கள்) மோசமான நிதி நிலை ஆகும், அவற்றில் பெரும்பாலானவை மாநில அரசுகளுக்கு சொந்தமானவை. ஏறக்குறைய அனைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலும் இத்தகைய டிஸ்காம்களால் வாங்கப்படுகிறது, இதன் விளைவாக, மிக நீண்ட மற்றும் நீடித்த கட்டண சுழற்சிகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, டிசம்பர் 2020 இல், டிஸ்காம்களில் இருந்து மின் உற்பத்தியாளர்களுக்கு தாமதமாக பணத்தின் மதிப்பு 110,000 கோடி ரூபாய் (இது, புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மட்டுமல்ல, உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின் ஆற்றலுக்கும்). பெரும்பாலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு 6-18 மாதங்கள் வரை தாமதமாகும்.

மற்றொரு சவால் என்னவென்றால், புதுப்பிக்கத்தக்க மின்சரத் திறனின் சதவிகிதம் அதிகரிக்கும்போது, ​​வானிலை காரணமாக அதன் உற்பத்தியில் உள்ள மாறுபாடு, டிரான்ஸ்பார்மர் தொகுப்பை இயக்குவது தொழில்நுட்ப ரீதியாக தேவைப்படும் பணியாக அமைகிறது. சமீப காலம் வரை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் மின்திறன் குறைவாக இருந்தது, ஆனால் இப்போது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் அதிக சக்தியை உற்பத்தி செய்கின்றன, அவை கிரிட் சீராக இயங்குவதை உறுதி செய்ய, சில நேரங்களில் உற்பத்தியைக் குறைக்க அல்லது நிறுத்த வேண்டும். சமீபத்தில்தான் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தியின் கணிப்பு மற்றும் திட்டமிடல் முயற்சிகள் அதிகரித்தன. இது அடுத்த 24 மணிநேரங்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க உதவுகிறது, எனவே கிரிட் செயல்பாடுகளை சிறப்பாக திட்டமிடுகிறது.

நாட்டின் பலவீனமான டிரான்ஸ்மிஷன் கிரி ஒரு சவாலாக உள்ளது, குறிப்பாக புதுப்பிக்கத்தக்க மின்சாரத் திட்டங்கள், பெரும்பாலும் தொலைதூர பகுதிகளில் அமைக்கப்பட்டு, பெரிய நகரங்கள் மற்றும் நுகர்வு மையங்களில் இருந்து விலகி உள்ளது. உதாரணமாக, லேவில் பெரிய சோலார் திட்டங்களை உருவாக்குவதற்கான லட்சிய திட்டங்கள், சமீபத்தில் பலவீனமான பரிமாற்ற உள்கட்டமைப்பைக் காரணம் காட்டி, ரத்து செய்யப்பட்டன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை ஆதரிப்பதற்காக கிரிட்டை வலுப்படுத்த, 2013 இல் தொடங்கப்பட்ட லட்சிய பசுமை ஆற்றல் பெருவழிப்பாதை திட்டம், நிதி மற்றும் நிலம் கையகப்படுத்தும் தடைகளையும் எதிர்கொண்டது.

சமீபகாலமாக, நுகர்வைக் காட்டிலும் இந்தியா அதிக மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது, கடந்த பத்தாண்டுகளில் நிலக்கரித் திறனை அதிக அளவில் உருவாக்கியதன் காரணமாக, நம்பிக்கையான தேவை வளர்ச்சி கணிப்புகளின் பின்னணியில் உள்ளது. எனவே, புதிய திட்டங்கள் செயல்படத் தொடங்கும் போது, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வாங்குவதற்கான புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட விநியோக நிறுவனங்கள் மறுத்துவிட்டன. கையொப்பமிடாத 'மின் கொள்முதல் ஒப்பந்தங்கள்' (பிபிஏ), முதலீட்டாளர்களின் மனநிலையைக் குறைத்து, மேலும் ஏலத்தில் ஈடுபடுவதால் 19,000 மெகாவாட் திறன் உருவாக்குதல் குழுவில் உள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை கணிசமாக வளர்ந்து, பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதில் இந்தியா மற்றும் உலகின் லட்சியத்தில் முக்கிய பங்கு வகிக்க முடியும். இருப்பினும், இந்த அற்புதமான வளர்ச்சியைத் தொடர பல தலையீடுகள் தேவை: விநியோக நிறுவன சீர்திருத்தங்கள், பேட்டரி சேமிப்பு தீர்வுகள் மற்றும் கரையாண்மை பரப்பு காற்றாலை விசையாழிகள் மற்றும் புதுப்பித்தலின் அதிகரித்த பங்கை, கிரிட்டில் ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்ப தீர்வுகள் போன்ற புதிய முன்னேற்றங்களை ஏற்கும் கட்டமைப்பாகும்.

தரவுக்காட்சி வடிவமைப்பை, கோகுலானந்தா நந்தன் மற்றும் குலால் சலில் மேற்கொண்டனர்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.