புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும், ஏனெனில் அடுத்தடுத்த அரசுகள் இதற்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளன. இதற்கான காரணங்களுள் முதன்மையானது, எரிசக்தி பாதுகாப்புக்கான தேடலாகும், ஏனெனில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மரபுசார்ந்த எரிசக்தி ஆதாரங்கள், இறக்குமதி செய்யப்பட்டவை அல்லது தரமற்றவை. மாறாக, இந்தியா அதன் பரந்த மற்றும் மாறுபட்ட புவியியல் அம்சங்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அதனிடம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் நிறைந்துள்ளன. மிக சமீபத்தில், காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு பற்றிய உலகளாவிய கவனம், இந்தியாவில் புதுப்பிக்கத்தக ஆற்றலில் வளர்ச்சியை மேலும் தூண்டியது.

நிலக்கரி அடிப்படையிலான மின்சாரத்தின் விலை/கட்டணம் முன்பைவிட சமீபத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கான கட்டணங்கள் குறைவாக இருப்பதால், சரிவடைந்த கட்டணங்கள் இதற்கு உதவியுள்ளன. சூரிய ஒளி மின்சாரக் கட்டணம் மிகவும் வியத்தகு முறையில் குறைந்துள்ளது, உலகெங்கிலும் உள்ள விரைவான பெரிய அளவிலான நிறுவல்களுக்கும் நன்றி.

இந்தியாவுக்கு குறிப்பிட்ட மற்றொரு முக்கியமான காரணம், ஆதார சக்தியின் மாதிரியில் ஏற்பட்ட மாற்றம். முன்னதாக, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கான திட்டங்களுக்கு வரி மற்றும் கட்டண மானியங்களை வழங்குவதில் தான் அரசின் கவனம் இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில், இது ரிவர்ஸ் ஏலம் மூலம் பெரிய திட்டங்களை வழங்கும் வகையில் மாறியுள்ளது (இது, மொபைல் ஸ்பெக்ட்ரம் ஏலம் போன்றது, அதில் குறைந்த தொகைக்கு கேட்பவருக்கு உரிமம் கிடைக்கும்). இதன் விளைவாக உலக முதலீட்டாளர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் மிகப் பெரிய திட்டங்களை அமைத்துள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்சாரம், வழக்கமான ஆற்றலைவிட விட மலிவானது என்பதால், விநியோக நிறுவனங்களுக்கு (அல்லது 'டிஸ்காம்கள்') இது கவர்ச்சிகரமானதாகிவிட்டது. அதே நேரத்தில், பல தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்களும், மின் வினியோக நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் பெறுவதற்கு ஆகும் செலவை விட, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்சாரம், குறிப்பாக சூரிய ஒளி மின்சாரம் மலிவானது என்பதை அறிந்துள்ளன. அவை, சொந்த உபயோகத்திற்காக பெரும்பாலும் சூரிய ஒளி கூரை மற்றும்/அல்லது தொழில்துறை/வணிக வளாகங்களில் 'கேப்டிவ்' மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தன.

இது, தீவிரமான இலக்குகள் மற்றும் அரசின் மானியம் போன்ற உந்துதலால், நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது.

தரவுக்காட்சி வடிவமைப்பை, கோகுலானந்தா நந்தன் மற்றும் குலால் சலில் மேற்கொண்டனர்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.