புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் இந்தியா முழுவதும் சீரற்ற முறையில் விநியோகிக்கப்படுகின்றன. வணிக ரீதியாக சாத்தியமான காற்றாலை மின்சாரம் 1990 ஆம் ஆண்டுகளில் முதன்முதலில் பெரிய அளவில் உருவாக்கப்பட்டது, பெரும்பாலும் மேற்கு மற்றும் தென் மாநிலங்களில், வேகமான தேய்மானத்திற்கான (AD) ஊக்கத்தொகை தந்த அரசுக்கு நன்றி. வேகமான தேய்மானம் (AD) என்பதற்கு வருமான வரிச்சலுகையாகும், அதாவது சொத்துக்களின் விரைவான தேய்மானமாக கருதப்பட்டு வரிச்சுமையைக் குறைக்கிறது. (புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பொறுத்தவரை, வேகமான தேய்மான விகிதம் 100% முன்பு இருந்தது, இப்போது அது 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மற்ற இயந்திரங்களுடன் சாதகமாக ஒப்பிடுகிறது, இது 15% விகிதத்தில் குறைகிறது.)

ஒட்டுமொத்த காற்றாலை நிறுவங்களில் கிட்டத்தட்ட 83% ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு கொண்டுள்ளன. காற்றாலை மின்சாரம் பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் உருவாக்கப்படுகிறது என்ற பொதுவான தவறான கருத்துக்கு எதிராக, பல பெரிய காற்றாலை திட்டங்கள், உண்மையில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவின் உட்புறங்களில் அமைந்துள்ளன. மாறாக, ஒடிசா கடலோரத்தில் கிட்டத்தட்ட எந்த காற்றாலை திட்டங்களும் இல்லை.

சூரிய சக்தி வளங்கள் இன்னும் சமமாக விநியோகிக்கப்படுகின்றன. ஆயினும், ஏற்கனவே காற்றாலை மின்சாரம் அதிகம் உள்ள மாநிலங்களில் பெரும்பாலான சூரிய ஆற்றல் சேர்ப்பு காணப்படுகிறது. காற்றாலை திட்டங்கள் மூன்று தசாப்தங்களாக இயங்கி வருவதால், புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களை அமைப்பதற்கான உகந்த கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பை இது சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா, வரலாற்று ரீதியாக புதுப்பிக்கத்தக்க நிறுவல்கள் இல்லாமல், சமீபத்தில் தங்கள் புதுப்பிக்கத்தக்க கொள்கைகளை உருவாக்கியுள்ளன. இதன் விளைவாக, சமீபத்திய ஆண்டுகளில் அங்கு சூரிய சக்தி வரத்தொடங்கியது.

தரவுக்காட்சி வடிவமைப்பை, கோகுலானந்தா நந்தன் மற்றும் குலால் சலில் மேற்கொண்டனர்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.