உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சக்தியின் விகிதமாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியின் அடிப்படையில் இப்போது இந்தியா (10.8%; ஏப்ரல் 20 - ஜனவரி 21) அமெரிக்கா (12.5%; ஜனவரி - டிசம்பர் 2020), மற்றும் சீனா (9.5%; ஜனவரி - டிசம்பர் 2020) ஆகியவற்றுடன் ஒப்பிடக்கூடியதாகவும், ஆனால் ஜெர்மனியுடன் ஒப்பிடும்போது மங்கலாகவும் (44.9%; ஜனவரி - டிசம்பர் 2020) உள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தியைப் புரிந்துகொள்ளும்போது செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், இந்தியாவின் நிறுவப்பட்ட திறன் அதன் மொத்த மின் உற்பத்தித் திறன் 24.5% ஆகும், மொத்த மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு 10.85% மட்டுமே. ஏனென்றால், அனல்மின் ஆலைகள் 24X7 இயக்கும் போது, புதுப்பிக்கத்த மின் ஆலைகள் (குறிப்பாக காற்று மற்றும் சூரிய ஒளி மின்சக்தி) வானிலை நிலையைப் பொறுத்தது - காற்றின் வேகம் அல்லது சூரிய ஒளியை நம்பியுள்ளன. மற்றும், நிச்சயமாக, சூரிய ஒளி மின்திட்டங்கள் பகல் நேரத்தில் மட்டுமே மின்சாரத்தை உருவாக்குகின்றன. தொழில்சார்ந்த மொழியில், இது 'திறன் பயன்பாட்டு காரணி' அல்லது CUF (capacity utilisation factor) என குறிப்பிடப்படுகிறது. நிலக்கரி அடிப்படையிலான ஆலைகள் 85-90%வருடாந்திர திறன் பயன்பாட்டு காரணிகளை கொண்டிருக்கும் போது, ​​காற்று மற்றும் சூரிய ஒளி மின்திட்டங்கள் சராசரியாக 20% ஆகும்.

இதன் பொருள் அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நுகர்வதற்கு, 5 மடங்கு பெருக்கத்திற்கான திறன் நிறுவப்பட வேண்டும். இந்தியா அதிக லட்சிய இலக்குகளை நிர்ணயித்தால் சவாலின் அளவை இது தெளிவுபடுத்துகிறது; உலகளவில், 'நிகர பூஜ்ஜியம்' இலக்குகளை அறிவிக்க, நிர்பந்தம் அழுத்தம் உருவாகிறது.

தரவுக்காட்சி வடிவமைப்பை, கோகுலானந்தா நந்தன் மற்றும் குலால் சலில் மேற்கொண்டனர்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.