இந்தூர்: முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 2021-22 ஆம் ஆண்டில் பெரும்பாலான மாநிலங்கள், கல்விக்கான தங்களது பட்ஜெட்டில் நிதியை அதிகரித்திருந்தாலும் அல்லது ஒரே மாதிரியாக வைத்திருந்தாலும், அவை மொத்த மாநில பட்ஜெட்டில் அதே அளவோ அல்லது குறைவான விகிதத்தையே கல்விக்காக செலவிட்டன. 12 மாநிலங்கள் – அதாவது ஒடிசா, குஜராத், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியன, 2021-22 ஆம் ஆண்டில் தங்கள் ஒதுக்கீடுகளை சதவீத அடிப்படையில் குறைத்துள்ளன. கொரோனா தொற்றுநோயை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டது, மற்றும் டிஜிட்டல் கற்றலால் கல்வியில் சமத்துவமின்மையை மோசமாகி இருக்கும் சூழலில், அது குழந்தைகளின் சமூக வளர்ச்சி மற்றும் மோசமான கற்றல் விளைவுகளால் இழப்பை சந்திக்கும் சூழலில், நிதி குறைந்துள்ளது.

பள்ளிக் கல்வியை 'மீண்டும் தொடங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும்' நாடு முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் குழுவான, கல்வி அவசரநிலைக்கான தேசியக் கூட்டமைப்பு (NCEE), ஒரு பாலிசி டிராக்கரை வெளியிட்டது; அதன் ஆய்வில், 21 மாநிலங்களுக்கான 2020-21க்கான பட்ஜெட் மதிப்பீடுகள் மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீடுகள், அத்துடன் 2021-22க்கான பட்ஜெட் மதிப்பீடுகள் ஆகியவை பகுப்பாய்வு செய்யப்பட்டன. (இந்த விதிமுறைகளைப் புரிந்து கொள்ள, எங்கள் விளக்கத்தைப் படிக்கவும்).

ஒட்டுமொத்தமாக, 21 மாநிலங்களில் 19 மாநிலங்கள் 2020-21 இல் அவர்கள் நிர்ணயித்ததை விட குறைவாக செலவழித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது; அதாவது, அவர்களின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் அந்த ஆண்டிற்கான அவர்களின் பட்ஜெட் மதிப்பீடுகளை விட குறைவாக இருந்தது.


தொற்று நோயின் இரண்டாவது அலையின் போது (2021-22), இரண்டு மாநிலங்கள் (அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாடு) 2020-21க்கான மதிப்பிடப்பட்ட செலவினத்தை (அல்லது திருத்தப்பட்ட மதிப்பீடு) விட குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. ஆனால், நாம் மேலே கூறியது போல், இந்த திருத்தப்பட்ட மதிப்பீடுகள் கோவிட்-19 இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் முன் வழங்கப்பட்ட, கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட குறைவாகவே இருந்தன. எனவே, இவற்றில் ஐந்து மாநிலங்கள் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் கல்விக்கு குறைவாகவே ஒதுக்கியுள்ளன.


ஆனால், முழுமையான எண்ணிக்கைகள், பெரிய தோற்றத்தை வெளிப்படுத்தாது எனப்தை, நாம் கீழே விளக்குகிறோம்.

தொற்றுநோயின் முதல் அலை உண்டான ஆண்டில், 21 மாநிலங்களில் 14 மாநிலங்கள் தங்கள் கல்வி பட்ஜெட்டை, மொத்த பட்ஜெட்டின் விகிதமாக குறைத்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த மாநிலங்கள் அந்த ஆண்டு தங்கள் பட்ஜெட்டில் கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை குறைத்தன. இந்த 14 மாநிலங்களில் எட்டு மாநிலங்கள், அந்த ஆண்டில் மொத்த செலவினங்களை அதிகரித்தன.


இதை முன்னோக்கி வைக்க, 2020-21 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன, மற்றும் ஆன்லைன் கற்றல் டிஜிட்டல் கருவிகளை அணுகும் மாணவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான சமத்துவமின்மையை அதிகரித்தது.

தொற்றின் இரண்டாவது அலை உண்டான (2021-22) ஆண்டில், மீண்டும் சதவீத அடிப்படையில், 21 மாநிலங்களில் 12 மாநிலங்கள், 2020-21க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது, கல்விக்கான ஒதுக்கீட்டைக் குறைத்தன. இது, முதல் அலை தணிந்து, இரண்டாவது அலை சில மாதங்கள் ஆகும் போது கூட நீடித்தது. அனைத்து 12 மாநிலங்களும் தங்கள் மொத்த மதிப்பிடப்பட்ட செலவினங்களை அதிகரித்தன, இது கல்விக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை மேலும் குறைக்க பரிந்துரைக்கிறது.


கல்விக்கான நிதியின் பெரும்பகுதி, மாநிலத்தின் சொந்த பட்ஜெட்டில் இருந்து வருகிறது. இந்த நிதிகளில் பெரும்பாலானவை, ஆசிரியர் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவுகள் போன்ற நிலையான, உறுதியான பொறுப்புகளுக்காக செலவிடப்படுகின்றன.

"பல்லாயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் அடிப்படைத் திறன்களை இழந்துவிட்டனர். இந்த அவசரநிலையை எதிர்கொள்ள நமக்கு பெரிய பொது நிதியும், புதுப்பிக்கப்பட்ட பல்லாண்டு கல்வி உத்தியும் தேவை என்று, உலக வங்கியின் முன்னாள் ஆலோசகரும் என்சிஇஇ (NCEE) முக்கிய உறுப்பினருமான சஜிதா பஷீர் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.