மும்பை: கடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதம் (GDP), ஆண்டுக்கு 7% இருந்த போதும், குறைந்த ஊதியம் மற்றும் ஊதிய சமவிகிதத் தன்மை இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (I.L.O) சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 1993-94 மற்றும் 2011-12 இடைப்பட்ட 18 ஆண்டுகளில், ஊதிய விகிதம், இரு மடங்காக அதிகரித்துள்ளது; மொத்த உள்நாட்டு உற்பத்தியும் நான்கு மடங்கு அதிகரித்தது. "இந்திய தொழிலாளர் சந்தையானது உயர்மட்டத்திலான பிரிவு மற்றும் தகவல்தொடர்புகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒழுக்கமான வேலை நிலைமைகள் மற்றும் வளர்ச்சியை இந்தியா அடைவதற்கான பாதையை இது தடுக்கிறது என, இந்தியா ஊதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வேலை மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆய்வு (EUS) மற்றும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) ஆகியவற்றில் இருந்து அரசு ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்களை பயன்படுத்தி, ஊதிய போக்குகளைப் பகுப்பாய்வு செய்து, வளர்ச்சிக்கான கொள்கைகளை பிரதிபலிப்பதற்காக, இந்த அறிக்கை பயன்படுத்தப்பட்டது.

"ஊதிய கொள்கை, இதுவரை குறைவான சம்பளம் பெறுவருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆச்சரியமாக உள்ளது என்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஊதிய நிபுணரும், அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான சேவியர் எஸ்டுபிகான், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். " ஒரு உறுதியான ஊதியக்கொள்கையை நீங்கள் வைத்திருந்தால், தற்காலிக தொழிலாளர்களுக்கு அது பயனளிக்கும்; அன்றாட அடிப்படையில் தங்கள் வருமானத்தை பெறுவதோடு, போதிய வேலை பாதுகாப்பு இல்லாமல் இருப்பர்".

கடந்த 2011-12ஆம் ஆண்டில், 62% பேர் (121 மில்லியன் பேர்), தற்காலிக ஊழியராகவே பணிபுரிந்ததாக, சமீபத்திய தேசிய வேலை மற்றும் வேலைவாய்ப்பு இன்மை குறித்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் வேலைவாய்ப்பு பெருகிய நிலையில், இவை பெரும்பாலும் சாதாரண, பாதுகாப்பற்ற மற்றும் அடிப்படை சமூக பாதுகாப்பு நலன் சாராதவை.

பாலினம், மாநிலங்கள் மற்றும் தற்காலிக / ஊதியம் பெறும் தொழிலாளர்கள் இடையே வேறுபாடுகள் இருப்பது, நாடெங்கிலும் சமமற்ற வேலைவாய்ப்பு நிலையே காட்டுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் சராசரியாக 34% குறைவாகவே சம்பாதிக்கின்றனர் (1993-94 இல் 48%); கிராமப்புற தொழிலாளர்களின் தினசரி ஊதியம்ம் நகர்ப்புறங்களைவிட, 49% குறைவாக உள்ளது.

பிரிவுபட்டுள்ள இந்தியா

பாலினம்

"இந்தியாவில், தொழிலாளர் சந்தைகள் பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன," என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1993-94 மற்றும் 2011-12 ஆம் ஆண்டுகளில் பெண்களின் தினசரி ஊதியங்கள் அதிகரித்த போதும், என்.எஸ்.எஸ்.ஓ. தரவரிசைப்படி, ஒவ்வொரு வேலைவாய்ப்பிலும் ஆண்களை விட பெண் தொழிலாளர்களுக்கு, இன்னும் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.

கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியங்களை வழங்குவதற்கான மத்திய அரசின் ஒரு திட்டமான, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (MGNREGS) நடைமுறைக்கு வருவதற்கு, ஊதிய இடைவெளியை (1993-94ஆம் ஆண்டில் 48% இருந்து 2004-05 இல் 45%; 2011-12ஆம் ஆண்டில், 34% என வீழ்ச்சியடைந்தது) குறைத்துள்ளது. இத்திட்டத்தால் பெண்களுக்கு ஊதியம் உயர்ந்துள்ளதுடன், பாலின ஊதிய இடைவெளியை குறைக்க செய்துள்ளது.

எனினும், 34% இடைவெளி என்பது, 2015 ஆம் ஆண்டின் உலக சராசரியான 23% ஐ என்பதை விட அதிகமாக உள்ளது.

உயர்கல்வி முடித்திருந்தாலும், ஆண் – பெண் பாலின ஊதிய விகிதம் வேறுபாடு அதிகமாகவே உள்ளது. உயர் கல்வியை முடித்த பட்டதாரி பெண் சராசரியாக ரூ. 609; அதேநேரம் பட்டதாரி ஆண் ரூ. 805 ஊதியம் பெறுவதாக, ’2017-ல் ஆண்கள் மற்றும் பெண்கள் ' என்ற அரசின் ஆய்வு தெரிவிக்கிறது.

பாலின சமத்துவமின்மை மற்றும் ஜாதி பாகுபாடு நிரந்தரமாக வைத்திருக்கும் மத நம்பிக்கைகளை இந்தியா கைவிட்டிருந்தால், கடந்த 60 ஆண்டுகளின் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பாதி கால அளவிலேயே எட்டப்பட்டிருக்கும் என்று, 2018 ஆகஸ்ட் மாதம் இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்திருந்தது.

பணி நிலை மற்றும் இருப்பிடம்

நகர்ப்புறங்களில் தொழிலாளர்கள் ஒருநாளைக்கு சராசரியாக ரூ 449 சம்பாதிக்கின்றனர், கிராமப்புறங்களில் உள்ள பணியாளர்கள் சம்பாதிக்கும் ரூ.300-ஐ விட இது, 49% அதிகமாகும். கிராமப்புறங்களில் தற்காலிக தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 138 சம்பாதிக்கின்ரனர்; இக்குழுவிற்கும் வழக்கமான தொழிலாளர்களுக்கும் இடையிலான இடைவெளி, நகர்ப்புறங்களை விட, (ரூ.149-ஐ விட ரூ.33 வேறுபாடு) குறுகியதாக உள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும், ஆண்களை விட பெண்கள் குறைவாகவே ஊதியம் பெறுவது, அறிக்கையில் தெரியவருகிறது. வழக்கமான ஆண் தொழிலாளர்கள் நகர்ப்புறத்தில் அதிகபட்சமாக ரூ.470ஐ ஈட்ட, தற்காலிக பெண் தொழிலாளரோ குறைந்தபட்சமாக ரூ.104 பெறுகிறார்.

தற்காலிக தொழிலாளர் மத்தியில் ஒரு போக்கு இருப்பது போல் தோன்றுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட துறையுடன், சாதாரண மற்றும் ஒப்பந்த வேலைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன; எனினும், ஆனால் 1991ஆம் ஆண்டுக்கு பின், வழக்கமான வேலைகள் கணிசமான வளர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை.

வேலை உருவாக்கம் பற்றிய விவாதம், போதிய புள்ளி விவரங்கள் இல்லாததால் தடுக்கப்படுகிறது. (இவ்விஷயங்களை மேம்படுத்த ஒரு தொழில்நுட்ப குழுவை, அரசு அமைத்துள்ளதாக, ஜூன், 2018ல் என்.டி.டி.வி. தகவல் வெளியிட்டது.) ஆனால், இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) தகவல்களின்படி, வேலை வளர்ச்சி விகிதமானது, 2006-11ஆம் ஆண்டில் 4-5% என்ற உச்ச நிலையில், இருந்ததைவிட, 2% என்பது குறைவானது.

இருப்பினும், இது வேலைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அல்லது சரிவை குறிப்பிடுகிறதா என்று தெளிவாக தெரியவில்லை. ஒப்பந்த தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலன்கள் இல்லாத நிலையில், ஒழுங்குபடுத்தப்படாத துறையிலிருந்து நகர்வதால், ஊதியங்கள் உயரும் மற்றும் வேலையின்மை வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

மாநில வாரியாக வேறுபாடுகள்

கடந்த 1993-94 முதல் மாநிலங்களில் அதிகபட்ச மற்றும் குறைந்த சராசரி தினசரி ஊதியங்கள் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது. கடந்த 2011-12ல், குறைந்த வருவாய் ஈட்டும் மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களில் தற்காலிக தொழிலாளர்கள், 238% அதிக வருவாய் ஈட்டியுள்ளனர். இது, 1993-94 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 168% அதிகம். அதே காலப்பகுதியில் வழக்கமான தொழிலாளர்கள் ஊதியம் (முறையே 106% எதிர் 54%) மோசமாக இருந்தது.

நல்ல பொருளாதார குறியீடுடன் அதிக வளர்ச்சியுற்ற மாநிலங்களில் வழக்கமான தொழிலாளர்களுக்கு, குறைந்த வளர்ச்சியுற்ற மாநிலங்களை விட, அதிக சராசரி ஊதியம் கிடையாது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. அதிகபட்சமாக, சராசரி தினசரி நகர்ப்புற ஊதியம் (ரூ. 783) பட்டியலில் ஹரியானா முதலிடத்தில் உள்ளது. அசாம் (ரூ 607), ஜார்கண்ட் (ரூ 543), ஜம்மு & காஷ்மீர் (ரூ. 495) அதற்கடுத்த இடங்களில் உள்ளன. தனிநபர் வருமானம் மற்றும் தற்காலிக நகர்ப்புற ஊதியம் ஆகியவற்றுக்கு இடையே சிறிய தொடர்பு உள்ளதையே இது காட்டுகிறது.

தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகியவற்றில், நகர்ப்புற தொழிலாளர்களுக்கு குறைந்த சராசரி ஊதிய அளவு உள்ளதையே, (அதாவது, 100,000 ரூபாய்க்கு மேல் தனிநபர் வருமானம் கொண்ட மாநிலங்கள்) இது குறிக்கிறது.

Nominal Regular Urban Wages By State, 2011-12
State Average Daily Wage (In Rs) Per Capita Income (In Rs)
Haryana 783 1,48,485
Assam 607 54,618
Jharkhand 543 56,737
Jammu and Kashmir 495 62,857
Punjab 362 1,14,561
Tamil Nadu 388 1,30,197
Gujarat 320 1,24,678

Source: India Wage Report, International Labour Organization, and Press Information Bureau, Government Of India

கிராமப்புற வழக்கமான தொழிலாளர்களில், பொருளாதார வளர்ச்சிக்கும், உயர்ந்த சராசரி தினசரி ஊதியத்திற்கும் இடையே தொடர்பும் காணப்படாதது, அறிக்கை தயாரித்தவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் (ரூ. 485), உத்தரகண்ட் (463), ஜம்மு காஷ்மீர் (431) ஆகியன முதலிடத்திலும், கர்நாடகா (300 ரூபாய்) ஆகியனவும் இடம் பெற்றுள்ளன.

குறைந்தபட்ச ஊதிய சட்டம் இருந்தும், ஊதிய சமத்துவமின்மை தொடர்வது ஏன்?

வளரும் நாடுகளில் இந்தியா முதலாவதாக, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அறிமுகம் செய்தது. எனினும், வறுமை மற்றும் சமத்துவமின்மையை எதிர்கொள்ள, பல சிக்கல்கள் தடையாக உள்ளன.

சிக்கலான இயல்பு (நாடெங்கிலும் 1,709 வேறு குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது) மற்றும் சட்டப்பூர்வ பயன்பாடு 'திட்டமிடப்பட்ட' தொழிலாளர்களுக்கு (ஆலை தொழிலாளர்கள் மற்றும் சுரங்க தொழிலாளர்கள், குறைந்த ஊதியம் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்படக்கூடிய வேலை என்று அரசால் வகைப்படுத்தப்படுகிறது) மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதால், "செயல்திறன் இல்லை" என்ற தாக்கத்தை ஏற்படுத்துவதாக, அறிக்கை கூறுகிறது.

குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்படுகின்றன, அவை, எப்போதும் வாழ்க்கை செலவை பிரதிபலிப்பதாக இருக்காது. 2013 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ. 80; ஒடிசாவில் ரூ. 126, கர்நாடகாவில் ரூ. 269 ரூபாய் வழங்கப்பட்டன.

மேலும், 66% தொழிலாளர்கள் மட்டுமே குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் வருகின்றனர். எஞ்சிய, 34 சதவீதம் தொழிலாளர்கள், ’திட்டமிடப்பட்ட தொழில்’ என்ற பிரிவின் கீழ், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் வரம்புக்குள் வருவதில்லை. கடந்த 1991ல், தேசிய குறைந்தபட்ச ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அதன் பயன்பாடு சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை. கடந்த 2009 ஆம் ஆண்டில், தொழிலாளர்கள் 15% மற்றும் 41% தற்காலிக தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை விட, குறைவாகவே கிடைத்ததாக, ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஊதிய ஏற்றத்தாழ்வுகளை களைதல்

குறைந்தபட்ச ஊதியம் பெறுவதற்கான கட்டமைப்புகளை எளிதாக்குதல், அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துதல் மற்றும் சட்டபூர்வமான ஆதரவு அளிப்பது ஆகியன, ஊதிய ஏற்றத்தாழ்வுகளை களைவதற்கான முக்கிய படிகள் ஆகும், ஆனால், அதற்கான அம்சங்கள் சட்டத்தில் போதுமானதாக இல்லை என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

திறமை குவிப்பு மற்றும் அதிகம் படித்த தொழிலாளர்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், குறைந்த உற்பத்தித்திறனில் இருந்து, அதிக உற்பத்தித் துறைகளுக்கு ஒரு மாற்றத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். உயர் திறன் தொழிலாளர்களின் விகிதத்தை அதிகரிப்பதால், குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கச் செய்யலாம். இதன்மூலம், சம்பளத்தில் நிலவும் சமத்துவமின்மையை குறைக்கலாம் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தொழிலாளர் ஆய்வு ஆகியனவற்றை மற்றவர்களிடம் ஏற்படுத்தி செயலாற்றுவதற்கான பயனுள்ள வழிகளாக மாற்ற வேண்டும்.

இந்த அறிக்கை, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGS) படித்த தொழிலாளர்களை உதாரணம் காட்டுகிறது. அதில் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம், உரிமைகள் குறித்து தெரிந்து கொண்டிருக்கும் இவர்கள், ஊதிய அதிகரிப்பு கேட்கும் மற்ற குழுக்களுக்கு தெரிவிக்கின்றனர். அதேபோல் இத்திட்டத்தில் ஊதியங்கள் மின்னணு முறையில் பரிமாற்றம் செய்து கண்காணிக்கப்படுகிறது. "ஊதியக் கொள்கையில், எல்லாவற்றிற்கும் பதில் இல்லை. ஒரு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் என்ற முறையில், இவ்விஷயத்தில் பிரேசிலிலும் சீனாவிலும் செய்யப்பட்டுள்ளதை புரிந்து கொண்டுள்ளேன்” என்று கூறும் இஸ்டுபினன், “இந்திய பொருளாதாரம் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், இதில் கூடுதல் அம்சங்களை சேர்க்கலாம்,” என்றார்.

பிரேசில் நாட்டில், முந்தைய இரண்டு ஆண்டு, உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை கணக்கில் எடுத்து, வழக்கமான அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் திருத்தி அமைக்கப்படுகிறது.

(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.