மும்பை: 2018 சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்டுள்ள 1,256 வேட்பாளர்களில் 145 பேர் மீது (12%) குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 98 பேர் ”தீவிர” குற்றம் புரிந்தவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு-ஏ.டி.ஆர். (ADR) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

"தீவிர" கிரிமினல் வழக்குகளில் கொலை, கடத்தல் மற்றும் தாக்குதல் முயற்சி உள்ளிட்டவை அடங்கும்.

கடந்த 2013ஆம் ஆண்டு (983-ல்113 பேர்) எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இது, 11% அதிகமாகும்.

கோடீஸ்வர வேட்பாளர்கள் (ரூ.1 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள்) எண்ணிக்கை 285 ஆகும். இது. 2013ஆம் ஆண்டின் (983 பேர் ஆய்வு செய்யப்பட்டனர்) 213 என்ற எண்ணிக்கையை விட 23% அதிகமாகும்.

மொத்தமுள்ள 1,269 வேட்பாளர்களில் 1,256 பேரின் வேட்பாளர் பிரமாண பத்திரத்தை ஏ.டி.ஆர். ஆய்வு செய்தது. 13 பேரின் பிரமாண வாக்குமூலம் பத்திரம் தெளிவாக அல்லது புரியும்படி இல்லாததால், அவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சத்தீஸ்கர் தேர்தல் இரண்டு கட்டங்களாகும். முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு 2018, நவ.12-ல், இரண்டாம் கட்டமாக 72 தொகுதிகளுக்கு 2018, நவ. 20-ல் நடைபெற்றுள்ளது.

அதிக கிரிமினல் வேட்பாளர்களை கொண்ட ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜெ.) கட்சி

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகி நிறுவிய ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜெ.) கட்சி நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் அதிகம் பேர் (56 வேட்பாளர்களில் 18 பேர், அல்லது 28%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. அடுத்து காங்கிரஸ் (90 வேட்பாளர்களில் 25 பேர், அல்லது 28%), ஆம் ஆத்மி (83-ல் 17 பேர், அல்லது 21%), பகுஜன் சமாஜ் கட்சி (34-ல் 3 பேர் அல்லது, 9%), பாரதிய ஜனதா (90-ல் 6 பேர், அல்லது 7%), சுயேச்சைகள் (556-ல் 39 பேர், 7%) பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 18 (20%) ”சிவப்பு எச்சரிக்கை தொகுதிகள்” வகைபாட்டில் கொண்டு வரப்பட்டன. அந்த தொகுதிகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் குற்ற வழக்கு உள்ளவர்களாக இருந்தனர்.

அதேபோல் தீவிர குற்றம்புரிந்த வேட்பாளர்களை நிறுத்தியதிலும் ஜனதா காங்கிரஸ் (ஜெ.) கட்சி வேட்பாளர்களே (56-ல் 16 பேர், அல்லது 29%) முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் காங்கிரஸ் (90-ல் 15 பேர், அல்லது 17%), ஆம் ஆத்மி (83-ல் 13 பேர், அல்லது 16%) உள்ளன.

Criteria for serious criminal cases:

  1. Offence for which maximum punishment is of 5 years or more.
  2. If an offence is non-bailable
  3. If it is an electoral offence (for eg. IPC 171E or bribery)
  4. Offence related to loss to exchequer
  5. Offences that are assault, murder, kidnap, rape related
  6. Offences that are mentioned in Representation of the People Act (Section 8)
  7. Offences under Prevention of Corruption Act

Source: Association for Democratic Reforms

அதிக கோடீஸ்வர வேட்பாளர்களை கொண்ட பா.ஜ.க.

கோடீஸ்வரர் வேட்பாளர்களின் எண்ணிக்கை (ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள்), 1256 பேரில் 285 ஆக (23%) அதிகரித்துள்ளது. இது 2013ஆம் ஆண்டு 983 பேரில் 213 ஆக (22%) இருந்தது.

அதிக கோடீஸ்வரர் வேட்பாளர்களை நிறுத்தியதில் பா.ஜ.க. முதலிடத்தில் (90 வேட்பாளர்களில் 74 பேர், அல்லது 82%) உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் காங்கிரஸ் (90-ல் 66 பேர், அல்லது 73%), ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜெ) (56-ல் 39 பேர், அல்லது 70%), பகுஜன் சமாஜ் (34-ல் 14 பேர், அல்லது 41%), ஆம் ஆத்மி கட்சி (83-ல் 13 அல்லது (16%), சுயேச்சைகள் (556-ல் 52 பேர், அல்லது 9%) என்ற வரிசையில் உள்ளன.

வேட்பாளருக்கு சராசரி சொத்து மதிப்பு ரூ.1.68 கோடியாகும். 19 வேட்பாளர்கள் தங்களுக்கு சொத்துக்கள் இல்லை என்று அறிவித்துள்ளனர்.

ஏறத்தாழ 60%, அல்லது 753 வேட்பாளர்கள், தங்களின் வருமான வரி தாக்கல் விவரங்களை அறிவிக்கவில்லை. (சிலர், தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்); அத்துடன் 67 பேர் தங்களது வருமானத்திற்கான ஆதாரத்தை காட்டவில்லை. 276 வேட்பாளர்கள் தங்களின் நிரந்தர கணக்கு எண் - பான் விவரத்தை தெரிவிக்கவில்லை.

அதிகபட்ச வேட்பாளர்கள் (25% அல்லது 309) பேர், தாங்கள் 12ஆம் வகுப்பு படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அடுத்து முதுகலை பட்டதாரிகள் (214), பத்தாம் வகுப்பு (175), 8ஆம் வகுப்பு (151), பட்டதாரிகள் (146), ஆறு பேர் ஆராய்ச்சிப் படிப்பு மற்றும் ஒன்பது பேர் கல்வியறிவு உடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த 2013 தேர்தலில் 983 வேட்பாளர்களில் 81 பேர் (8%) பெண்கள் என்றிருந்த நிலையில் 2018-ல் இது 125 ஆக (10%) அதிகரித்துள்ளது.

(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.