கேரளாவுக்கான மத்திய அரசின் நிதியை கொண்டு ஒரு ரபேல் விமானம் வாங்கலாம்
மும்பை: அண்மையில் மிகமோசமான மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவில், புனரமைப்பு நிவாரண பணிகளுக்கு, அம்மாநில அரசு ரூ.2000 கோடி ($283 மில்லியன்) கேட்ட நிலையில், மத்திய அரசு வெறும் ரூ.600 கோடியை, அதாவது கேட்ட தொகையில், 30% விடுவித்தது. இது, பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ள 36 ரபேல் போர் விமானங்களில், ஒன்றின் விலையை (ரூ.670 கோடி) விட குறைவான தொகையாகும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் உட்பட பல்வேறு மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ், 2,600 கோடி ரூபாய் (372 மில்லியன் டாலர்) சிறப்பு திட்டத்தை, கேரள அரசு கோரியதாக, முதல்வர் பினராயி விஜயன், 2018 ஆகஸ்ட் 21ம் தேதி கூறினார்.
கடந்த 2018, ஜூன் 1 முதல், ஆக.18 வரை கேரளாவில் கொட்டித்தீர்த்த பலத்த மழை, இறப்பு, அழிவுகளை விட்டுச் சென்றது. ஆனால், இக்கட்டான நேரத்தில் மத்திய அரசு வழங்கிய நிதி உதவியோ, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மழையால் கேரளாவில் இறப்பு எண்ணிக்கை 373; மேலும், 1.2 மில்லியன் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அத்துடன், ரூ. 20,000 கோடி (2.86 பில்லியன் டாலர்) அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இது, 2018-19 மாநிலத்தின் மொத்த செலவில், 16% ஆகும் என்று, ஆகஸ்ட் 18, 2018 அன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த 2017 ஆகஸ்ட் மாதம், வெள்ளத்தால் பீகார் மாநிலம் பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசு, ரூ.1,853 கோடி (289 மில்லியன் டாலர்) நிதி உதவி அளித்திருந்தது. அப்போது, 649 பேர் பலியாகியிருந்தனர். 256 கால்நடைகள் இறந்தன. 810,000 ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டதோடு, 357,197 வீடுகளையும் அழித்தது என 2018, ஜூலை 24-ல் மக்களவையில் அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மத்திய அரசு, ரூ.600 கோடியை தற்காலிக நிவாரணமாக அளித்துள்ளது. இந்தியா ஸ்பெண்ட் ஆய்வின்படி, சில பொது செலவினங்களுக்கு மத்திய அரசு செலவிட்ட தொகையைவிட, இந்த இடைக்கால நிவாரணத் தொகை மிகவும் குறைவாகும்.
- டெல்லி, துவாரகாவில் மற்றும் கூட்ட அரங்கு அமைக்க, ரூ.700 ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஏர் இந்தியாவால் இயக்கப்படும், இந்திய குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் ஆகிய வி.வி.ஐ.பி.-க்களுக்கு இரு சிறப்பு விமானங்களை வாங்க ரூ .4,469.5 கோடி (640 மில்லியன் டாலர்) செலவிடப்பட்டுள்ளது.
- பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் 50 விமான நிலையங்கள் / விமான தளங்களின் மறுசீரமைப்புப்பு மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை, ரூ. 890 கோடி ஆகும்.
நிதி தந்த 24 மாநிலங்களின் மொத்த உதவியில் 12% நிதியை தந்த தெலுங்கானா
மத்திய அரசு மட்டுமின்றி, 24 மாநில அரசுகளும், ரூ.206 கோடியை, கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக உறுதி அளித்தன. இதுவரை முதல்வர் நிவாரணத்துக்கு, ரூ.201 கோடி நிதி வந்திருந்ததாக, மேலும் ரூ.160 கோடி வரவாய்ப்புள்ளதாக, கேரள நிதி அமைச்சர் டி.எம். தாமஸ் இசக், டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Chief Ministers Distress Relief Fund has so far received ₹210cr.This is in addition to the pledge for financial assistance of ₹160 crores. We feel humbled by this overwhelming response and pledge to to strive to meet your expectations. (htpps://donation.cmdrf.kerala.gov.in/)
— Thomas Isaac (@drthomasisaac) August 22, 2018
மாநிலங்கள் அளித்த உதவித்தொகைகளில், தெலுங்கானா அரசு அளித்த ரூ.25 கோடியே அதிகபட்ச தொகையாகும். இது, 24 மாநிலங்கள் அளிக்கும் மொத்த நிதியில், 12% ஆகும். இதுதவிர, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் உபகரணங்களையும், தெலுங்கானா அரசு வழங்கியதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு தாராளமாக நிதி உதவி வழங்கியதில் மகாராஷ்டிரா அரசு, ரூ.20 கோடி தந்து, இரண்டாமிடத்தில் உள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், 11 டன் உலர் உணவுகள், 30 டன் நிவாரணப் பொருட்கள், 50 மருத்துவர்களையும் அந்த மாநில அரசு அனுப்பி வைத்தது.
கேரளாவுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியது, அண்டை மாநிலங்களான தமிழகமும், கர்நாடகாவும் தான். இவ்விரு அரசுகளும் தலா, ரூ.10 கோடியை, முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கின. தமிழக அரசு, 500 டன் அரிசி, 300 டன் பால் பவுடர், 15,000 லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் 10,000 போர்வைகள், உடமைகளையும் வழங்குவதாக உறுதி தந்தது. கர்நாடக அரசும் மருத்துவர்கள், மருந்தாளுனர் குழுக்களை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது.
உத்தரப்பிரதேச அரசு, மூன்றாவதாக பெரிய பங்களிப்பை, அதாவது ரூ.15 கோடியை வழங்கியுள்ளது. ஆந்திரா, டெல்லி, மத்திய பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், பிகார், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் அரசுகள் தலா, ரூ.10 கோடியை வழங்கியுள்ளன.
அதேபோல், ஒடிஷா, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் தலா ரூ.5 கோடி; அசாம், அருணாச்சல பிரதேசம் தலா, ரூ.3 கோடி; ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் மாநில அரசுகள், ரூ 2 கோடி வழங்குவதாக அறிவித்தன.
இதுதவிர வெளிநாடுகளும் உதவ முன்வந்தன. ஐக்கிய அரபு அமீரகம் ரூ. 700 கோடியை அறிவித்தது. கத்தார் ரூ.35 கோடியை வழங்க முன்வந்தது. மாலத்தீவுகள், ரூ.35 லட்சத்தை அறிவித்தது. எனினும், கடந்த 2005ஆம் ஆண்டின் தேசிய பேரிடர் கொள்கையில், உள்நாட்டு பேரிடர்களை வெளிநாடுகளின் உதவியின்றி சுயமாக கையாள்வது என்று முடிவெடுக்கப்பட்டதால், வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் உள்ளது.
Informally informed with regret that GOI is not accepting overseas donations for Kerala flood relief. Our hearts are with you the people of Bharat. https://t.co/b4iyc3aQez
— Ambassador Sam (@Chutintorn_Sam) August 21, 2018
Aid Announced By States To Kerala | ||
---|---|---|
State | Aid in Cash | Aid in Kind |
Tamil Nadu | Rs 10 crore | 500 tonnes of rice, 300 tonnes of milk powder, 15,000 litres of ultra high temperature processed milk, 10,000 blankets and lungis. |
Karnataka | Rs 10 crore | Doctors for medical assistance |
Telangana | Rs 25 crore | RO machines to ensure clean drinking water worth Rs 2.50 crore |
Andhra Pradesh | Rs 10 crore | |
Maharashtra | Rs 20 crore | A consignment carrying 30 tonne of relief materials, including dry food, medicines, toiletries, sanitary napkins, innerwear, blankets and candles. 50 doctors being sent |
Madhya Pradesh | Rs 10 crore | |
Gujarat | Rs 10 crore | |
Odisha | Rs 5 crore | 245 fire personnel with boats |
Rajasthan | Rs 10 crore | |
Punjab | Rs 5 crore | Rs 5 crore in the form of ready-to-eat food material and other supplies, to be flown out with the help of the defence ministry |
Haryana | Rs 10 crore | |
Himachal Pradesh | Rs 5 crore | |
Uttarakhand | Rs 5 crore | |
Uttar Pradesh | Rs 15 crore | |
Bihar | Rs 10 crore | |
Jharkhand | Rs 5 crore | |
Chhattisgarh | Rs 10 crore | State has offered to send across rice and food packets, doctors, health care workers for relief work |
West Bengal | Rs 10 crore | |
Jammu and Kashmir | Rs 2 crore | |
Delhi | Rs 10 crore | |
Assam | Rs 3 crore | |
Arunachal Pradesh | Rs 3 crore | |
Manipur | Rs 2 crore | |
Puducherry | Rs 1 crore |
Source: The Indian Express, NDTV, State press releases of Maharashtra, Telangana, Rajasthan, Chhattisgarh, Himachal Pradesh, Jammu and Kashmir, Punjab, Haryana, Tamil Nadu, Uttar Pradesh, Arunachal Pradesh
நிதி தாக்கங்களாக கேரளா சந்தித்த இழப்பு மிகப்பெரியவை
கேரளாவில், ஆரம்பத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு மத்திய அரசு ரூ.80.25 கோடியை, 2018 ஜூலை, 20ஆம் தேதி மாநில பேரிடர் நிதிக்கு வழங்கியதாக, உள்துறை இணை அமைச்சர் கிரென் ரெஜிஜு, மாநிலங்களவையில் 2018, ஆக.1ஆம் தேதி தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, 2018 ஆக.12-ல் ரூ.100 கோடி, ஆக. 18-ல் ரூ.500 கோடி என, மொத்தம் ரூ.600 கோடி, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்படும் சேதத்தின் அளவு மதிப்புமிக்கது. இழப்புக்களுக்கான மதிப்பீடு, ரூ .20,000 கோடியை கொண்டு கீழ்கண்டவற்றை செய்ய முடியும்.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்) 4 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளை நிர்மாணிக்கலாம்;
- இது, கங்கையை சுத்தப்படுத்தும் தேசிய திட்டத்தின் நிதியில் 87% (2018-19 ஆம் ஆண்டுக்கு இத்திட்டத்திற்கு ரூ. 23,000 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது);
- பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம்) கீழ் 57,000 கி.மீ. சாலைகளை அமைக்க முடியும்.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் கீழ், 26 காற்றாலை மின்சக்தி திட்டங்களை கட்டமைக்கலாம்
- ராஷ்டிரிய உச்சாடர் ஷிக்சா அபியான் (தேசிய உயர் கல்வி பணி) போன்ற 14 இயக்கங்களை 2018-19 பட்ஜெட்டில் அறிவிக்கலாம்
2018-19 பட்ஜெட் படி, ரூ.20,000 கோடியை மட்டும் கேரளாவுக்கு அளிக்கப்பட்டிருக்குமானால்,
- இது, 20 ஆண்டுகளுக்கான உணவு மானிய மதிப்பு. (ரூ. 954 கோடி இந்த ஆண்டு உணவு மானியங்களின் கீழ் செலவிடப்பட்டது.) 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வசதி வாழ்வாதார வீட்டுத் திட்டங்கள்.
- இந்தாண்டு வெள்ளம், 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம் பெயரச் செய்துள்ளது. (1,76,000 நிலமற்ற மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக, நடப்பாண்டு, ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது).
- கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கான பொதுசுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்தலாம் (இந்த ஆண்டு அரசாங்கம் 1,685.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது).
பேரழிவுகள் கையாள்வதில் கடந்த அனுபவம்
நிவாரண மற்றும் புனரமைப்பு பணிகள், மாநில அரசுகளே பிரதானமாக செய்கின்றன. பேரிடர் நிவாரண நிதிகளில், பொது வகைப்படுத்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் பங்கு, 75:25 என்ற விகிதத்திலும், பின்தங்கியதாக கருதப்படும், 11 சிறப்புவகை மாநிலங்களில், 90:10 என்ற விகிதத்திலும் பங்களிப்பு இருக்கும் என்று, ஜனவரி 3, 2018-ல் அமைச்சர் கிரென் ரிஜிஜூ, மக்களவையில் பதில் தெரிவித்தார்.
"கடுமையானது" என அடையாளம் காணப்பட்டிருக்கும் பேரழிவுகளுக்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து உதவி வழங்கப்படுகிறது. கடந்த 2017-18ஆம் ஆண்டில், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், ஒடிசாம் ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.
முன்பே நாம் கூறியது போல், 2017-18ல் மத்திய அரசிடம் இருந்து அதிகபட்ச உதவியாக, பீகார், ரூ. 1,853 கோடி; அடுத்து, மேற்கு வங்காளம் ரூ. 751.5 கோடியை பெற்றன.
வரும் 2040 ஆம் ஆண்டில், தற்போதுள்ளதை விட ஆறு மடங்கு அதிகமான மக்கள், இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவர் என்று, 2018, பிப்ரவரி 10-ல் சயின்ஸ் அட்வான்ஸ் இதழ் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்தி வெளியிட்டிருந்தது. 2050 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேரின் வாழ்க்கைத்தரம், பருவநிலை மாற்றத்தால் குறைந்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
(சால்வே, இந்தியா ஸ்பெண்ட் இதழின் ஆய்வாளர்; சேத்ரி, டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி பட்டதாரி. அத்துடன், இந்தியா ஸ்பெண்ட் தரவு உள்ளீட்டு பிரிவின் ஷ்ரேயா ராமனின் தகவல்களுடன்.)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.