மும்பை: ஏழ்மை, குறைந்த ஊதியமுடைய ஆசிரியர்களின் விரக்தி, அரசு பள்ளிகளில் வன்முறை ஒழுக்கம் குறித்த கற்பித்தலில் போதிய பயிற்சியின்மை போன்றவற்றால், பின்தங்கியவர்களாக கருதப்படும் விளிம்பு நிலை குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இந்திய பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனையை அனுபவிப்பதாக, புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

உடல் ரீதியான தண்டனை என்பது குழந்தைகளுக்கு எதிரான தண்டனை; இது இந்தியாவில் சட்ட விரோதமானது.

இந்திய பள்ளிகளில் விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகளில் 80% பேர் ஆசிரியர்களால் உடல் ரீதியாக தண்டிக்கப்படுகின்றனர். அவர்களில் 43% பேர் தாங்கள் வாரத்திற்கு மூன்று முறையாகவது அடிக்கப்படுவதாக கூறுவதாக, அக்ராசர் என்ற அரசுசாரா தொண்டு நிறுவன புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில பள்ளிகளில் தினமும் அடிவாங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 88% ஆக அதிகரித்து காணப்படுகிறது.

குழந்தைகள் மீதான இந்த அத்துமீறல் பள்ளிகளோடு நின்றுவிடுவதில்லை; பெரும்பாலான இக்குழந்தைகள் (74%) வீடுகளிலும் அடிக்கப்படுகின்றனர்; பெற்றோர்களும் (71%) தாங்கள் குழந்தையை வீட்டில் அடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த விவரங்கள், சீரற்ற குடும்பங்களை கொண்டுள்ள குருகிராமில் 521 குழந்தைகள், 100 பெற்றோரிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2000 - 2011 ஆண்டுகளில், உத்தரப்பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் போன்ற வறுமை நிரம்பிய மாநிலத்தவர்கள் இப்பகுதியில் 29% அதிகம் குடியேறினர்.

இருப்பினும், "பொருளாதார இழப்பு மற்றும் சமூக விலக்கு ஆகிய அதே வழிமுறைகளை பொருத்தினால், கண்டுபிடிப்புகள் இந்தியாவில் பிற இடங்களில் பின்தங்கிய குழந்தைகளுக்கும் பொருந்தும் "என்று அறிக்கை கூறுகிறது.

உடல்ரீதியான தண்டனையால் நேர்மறையான விளைவுகள் ஏற்படுவதில்லை. இத்தகு தண்டனைகள், துஷ்பிரயோகங்கள் குழந்தையின் ஆரோக்கியம், நலவாழ்வு, மனநிலை, சுகாதாரம், நடத்தை பிரச்சனைகள், புலனுணர் திறன் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆசிரியரின் தண்டனையால் பயமும், மன அழுத்தமும் ”பள்ளி போபியா”வை ஏற்படுத்தி பள்ளிக்கு செல்வதை கைவிடவே வழிவகுக்கும். மதிப்பெண் குறைவு, குறைந்த தக்கவைப்பு விகிதம் போன்ற கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இத்தகு துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் குழந்தைகள், வளர்ந்த பிறகு வன்முறை, குற்றச்செயல்களில் நாட்டம் செலுத்தவும் வாய்ப்புள்ளது.

கடந்த 1992-ல் ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) குழந்தைகள் உரிமைகள் மாநாடு 1989-ன் கொள்கையை ஏற்றுக் கொண்ட 128 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன்டி, பள்ளியில் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனையை சட்ட விரோதமாக அறிவிப்பது, "குழந்தைகளின் மனித கௌரவத்துடன் ஒத்துப் போகும் விதத்தில் பள்ளி ஒழுக்கம் நிர்வகிக்கப்படும்" என்பதை 28 (2) பிரிவு உறுதிப்படுத்துகிறது.

அத்துடன், கல்வி உரிமை சட்டம் - 2009, பள்ளிகளில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. எந்த குழந்தையும் "உடல் ரீதியான தண்டனையை அல்லது மன ரீதியிலான துன்புறுத்தலுக்கு உட்படுத்தக்கூடாது” என்பதே அதன் நோக்கம்.

இத்தகைய சட்டரீதியான பாதுகாப்புக்கள் இருந்தும் குழந்தைகளுக்கான துன்புறுத்தல்கள் இன்றும் தொடர்வதாக அரசின் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல்ரீதியான தண்டனையை இயல்பான ஒன்றாக, இந்திய சமுதாய கட்டமைப்புகள் அமைந்துள்ளன.

குழந்தைகளில் 65% பேர் உடல்ரீதியாக ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுவதாக, சைல்ட்லைன் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் 2007-ல் நடத்திய கூட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, 99.9% குழந்தைகள் தெரிவித்தததாக, குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தின் 2009 ஆம் ஆண்டு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வீடு, பள்ளிகளில் அடிவாங்குதல் தினசரி நிகழ்வு

ஆசிரியர்கள் தரும் உடர் ரீதியான தண்டனைக்கு குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. வயது குறைந்தை மற்றும் வயது அதிகரித்த குழந்தைகள் என எல்லா தரப்பினருமே, ”ஏறக்குறைய அன்றாடம் அடிப்படையில்” கடும் தண்டனையை அனுபவித்து வருவதாக, ஆய்வு தெரிவிக்கிறது.

இதில் உள்ள வித்தியாசம் என்றவென்றால், இளம் குழந்தைகள் அதிகமுறை உடல்ரீதியான தண்டனையை எதிர்கொள்கின்றனர்; வயது அதிகரித்த குழந்தைகளோ அடி போன்ற தண்டனை குறைந்தாலும், ஆசிரியர்களிடம் அதிகம் திட்டு, வசவுகளை வாங்குகின்றனர்.

”நாங்கள் குழந்தையாக இருந்த போது அடிக்கடி அடி வாங்கிக் கொண்டிருப்போம். இப்போது அடி குறைந்தாலும், அதிகளவில் ஆசிரியர்களிடம் திட்டு வாங்குகிறோம். தவறு நேர்ந்தால், சக மாணவர்கள் முன் கேலி செய்யப்படுகிறோம்” என்று 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தெரிவித்தார்.

இதில் பின்தங்கிய விளிம்பு நிலைக்குழந்தைகளில் 88% பேர் பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனைக்கு அடிக்கடி ஆளாகின்றனர். தொடர்ந்து அடிவாங்கும் இத்தகைய குழந்தைகள் வாரத்திற்கு 3 முறையாவது இந்த கொடுமையை அனுபவிப்பதாக, ஆய்வு முடிவு கூறுகிறது. இது "சராசரி தண்டனையை விட அதிகம். அத்துடன், வாய்மொழி திட்டும் இதில் அடங்கும்", என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

பல குழந்தைகள் பள்ளிகளில் தினமும் அடியும், திட்டும் வாங்குவதாக தெரிவிக்கின்றனர். ஒரு குழந்தை, ”நான் தினமும் குறைந்தது இரண்டு முறை அடி வாங்குகிறேன்” என்றது.

பள்ளி கல்வி மற்றும் பாட அனுபவத்தின் துறையின் ஒரு பகுதியாக, இத்தகைய அனுபவங்கள் பழக்கமாகிவிட்டதாக குழந்தைகள் கருதுகின்றனர் - 71% குழந்தைகள், அடிப்பதற்கு “ஒரு காரணம்” இருப்பின் சரியென்றும்,”நல்லதற்காக” மற்றும் “தேவைக்காக” அடிப்பதில் தவறில்லை என்றும் நம்புகின்றனர்.

ஆசிரியர்களின் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள் அதன் தன்மை, வலி அடிப்படையில் மாறுபடுகிறது. அறைதல், காதை திருகுதல், கழிப்பிடம் செல்ல அனுமதி மறுப்பது, வகுப்பிற்கு நிற்க வைத்தல் போன்றவை “மிக மோசமான” தண்டனையாக கருதப்படவில்லை.

இதைவிட வலி தரக்கூடிய தண்டனைகள் உள்ளன. பிரம்புகளை கொண்டு முதுகு, பின்புறம், தலையில் அடித்தல், டஸ்டரை வீசியெறிந்து தாக்குதல் போன்ற இவை அனைத்துமே “மிக பொதுவான உடல் ரீதியான தண்டனை” என்ற நிலை உள்ளது.

பல பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பதற்கென்றே பிரத்யேக பிரம்புகளை வைத்திருப்பதாக, ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொடூரமான தண்டனை என்பதை,“உளவியல் ரீதியான சித்திரவதை”யும் உள்ளடக்கியது என ஆய்வில் பங்கேற்ற குழந்தைகள் தெரிவித்தனர்.

அதேபோல், குழந்தைகளின் தலையை சுவற்றில் மோதச்செய்து தண்டனை தருவதும் ஆசிரியர்கள் பலரின் செயலாக உள்ளது. ஒரு ஆசிரியர் குழந்தையின் தலையை சுவற்றில் மோதச்செய்வதும், அதை மற்ற குழந்தைகளை விட்டு எண்ணுவதும் என்று இதை விளையாட்டு போலவே பாசாங்கு காட்டி மூன்று, நான்கு முறை செய்து வந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குர்கிராமில் உள்ளை இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் அடிக்கடி உடல் ரீதியான துன்புறுத்தலோடு, மன ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்தவர்கள் இனவாத அடிப்படையில் நடத்தப்படுவதும், இத்தகைய “உடல் ரீதியான துன்புறுத்தல் அங்கீகரிக்கப்படாத” நிலையில் இது நடக்கிறது.

இடம் பெயர்ந்த, குறைந்த சமூக பொருளாதார நிலையை கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் “பிகாரி” அல்லது “பெங்காலி” என்று அழைத்து அன்னியப்படுத்துவது, அவர்களின் நிலையை கேலி செய்வது என்ற ரீதியில் துன்புறுத்தல்கள் உள்ளன.

அத்துடன் நிற்காமல் அவமதிக்கும் நோக்கத்தில் “கழுதை” “ஒன்றுக்கும் லாயக்கற்றவன்”, “முட்டாள்”, “படிப்பறிவில்லாதவன்” என்றெல்லாம் குழந்தைகளை திட்டுவது, “அவர்கள் ஒரு மோசமான வளர்ப்பு” என்பதெல்லாம் வளர்ந்த குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது.

பள்ளிகளில் ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண்களே அதிகளவில் திட்டு வாங்கி மன ரீதியான தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்களை பாலியல் தொடர்பு படுத்தி திட்டுவது “நச்சுகலந்த பாலின முறை” என்பதாக உள்ளது. மேலும், வயது அதிகமான மாணவியரின் தோற்றத்தை, மாணவர்களின் தகுதி, திறனுடன் ஒப்பிட்டு பேசி, திருமணத்திற்கு ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் அவலமும் உள்ளது.

உடல் ரீதியான தண்டனை வழங்குவதில் ஆண், பெண் ஆசிரியர்கள் இடையே பெரிய வேறுபாடு இல்லை. ஏனெனில் இது காலம் காலமாக உள்ள “ஒரு சம்பிரதாய மற்றும் ஒருமித்த வழி” என்ற கருத்து அவர்களிடம் நிலவுவதால் தண்டிப்பதை அவர்கள் நிறுத்துவதில்லை.

ஆசிரியர்கள் மாணவர்களை அறைந்தோ, அடிக்கும் போதோ, தண்டனை பெற்ற மாணவர்கள் மத்தியில் “மிருகத்தனமான, கொடூர வன்முறை கொண்ட எண்ணம்” உருவாகிவிடுகிறது

பெரும்பாலான பெற்றோர்கள் (91%) பள்ளிகளில் ஆசிரியர்கள் தரும் உடல் ரீதியான தண்டனையை ஏற்கின்றனர்; வீடுகளிலும் அதையே அவர்கள் பின்பற்றுகின்றனர். இருப்பினும் இது, அதிக எண்ணிக்கையிலேயே இருக்கும். ஏனெனில் பெற்றோர்கள் பலரும் “மிதமான” அடித்தல் மற்றும் திட்டுவதை, உடல் ரீதியான தண்டனையாக கருதுவதில்லை.

தவறான சூழலில் சிக்கிக் கொள்வது

"சமூக மற்றும் கட்டமைப்பு காரணிகள் என்ற ஒரு சிக்கலான கலவை நம் பள்ளி வகுப்பறைகளில் உடல்ரீதியான தண்டனையை நிரந்தரமாக்குகிறது," என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதியுள்ளவர்களில் குழந்தைகளது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள நிலையில், வசதியற்ற பின்தங்கிய குடும்பங்களின் பிள்ளைகளோ, ஆபத்து காரணிகளை வெளிப்படுத்துவதால், உடல்ரீதியான தண்டனை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோசமான நிலையில் வாழ்வதோடு, அதிக கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளனர். அதிக நேரம் பணிக்கென செலவிடுவதால் குழந்தைகளின் கல்விக்கு போதிய கவனம் செலுத்தி, உரிய ஆதரவு அளிக்க இயலுவதில்லை.

பகலில் வீட்டில் இல்லாமல் இருப்பதும், மாலையில் பணி முடித்து திரும்பிய களைப்பில் இருப்பது அதாவது, பெற்றோரின் “உணர்ச்சிகர வளங்கள்” எல்லாமே வாழ்க்கைக்கான போராட்டத்திற்கே சரியாகிவிடுகிறது.

குழந்தைகள் தங்களின் வீட்டு வேலைகள், பள்ளி பாட வேலைகளை தாங்களாகவே செய்து கொள்ள நேரிடுகிறது. பெரும்பாலும் சிக்கலான சூழலில், "மோசமான மனப்பான்மையும் புறக்கணிப்பும்", வறுமையாலும் "இருத்தலியல்" மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

குருகிராமில் “இல்லத்தரசிகள்” ஆக உள்ள தாய்மார்கள் கூட, தங்கள் குழந்தைகளிடம் பள்ளி விவகாரங்கள் குறித்து ”மிக குறைந்தளவே” விவாதிக்கின்றனர். குழந்தை பள்ளியில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மூத்த சகோதர சகோதரிகளிடம் இருந்து தகவல் வரும்; குழந்தைகளின் "படிப்பு மற்றும் கல்வியை தொடர சுய ஊக்குவிப்பு" அவசியம் என்று அவர்கள் கருதினர்.

வீட்டு பாடங்களை செய்யாதது, தேர்வுகளில் மோசமான செயல்பாடு, பள்ளிக்கு வராதது போன்றவையே, உடல் ரீதியான கடும் தண்டனைக்கு காரணமாகிறது; பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளையே இது பெரிதும் பாதிக்கிறது.

குழந்தைகள் விரும்பியிருந்தாலும், பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளை இலவசமாக கற்பிக்கப்படும் உள்ளூர் அரசு பள்ளியில் இருந்து வேறொரு இடத்திற்கு அனுப்ப இயலுவதில்லை; அவர்களின் மற்ற விருப்பங்களை பூர்த்தி செய்ய, உரிய நிதி ஆதாரங்களும் இல்லை.

பகைமைக்குள்ளாகும், உள்ளூர்காரர்களின் ஆதரவு இல்லாத இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் ஆசிரியர்களின் "அலட்சியம் மற்றும் அவமதிப்பு"க்கு இலக்காகி விடுகின்றனர். ஆசிரியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாத, படிக்க இயலாத குழந்தைகள், பேசுவதற்கு சரியான வார்த்தைகளை பயன்படுத்த தெரியாதது, (பொதுவாக பெற்றோராலும், குழந்தையாலும் வீட்டில் பயன்படுத்தப்படுவது), மோசமான மொழியறிவோடு வகுப்பறைக்கு செல்வது போன்றவற்றால் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

இடம் பெயர்ந்து வசிப்போரின் குழந்தைகள் நீண்ட விடுப்பில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது, அல்லது சில நேரங்களில் தங்களின் பெற்றோருடன் சேர்ந்து பணிக்கு செல்லுதல் போன்றவை, ஆசிரியர்களை மேலும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள செய்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெற்றோரின் முடிவால் பயணித்திற்கு கட்டாயப்படுத்தப்படும் பிள்ளைகள், பள்ளிக்கு திரும்பிய உடன், நியாயமற்ற முறையில் தண்டிக்கப்படுகிறார்கள்.

அத்தகைய ஆசிரிய மனப்பான்மை, குறைவாக படித்த, புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிரான, "தொழிலாளர் வர்க்கத்திற்கு" எதிரான பாகுபாடுகளின் விளைவு, அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கிறது.

ஆசிரியர்களில் பலரும் புலம்பெயர்ந்த, பின்தங்கிய சமுதாய குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது பயனற்றது என்ற எண்ணத்தை கொண்டிருக்கின்றனர். ”பின்னாளில் இவர்கள் யார் வீட்டிலாவது பணி செய்வார்கள்” என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கு இருப்பதாக, ஆய்வு அறிக்கை கூறுகிறது.

இக்குழந்தைகளால் பள்ளியில் நன்கு செயல்பட முடியாது; பகுந்தறிந்து சிந்திக்க முடியாது. வறுமை என்பது, அவர்களின் ”மரபியல் முன்கணிப்பு”, அதாவது இவர்கள் கல்வி கற்க உகந்தவர்கள் அல்ல என்ற கண்ணோட்டம் பல ஆசிரியர்கள் மத்தியில் உள்ளது. அணுகுவதற்கான வாய்ப்பு, வளங்கள் இல்லாதது தான் முறையான கல்வியோடு அவர்கள் போராடுகின்றனர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

பெற்றோர் - ஆசிரியர்கள் இடையே கலந்துரையாடல், பணி பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தடையாக சமூகச்சூழல் உள்ளது; இது குழந்தைகளின் கல்விக்கு முட்டுக்கட்டையாக அமைகிறது.

குறைவான ஊதியம், அதிக பணிச்சுமை, கீழ்படிந்து பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழலில் ”ஆசிரியர்கள் தங்கள் கோபத்தை மாணவர்களிடம் வெளிப்படுத்துகின்றனர்” மற்றும் “தொழில்முறை நடத்தை விழிப்புணர்வை அரிதாகவே வெளிப்படுத்துகின்றனர்.”

மோசமான நிர்வாகம், குறிப்பாக உடல்ரீதியான தண்டனை தடையை கண்காணிக்கும் பிரிவை குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் அமைக்காதது போன்றவை, அர்த்தமற்ற ஆசிரியர்களின் செயல்கள் எப்போதும் ஒழுங்காக இல்லை என்று, அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலே கூறப்பட்ட காரணிகளின் நச்சு கலவையால், குழந்தைகள் நேரடியாக வன்முறை வடிவங்களுக்கு உட்படுத்தப்படுவதால், ஆசிரியர்கள் குறைந்த கண்காணிப்புடன்கூட செயல்படுவதில்லை என்பதே ஆபத்தான விஷயம்.

கழிப்பறைக்கு செல்வது, வகுப்பில் பேசுவது, இடைவெளிகளில் பள்ளி வளாகத்தில் ஓடுதல், மற்ற குழந்தைகளுடன் சண்டையிடுவது போன்ற "சாதாரண குழந்தைத்தனமான நடத்தை"களுக்காக சிறுவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது தெரிய வந்துள்ளது.

உடல்ரீதியான தண்டனையின் விளைவு

கணக்கெடுப்பில் பங்கேற்ற குழந்தைகளில் 53% பேர் பள்ளிகளில் தாங்கள் தண்டிக்கப்பட்டாலும் கூட, பெற்றோரிடம் அதுபற்றி கூறுவதில்லை. இது பெற்றோர்- குழந்தை இடையே உள்ள “நம்பகமான உறவை” குறைத்து மதிப்பிடச் செய்கிறது. இது பல குழந்தைகளுக்கு வலியுடன் கூடிய அனுபவங்களை உள்ளிழுத்துகிறது, அவர்களின் மனநலத்திற்கும் நல்வாழ்வுக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படுவதுவதாக, ஆய்வு அறிக்கை கூறுகிறது.

கற்பித்தல் மற்றும் உடல் ரீதியான தண்டனை "கைக்கு கையாக செல்லுதல்", குழந்தைகள் தினமும் பார்க்கும் வன்முறைகளுக்கு பழகி கொண்டுவிடுவதால், பிற்காலத்தில் உடல் ரீதியிலும் மனரீதியிலும் துன்புறுத்துதலை கண்டறியும் திறனை அவர்கள் இழப்பதாக, ஆய்வு தெரிவிக்கிறது.

உடல் ரீதியான வன்முறை அங்கீகரிக்கப்படாத நிலையில், வன்முறையின் தீவிரம் அதிகரிக்கும்போது, எதிர்ப்பை உருவாக்குகிறது. உடல்ரீதியாக வன்முறையை அனுபவிக்கும் குழந்தைகள், "வன்முறை குற்றவாளிகள்" என மாறும் வாய்ப்பிருக்கிறது.

உடல்ரீதியான தண்டனை மூலம் “பெரிய அளவிலான உடல்ரீதியான தண்டனை பரவாயில்லை” என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் பள்ளிகள் விதைக்கும் அபாயம் உண்டு. இது, இந்திய சமுதாயத்தில் வன்முறைக்கான பங்களிப்புக்கு இடம் அளித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.