மும்பை: இந்தியாவில் இமயமலை பகுதியை ஒட்டியுள்ள 12 மாநிலங்களில் அசாம், மிசோரம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் (J & K) ஆகியன பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுவதாக, புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அதிக பாதிப்புள்ள குறைந்த திறன் கொண்ட ஒரு பகுதியை பருவநிலை தாக்கத்தை எதிர்த்து சமாளிக்க அல்லது மீட்காமல் விட்டுச் செல்கிறது.

இமயமலை சமூகங்கள் பொதுவாக பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுகின்றன; ஏனெனில் அவை குறைந்த வாழ்வாதார வாய்ப்புகள், குறைந்த உள்கட்டமைப்பு மற்றும் இயற்கை வளங்களிய அதிகம் நம்பி இருப்பதால் என்று ஆய்வு கூறுகிறது.

பாதிப்புக்குள்ளான இயக்கிகளை அடையாளம் காணவும், அவற்றின் தாக்கத்தை தழுவி முன்னேற, தங்களது தாக்க்கத்தை குறைப்பதற்காக 'இந்திய இமயமலை பகுதி பருவநிலை பாதிப்புகளை மதிப்பீட ஒரு பொது கட்டமைப்பை பயன்படுத்துதல்' ( Climate Vulnerability Assessment for the Indian Himalayan Region Using a Common Framework) என்ற ஆய்வு, மண்டி மற்றும் கவுஹாத்தியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) மற்றும் பெங்களூரில் இந்திய அறிவியல் கழகம் (IISc) ஆகியவற்றால் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு இந்திய இமாலய பிராந்தியம்- ஐ.ஆர்.ஆர். (IHR) உள்ள 12 மாநிலங்களில் அதிகாரிகளுடன் இணைந்து நடத்தப்பட்டது: அருணாச்சல பிரதேசம், அசாம், இமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியன. இதில் மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகியன இமயமலை பிராந்தியத்தில் ஓரளவிற்கு மட்டுமே உள்ளடங்குகின்றன. இப்பிராந்தியங்களில், பனிப்பாறைகள் 70% விவசாயம் செய்யப்படுகின்றன.

இந்த பாதிப்பு குறியீட்டெண் மிக அதிகமாக அசாம் (0.72), மிசோரம் (0.71) மற்றும்ஜம்மு காஷ்மீரில் (0.62) உள்ளது; சிக்கிம் 0.42 என்ற குறியீடு கொண்ட குறைந்த பட்ச பாதிப்பில்லாத மாநிலமாகும். சிக்கிமின் நலன் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்திய இமாலய பிராந்தியம் - ஐ.ஆர்.ஆர் பகுதியில் சுமார் 5 கோடி பேர் வசிக்கின்றனர்; நீர், உணவு, ஆற்றல் ஆகியவற்றிற்கான இப்பகுதி சுற்றுச்சூழலை சார்ந்துள்ளனர். பனிப்பாறை சூழ்ந்த இந்த பிராந்தியங்களில் 70% விவசாயம் செய்யப்படுகிறது. இமயமலை நிலப்பரப்பு மற்றும் வானிலை வடிவங்களைப் பாதிக்கும் பருவநிலை மாற்றம், நீண்ட கோடை மற்றும் குறுகிய குளிர்காலம் ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, இச்சமூகங்களின் வாழ்வாதாரங்களை பாதிப்பதாக, அக்டோபர் 12, 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

ஏறத்தாழ 10% ஈரப்பதத்தின் அளவு மாறுபாட்டுடன், வெப்பநிலை குறைந்தபட்சம் 0.5 ° C உயர்ந்து இமயமலை பகுதியில் பதிவாகி உள்ளது. வெப்பமண்டல மாறுபாடு, பெரிய பனிப்படலத்தின் ஒரு பகுதியாக இமயமலையில் உருகும் பனிப்பாறைகளை - அனைத்து உறைந்த நன்னீர் 75% சேமித்து பூமியின் அமைப்பு பகுதியாக - ஏற்படுத்துகிறது; இது பனிச்சரிவு போன்ற தீவிர நிகழ்வுகளின் முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது.

வெப்பமண்டல மாதிரிகளின் மாறுபாடு, தண்ணீர் பாதுகாப்பு மற்றும் இமாலய ஆற்றுப் பாசனங்களின் நிலைத்தன்மைக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைகின்றன. அதிக உயரமான ஏரிகளில் நீர் ஓட்டத்தை அதிகரிப்பதால், வெள்ள அபாய வாய்ப்புகளை அதிகரிப்பதாக, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. கடந்த 2013 ஆய்வின்படி, இமயமலை பிரதேசத்தில் விவசாயிகள் உற்பத்தி குறைந்து, குறைந்த பனிப்பொழிவால் அறுவடை தாமதம் ஏற்பட்டதாக விவசாயிகள் கூறினர். கிட்டத்தட்ட 8,000 அடி உயரத்தில் வாழும் விவசாயிகளில் 80% பேர் பனிப்பொழிவில் குறிப்பிடத்தக்க அளவு விவசாயம் குறைந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்; அதேபோல், 9,800 அடி உயர வசிப்போரில் 90% பேர் இதே கருத்தை பிரதிபலித்ததாக, அதே ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவின் பசுமையான மற்றும் மிக உயரமான இமயமலை பிராந்திய மாநிலமான மேகாலயா, உறுதியற்ற மழையின் காரணமாக வெப்பமாக மாறி வருகிறது. அதன் காடுகளின் கால் பகுதி பருவநிலை மாற்றத்தால் "மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக" மாறி வருகிறது என்று, 2019, மார்ச் 23இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது; இதில், மாநில அரசால் 2018இல் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஆணையகத்தின்படி, ஐ.ஐ.எஸ்.சி. நடத்திய ஆய்வை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வனப்பகுதி தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அதனால், சமூதாயத்தில் வசிப்போரின் உயிருக்கு ஆபத்தாகிறது. சமுதாயங்களின் உயிர்களைத் தொந்தரவு செய்கிறது.

புதிய பருவநிலை மாற்ற ஆய்வு குறிப்பிடத்தக்கது; , ஏனெனில் இது இந்தியாவின் முதல் பாதிப்புத்தன்மை குறித்த வரைபடத்தை உருவாக்கியுள்ளது. ஒரு பொதுவான முறைமையை உருவாக்குவதே அதன் நோக்கங்களின் ஒன்றாகும், மேலும் பருவநிலை மாற்றத்தின் அபாயங்களை சமாளிக்க மாநிலங்களும் அவற்றின் மாவட்டங்களும் எவ்வாறு கையாள ஆயத்தமாக உள்ளன என்பதை தீர்மானிக்க வேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் பருவநிலை பாதிப்புகள் மற்றும் ஆபத்துகளை சித்தரிக்கும் ஒரு புவிசார் பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது.

மற்ற இந்திய மாநிலங்களில் இதே போன்ற பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

தகவல் இல்லாமை, உள்கட்டமைப்பால் ஆபத்து

பாதிப்புக்குள்ளாகும் இயக்கிகள் மாநிலங்களுக்குள் மாறுபடும். அசாமில், பயிர் காப்பீட்டின் கீழ் குறைந்த தனிநபர் வருமானம், குறைந்த சதவீத பகுதி ஆகியவை அடங்கும்; ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் வேலை உத்தரவாதம் தரும் வறுமை ஒழிப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (MGNREGS) பணிகளில் குறைந்தளவில் பங்கேற்பை குறிப்பிடலாம். தகவல் மற்றும் உள்கட்டமைப்பு அணுகல் இல்லாமை, எந்தவொரு பருவநிலை மாறுபாட்டையும் சமாளிக்க மாநிலங்களில் சமூகங்களுக்கு கடினமாக இருக்கும் காரணிகள். மேற்கு எல்லை மாவட்ட டுப்ரி, கிழக்கு மாவட்டமான லக்கிம்பூர் மற்றும் மத்திய மாவட்டமான சோனிபூர் ஆகியன அசாமின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை.

Source: Climate Change Vulnerability Assessment

12 மாநிலங்களில் பாசனத்தின் கீழ் இரண்டாவது மிக குறைந்த சதவீத பகுதிகளில், மிசோரம் மாநில விவசாயத் துறை மிகவும் உணர்திறன் உடையதாக இருந்தது. இந்த மாநிலம் மோசமான இணைப்பு - அதன் சாலை அடர்த்தி

ஐ.எச்.எஸ். இல் மூன்றாவது மிகக் குறைவானது - மற்றும் தகவல், மோசமான உள்கட்டமைப்பு அணுகலை கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சாலை அடர்த்தி, பயிர் காப்பீடு, வனப்பகுதியின் கீழ் 1,000 கிராமப்புற குடும்பங்களுக்கான பகுதி, குறு விவசாயிகள் சதவீதம், தோட்டக்கலை பயிர்கள் சதவீதம் பகுதி, கால்நடைகள்- மற்றும் பணியிடத்தில் பெண்களின் சதவீதம் பின்னடைவை கொண்டிருக்கிறது.

மற்றொரு பாதிக்கப்படும் மாநிலம் இமாச்சல பிரதேசம்; இங்கு போதுமான நீர்ப்பாசன வசதிகள் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது - அதன் நிகர பயிர் பரப்பளவில் 20-21% மட்டுமே பாசனம் செய்யப்பட்டு, மீதமுள்ள பகுதிகள் பெரும்பாலும் மழையை சார்ந்துள்ளது. ஆனால் இங்கு வளர்க்கப்படும் உணவு தானியங்களின் விளைச்சல் குறைகிறது; பருவநிலை மாற்றத்தால் மாறுபாடு விவசாய உற்பத்தியின் உணர்திறன் குறைக்கிறது. பாதிக்கப்படக்கூடிய ஒரே இயக்கிகள், குறைந்த வாழ்வாதாரம் கால்நடை - மனித விகிதம் மற்றும் ஒரு சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் (இரண்டு ஹெக்டேர் நிலத்தை விட குறைவாக வைத்திருப்போர்) அதாவது மொத்த விவசாய மக்கள் தொகையில் 87.95% வைத்திருக்கும் மற்றும் மொத்த நிலத்தில் 54.17% சொந்தமானவர்கள்.

பாதிப்பு மதிப்பீடு, ஏற்பதின் முதல்படி

வருங்கால பருவநிலை மாற்றத்தை ஏற்பதன் முதல் படிநிலை என்பது, அதன் பாதிப்புகளை குறைப்பதாகும் என, காலநிலை மாற்றத்திற்கான அரசு குழுவின் தற்போதைய அறிக்கைகள் பரிந்துரை செய்துள்ளது.

"பாதிப்பு என்பது, ஒரு அமைப்பின் இயல்புடைய பண்புகளைக் குறிக்கிறது - ஒரு வாழ்க்கைமுறையின் உயிரியல் மற்றும் சமூக பொருளாதாரம் என்ற இரண்டை - குறிக்கிறது. தற்போதைய மதிப்பீடு, 12 இந்திய இமாலய மாநிலங்கள் அளவில் மற்றும் மாவட்ட அளவில் பாதிப்புக்குள்ளான முக்கிய ஊக்கிகளை அடையாளம் காட்ட உதவுகிறது” என்று, ஆய்வின் இணை முதன்மை விசாரணையாளரும், மன்டி ஐஐடியில் உள்ள மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை உதவி பேராசிரியருமான ஷியாமஸ்ரீ தாஸ்குப்தா தெரிவித்தார்.

சாத்தியமான நெருக்கடிகளை இந்தியா எப்படி கையாள்வது

"அரசுத்துறை நிறுவனங்கள் இந்த அறிக்கையை பயனுள்ளதாகக் காணலாம்," என்கிறார் தாஸ்குப்தா. "சில மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள்(இமாலயா மற்றும் இமாலயப்பகுதி அல்லாத இரண்டும்) பரப்புதல் பயிற்சி பட்டறையின் போது இருந்தனர். எனினும், இந்த ஆய்வில், பேரழிவு மேலாண்மை விட பருவநிலை பாதிப்பு மற்றும் பருவநிலை மாற்றம் தழுவலின் மதிப்பீடு சூழலை கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

மத்திய அரசு ஏற்கனவே இமாலயப்பகுதி சுற்றுச்சூழலைக் காக்கும் தேசிய இயக்கம் (NMSHE) என்ற ஒன்றை செயல்படுத்தி வருகிறது; இது, பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (NAPCC) கீழ் ஜூன் 2008 இல் அறிமுகம் செய்யப்பட்டது. பருவநிலை மாற்ற அபாயங்கள் மற்றும் பாதிப்புகளை மதிப்பிடு மற்றும் ஆய்வு செய்வதற்காக, 11 இமாலய மாநிலங்களில் பருவநிலை மாற்றத்திற்கான பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுடன் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உதவும் நோக்கில், காலநிலை மாற்றத்திற்கான தேசிய ஏற்பு நிதி (NAFCC) அமைப்பை 2015-16 இல் தொடங்கியது. மொத்தம் ரூ. 648.9 கோடிசெலவில் இந்தியா முழுவதும் சுமார் 26 திட்டங்களுக்கு இதில் ஒப்புதல் வழங்கப்பட்டது என்று, மார்ச் 9, 2018 இல் மக்களவை தரவுகள் தெரிவிக்கின்றன.

Projects Sanctioned Under NAFCC
State Project Sanctioned Amount Sanctioned (Rs crore) Vulnerability Drivers
Assam Management of ecosystem of Kaziranga National Park by creating climate-resilient livelihood for vulnerable communities through organic farming and pond-based fish farming 12 Least area under irrigation, least forest area available per 1,000 rural households, least number of farmers taking loans as compared to other states. It also has the second lowest per capita income, low percentage area covered under crop insurance and low MGNREGA participation
Mizoram Sustainable agriculture development through expansion, enhancement and modelling 5 Highest yield variability, no area under crop insurance, largest area under open forests, largest area under slope as compared to other states, second lowest percentage area under irrigation and third lowest road density among the 12 states
Jammu & Kashmir Climate-resilient sustainable agriculture in rain-fed farming areas 11 Least road density, no area under crop insurance, low area under forests per 1,000 rural households, high percentage of marginal farmers, low percentage area under horticulture, low livestock-to-human ratio and low percentage of women in the workforce
Manipur Development of model carbon-positive eco-village of Phayeng 5 Lowest per capita income, low percentage of farmers taking loans and low area under forests per 1,000 households
Meghalaya Spring-shed development for rejuvenation of springs for climate-resilient development in water-stressed areas 11.45 Very less area under crop insurance, low per capita income, low area under forests per 1,000 households and low percentage of farmers taking loans
West Bengal Rainwater harvesting and sustainable water supply to the hilly areas in Darjeeling, adaptive measures 11.56 Highest population density, least number of primary healthcare centres per 100,000 households, least percentage of women in the workforce, second lowest area under forests, high percentage of marginal farmers and low MGNREGA participation
Nagaland Gene pool conservation of indigenous rice varieties under traditional, integrated rotational farming system (Jhum optimisation) for promoting livelihood and food security 12.34 No area under crop insurance, low percentage of farmers taking loans and low area under forests per 1,000 rural households
Himachal Pradesh Sustainable livelihoods of agriculture-dependent rural communities in drought-prone districts 10 Low livestock-to-human ratio, inadequate irrigation, large proportion of small and marginal farmers
Tripura NA NA Highest percentage of land under marginal farmers, low per capita income, low percentage area under forests and crop insurance
Arunachal Pradesh NA NA Large area underslope >30%, low road density, least livestock-to-human ratio, lowest percentage of area under horticulture crops, least participation in MGNREGA, no croparea under insurance and low percentage of farmers taking loans
Uttarakhand NA NA Low area under forests per 1,000 households
Sikkim Addressing climate change vulnerability of water sector at gram panchayat level in drought-prone areas 10 Low area under forests per 1,000 households, low percentage area covered by insurance and low percentage of farmers taking loans

Source: Lok Sabha and IHCAP

(அகமது, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.