95 லட்சம் மலைவாழ் மக்களை வெளியேற்ற தடை விதித்த உச்ச நீதிமன்றம்; அவர்களின் நிலஉரிமையை சட்ட விரோதமாக மறுக்கும் மாநிலங்கள்
சித்தோர்கார்க் (ராஜஸ்தான்): சட்டத்தை மீறுவது என்பது பொதுவாக பெருமைக்குரிய ஒன்று அல்ல. ஆனால் தெற்கு ராஜஸ்தானின் வன கிராமத்தில் வசிக்கும் தேவிலாலுக்கு, வனநிலத்தை ஆக்கிரமித்ததாக 2002ல் நீதிமன்றம் அனுப்பிய சம்மன், பரிசளிக்கப்பட்ட இடத்திற்கானது.
அமைதியாக, உயரமாக, வேட்டியுடன் குர்தா, வண்ண தலைப்பாகை அணிந்தபடி காட்சியளிக்கும் 64 வயது தேவிலால், பீல் எனப்படும் உள்ளூர் சமூகத்தை சேர்ந்த அவர் -- அழகாக லேமினேஷன் செய்யப்பட்டு பையில் வைத்திருந்த -- நீதிமன்ற சம்மனை காட்டுகிறார். அதில், வன நில ஆக்கிரமிப்பு பற்றி விசாரணை நடக்கு வனத்துறை நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
கடந்த 2006ல் வன உரிமை சட்டம் (FRA) அறிமுகப்படுத்தப்பட்டாலும், தேவிலால் அந்த நிலத்தில் தான் வாழ்ந்து வந்தார் என்பதற்கு அந்த சம்மன் தான் ஆதாரமாக உள்ளது மற்றும் சட்டத்தின் கீழ் தனது உரிமையை ஆதரிப்பதற்கான முக்கிய ஆதாரமாக மாறியது (கோரிக்கைகள் எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டன; மற்றும் நிராகரிக்கப்பட்டன என்பதை கீழே காண்க).
2002ல் வன நிலத்தை ஆக்கிரமித்ததாக தேவிலால் மற்றும் 60 பீல் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட சம்மன் மற்றும் உத்தரவுகள், வன உரிமை சட்டத்தின் கீழ் அவர்களது கூற்றுக்களுக்கான ஆதாரமாக தற்போது உள்ளன.
ராவத்பாடா கிராமத்தை சேர்ந்த அவரும் மற்றும் 60 பேரும், நில உரிமை கேட்டு விண்ணப்பித்த 3 ஆண்டுகளுக்கு பின் 2015ல் அவர்கள் மனு நிராகரிக்கப்பட்டது. ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தெரியவில்லை; அவர்களுகு அது பற்றியும் ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால், வன உரிமை சட்டத்தின்படி, கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ அதுபற்றி உரிமைகோருபவருக்கு நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்கிறது. அதனால் 60 நாட்களுக்குள் நிராகரிப்புக்கு எதிராக முறையிடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும்.
நிராகரிப்புக்கு எதிராக அவர்கள் மேல்முறையீடு செய்ய இயலாது; ஏனெனில் நிராகரிக்கப்பட்டது என்பதே தெரியப்படுத்தாத நிலையில் அவர்களால் இது சாத்தியமில்லை.
நிராகரிப்பு உத்தரவு நிறைவேற்றப்படும் முன், மேல்முறையீடு செய்ய, கிராமத்தினருக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை; சட்டத்தின் மற்றொரு மீறல், உரிமை கோருபவருக்கு வழக்கில் ஆஜராக நியாயமான வாய்ப்பு தராமல் அவரது எந்த கோரிக்கையும் நிராகரிக்கப்படுவது.
இத்தகைய அரசு சட்ட மீறல்கள் ராஜஸ்தானில் மட்டுமில்லை; நாடு முழுவதும் 19 லட்சம் உள்நாட்டு மக்கள் - ஒரு குடும்பத்திற்கு ஐந்து நபர்கள் என 95 லட்சம் பேர் -- வனத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளனர். அரசின் கோரிக்கைகள் மீது சட்ட விரோதமாக காவலாளர்களே முடிவு எடுத்தல்; செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் 75 ஆண்டுகால ஆவணங்களை கேட்பது உள்ளிட்ட அத்துமீறல்கள் இதில் அடங்கும் என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.
வன உரிமை சட்டத்தின் கீழ் உரிமை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் 2019 ஜூலைக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று, 2019 பிப்ரவரி 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பழங்குடி குழுக்கள், பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து பரவலான விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் எழுந்தன; மற்றும் மத்திய அரசின் மனு தாக்கல் செய்த நிலையில் தனது உத்தரவுக்கு, 2019 பிப்ரவரி 28ஆம் தேதி உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.
வன உரிமைகள் சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமை கோரிக்கைகள் ஏற்பது அல்லது நிராகரிக்கப்பட்டது குறித்து சம்மந்தப்பட்ட 21 மாநிலங்கள் -- ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியன -- உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் தந்தாக வேண்டும்.
வன உரிமைகள் சட்டத்தின் கீழ் கோரிக்கைகள் நிராகரிப்புக்கு மனுதாரர்களான வைல்டு லைப் பர்ஸ்ட், இயற்கை பாதுகாப்பு சங்கம் மற்றும் புலி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியன வாதிடுகையில், உரிமை கோருபவர்கள் ஒரு ஆக்கிரமிப்பாளர்; மலைவாழ் மக்கள் என்று சான்று அளிக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் முன் தெரிவித்தனர்.
ஆனால் களத்தில் இருந்து வளரும் சான்றுகள் -- சத்தீஸ்கரில் இருந்து 2018 நவம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது போல்-- நிராகரிப்பின் பெரும்பகுதி சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று தெரிகிறது.
கோரிக்கைகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது, நிராகரிக்கப்படுகிறது
கடந்த 2005 டிசம்பர் 13க்கு முன் அவர்கள் ஆக்கிரமிப்பை நிரூபிக்க முடியுமெனில் வன உரிமைகள் சட்டம் வனப்பகுதிகளில் பழங்குடியினரின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிக்கிறது.வன நிலங்கள் குறித்த உரிமைகள் மூன்று அடுக்கு முறை மூலம் செயல்படுத்தப்படுகின்றன: உரிமம் முதலில் கோரப்பட வேண்டிய இடமான கிராம சபா அல்லது கிராம பொதுச்சபை; ஒரு அரசு அதிகாரி தலைமையிலான ஒரு துணைப்பிரிவு அளவிலான குழு (SDLC); மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு மாவட்ட அளவிலான குழு (DLC).
ஒவ்வொரு வன உரிமை கேட்புக்கும் இரு ஆவணங்கள் சான்றுகளாக இருக்க வேண்டும்: அரசு வெளியிட்டஆவணங்கள்; ஆராய்ச்சி ஆய்வுகள்; பெரியவர்கள் அறிக்கை மற்றும் கிணறு போன்ற உடைமை அல்லது நிலத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கான சான்றுகள்.
உரிமை கேட்புகள் இவ்வாறு தன செயல்படுத்தப்படுகின்றன: வருவாய் மற்றும் வனத்துறை துறையினர் அதிகாரிகளோடு சேர்ந்து, கிராம சபா வன உரிமைக் குழுவானது, இடம் யர்ந்தோர் மற்றும் சாட்சிகளிடம் இருந்து தேவைப்பட்டால் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும். இந்தக்குழு அதன் கருத்தை கிராம சபாவிடம் சமர்ப்பிக்கிறது; உரிமை கேட்பை கிராம சபா அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்கிறது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் துணைப்பிரிவு அளவிலான குழுவுக்கு (SDLC) மறுஆய்வுக்கு அனுப்பப்படுகிறது; ஒப்புக்கொண்டால், உரிமை கேட்பு மாவட்ட அளவிலான குழுவுக்கு (DLC), அனுப்பப்படுகிறது; இது உரிமை கேட்பை ஏற்பது அல்லது நிராகரிக்கும் இறுதி சட்ட அதிகாரத்தை கொண்டது.
நிராகரிப்புக்கு எதிரான மேல்முறையீடுகள் அதே வரிசையில் உள்ளன. கிராம சபா அல்லது துணைப்பிரிவு அளவிலான குழு, உரிமை கேட்பை நிராகரித்தால், உரிமையாளர் அங்கோ அல்லது மாவட்ட அளவிலான குழுவிடமோ மேல்முறையீடு செய்யலாம்.
உரிமம் கேட்பு நிராகரிக்கப்படுவதற்கு முன்பு, உரிமைகோரியவர்கள் தனிப்பட்ட விசாரணைக்கு அனுமதி தர வேண்டும்; நிராகரிப்புக்கு அவர்களிடம் காரணம் -எழுத்து மூலம் -வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் தெரிவிக்கிறது.
ஆனால், அவ்வாறு சொன்னபடி எதுவும் நடைபெறவில்லை என்பது எங்களின் விசாரணையில் தெரிய வந்தது.
பழங்குடியினரிடம் செயற்கைக்கோள் படம், 75 ஆண்டு ஆவணங்கள் கோருதல்
கடந்த 2018 நவம்பர் வரை நாடு முழுவதும் அனைத்து வன உரிமை சட்டத்தின் கீழ் உரிமை கேட்புகளில் ஏறத்தாழ பாதி (46%) நிராகரிக்கப்பட்டது என, பழங்குடியிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சமீபத்திய மாதாந்திர முன்னேற்ற அறிக்கை தெரிவிக்கிறது.
மலைவாழ் மக்கள் (வனவாசிகள்), வல்லுனர்கள் - மற்றும் பெருகும் நீதிமன்றங்களும் அரசுகளும் - இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வனவாசியும் உண்மையில் 2005க்கு பிறகு ஆக்கிரமித்தவர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கவில்லை.
ஜார்க்கண்டில், வன உரிமை கேட்பின் மீதான் முடிவுகளில் பெரும்பாலும் உள்ளூர் வனத்துறையினர் ஆதிக்கம் செலுத்துவதாக, அங்கு வன உரிமைக்கு போராடியவரும் மத்திய ஜார்க்கண்டின் லதாரில் உள்ள மதகுருவுமான பாதர் ஜார்ஜ் மோனிபலி தெரிவித்தார். "உரிமை கேட்பை சரிபார்த்து முடிவெடுக்கும் அதிகாரம், கிராம அளவிலான குழுக்கள் மட்டுமே உள்ளது. ஆனால் அந்த குழுக்களோ பெரும்பாலும் காவல்துறை அதிகாரிகளின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்கிறது," என்று அவர் கூறினார்.
அதேபோல், வனப்பகுதியை 41% கொண்டுள்ள, 2.5 கோடி மக்களில் மூன்றில் ஒருபகுதியினர் பழங்குடியின மக்களாக உள்ள சத்தீஸ்கரில், அரசியலமைப்பு மூலம் பாதுகாக்கப்படும் 645 பழங்குடியின சமூகங்கள் உள்ள நிலையில், அரசு அதில் சட்ட விரோதமாக பத்வாரிஸ் (கிராம அளவிலான வருவாய் அலுவலர்கள்) மற்றும் வன உரிமைக்கூழ் காவலர்களை சேர்த்தது என்று, ஒடிசாவை சேர்ந்த சுதந்திர வன உரிமை ஆராய்ச்சியாளரான துஷார் தாஷ் கூறினார்.
"சத்தீஸ்கரில் பாதிக்கும் மேற்பட்ட நிராகரிப்புகள் கிராம் சபா அளவில் இருப்பது கண்டறியப்பட்டது" என்ற தாஷ், "ஆனால் இந்த நிராகரிப்புகள் பெரும்பலும் வனக்காவலர்கள் அல்லது பத்வாரிகள் எனப்படும் கிராம அளவிலான வருவாய் அலுவலர்களால் முடிவு செய்யப்பட்டன" என்றார்.
இந்தியா முழுவதும் நில மோதல்களை கண்காணிக்கும் ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்களை கொண்ட சுதந்திர அமைப்பான லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச், நில மோதல்களை ஆவணப்படுத்தி, ஒரு வன உரிமை கேட்பு என்பது, வரம்பிற்குட்பட்ட வன அதிகாரி மூலம் எவ்வாறு நிராகரிக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தியது; அந்த உரிமைதாரர் 2005ஆம் ஆண்டுக்கு முன்பே நிலத்தில் வாழவில்லை என்றது.
வன உரிமைச்சட்ட விதிகள் பல்வேறு அனுமதிக்கப்பட்ட சான்றுகளை பட்டியலிட்டாலும், கிராமப்பகுதி மூத்தோர்களிடம் இருந்து வரும் அறிக்கைகள், நிலத்தில் நிரந்தர மேம்பாடுகள், எல்லைகள், மரபுவழி, பழைய நிலப் பதிவுகளில் குறிப்பிடப்பட்ட நபர்களின் வம்சாவளியைக் கண்டுபிடித்தல் போன்ற சட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாத கூடுதல் கோரிக்கைகளை மாநிலங்கள் அடிக்கடி செய்கின்றன.
உதாரணமாக, குஜராத்தில்2008 வரை தாக்கல் செய்யப்பட்ட 1,18,000 உரிமை கேட்பில், குஜராத் உயர்நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டில் தந்த தீர்ப்பின்படி "போதிய சான்றின்மை" என்று துணைப்பிரிவு அளவிலான குழுக்களால் மூன்றில் ஒரு பங்கு நிராகரிக்கப்பட்டன. வனத்துறையின் பதிவுகள், ஆவணம் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அரசு, காந்திநகர் இன்ஸ்டிடியூட், பாஸ்கராச்சார்யா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் மற்றும் ஜியோ இன்ஃபார்மாடிக்ஸ் ஆகியவற்றிடம் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களே ஆதாரமாக இருக்க வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த குஜராத்தை சேர்ந்த லாபநோக்கற்ற அமைப்பான சமூக நலன் மற்றும் மேம்பாட்டு செயல்பாடு ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது.
சட்டத்திற்கு முரணாக, 1980ஆம் ஆண்டுக்கு முன் வைத்திருந்த உரிமை கேட்புளை மட்டுமே செயல்படுத்த, குஜராத் முடிவு செய்தது. அதன் 2013 தீர்ப்பில் குஜராத் உயர் நீதிமன்றம் இந்த தேவைகளைத் தாக்கி, "குடிமக்கள் அத்தகைய வர்க்கத்தில் இருந்து ஆதாரங்களைக் கோருவதன் மூலம், அத்தகைய சட்டம் இயற்றியதற்கான அவர்கள் உரிமைகளின் அர்த்தம் குறைந்துவிடும்" என்றது. நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட கூற்றுக்களை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆதாரத்தின் மோசமான பிரச்சனை "பழங்குடியினர் அல்லாத மற்றவர்களுக்கு சொந்தமானது அல்ல"; 75 ஆண்டுகளாக வனப்பகுதியில் "தொடர்ந்து இருப்பதை" நிரூபிக்க வேண்டும்.
"கர்நாடகா, ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் 75 வயதாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது" என்று, பெயர் வெளியிட விரும்பாத, பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர் தெரிவித்தார். "ஒரு மலைவாழ் சமூகத்தை சேர்ந்த குடும்பத்திற்கு இது சாத்தியமாகும்? அந்த ஆவணம் தூசாகத்தான் மாறுமா? " என்றார் அவர்.
கடந்த 2018 மார்ச்சில் அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிராகரிப்பு விகிதங்கள் உயர்ந்த மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களை, அத்தகைய உரிமை கேட்பு கூற்றுக்களை 2014 ஏப்ரல் 1 முதல், "கண்டிப்பாக" பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
சமீபத்தில் கிடைக்கப்பெற்ற 2018 நவம்பர் புள்ளி விவரங்களில், தனிப்பட்ட உரிமை கேட்பு நிராகரிப்பில் அதிகபட்சமாக சத்தீஸ்கர் (4,55,000), அடுத்து மத்திய பிரதேசம் (3,50,000), மகாராஷ்டிரா (1,20,000) உள்ளன.
மாயமான சித்தோர்கார்க் கோப்புகள்
நாம் முன்பே கூறியபடி, ராவல்பாத்தா ஒன்றியங்களில் தேவிலால் மற்றும் மற்றவர்களின் உரிமை கேட்புகள் நிராகரிக்கப்பட்டது மற்றும் அது ஏன் என்று தெரியப்படுத்தவில்லை.
பழங்குடியினர் 2010 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் தங்கள் வீடுகள், விவசாயத்துறைகளிள் ஒரு ஹெக்டேர் --அதாவது இரண்டு கால்பந்து மைதான அளவுக்கு அதிகமில்லை-- தங்களது என்று கேட்டனர்.
தங்களின் உரிமை கேட்பு ஆவணத்தை அவர்கள் கடைசியாக பார்த்தனர்.
அவர்கள் பெறப்பட்டதற்கான எந்த ரசீதோ அல்லது எந்த ஒப்புகை சான்றோ கிடைக்கவில்லை; அவர்களும் தங்களிடம் எந்தவொரு நகலையும் வைத்திருக்கவில்லை. "நாங்கள் பல முறை கிராமசபைக்கு சென்றோம்," என்ற தேவிலால், "ஆனால் ஒவ்வொரு முறையும் கோப்பு செயல்பாட்டில் உள்ளது என்ற பதில் மட்டுமே வந்தது" என்றார்.
அவர்களில் எவருடைய வீடுகளையோ அல்லது நிலத்தை வன உரிமைக் குழுவினர் எந்தவிதமான சரிபார்ப்பையும் செய்யவில்லை என்றனர். தங்கள் உரிமை கேட்பு பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில், 2017ல் மீண்டும் புதிய மனுவை தயாரித்தனர். இதை கிராம சபாவிடம் அளித்த போது, அவர்களின் முந்தைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், மீண்டும் புதிய மனுவை சமர்ப்பிக்க இயலாது என்று துணைப்பிரிவு அளவிலான குழுக்களால் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு விவசாயிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யத் தொடங்கினர்.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார்க்கில் உள்ள ரவாத்பதாவில் உள்ள பில் சமூகத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட தகவல் உரிமை கேட்பின் கீழ் பெற்ற தபால்ரசீதுகள்.
ஆர்.டி.ஐ. மூலம் அவர்கள் அளித்த ஆவணங்கள், கிராம ஊராட்சிகள் -கிராமத்தை நிர்வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் குழு- 2012ஆம் ஆண்டில் ஒவ்வொரு உரிமை கேட்பையும் வனத்துறையில் இருந்து பதிவு செய்ய முயன்றதை காட்டியது; கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக அமைச்சகத்திடம் ஒரு கடித ஒப்புகை கிடைத்தது. துணைப்பிரிவு குழுக்களிடம் இருந்து தேதியிடப்படாத ஆவணம், அம்பா மற்றும் பேவ்தா கி கல் ஆகிய இரு ஊர்களின் விண்ணப்பதாரர்கள் உட்பட. 61 நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
துணைப்பிரிவு குழுக்களின் நடவடிக்கைகள் பலவும், வன உரிமை சட்ட விதிகளை மீறுவதாக உள்ளன; அத்தகைய பிரிவு 12 (அ) (3), சம்பந்தப்பட்ட நபருக்கு நிராகரிப்பு பற்றி நேரில் தெரிவிக்க வேண்டுமென்று கூறுகிறது; உரிமைதாரர் 60 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்; மற்றும் மறுப்புக்கான காரணங்கள் எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பிரிவு 12 (A) (10) கூறுகிறது.
அதற்கு பதிலாக, உரிமை கேட்புகள் நிராகரிக்கப்பட்ட போது, கிராமங்களில் ஒரு வன உரிமைக் குழு கூட உருவாகவில்லை என்று ஆர்.டி.ஐ பதில் கூறுகிறது. வன உரிமைக்குழுவானது 2018 ஜூனில் மட்டுமே அமைக்கப்பட்டது. அதன் பின் மூன்று நாளில், குழு உறுப்பினர் விவரம் கேட்டு ஆர்.டி.ஐ.வாயிலாக மனு செயப்பட்டதாக, ஆர்.டி.ஐ பதிலை மதிப்பிட்டதாக செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அந்தக் குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருந்தனர், ஆனால் சட்டம் 10க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. பெண்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகையில், அவ்வாறு இல்லை. குழுவில் சட்ட விரோதமாக “துணைத் தலைவர்” என்ற பதவி உருவாக்கப்பட்டிருந்தது.
"நாங்கள் எப்.ஆர்.சி. [வன உரிமைக்குழு உறுப்பினர்கள்] இருப்பிண்டங்களுக்கு சென்றோம்," என்ற தேவிலால், “ஆனால் அத்தகைய குழு எதிலும் இருப்பதாக அவர்களுக்கு எண்ணமும் இல்லை; அவர்களில் சிலர் பஞ்சாயத்துகளில் பணிபுரிந்து பிறவற்றில் உறுப்பினர்களாகவும் இருந்தனர்" என்றார்.
நிராகரிப்புக்கான தவறான காரணங்கள்; குழம்பும் அதிகாரிகள்
துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் மற்றும் எஸ்.டி.எல்.சி. குழுவின் தலைவர் அமித் குமார் வர்மா கூறுகையில், 2018 ன் பிற்பகுதியில் அவர் பொறுப்பேற்றபோது, தேவிலால் அல்லது மற்றவர்கள் வழக்கு பற்றி தெரியாது என்றார். விண்ணப்பதாரர்களால் தவறுகள் “என் கவனத்திற்கு” கொண்டு வரப்பட்டால், தனது அலுவலகம் அதை திருத்த தயாராக உள்ளதுஎன்றார் வர்மா.
வர்மா இந்த செய்தியாளருக்கு முன்பாக பரிசோதித்த கோப்புகளின்படி, எஸ்.டி.எல்.சி. 2015 ஜூன் 4இல் 61 உரிமை கேட்புகள்நிராகரிக்கப்பட்ட உத்தரவை அனுப்பி வைத்திருந்தது. ஆனாலும், வர்மாவின் அலுவலகத்தில் அவற்றை நிராகரித்ததற்கான உத்தரவின் பிரதிகளோ அல்லது காரணங்களோ இல்லை. துணை ஆணையர் மற்றும் ஊராட்சிகளுக்கு இடையே உள்ள அலுவலகமான பஞ்சாயத்து சமிதி (ஒன்றியம்) வாயிலாக அனைத்து உத்தரவுகள், கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டதாக, வர்மா தெரிவித்தார்.
சமிதி அலுவலகத்தில்,ஒன்றிய வளர்ச்சி அலுவலர் எம்.எல்.சர்மாவும், தான் சமீபத்தில் தான் பொறுப்பேற்றதாக் தெரிவித்தார். ஆனால் அவரது அலுவலக பதிவுகளின்படி, வன உரிமை மறுப்பு உத்தரவுகள், பைன்ஸ்ரோர்கார்க் கிராம ஊராட்சிக்கு - தேவிலால் மற்றும் பிற உரிமை கோரியவர்கள் வசித்து வரும் குக்கிராமங்கள் - உரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.
ஊராட்சிகளில், அடையாளம் காணவிரும்பாத ஒரு அதிகாரி அனைத்து வன உரிமைகள் பதிவுகளிலும், ஆனால் வன உரிமை சட்ட நிராகரிப்பின் எந்த பதிவும் இல்லை. சமிதி அலுவலகத்தில் இருந்து ஒருபோதும் திரும்பவில்லை என்று அதிகாரி கூறினார்.
ஊராட்சி சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில், கூற்றுக்களை நிராகரிப்பதற்கான காரணங்களை அதிகாரிகள் தெரியாத நிலையில் இருக்கிறார்கள். காரணங்கள் மாறுபட்டவை: சிலர் நிலம் அளவிடப்படவில்லை என்றனர்; மற்றவர்கள், தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூறினர். ஏனெனில் அம்பா மற்றும் பெவ்டாகி கால், அருகில் உள்ள ஜவஹர் சாகர் வனவிலங்கு சரணாலய எல்லைக்குள் வந்துவிடுகிறது.
இவை எதுவும் சட்டத்தின் கீழ் சரியான காரணங்கள் அல்ல. உரிமை கோரியவர்கள் உண்மையில் ஆக்கிரமிப்பு அறிவிபை வனத்துறையிடம் இருந்து பெற்றுள்ளனர். ஆனால், வனச்சரணாயலம் குறித்து வன உரிமைச்சட்டம் கூறுவது, மலைவாழ் மக்கள் இடமாற்றம் என்பது கடைசி வாய்ப்பு மட்டுமே;முதலில் உரிமைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிறது.
நிராகரிக்கப்படுவது பற்றி ராஜஸ்தானில் தெரிவிக்காதவர்கள், தனித்துவமானவர்கள் அல்ல.
ஒடிசா அரசின் 2017 தலைமை கணக்காளர் தணிக்கை அறிக்கை, நிராகரிக்கப்பட்ட 51 உரிமை கேட்புகளை தணிக்கையில் பரிசோதித்தது; அதில் 35 "ஒழுங்கற்ற நிராகரிக்கப்பட்டது" மற்றும் அவர்களது உரிமை கோரும் "நிராகரிப்பு குறித்து தெரிவிக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டது.
2019 பிப்ரவரி 27ல் உச்சநீதிமன்றத்தில் மனு செய்த பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம், நிராகரிப்பை அனைத்து மாநிலங்களும் மதிப்பீடு செய்யும் வரை வெளியேற்றம் தொடர்பான நீதிமன்ற ஆணை திருத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது. நிராகரிப்பு கவலைகள், மற்றும் "தகவல் அளிக்காத நிராகரிப்பு உத்தரவு (sic) குறித்து அமைச்சகம் உணர்ந்துள்ளது.
மீண்டும் சித்தோர்கார்க்கில் இத்தகைய மாற்றங்கள் வெளியேற்றுவதில் இருந்து நிவாரணமளிக்க முடியாது; ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் நில உரிமைகளைப் பூர்த்தி செய்வதற்காக பில்ஸ் தாக்கல் செய்த ஆவணங்களை கண்டுபிடித்துவிடலாம்.
"மாவட்ட நிர்வாகம் மக்களை அலுவலகங்களுக்கு இடையே ஓடச்செய்கிறது, காரணங்களை வாய்வழி சொல்கிறது" என்று பில் விவசாயிகள் கோரிக்கைகள் மற்றும் ஆர்.டி.ஐ. பயன்பாடுகளுக்கு உதவும் புல்ட் மஸ்தூர் கிசான் சமிதியின் பாபு நாத் தெரிவிக்கிறார்.
"எழுத்துமூலமான உத்தரவின்றி, அவர்கள் [பில்ஸ்] கோரிக்கையை விண்ணப்பிக்கவோ, உரிமைகேட்பு விண்ணப்பத்தை திருத்தவோ முடியாது" என்ற நாத், "எங்களது தகவல் அறியும் உரிமை காரணமாக, குறைந்தபட்சம் அவர்களது பழைய கோப்புகளை தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர்" என்றார்.
(கோகலே, சுதந்திரமாக செயல்படும், இந்தியா முழுவதும் நில மோதல்களை ஆவணப்படுத்தும் நில மோதல்கள் கண்காணிப்பு அமைப்பின் பங்களிப்பு எழுத்தாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.