மும்பை: இந்தியா பணக்கார நாடாகி வரும் நிலையில், அதன் குடிமக்களில் பலரோ நாட்டில் இருந்து வெளியேறுவது அதிகரித்து வருகிறது.

கடந்த 2017ன் கணக்குப்படி 17 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இது உலகளாவில் புலம் பெயருவோர் எண்ணிக்கையில் அதிகபட்சமாகும். 1990களில் 7 மில்லியன் என்பது 143% அதிகரித்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் பொருளாதார விவகாரங்களுக்கான புள்ளிவிவரங்களை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.

அதே காலகட்டத்தில், இந்தியாவில் தனிநபர் வருமானம் 522% ($ 1,134 லிருந்து $ 7,055) வரை அதிகரித்தது. உள்நாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் வேலைதேடி வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்தது.

அதேநேரம் இந்தியாவில் இருந்து திறமை குறைந்தவர்களின் வெளியேற்ற எண்ணிக்கை சரிந்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய அறிக்கையின்படி. இந்தியாவில் 2017ல் 3,91,000 பேர் வெளியேறியுள்ளனர்; இது 2011 ஆம் ஆண்டில் 6,37,000 ஆக இருந்தது.

இருப்பினும் இது குடியேறும் இந்தியர் விகிதம் அதிகரித்து வருவதற்கு திறமையே காரணம் என்பதான பொருளாக கருதத்தேவையில்லை. நுட்பம் பெற்ற இந்தியர்கள் ”அறிவு வடிகால்” தேடி தாயகத்தில் இருந்து வெளிநாடு செல்வது குறித்து கொள்கை வகுப்பாளர்கள் கவலை அடைய வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு, குடியேற்ற பரிசோதனை தேவை (ஈ.சி.ஆர்.) பாஸ்போர்ட்டுகள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்வோருக்கு வழங்கப்படுகிறது. திறனற்ற தொழிலாளர் தொடர்பான அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் போன்றவரை ஈ.சி.ஆர். அல்லாத பாஸ்போர்டில் செல்ல தூண்டுவதும் சரியும் போக்கிற்கு காரணமாக இருக்கலாம். “ஈ.சி.ஆர். பாஸ்போர்ட் பெறுவோருக்கு இந்தியா சில உள்சரிசெய்தல்களை செய்துள்ளது. ஈ.சி.ஆர். பாஸ்போர்ட் பெறும் பலரும் பின்னர் புலம் பெயருவதற்கான வழியை நாடுகின்றனர் -- ஆனால் இது குறித்த புள்ளி விவரங்கள் வெளிப்படையாக கிடைக்காததால் ஆராயப்படவில்லை” என்று, குடியேற்றம் மற்றும் நடமாட்டம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய-இந்திய ஒத்துழைப்பு அமைப்பின் தொழில் நுட்ப அதிகாரி (ILO) சீதா சர்மா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

“வேறு காலத்தைவிட அதிக திறமையாளர்கள் வெளியேறுவது என்பது, “மூளை வடிகால்” தேடல் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. கடந்த தலைமுறையுடன் ஒப்பிடும் போது தற்போது திறன் மேம்பாட்டவர்கள் அதிகம் நாடு இழக்கிறது. ஆனால், நாட்டை பெரிய அளவுக்கு விட்டுச் செல்லும் அளவுக்கு நாம் திறமையாளர்களை பெற்றிருக்கிறோம்.”

சர்வதேச குடியேற்றம் என்பது பொருளாதாரம் வளரும் போது அதுவும் வளர்கிறது. பலருக்கும் கூடுதல் பணத்தேவைக்கு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். நாடு உயர் மற்றும் குறைந்த வருவாய் நிலையை எட்டும் போது, இது குறையத் தொடங்கும்.

தொழிலாளர் தேவைகளை குறைக்கும் உள்ளூர் வேலைவாய்ப்பு சந்தைகளின் போக்கு, சர்வதேச இடம் பெயர்வுக்கு முக்கிய காரணமாகிறது. உலகளவில் நுழைந்துள்ள புலம் பெயர்வோரில் 73% பேர், சொந்த நாட்டில் பணி வாய்ப்பு இல்லாதவர்கள் என்று, ஏ.டி.பி. அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் உழைக்கும் வயதினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் 1.3 மில்லியன் அதிகரித்து வருகிறது, வேலை வாய்ப்பு சந்தையில் நிலவும் மந்த சூழல், வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனனமான இந்திய ரயில்வேயில் 90,000 காலி இடங்களுக்கு, 20.8 மில்லியன் பேர் விண்ணப்பித்தாக, 2018 மார்ச் மாதம் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.

சிறந்த வாழ்க்கைக்கான தேடல்

ஏறத்தாழ கடந்த முப்பது ஆண்டுகளாக, 1990 முதல் 2017 வரை இந்தியாவில் உள்ள திறமையான, திறமை குறைந்த தொழிலாளர்களின் புலம்பெயர்வு அதிகளவில் நிகழ்ந்து வருகிறது.

மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடானா கத்தாரில், 2017ஆம் ஆண்டுடனான 27 ஆண்டுகளில் 82,669% உயர்ந்து, அதாவது 2,738-ல் இருந்து 2.2 மில்லியனாக அதிகரித்துள்ளது. 2015 முதல் 2017-க்குள் கத்தாரில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதாவது 250% அதிகரித்தது.

கடந்த 1990 முதல் 2017-க்குள் இந்தியர்களின் எண்ணிக்கை ஓமன் நாட்டில் (688%) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (622%) அதிகரித்தது. 2017ஆம் ஆண்டுடனான ஏழு ஆண்டுகளில் சவுதி அரேபியாவில் 110%, குவைத்தில் 78% இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் அதிகரித்து வரும் பொருளாதார வளங்களில் இந்தியர்களின் பங்களிப்பை இது பிரதிபலிக்கிறது.

எண்ணெய் வளம் மிக்க இந்நாடுகளில், பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்கள் மற்றும் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் கட்டுமான தொழில்களில் உள்ள பணி வாய்ப்பு மற்றும் தேவைகளுக்கான அழைப்பு பதில் அளித்து பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

இருப்பினும், அண்மையில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலை இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு இடம் பெயரும் தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவால், திட்டங்களுக்கான செலவினக்குறைப்பு நடவடிக்கை, பொருளாதார மந்தநிலை, ஒப்பந்தம் கிடைக்காதது, குறைந்த ஊதியம் போன்றவை வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது என, 2016-17ல் இந்திய வெளியுறவு அமைச்சக தகவலில் பதில் தரப்பட்டுள்ளது.

ஆங்கிலம் பேசாத, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD) நாடுகள் குழுவில் இடம் பெறாத இத்தாலியில், 1990 முதல் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; ஐரோப்பாவில், புலம் பெயர்ந்த மக்களை அதிகம் கொண்ட நாடாகவும் உள்ளது.

இதற்கு காரணம், 1990 மற்றும் 2000ம் ஆண்டுகளில் ஆவணங்கள் இல்லாமல் குடியேற புலம் பெயர்ந்தவர்கள் பலர் அனுமதிக்கப்பட்டனர். அத்தகைய ஆவணங்கள் இல்லாத இந்தியர்கள் பலருக்கு குடியுரிமை நிலை வழங்கப்பட்டது; அவர்களில் பலர் திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் குடியேறினர். இந்திய குடிமக்களுக்கு பருவகால வேலை விசாக்களை வழங்கும் அரிய ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியும் ஒன்று; புலம்பெயர்ந்தோர் மத்தியில் அதன் மேல்முறையீடு அதிகரிக்கிறது.

இந்தியர்கள் பாரம்பரியமாக குடியேறும் வளைகுடா நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவற்றில், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. ஓ.இ.சி.டி. நாடுகளில் இந்தியர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரித்துள்ளது.

உதாரணத்துக்கு, 2017 உடன் முடிந்த ஏழு ஆண்டுகளில், நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில் முறையே, 66%, 56%, 42% என இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. மலிவாகவும் (அமெரிக்கா, இங்கிலாந்துடன் ஒப்பிடும் போது), நல்ல கல்வி, பட்டம் பெற்ற பிறகு வேலை வாய்ப்பும் இங்கு உள்ளது.

“இங்கிலாந்தில் படித்த பிறகு வேலை கிடைப்பது என்பது கடினமாகிவிட்டது. அதனால் அதிக இந்திய மாணவகள் வேறு இடங்களை தேடி வருகின்றனர்” என்று சர்மா தெரிவித்தார். “உதாரணத்துக்கு ஜெர்மனியில் இலவச கல்வி உள்ளது. பல்கலை படிப்பு பின் வேலை எளிதாக கிடைக்கும் என்பதால் பலர் அங்கே இடம் பெயருகின்றனர்”.

ஐரோப்பாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வயதானவர்கள் அதிகம் என்ற நிலையில், புலம்பெயர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு எளிதாகிறது. வளர்ந்த நாடுகளில் பிறப்பு விகிதம் குறைவால் ஏற்படும் வேலைவாய்ப்பு இடைவெளியை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிரப்புகின்றனர்.

இந்த தேவையால் இந்தியா நன்றாக பயனடைகிறது. ஒப்பீட்டளவில் திறன் (குறிப்பாக உள்ளூர் ஐ.டி. துறையில் முதிர்ந்த அனுபவம்) மற்றும் ஆங்கில மொழி பேசும் தொழிலாளர்கள் உள்ளனர்.

”சில வளர்ந்த மேற்கத்திய நாடுகள், தங்களின் தொழிலாளர்களை மட்டுமே சார்ந்திருக்காமல், தங்களின் தேவைகளுக்கு உலகின் மற்ற நாட்டினரை சார்ந்து நிற்கின்றன. இதுபோன்ற இடங்களில் இந்தியா முன்னால் நிற்க முடியும்” என்று சர்மா தெரிவித்தார்.

உலக நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் கருவுறுதல் விகிதம் 2.1 என்பதற்கு கீழே உள்ளது. அதாவது, குழந்தைகள் குறைந்த எண்ணிக்கையில் பிறந்து மக்கள் தொகை விகிதத்தை பராமரிக்க உதவுவதாக, மருத்துவ இதழான லான்செட் 2017 ஆய்வு தெரிவிக்கிறது.

இருப்பினும் குறுகிய காலத்தில், அரசியல் சூழல் மாறுபாடு, வெளிநாட்டில் புலம் பெயர்வது மீதான வெறுப்பு எண்ணம் போன்றவை, பணிக்கு இந்தியர்களை ஏற்றுக் கொள்வதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

வேலைகளில் “அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை” அளிக்கும் பொருட்டு வெளிநாட்டினருக்கான ஹெச்.-1 பி விசா வழங்குவதை குறைக்கப் போவதாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது (இவ்விசா வழங்கியதில் 80% பேர் இந்தியர்கள்) . வேலைக்கு அமெரிக்காவை சேராதவர் தேவைப்பட்டால், தற்காலிக விசா மட்டுமே வழங்கப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறையின் 2017 அறிக்கை தெரிவிக்கிறது.

அதேநேரம் ஐரோப்பிய யூனியனில் இருந்து 2019-ல் வெளியேறும் இங்கிலாந்தின் முடிவு, திறமைவாய்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் எண்ணிக்கையில் 1.4% சரிவையும், ஆசியாவில் இருந்து செல்லும் தொழிலாளர் எண்ணிக்கையில் 4.9% வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக, ஏ.டி.பி. அறிக்கை தெரிவிக்கிறது.

மாறும் குடியேற்றச்சூழல்

புலம் பெயரும் இந்தியர்களின் அடையாளமும், சமூக பொருளாதார பின்னணியும் மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள், மத்திய கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாரம்பரிய ஆதாரமாக திகழ்கின்றன; இ.சி.ஆர். பாஸ்போர்ட்டில் தொழிலாளர்கள் புறப்பட்டு செல்கின்றனர்.

எனினும் அண்மைக்காலங்களில் வட மாநிலங்களும், குறைந்த பொருளாதார மேம்பாடு கொண்ட மாநிலங்களில் இருந்து, தென் மாநிலங்களைவிட அதிகமாக திறன் குறைந்த தொழிலாளர்கள், ஆண்கள் வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர்.

கடந்த 2011-ல் புலம்பெயர்ந்த தொழிலாளர் எண்ணிக்கையில், உத்தரப்பிரதேசம் முன்னணியில் உள்ளது. அடுத்த இடங்களில் பீகார், தமிழ்நாடு உள்ளன. கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை, 69% குறைந்துள்ளது. அதாவது, 2011 - 2013ஆம் ஆண்டுகளில் 80,000 என்பது, 2017-ல் 25,000 ஆக சரிந்தது.

Source: India Migration Watch

சமச்சீரற்ற வளர்ச்சி, நாடு முழுவதும் பரந்து காணப்படும் வேறுபட்ட தொழிலாளர் சந்தைகள் போன்ற காரணத்தால், குறைந்த திறனுள்ள இந்திய தொழிலாளர்கள் வெளிநாட்டுக்கு செல்ல ஊக்கம் பெறவில்லை.

இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள், குறிப்பாக மேலை நாடுகளை போல் கல்வி, சுகாதாரம், பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ள தமிழ்நாடு, கேரளா, கோவா போன்றவற்றைவிட மற்றவை, குறைந்தளவு வளர்ந்த நாடுகளில் காணப்படுவதாக, இந்தியாஸ்பெண்ட், 2018 ஜூலையில் கட்டுரை வெளியிட்டிருந்தது.

“புலம் பெயருவோரின் போக்கு மாறியுள்ளது” என்று கூறும் சர்மா, “உதாரணத்திற்கு கேரளாவில் இருந்து சென்றால், அது இனி லாபகரமானதாக இருக்காது. அதே நேரம் பீகாரில் இருந்து சென்றவர், கேரளாக்காரரைவிட மூன்றில் ஒரு பங்கே ஈட்டுகிறார்” என்றார்.

ஈ.சி.ஆர். பாஸ்போர்ட் கேட்டு அனுப்பியதில் முதல் 10 மாநிலங்கள் (2011- 2017)

Source: India Labour Migration Update 2018, International Labour Organisation

இருப்பினும் இந்த புள்ளி விவரங்கள், ஈ.சி.ஆர். பாஸ்போர்ட் முறையில் இருந்து விலகியவர்களின் விவரங்களை காட்டுகிறது தவிர, ஈ.சி.ஆர். அல்லாத பாஸ்போர்ட் முறைக்கு மாறியவர்கள் எவ்வளவு பேர் என்ற விவரங்களை குறிப்பிடவில்லை. கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் சரிவை சந்தித்த போதும், ஈ.சி.ஆர். பிரிவில் வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் கேரளாவில் அதிகளவில் உள்ளதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2018 அறிக்கை தெரிவிக்கிறது.

உண்மையில், 2017-18ஆம் ஆண்டு வெளிநாட்டு நிதியில் கேரளா 19 சதவீதத்துடன் (வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அனுப்பிய நிதி) முன்னணியில் உள்ளது; மகாராஷ்டிரா (17%), கர்நாடகா (15%) என இம்மூன்றும் 51% பங்களிப்பை கொண்டிருந்ததாக, ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவும் அதிகபட்ச வறுமை நிலை, வேலைவாய்ப்பின்மை, ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்டவை, தொழிலாளர்கள் புலம்பெயருவதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

பணத்தொகை பெரும்பாலும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கான முக்கிய வருமானமாகும்: இந்தியாவில் 2016-17ல் பெறப்பட்ட தொகையில் 59% பராமரிப்புக்காக (எ.கா. பொது நுகர்வு மற்றும் வாழ்க்கை செலவுகள்), 20% வங்கிகளில் வைப்பு நிதியாகவும்; 8% சொத்து மற்றும் பங்குகளில் முதலீடு என்றும் இருந்தது.

உலகளவில் 2017ஆம் ஆண்டு அதிகளவு வெளிநாட்டு தொழிலாளர் வருவாயை இந்தியா பெற்றுள்ளது.(சர்வதேச அளவில் அதிகம் புலம்பெயர்ந்தவர்களில் 7 மில்லியன் என, சீனாவை காட்டிலும் இந்தியா முன்னணியில் உள்ளது). நாட்டின் வங்கிக் கணக்குகளில் 70 பில்லியன் டாலர் தொகை உள்ளது.

உள்நாட்டில் குடியேறியவர்களுக்காக இந்தியா ஒரு பெரிய பொருளாதார புரவலனாக உள்ளது - அவர்கள் உண்மையில் ஆசியாவுடனும் சர்வதேச அளவிலும் செல்லக்கூடியவர்கள். 2017-ல் இந்தியா 5 மில்லியன் உள்நாட்டு குடிபெயர்வோரை கொண்டிருந்தது. அடுத்து தாய்லாந்து (3.5 மில்லியன்), பாகிஸ்தான் (3.4 மில்லியன்), ஆஸ்திரேலியா (3.2 மில்லியன்), ஹாங்காங், சீனா (2.7 மில்லியன்) என கொண்டிருந்தன.

இவ்வாறு குடியேறியவர்கள் குறைந்த திறனுடைய, அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் போன்றவற்றை சேர்ந்தவர்கள், இவர்கள் வரலாறு, பண்பாடு, மொழியியல், எல்லை என பலவற்றிலும் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள்.

எனினும் ஈ.சி.ஆர். பாஸ்போர்ட் வாயிலாக வெளிநாடுகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல் நாட்டில் குடியேறியவர்களின் நலன்களுக்கான கொள்கைகள் வகுக்கப்படவில்லை என்ற கவலைகளும் எழுந்துள்ளது.

கடந்த 1971ஆம் ஆண்டு போருக்கு பின் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து அசாமிற்கு குடிபெயருவோர் அதிகரித்து வருகின்றனர். இவ்வாறு சட்ட விரோதமாக குடியேறுவோர் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக, அண்மையில் அசாமில் தேசிய குடிமகன்கள் பதிவுப்பணி நடைபெற்றது. இதில் 13 மில்லியன் பெயர்கள் விடுபட்டதால், ஊடகங்களின் கவனத்தை பெற்றது. விடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் என்பதால், நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இருந்தனர்.

(சங்கேரா, எழுத்தாளர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.