வருடாந்திர பயிர் எரிப்பால் ஆகும் சுகாதாரச்செலவு = இந்தியாவின் 3 சுகாதார பட்ஜெட்
மும்பை: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பயிர்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு உடல் நலக்குறைபாட்டிற்காக செலவிடும் தொகை, நாட்டின் முதன்மையான மருத்துவமனையான எய்ம்ஸ் போல் 700 அமைக்கவோ அல்லது இந்தியாவின் சுகாதார பட்ஜெட் ஒதுக்கீட்டைவிட 21 மடங்குக்கு நிகரானது என, புதிய ஆய்வு முடிவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.
வட இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாட்டிற்கு அறுவடைக்கு பின் நிலத்தில் பயிர்களை எரிப்பது முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், 2015 நவம்பரில், தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) இதற்கு தடை விதித்தது. இத்தகைய எரிப்பால் ஆண்டுக்கு ஏற்படும் செலவினம் 2 லட்சம் கோடிக்கு மேல்; அல்லது இந்தியாவின் மத்திய சுகாதார பட்ஜெட் மூன்று முறை; அல்லது ரூ 13 லட்சம் கோடி ஐந்து ஆண்டுகளில் - இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.7%; அல்லது நாம் ஏற்கனவே சொன்னபடி, 700 எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு போதுமானது என, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யை சேர்ந்த சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IFPRI) 2019 ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வயலில் உள்ள பயிரின் மிச்சங்களை தீயிட்டு எரிப்பதல் எழும் புகை, டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாபின் 7.5 கோடி மக்கள் உள்பட 1.49 கோடி பேரின் சுகாதார பாதிப்புக்கு காரணமாகிறது - மூன்று மாநிலங்களில் ஆண்டுக்கு 72.5 நாட்கள் அல்லது ஒரு வருடத்தில் ஐந்து பங்கு - கடும் சுவாச நோய்க்கான ஆபத்து -ஏஆர்ஐ (ARI) மாசுபடுதலின் காரணமாக மூன்று மடங்கு உயரும் என ஆய்வு கூறுகிறது.
"பயிர் எரிதலை தடுத்தால், 14% ஏஆர்ஐ நோய்களிய தடுக்க முடியும் என்பதை நாங்கள் அதை கண்டுபிடித்தோம்” என்று, ஐ.எப்.பி.ஆர்.ஐ. ஆராய்ச்சியாளரும் ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான சாமுவேல் ஸ்காட், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற வட மேற்கு மாநிலங்களில் பயிர்களின் எச்சம் வயலில் எரிக்கப்படுவதால், அண்டை மாநிலமான டெல்லியில், அனுமதிக்கப்பட்ட காற்றின் நுண்துகள் அளவு (பி.எம்.2.5) 20 மடங்கு அதிகரித்து காணப்படுகிறது; இதனால், மூன்று மாநிலங்களில் ஏ.ஆர்.ஐ. ஆபத்து குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட இது காரணமாகிறது.
குளிர்காலத்தில் குறிப்பாக, தேசிய தலைநகரான டெல்லியில் பி.எம். 2.5 மாசுபாடு ஏற்படுவதற்கு 64% வெளியே இருந்து வருகிறது என்று செப்டம்பர் 3, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வயல்களில் வைக்கப்படும் தீயால் ஏற்படும் மாசுபாடு டெல்லியை பாதிக்கிறது என்பது, 15 ஆண்டுகள் (2002-2016) செயற்கைக்கோள் பதிவுகள் அடிப்படையில், விவசாய எரிபொருளில் அதிகரித்துவரும் போக்கை(2017ஆம் ஆண்டில் 617 முறை) காட்டியது என, Taiwan Association for Aerosol Research 2018இல் வெளியான, நாசா அறிவியலாளர் ஹைரன் ஜாதவாவின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Source: Taiwan Association of Aerosol Research, 2018
திட எரிபொருள் பயன்பாட்டை குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளால் 1990 மற்றும் 2016 க்கு இடையில், வட இந்தியாவில் வீடுகளால் ஏற்படும் காற்று மாசு அளவு பெருமளவு குறைந்தது; எனினும் வெளிப்புற மாசு 16.6% அதிகரித்ததாக, ஐ.எப்.பி.ஆர்.ஐ. ஆய்வு கூறுகிறது.
ஏன் பயிர் எச்ச எரிப்பு தொடர்கிறது
கடந்த 2014 ஆம் ஆண்டில் மத்திய வேளாண்மைமற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் (MoAFW) அறிவித்த பயிர் எச்சத்தை நிர்வகிப்பதற்கான தேசிய கொள்கையில், வயல்களில் உள்ள பயிர் எச்சத்தை எரிப்பதை குறைக்கும் கொள்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்தது. பயிர் எச்சத்தை அகற்ற, கூடுதல் விவசாய உபகரணங்களைப் பயன்படுத்த, பயிர் எச்சங்களை எரிப்பதற்கு பதிலாக வைக்கோல் மேலாண்மை அமைப்பு போன்ற அமைப்பை உருவாக்குவதற்காக, வேளாண்மைமற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் 2018-20ஆம் ஆண்டுக்கு ரூ. 1,151.9 கோடியை -- அதாவது 2019-20இல் பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகளின் பட்ஜெட் தொகை ரூ. 2,22,362 கோடியில் 0.5%- அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தடை வந்தது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசுகளுக்கு 'பயிர் எரிப்பு சம்பவங்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அவ்வப்போது மீளாய்வு செய்ய' நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருந்தது. எனினும் பயிர் எச்சங்கள் எரியும் சம்பவங்கள் தொடர்கின்றன.
கடந்த 2018-19ஆம் ஆண்டில் இரு மாநிலங்களும் சேர்ந்து 400 கோடி ரூபாயை பயிர் எச்சங்கள் எரிப்பு தடுப்புகாக - இரண்டு மாநிலங்களில் ஒவ்வொரு விவசாய தொழிலாளர்களுக்கும் ரூ. 15 லட்சம்- செலவழித்தன. செயற்கைக்கோள் சார்ந்த தொலையுணர்வு கருவிகளை பயன்படுத்தி,2018 ஆம் ஆண்டில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் 75,563 பயிர் எச்சம் எரிப்பு சம்பவங்களை பஞ்சாப், ஹரியானா அரசுகள் கண்டறிந்தன. தடை விதிப்புக்கு பிறகு பஞ்சாப் அரசு, 6193 எரிப்பு சம்பவங்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து இழப்பீடாக ரூ. 19.02 லட்சத்தை வசூலித்தது; ஹரியானா அரசு 3997 பயிர் எரிப்புகளை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து ரூ.31.82 லட்சம் பெறப்பட்டதாக, மக்களவை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த உணவு மற்றும் வர்த்தக கொள்கை ஆய்வாளரான திவேந்தர் ஷர்மா, இந்தியாவில் பயிர் எச்சங்கள் எரிப்பு தொடரும்; ஏனெனில் அது மட்டுமே விவசாயிகளுக்கு ஒரே வழி என்று, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “வேளாண் அமைச்சகம் மானியத்தை விநியோகிக்க சிறந்த வழி, இயந்திரங்களுக்கு வழங்குவதற்கு பதில் நேரடியாக விவசாயிகளுக்கு அளிப்பதே சிறந்ததாக இருக்கும். பஞ்சாபிலும் ஹரியானாவிலும் விவசாய நிலங்கள் ஏற்கனவே இயந்திரமயமாக்க திட்டம் விவசாயிகளுக்கு ஒரு சுமையாக உள்ளது. நிதி வழங்கப்பட்டால் விவசாயிகள் பயிர் எச்சங்களை நிர்வகிக்க தயாராக உள்ளனர். ஆனால் விவசாயிகளுக்கு இயந்திரங்களை ஊக்குவித்து விற்பனை செய்வதன் மூலம் சந்தை சீர்திருத்தங்களை உயிர்ப்பிக்க விவசாயிகள் தியாகம் செய்து வருகின்றனர் " என்றார் சர்மா.
விவசாயிகள் இயந்திரங்களை வாடகைக்கு வைத்திருக்கும் செலவுகளை மதிப்பிடுகின்றனர்; அவர்களுக்கு தேவை இயந்திர கருவிகள் அல்ல; சிறப்பு பயிற்சிகள் தான் என்கிறார்.
வைக்கோல் மேலாண்மை அமைப்பு, அறுவடை செலவுகளுக்காக ரூ.1.12 லட்சம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விதைப்பாளர்களுக்கு சந்தோஷம், அது பயிர் எச்சங்களை ரூ.1.51 லட்சம், வைக்கோல் மேலாண்மைக்கு மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி 80% மானியம் கிடைக்கும். பஞ்சாப் மாநிலத்தில் சராசரி விவசாய குடும்பத்தின் வருமானம் ரூ.18,059; ஹரியானாவில் ரூ. 14,434 என இந்திய அரசால் வெளியிடப்பட்ட 2017 விவசாய புள்ளி விவரப்படி கூறப்பட்டுள்ளது.
அரசு, இயந்திர மயமாக்கலுக்கு ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மானியம் வழங்குகிறது என்று, மத்திய வேளாண் அமைச்சகத்தின் தேசிய மழைவள ஆணையத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜே.எஸ். சர்மா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ஹேப்பி சீடர் போன்ற இயந்திரங்கள் அறுவடை காலத்தில் 20-25 நாட்களுக்கு மட்டுமே உபயோகிக்கப் பட்டுள்ளதாக சாம்ரா கூறுகிறார், மேலும் எஞ்சிய ஆண்டுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பது தவறு என்றார்.
ஹேப்பி சீடர் போன்ற இயந்திரங்கள் அறுவடை காலத்தில் 20-25 நாட்களுக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளதாக சாம்ரா கூறுகிறார், மேலும் எஞ்சிய ஆண்டுக்கு பயன்படுத்தப்படாதவை. "ஒரு விவசாய கருவி பொதுவாக 400-500 மணி நேரத்திற்கு ஆண்டுதோறும் வேலை செய்கிறது. 200-300 மணி நேரம் வேலை செய்யாதது, சாத்தியமற்றது. இந்த இயந்திரங்களை ஒரு டிராக்டர் போல் அல்லாமல் விவசாயி மற்ற பயன்பாட்டிற்கு வைக்க முடியும்" என்று சாம்ரா கூறினார்.
பஞ்சாபிலும் ஹரியானாவிலும் சிறு மற்றும் குத்தகை விவசாயிகள் - நாடு முழுவதும் தங்கள் சககளை போல - துன்பத்தில் உள்ளனர். ஏனெனில் விவசாயம் ஒரு வாழ்வாதார வருவாய் தராத நிலையில் அமுல்படுத்தப்படாமல் உள்ளது. பயிர் எச்சங்களை எரிக்கக்கூடாது என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தடை மோசமான மேலாண்மை என்று எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பஞ்சாப், ஹரியானாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பயிர் எச்சத்தில் இருந்து உயிரி எரிபொருள் தயாரிப்பில் முன்னோக்கி செல்லும் வழி
விவசாயிகளுக்கு நேரடியாக நிதி வழங்குவதற்காக, பயிர் எச்சம் எரிப்பு பிரச்சனையை எளிதாக சமாளிக்கும் பிரதான நடவடிக்கை என்ற தேவேந்திர சர்மா “2018இல் பஞ்சாப் எதிர்க்கட்சியினர் முதலமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கையில் 2018 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ 3,000 கோடி நிதி ஒதுக்க வலியுறுத்தினர்; விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.5,000- ரூ.6000 வரை கேட்டிருந்தனர். 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள சிக்கல் ஏற்படும் அபாயத்தை இந்த தொகை குறைக்க முடியுமானால், அது வழங்கப்பட வேண்டும். எஞ்சியுள்ள கழிவுப்பொருட்களை விவசாயிகளுக்கு விட்டுச்செல்ல வேண்டும்," என்றார்.
வயலில் உள்ள பயிர் எச்சங்களை பராமரிக்க, தூய்மையான எரிசக்தி பயன்பாட்டில் ஒரு இரண்டாம் அணுகுமுறை உருவாக்கப்பட முடியும் என்று சாம்ரா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். காளான் சாகுபடி மற்றும் காகித உற்பத்திக்கு பயிர் எச்சம் பயன்படுத்தப்படலாம். நெல் வைக்கோலில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்ற சாம்ரா, ஆனால் இம்முறை திறனற்றது மற்றும் செலவுமிக்கது என்றார். சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி செலவினம் ஒரு யூனிட்டிற்கு ரூ. 3க்கும் குறைவாக இருக்கும் நிலையில், வைக்கோலில் இருந்து மின்சாரம் எடுக்க ரூ 7-8 செலவாகிறது என்று சாம்ரா தெரிவித்தார்.
சமீபத்திய மற்றும் மிகவும் சாத்தியமான முறை ஒரு உயிரியல் செயல்முறை மூலம் பயிர்களின் எச்சத்தில் இருந்து இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) உற்பத்தி செய்வதாகும் என்ற சாம்ரா, இது எவ்வித இதர உதிரி வாயு அல்லது சாம்பலை உற்பத்தி செய்வதில்லை; மற்றும் புதைபடிவ எரிபொருட்களில் இருந்து பெறப்பட்ட அதே தரத்தை சி.என்.ஜி. அளிக்கிறது என்றார்.
உயிரி-சி.என்.ஜி தொழில்நுட்பம் மும்பையில் உள்ள எரிசக்தி உயிரி அறிவியல் ரசாயன தொழில்நுட்ப மையத்தின் டிபிடி இன்ஸ்டிடியூட் மூலம் செயலாக்கப்படுவதாக, இந்த திட்டத்திற்கு ஆலோசகராக பணியாற்றி வரும் சாம்ரா கூறுகிறார். ஜெர்மனியில் உள்ள விர்பியோ உயிரி எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பஞ்சாப்பில் உள்ள சங்க்ரூர் மாவட்டத்தின் பூட்டல்கலன் கிராமத்தில் ரூ.75 கோடி செலவில் ஒரு உயிர்-சி.என்.ஜி ஆலை அமைக்கிறது.
(அகமது, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.