கோவிட் -19: எங்கே தொற்று பரவல் அதிகரித்து வருகிறது
பெரிய நகரங்கள் மற்றும் மாநிலங்களில், தொற்றின் சுமை சரிந்து வரும் அதே வேளையில், வடகிழக்கு மற்றும் மத்திய மற்றும் சில வட இந்திய பகுதிகளில் உள்ளூர் பரவல்கள் வெளிப்படையாக உள்ளன;
டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. ஆனால் அக்டோபர் 4 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் 100 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், தொற்றுநோய் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக, சிகாகோ பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் பொருளாதார பேராசிரியர் அனுப் மலானி மற்றும் அவரது குழு உருவாக்கிய, இடர் கணிப்பு மாதிரி தெரிவிக்கிறது.
இந்த மாதிரியானது, தொற்று பெருக்க எண்ணை (Rt) -நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரால் ஏற்படும் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை-பயன்படுத்துகிறது மற்றும் மாவட்ட அளவில் எண்ணிக்கைகளை வழங்குவதன் மூலம் நோய் பரவுவதை வேறுபடுத்துகிறது. இரண்டாவது அலையின் போது மும்பையில் செய்யப்பட்டது போல, கோவிட் -19 நடவடிக்கைகளை, பரவலாக்க மாவட்ட அளவிலான தரவு பயன்படுத்தப்படலாம்.
தொற்று பெருக்க எண் ( Rt) மதிப்பானது, 1 ஐ விட குறைவு என்பது, ஒரு நோயாளி சராசரியாக மேலும் ஒருவரை கூட பாதிக்கவில்லை, அத்துடன் எண்ணிக்கை குறைந்து கொண்டே போனால், குறைவான நோயாளிகள் எண்ணிக்கை என்ற திசையில் முன்னோக்கி செல்கிறது என்பதாகும். ஒவ்வொரு கோவிட் -19 நோயாளியும், மேலும் ஒருவருக்கு தொற்றை பரப்பினால், பரவுவது மெதுவாகவே இருக்கும், ஆனால் பலர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆர்டி 1 க்கு மேல் இருந்தால், தொற்று கட்டுப்பாட்டை மீறலாம்.
மேகாலயாவின் பதினொரு மாவட்டங்களில் ஒன்பது மாவட்டங்கள் நோய்த்தொற்றின் அதிகரிப்பைக் காட்டுகின்றன. வடகிழக்கு மாநிலங்களும் இதேபோன்ற பாதையில் தான் உள்ளன. மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாவட்டங்கள், அதிக ஆர்டி எண்ணிக்கைகளை கொண்டுள்ளன, மத்தியப் பிரதேசத்தில் கிழக்கு நிமார் 2.24 ஆர்.டி.-ஐ கொண்டுள்ளது, அதாவது ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரும் 2 க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸை அனுப்ப முடியும்.