தரவுக்காட்சி: இளம்பருவ புகையிலை பயன்பாடு குறைகிறது, ஆனால் 9% பேர் இன்னும் வேறு வடிவங்களில் பயன்படுத்துகின்றனர்

கிராமப்புறங்களில் அதிகமான இளம் பருவத்தினர் - மற்றும் அதிகமான சிறுவர்கள் - புகையிலை பயன்படுத்துவதாக, அரசாங்கத்தின் 2019 கணக்கெடுப்பின் தரவு காட்டுகிறது

Update: 2022-06-07 01:30 GMT

ஜெய்ப்பூர்: சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) சமீபத்திய தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில், 13 முதல் 15 வயதுடைய இந்திய இளம் பருவத்தினரில் 8.5% பேர் புகையிலையை எந்த வடிவத்திலாவது உட்கொண்டுள்ளனர். 2003ல், ஏறக்குறைய 17% பேர் அவ்வாறு செய்திருந்ததுடன் ஒப்பிடும் போது, இந்த விகிதம் சரிவாகும் என்று, அரசின் உலகளாவிய இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு (GATS) காட்டியது, இது பின்னர் மூன்று முறை நடத்தப்பட்டது.

சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் கீழ், சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (IIPS) நடத்திய 2019 கணக்கெடுப்பில், 987 பொது மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 80,772 இளம் பருவத்தினரின் பதில்கள் அடங்கும்.

Full View

உலக புகையிலை எதிர்ப்பு தினமான மே 31 அன்று கடைபிடிக்கப்பட்ட சூழலில், இந்திய இளம் பருவத்தினரின் புகையிலையின் பயன்பாட்டைப் பற்றிய கண்ணோட்டத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

குழந்தைகளுக்கு, ஆரம்பத்திலேயே புகையிலையின் அறிமுகம் எளிதாக கிடைத்துவிடுகிறது; அவர்களுக்கு சிகரெட்டுகளின் அறிமுகம் கிடைப்பதன் சராசரி வயது 11.5 ஆண்டுகள், பீடிகளுக்கு 10.5 ஆண்டுகள் மற்றும் புகையற்ற புகையிலைக்கு 9.9 ஆண்டுகள்.

2019 ஆம் ஆண்டில், 2.1% பேர் பயன்படுத்திய பீடிகளுடன் (வடிகட்டப்படாத, கையால் சுருட்டப்பட்ட இலைச்சுருட்டு) ஒப்பிடும்போது, அதிகமான இளம் பருவத்தினர் சிகரெட்டுகளை (2.6%) புகைத்துள்ளனர் என்று தரவு காட்டுகிறது. பான் மசாலா அல்லது மற்ற புகையிலை பொருட்கள் போன்ற புகையற்ற புகையிலை மிகவும் பொதுவானது, கணக்கெடுக்கப்பட்டவர்களில் 4.1% பேர் பயன்படுத்துகின்றனர்.

பெண்களை விட சிறுவர்கள், புகையிலையை அதிகம் பயன்படுத்துகின்றனர், ஆனால் புகையிலையை பயன்படுத்தும் ஆண்களின் விகிதம் 2003 இல் 21.6% ஆக இருந்து 2019 இல் 9.6% ஆக குறைந்துள்ளது.

Full View

புகையிலை பல வகையான புற்றுநோய்களை உண்டாக்கும், மேலும் இருதய நோய்கள், நீரிழிவு நோய், நாள்பட்ட நுரையீரல் தொற்றுகள், பார்வை மற்றும் செவித்திறன் இழப்பு மற்றும் பல் பிரச்சனைகளுக்கு தூண்டுதலாகவும் செயல்படுகிறது என்று, விசாகப்பட்டினத்தில் உள்ள எச்.சி.ஜி. புற்றுநோய் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் விஜய் ஆதித்யா யாதராஜுவின் கூற்றுப்படி. புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், சிகரெட் புகைத்தல் வாய்வழி புற்றுநோயின் அபாயத்தை 10 மடங்கு அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.

நிகோடின் இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது, இது மூளை, இதயம் மற்றும் பிற முக்கிய உறுப்புகளில் இரத்த விநியோகத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது, போதைப்பொருளை அடிமையாக்குகிறது மற்றும் இருதய நோய்களைத் தூண்டும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று, நவி மும்பையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் தேஜிந்தர் சிங் கூறினார்.

அதிக புகையிலை பயன்பாட்டுடன் தொடர்புடைய காரணிகள்

இளம் பருவத்தினர் அதிக அளவில் புகையிலையை பயன்படுத்தும் மாநிலங்கள் மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம், அதைத் தொடர்ந்து நாகாலாந்து மற்றும் மேகாலயா. குறைந்த பயன்பாடு ஹிமாச்சல பிரதேசம், அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் கோவா உள்ளது.


Full View

ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட 2021 ஆய்வின்படி, புகையிலை விளம்பரங்கள் மீதான தடை, புகையிலை மற்றும் அதன் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு போன்ற மிதமான புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவாக இந்தியாவில் புகையிலை பயன்பாடு குறைந்துள்ளது. ஆயினும்கூட, நடுத்தர வயதுடையவர்கள், குறைந்த கல்வியறிவு இல்லாதவர்கள் மற்றும் கிராமப்புற மற்றும் புகையிலை வளரும் பகுதிகளில் வசிப்பவர்கள் மத்தியில் புகையிலை பயன்பாடு மிகவும் பொதுவானது.

புகையிலையின் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது புகையிலை பயன்பாட்டையும் கணிசமாக பாதிக்கிறது என்று, உலகளாவிய வயது வந்தோர் புகையிலை கணக்கெடுப்பின் தரவைப் பயன்படுத்தி PLOS ONE இல் வெளியிடப்பட்ட 2014 ஆய்வு கண்டறியப்பட்டது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் புகைபிடிக்காத புகையிலையை உட்கொள்வதற்கான அதிக ஆபத்து இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News