மும்பை: இந்தியா முழுவதும் 17 நகரங்களை சேர்ந்த 80% இந்தியர்கள், தங்களின் தரமான வாழ்க்கையை காற்றுமாசு பாதிப்பதாகவும்; 32% பேர் தங்கள் வாழ்க்கை முறையை பாதிப்பதாகவும் கருத்து தெரிவித்திருப்பதாக, புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதேபோல், 93% பேர் தங்களின் சுகாதாரத்தில் எதிர்மறை விளைவு ஏற்படுகிறது எனவும், 80% பேர் காற்று மாசு ஏற்படும் போது நோய்வாய்ப்படுவதாகவும், 80 சமூக அமைப்புகளை கொண்டுள்ள தி கிளீன் ஏர் கலெக்டிவ் அமைப்புக்காக நடத்தப்பட்ட காற்றின் தரம் பற்றிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சி.எம்.எஸ்.ஆர். ஆலோசனைக்குழு சார்பில் பொதுமக்கள் குழு, காற்றின் தரம் பற்றிய வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் குழு, நாட்டின் 17 நகரங்களில் 5,000 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

இதில், 13% மக்கள் மட்டுமே தங்கள் நகரத்தில் காற்றுத் தரத்தைப் பற்றிய தகவல்களை பெறு முனைப்பு காட்டுவதும்; 12% பேர் இத்தகைய தகவலை கேட்கவில்லை என்று ஆய்வு கூறுகிறது.

இதில் அதிகபட்சமாக டெல்லிவாசிகள் (100%) காற்றுமாசு பற்றி அறிந்துள்ளனர்; அடுத்த இடங்களில் சென்னை, பெங்களூரு, புனே மற்றும் கொல்கத்தா (அனைத்தும் 98%-க்கு மேல்) நகர மக்கள் உள்ளனர்.

காற்றுமாசு என்பது ஒரு வீட்டுப் பிரச்சினையாக மாறிவிட்டது. ஆய்வு நேர்காணலில் பங்கேற்றவர்களில் 78 சதவீத பேர்கள், பல சந்தர்ப்பங்களில் மாசுபாடு பற்றி வீட்டில் விவாதித்ததாக கூறியுள்ளனர்.

உலகின் மிக மாசுபட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலகளாவிய அளவில் மாசு மிகுந்த 20 நகரங்களில் 14 இங்குள்ளதாக, உலக சுகாதார அமைப்பு சார்பில் உலகளாவிய சுற்றுச்சூழல் காற்று மாசுபாடு - 2018 புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கிராமப்புற இறப்புகள், ஆயுள் எதிர்பார்ப்பு, காற்றுமாசுபாடு: இந்திய சமன்பாடு

கடந்த 2016-ல் இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக 1,00,000 பேரில் 195 பேர் இறந்துள்ளனர்; இதில் ஆப்கானிஸ்தான் (405), பாகிஸ்தான் (207) ஆகியவற்றுக்கு அடுத்துள்ளதாக, சுதந்திர மக்கள் சுகாதார ஆராய்ச்சி மையங்களின் முன்முயற்சி அமைப்புகளான ஹெல்த் எபக்ட் இன்ஸ்டிடியூட் ஆப் குளோபல் ஏர் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவால்யுவேஷன் ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கான்பூர் நகரம் உலகின் மிக மோசமாக, காற்றில் மாசு ஏற்படுத்தும் நுண்துகள் (பி.எம். 2.5) அளவுடன் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இவை 2.5 மைக்ரோமீட்டருக்கு குறைவான துகள்கள், அல்லது மனித முடிவின் 1/30 தடிமன் - 173 மைக்ரோகிராம்களில் கனெக்டர் மீட்டர் காற்று (μg / m3 வருடாந்திர சராசரி). இது, உலக சுகாதார நிறுவனத்தின் 10 μg / m³ என்ற வருடாந்திர சராசரியைவிட 17 மடங்கும்; தேசிய சுற்றுச்சூழல் காற்றின் சராசரி ஆண்டு சராசரி 40 μg / m³ ஐ விட மூன்று மடங்கு அதிகமாகும் என்று, 2018 மே 12ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

உயர்ந்தபட்சம் 2.5 பி.எம். என்பது இந்தியர்களின் ஆயுட்காலத்தை ஒன்பது ஆண்டுகள் வரை குறைந்துள்ளது; உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த 24 மணி நேரம் 2.5 பி.எம். (25 µg/m3) என்று வரையறுத்திருந்தது என்று, சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட 2016- காற்றின் தரக்குறியீடு புள்ளி விவரங்க தெரிவிக்கின்றன.

காற்று மாசுபாடு ஏற்படுத்தும் பாதிப்புகளின் சுமையை தாங்குவது ஏழைகளும், வறுமையில் இருப்பவர்களும் தான். 2015 ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டால் இந்தியாவில் இறந்த 10.1 லட்சம் பேரில், 75% பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் தான் என்று, 2018 அக்டோபர் 31-ல் வோக்ஸ் கட்டுரை வெளியிட்டிருந்தது.

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இருபங்கினர் கிராமப்புறத்தவர்கள். அங்குள்ள 80% வீடுகளில் சமையலுக்கான எரிபொருளாக மரம், விறகு, சாணம் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இது, இந்தியாவின் வெளிப்புற மாசுபாட்டில் 25% பங்களிப்பு செய்கிறது.

வீட்டு புகையால் 2016 ஆம் ஆண்டு, ஐந்து வயதுக்குட்பட்ட 66,800 குழந்தைகள் இறந்தனர்; இது, அதே ஆண்டில் வெளிப்புற நச்சால் இறந்த ஐந்து வயதுக்குட்பட்ட 60,900 குழந்தைகள் என்ற எண்ணிக்கையை விட 10% அதிகமாகும் என்று, 2018 அக். 29-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களுகு குறைந்தபட்சம் தெரியும்

இந்த ஆய்வானது, காற்று மாசுபாடு மற்றும் பி.எம்.2.5 மற்றும் பி.எம். 10 மற்றும் காற்றின் தர குறியீட்டெண் (AQI) போன்ற அடிப்படை குறியீடுகளுக்கு இடையே பெரிய வேறுபாடு இருப்பதை காட்டுகிறது.

வீடுகளில் ஆண்களை (78%) விட பெண்கள் (80%) காற்று மாசுபாடு பற்றி பேசியுள்ளனர். மாசுபாடு பற்றிய வார்த்தைகளான பி.எம். 2.5 மற்றும் பி.எம். 10 ஆகியன பற்றி, ஆண்களை விட (31.1% மற்றும் 20.3%) குறைவாக பெண்கள் முறையே 27.7% மற்றும் 14.5% என்றளவில் விவாதித்துள்ளனர்.

காற்றின் தரக்குறியீடு (AQI) பற்றி ஆண்களை விட (17.6%) பெண்களுக்கு (21.6%) தெரிந்திருக்கிறது. எனினும் அதன் முக்கியத்துவம் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

காற்று மாசுபாடு தங்களை “பெரிய அளவில்” (34.8%) மற்றும் “சிறிய அளவில்” (46.1%) பாதித்திருப்பதாக, அதிக பெண்கள் கூறியுள்ளனர். இதில் ஆண்களை ஒப்பிட்டால் முறையே 31.3% மற்றும் 44.9% என்றளவில் உள்ளது.

காற்று மாசுபாடு தொழில்நுட்ப வார்த்தைகள் பற்றிய விழிப்புணர்வு சிறிய நகரங்களில் மிகக் குறைவாக இருப்பது, பதிலளித்தவர்களின் வாயிலாக தெரிய வந்துளது. மத்தியப் பிரதேசத்தின் சிங்காரூலி (பி.எம். 2.5-க்கு 12% மற்றும் பி.எம். 10-க்கு 6.3%); ஒடிசாவின் அங்கூல் (பிஎம் 2.5-க்கு 11.3% மற்றும் பி.எம்.10-க்கு 5.7%), ஜார்க்கண்டின் தன்பாத் (63.7%), சத்தீஸ்கரின் ராய்ப்பூர் (83.3%) ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு போன்ற வார்த்தைகள் குறித்து புரிந்து கொள்ளாதவர்கள் உள்ளனர்.

இந்நகரங்களில் காற்றின் தரம் 'ஆரோக்கியமற்றது' என்று கருதியவர்கள் அதிகளவில் உள்ளனர்: அங்கூல் 85%, லக்னோ 64% மற்றும் கோர்பா 62% ஆகும்.

Source: Perception study on Air Quality; figures in %

முன்னேற்றத்திற்கான வாய்ப்பு

இந்த புள்ளி விவரங்கள் விழிப்புணர்வை மட்டும் முன்னிலைப்படுத்தவில்லை; தகவல்கள் எப்படி பரவலாக பகிரப்படுகிறது, குறிப்பாக சிறு நகரங்களில் உள்ள பெண்கள் மத்தியில் என்பதையும் பிரதிபலிக்கிறது.

தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரம் என்று பார்த்தால் அரசு இணையதளம் மற்றும் காற்று தரக்குறியீடு இணையதளங்கள் முறையே 26% மற்றும் 17% கொண்டிருக்கின்றன. இதில் செய்தித்தாள்கள் (70%) மொபைல் ஆப் (36%) என்றளவில் உள்ளன.

மாசு ஏற்படுத்தும் ஆலைகளை மூடிவிட வேண்டும்; இதனால் வேலையின்மை போன்ற பிரச்சனைகள் எழுந்தாலும் பரவாயில்லை என்று, 32% பேர் “உறுதிபட ஒப்பு” கொள்கின்றனர். 50% பேரோ, மாசு ஏற்படுத்தும் ஆலைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 70% பேர், காற்று மாசுபாட்டை தவிர்க்க தனிப்பட்ட முறையில் தங்களின் பங்களிப்பை செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.; 86% பேர், காற்று தரக்குறியீடு பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.

Source: Perception study on Air Quality; figures in %

(சிங், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரி இளங்கலை மாணவர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர் ஆவார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.