மும்பை: தற்போதைய (16வது) மக்களவையின் ஆயுட்காலம் முடியும் சூழலில்,குற்ற வழக்குள்ள எம்.பி.க்களில் அதிகம் பேர் பாரதிய ஜனதா கட்சியை (பா.ஜக.) சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

பல்வேறு கட்சிகளை சேர்ந்த 521 நாடாளுமன்ற உறுப்பினர்களில் (மக்களவை உறுப்பினர்கள்) 106 (20%) மீது கொலை போன்ற கடுமையான குற்றங்கள், வகுப்புவாத சதித்திட்டம், கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.

இதில் 55% பேர் பா.ஜ.க. (92 எம்.பி.க்கள்), காங்கிரஸ் (7 பேர்) கட்சியில் 2% பேர் கிரிமினல்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 3% (6 பேர்), 17% சிவசேனா (15 பேர்) மற்றும் 7% திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) (7 பேர்) என, ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) சார்பில் செயல்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) அமைப்பின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

இறப்பு, திவால், மனநோய் அல்லது கடுமையான குற்றத்திற்கான தண்டனை உட்பட பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்ற இடைத்தேர்தல்களின் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையின் தோற்றம் அதன் ஐந்து வருட காலத்தில் மாறிவிட்டது.

2014 தேர்தலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் தான் அதிகபட்ச குற்றவியல் வழக்குகள் உள்ளவர்கள் இருந்தனர். இது, 2009 உடன் ஒப்பிடும் போது 14% அதிகரிப்பு என, 2014, மே 23இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

தற்போதைய மக்களவையின் தொடக்கத்தில் கிரிமினல் வழக்குகள் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது; ஆரம்பத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 541 உறுப்பினர்களின் 186 (34%) பேர் என்று இருந்த நிலையில், தற்போது 521 உறுப்பினர்களில் 174 (33%) என்று அதிகரித்தது.

Source: Association for Democratic Reforms

தற்போதையை மக்களவையின் ஆயுட்கால முடிவில் குற்ற வழக்கு பின்னணி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மா நிலங்களின் எண்ணிக்கிய 15 ஆக உயர்ந்தது; இதில் ஐந்து பாஜக ஆளும் மாநிலங்கள், இரண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பவை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக உள்ள ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறும் பீகாரில் அதிகபட்சம் கிரிமினல் பின்னணி வேட்பாளர்களின் எண்ணிக்கை 8இல் இருந்து 18 ஆக அதிகரித்துள்ளது.

பதவிக்கால ஆரம்பத்தில், உத்திரப்பிரதேசத்தில் கடுமையான குற்றவியல் வழக்குகளை கொண்டிருந்த எம்.பி.க்கள் எண்ணிக்கிய 12 ஆக இருந்த நிலையில், தற்போது அனைத்து மாநிலங்களைவிட அதிகபட்சமாக 21 பேர் இவ்வழக்குகளை சந்தித்துள்ளனர். மஹாராஷ்டிராவில், தொடக்கத்தில் 11 என்றிருந்த இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. பீகாரில், 2014 ஆம் ஆண்டில் 8 என்றிருந்த இந்த எண்ணிக்கிய 2019இல் 18 ஆக இரட்டிப்பானது.

Source: Association for Democratic Reforms

பாரதிய ஜனதா கட்சியில் பதவிக்கால தொடக்கத்தில் கிரிமினல் குற்றப்பின்னணி உள்ள 98 எம்.பி.க்களில் 35 பேர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் இருந்தன. தற்போது, குற்றப்பின்னணி கொண்ட 92 எம்.பி.க்களில் தீவிர குற்றச்சாட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

பதவிக்கால முடிவில் 15 எம்.பி.க்கள் சிவசேனாவில் இருந்து , ஏழு காங்கிரஸ், ஏழு பேர் திரிணமூல் காங்கிரஸ், ஆறு எம்.பி.க்கள் அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். தீவிர குற்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ள 106 மக்களவை உறுப்பினர்களில் 55% பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள்.

குற்ற வழக்குள்ள 106 எம்.பி.க்களில் 10 பேர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளனர் - அதில் பாரதிய ஜனதாவில் இருந்து 4, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP), லோக்தந்திரிக் ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் ஸ்வாபிமானி பக்க்ஷா ஆகியன தலா ஒன்று மற்றும் சுயேச்சை ஒன்று.

அதேபோல், கொலை முயற்சி வழக்கு 14 எம்.பிக்கள் மீது உள்ளன. இதில் அதிகபட்சமாக எட்டு பேர், பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆர்.ஜே.டி, சிவசேனா மற்றும் ஸ்வாபிமிணி பக்ஷா ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்.பி. மீது வழக்கு உள்ளது.

வகுப்புவாதத்தை தூண்டுவதாக வழக்கு தொடரப்பட்டவர்களில் 10 எம்.பி.க்கள் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள். தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, பாட்டாளி மக்கள் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இடிஹதுல் முஸ்லிமேன் மற்றும் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றில் இருந்து தலா ஒருவர்.

மொத்தத்தில், 521 மக்களவை உறுப்பினர்களில் 430 பேர், தங்களுக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக் அறிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜ.க.வின் 267 எம்.பி.க்கள் பெரும்பாலானோர் - 85% பேர் இடம் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதா எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 11.89 கோடி ஆகும்.

காங்கிரஸ் கட்சியில் கோடீஸ்வர எம்.பி.க்கள் 37 பேர் உள்ளனர்; எனினும் அவர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.15.57 கோடியாக அதிகரித்துள்ளது. அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து 29 கோடீஸ்வர எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸில் இருந்து 22 பேர் இடம் பெற்றுள்ளனர்.

(ஆப்ரஹாம், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.