புதுடெல்லி: இந்திய குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படும் நிலையில், முதல் தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பில், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற தொற்றா நோய்கள் - என்.சி.டி (NCDs) ஏற்படுவதற்காக அபாயத்தை, அதன் ஆரம்ப அறிகுறிகளை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 முதல் 9 வயது வரையிலான 10 குழந்தைகளில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை மற்றும் 1% பேர் ஏற்கனவே நீரிழிவு நோயாளிகள் என்று, அக்டோபர் 8, 2019இல் வெளியான அரசின் விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வு - சி.என்.என்.எஸ். (CNNS) தெரிவிக்கிறது. சுமார் 5% குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், 5-19 வயதுடையவர்கள், அதிக எடை கொண்டவர்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தில் - இந்தியாவின் எதிர்கால உழைக்கும் வயது மக்கள் தொகை - ஏற்படும் அதிக கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களின் அறிகுறிகள், இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற தொற்றா நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது; இது நமது இளம் மக்களிடம் இர்ந்து நமது வளர்ச்சி வாய்ப்பை ஆபத்தில் வைக்கிறது. "அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவை தீவிரமாக கவனிக்கப்படவில்லை, தொற்றா நோயின் சுமை இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு பயங்கரமான செலவை ஏற்படுத்தும் மற்றும் உலகளாவிய சுகாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அதன் பங்களிப்பைக் குறைக்கும்" என்று சிஎன்என்எஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

2016 மற்றும் 2018 க்கு இடையில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் மற்றும் இந்திய மக்கள் தொகை கவுன்சில் ஆகியவற்றுடன் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது 30 மாநிலங்களில் 112,000 குழந்தைகளின் மாதிரியை ஆய்வு செய்தது.

5 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் விரிவான ஊட்டச்சத்து தகவல்களை வழங்குவதற்கும், குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தொற்றா நோய்களின் குறிப்பான்களை படிப்பதற்கும் சி.என்.என்.எஸ் முதல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. முந்தைய தேசிய ஆய்வுகள் ஐந்து வயது வரையிலான குழந்தைகளின் சுகாதார நிலை மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்தன. ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதை அளவிடுவதோடு தவிர, உலகளவில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பு, இந்த ஆய்வாகும் என்று சிஎன்என்எஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடும், அதிகரிக்கும் மிகை ஊட்டச்சத்தும்

மூன்று குழந்தைகளில் ஒருவர்(35%) , ஐந்து வயதுக்கு குறைவானவர்களுக்கு வளர்ச்சிக்குறைபாடு - அதாவது வயதுக்கு குறைந்த உயரம்; 33% எடை குறைந்தவர்கள், ஆறில் ஒருவர் (17%) மெலிந்து - அதாவது உயரத்தை விட குறைந்த எடை; மற்றும் 41% ரத்தசோகை இருப்பது சி.என்.என்.எஸ். ஆய்வில் தெரிந்தது.

இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, 2016-18 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நோய்களின் பாதிப்பு, 2015-16 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் போது இருந்ததை விட குறைவாக இருந்தது, இது 38.3% குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு, 35.8% எடை குறைபாடு மற்றும் 21% உடல் மெலிந்ததால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

"இது போஷன் அபியான் திட்டத்திற்கு ஒரு நல்ல செய்தி" என்று மத்திய அரசின் கொள்கை சிந்தனை குழுவான நிதி ஆயோக்கின் ஆலோசகர் அலோக் குமார் ட்வீட் செய்துள்ளார். இது தேசிய ஊட்டச்சத்து மிஷனைக் குறிப்பிடுகிறது, இது குழந்தைகளின் வளர்ச்சி குறைபாட்டில் 25% வீழ்ச்சியையும், 2022 ஆம் ஆண்டில் ஐந்து வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே இரத்த சோகை பாதிப்புக்கு மூன்று சதவீத புள்ளிகள் ஆண்டு சரிவையும் நோக்கமாக கொண்டிருக்கிறது.

"ஒரு சமூகமாக நாங்கள் மாறுகிறோம்" என்று டெல்லியில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனத்தின்- ஐஐபிஹெச் (IIPH) பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து கூடுதல் பேராசிரியர் சுபர்ணா கோஷ் ஜெரத் கூறினார், கண்டுபிடிப்புகளை அவர் "ஆபத்தானது" என்று கூறினார். இதன் பொருள் ஊட்டச்சத்துக் குறைபாடு குறைகிறது, ஆனால் தொற்றாநோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் பிரச்சினைகள் அதிகரித்து வருவதால் “நாம் புறக்கணிக்க முடியாது”.

சுமார் 3% குழந்தைகள், 5-9 வயது, மற்றும் 4% இளம் பருவத்தினர் (10-19 வயது) மொத்த கொழுப்பின் உயர் மட்டத்தைக் கொண்டிருந்தனர். சுமார் 26% குழந்தைகள், 5-9 வயது மற்றும் 28% இளம் பருவத்தினர் குறை அடர்த்தி கொண்ட கொழுப்பு ரதத்தைக் கொண்டிருந்தனர் - இது இரத்தத்தில் இருந்து கொழுப்பின் ஆரோக்கியமற்ற வடிவங்களை நீக்குவதால் நல்ல கொழுப்பு என அழைக்கப்படுகிறது. மொத்த கொழுப்பின் உயர் மட்டமும், குறைந்த அளவு நல்ல கொழுப்பும் இருப்பதும், இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

சுமார் மூன்றில் ஒரு பங்கு (34%) குழந்தைகள், 5-9 வயது மற்றும் 16% இளம் பருவத்தினர் அதிக ட்ரைகிளிசரைட்களை கொண்டிருந்தனர் - இது ஒரு வகையான கொழுப்பு இரத்த ஓட்டத்தில் காணப்படுகிறது, இது இதய நோய் மற்றும் பக்கவாதத்துடன் தொடர்புடையது. கூடுதலாக, சுமார் 7% குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் நீண்டகால சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் 5% இளம் பருவத்தினருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதை சி.என்.என்.எஸ். கண்டறிந்தது.

இந்த முடிவுகள் சாதாரணமானவை அல்ல என்று ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் -என்ஐஎன் (NIN) இயக்குனர் ஆர்.ஹேமலதா கூறினார். "இது ஆபத்தானது என்று எங்களுக்குத் தெரியும்" என்றார் அவர்.

"இந்த புள்ளிவிவரங்கள் - கொள்கை வகுப்பாளர்கள் மட்டுமல்ல, மக்களை பயமுறுத்த வேண்டும்; அவர்கள், தங்கள் குழந்தைகளுக்காக செயல்பட வேண்டும். வீட்டிலும், பள்ளிகளிலும், பொது நிறுவனங்களிலும் உணவு முறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது,” என்று சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IFPRI) மூத்த ஆராய்ச்சியாளர் பூர்ணிமா மேனன் கூறினார்.

"இந்தியா நிச்சயமாக மற்ற நாடுகளின் போக்குகளைப் பின்பற்றுகிறது - இந்த அளவு பிரேசில், மெக்ஸிகோ மற்றும் பிற நாடுகளில் மிக அதிகம்" என்று மேனன் கூறினார்.

இந்தியாவின் ஊட்டச்சத்து இயக்கம், ஊட்டம்மிகுதியை புறக்கணிக்கிறது

அதிக எடை கொண்ட வளரிளம் பெண்கள் (15-19 வயது) மற்றும் பெண்கள் (20-49 வயது) விகிதம் முறையே 1.6% முதல் 4.9% வரை மற்றும் 11.4% முதல் 24% வரை என, 1999 இல் இருந்து 2016 வரை இருமடங்காக அதிகரித்துள்ளது என, உலகளாவிய இதழான நியூட்ரியண்ட்ஸ் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை மேற்கோள்கட்டி, ஆகஸ்ட் 2019 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

உலகளவில், அதிக எடை மற்றும் பருமனான வளரிளம் பெண்களின் அதிகரிப்பானது, குழந்தைகளிடையே குறைந்த உடல் எடை இருப்பதை விட பெரியது என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதினர். "2000ஆம் ஆண்டுக்கு பிந்தைய போக்குகள் தடையின்றி தொடர்ந்தால், குழந்தை மற்றும் இளம்பருவ உடல் பருமன் ஆகியவற்றின் பரவலானது 2022 ஆம் ஆண்டளவில் எடை குறைந்தவர்களின் வீதத்தை விட அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அவர்கள் எழுதினர்.

அதே நாடுகள், சமூகங்கள் மற்றும் குடும்பங்களில் கூட ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதிக உடல் எடை ஆகியவை பெருகிய முறையில் இணைந்து இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் உள்ளன.

இருப்பினும், ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதற்கான இந்தியாவின் முதன்மை திட்டமான தேசிய ஊட்டச்சத்து இயக்கமான போஷன் அபியான், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிப்பிடவில்லை.

போஷன் அபியான் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நாங்கள் கவனிக்க வேண்டும் என்று என்ஐஎன்-இன் ஆர்.ஹேமலதா கூறினார்.

இது தனிப்பட்ட நடத்தைகள் மட்டுமல்ல - அதிக எடையுள்ள குழந்தைகளின் அதிகரிப்பைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு பலவிதமான கொள்கை முயற்சிகள் தேவை என்று ஐ.எப்.பி.ஆர்.ஐ.- இன் மேனன் கூறினார். அவற்றில் “ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு லேபிளிங் மற்றும் வரிவிதிப்பு, பொது நிறுவனங்களில் உணவின் தரத்தை மேம்படுத்துதல் (அரசு உணவு திட்டத்தில் பொது பணத்திற்காக எவ்வளவு ஊட்டச்சத்து வாங்குகிறார்கள்), அனைவருக்கும் - ஆண்கள், பெண்கள் , சிறுவர்கள், பெண்கள் - வலுவான உடல் செயல்பாடு கலாச்சாரங்களை எல்லா இடங்களிலும் உருவாக்குதல்”என்றார்.

குழந்தைகளில் குறைவான உணவு வேறுபாடு

உணவுப் பன்முகத்தன்மை இல்லாததால் உடல் பருமன், அதிக எடை கொண்ட குழந்தைகள் மற்றும் அதிக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம் என்று ஆர் ஹேமலதா கூறினார். "உணவு பன்முகத்தன்மை இல்லாததால், பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் ஒரே கலோரி உணவுகளில் இருந்தே வருகின்றன, அவை பொதுவாக கலோரி அடர்த்தியாக இருக்கும்" என்றார். ஆனால் இந்த உணவுகள் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் குறைபாடுடையவை, இவை அனைத்தும் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவைப்படுகின்றன என்று அவர் விளக்கினார்.

அதிக கார்போஹைட்ரேட் மற்றும் அதிக சர்க்கரை உணவுகளை மாற்றுவது மற்றும் உட்கொள்வது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது - கிட்டத்தட்ட மூன்று (31.4%) குழந்தைகளில் ஒருவர், 5-9 வயது, மற்றும் இளம் பருவத்தினரில் 36%, 10-19 வயது, வாரத்திற்கு ஒரு முறை வறுத்த உணவுகளை சாப்பிட்டனர். 5 முதல் 9 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட 7.6% பேரும், 10 (10.4%) இளம் பருவத்தினர், 10-19 வயதுடையவர்களும், வாரத்திற்கு ஒரு முறை காஸ் நிரம்பிய பானங்களை அருந்தினர்.

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே, பெரும்பான்மையானவர்கள் அடர் பச்சை கீரைகள், காய்கறிகளையும் (~ 90%) மற்றும் பருப்பு வகைகள் அல்லது பீன்ஸ் (85%) வாரத்திற்கு ஒரு முறையாவது உட்கொண்டனர். பால் பொருட்களின் நுகர்வு குறைவாகவே இருந்தது, மூன்றில் இரண்டு பங்கு (~ 65%) குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் வாரத்திற்கு ஒரு முறையாவது தான் பால் அல்லது தயிர் சாப்பிடுகிறார்கள்.

பழங்கள், முட்டை, மீன், கோழி மற்றும் இறைச்சி குறைந்தளவில் தான் அடிக்கடி உட்கொள்ளப்பட்டன. குழந்தைகளில், 40% பழங்களை உட்கொண்டனர், 35% முட்டைகளை உட்கொண்டனர், மற்றும் 36% மீன் அல்லது கோழி அல்லது இறைச்சியை உட்கொண்டனர். இதேபோல், இளம் பருவத்தினர் இடையே, 41% பழங்களை மட்டுமே உட்கொண்டனர், 35% முட்டைகளை உட்கொண்டனர், மற்றும் 36% மீன் அல்லது கோழி அல்லது இறைச்சியை உட்கொண்டனர்.

தாய்மார்களுக்கு அதிக கல்வி கிடைக்கும்போது பால் அல்லது தயிர், பழங்கள், முட்டை மற்றும் மீன் அல்லது கோழி அல்லது இறைச்சி ஆகியவற்றின் நுகர்வு அதிகரித்தது, மேலும் குடும்பங்கள் பணக்காரர்களாக இருந்தன.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் பன்முகப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளல் போதுமானதாக இல்லை. இது அறிவு இல்லாததால் இருக்கலாம் என்று ஐ.ஐ.பி.எச்- இன் கோஷ் ஜெரத் கூறினார். சமூகத்தில் என்னென்ன உணவுகள் சத்தானவை என்பது குறித்து மேலும் விழிப்புணர்வு இருக்க வேண்டும், அதேபோல் அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் துணை செவிலியர் மருத்துவச்சிகள் உள்ளிட்ட முன்னணி தொழிலாளர்களிடமும் ஏற்படுத்த வேண்டுமென்று அவர் தெரிவித்தார்.

சமூக பொருளாதார நிலை ஊட்டச்சத்தை பாதிக்கிறது

இந்தியா முழுவதும், 4% குழந்தைகள், 5-9 வயதுடையவர்கள், அதிக எடை கொண்டவர்கள் - அங்கு வயதுக்கான உடல் நிறை குறியீட்டெண் இருக்க வேண்டியதை விட ஒரு நிலையான விலகல் - மற்றும் 1% உடல் பருமனாக இருந்தது - வயதுக்கான உடல் நிறை குறியீட்டெண் இரண்டு தரமாக இருக்கும்போது விலகல்கள் அதிகம் என்று கணக்கெடுப்பு கண்டறியப்பட்டது.

5 முதல் 9 வயது வரையிலான அதிக எடை கொண்ட குழந்தைகள் கோவா (14.5%) மற்றும் நாகாலாந்து (14.7%) ஆகியவையாகும், அதே நேரம் அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஜார்கண்ட் மற்றும் பீகாரில் உள்ளது; அங்கு 1%-க்கும் குறைவானவர்கள் அதிக எடை கொண்டவர்கள்.

ஒரு குழந்தை அதிக எடையுடன் இருக்குமா என்பதை, ஒரு வீட்டின் சமூக-பொருளாதார நிலை பாதிக்கிறது. மிக உயர்ந்த வசதி உள்ள 9% குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, மிகக்குறைந்த வசதி உள்ள வீடுகளில் இருந்து 1% குழந்தைகள் மட்டுமே அதிக எடை கொண்டவர்கள்.

Source: Comprehensive National Nutrition Survey (2016-18)

Source: Comprehensive National Nutrition Survey (2016-18)

கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் அதிகமான குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் 2.6% உடன் ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் 7.5% குழந்தைகள், 5 முதல் 9 வயது வரை அதிக எடை கொண்டவர்கள். இதேபோல், நகர்ப்புறங்களைச் சேர்ந்த இளம் பருவத்தினரில் 9.7%, 10 முதல் 19 வயது வரை, அதிக எடை கொண்டவர்கள் கிராமப்புறங்களில் 3.2% ஆக இருந்தனர்.

வெவ்வேறு சமூக குழுக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் குறைவாக இருப்பது குழந்தைகளில் தான், பட்டியலின பழங்குடியினருக்கு (எஸ்.டி) சொந்தமானது - இது, இந்தியாவின் பழங்குடியினருக்கான அங்கீகரிக்கப்பட்டஅரசியலமைப்புச் சொல் ஆகும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் சுமார் 2.8%, மற்றும் எஸ்.டி.யிலிருந்து 2.1% இளம் பருவத்தினர் அதிக எடை மற்றும் பருமனானவர்கள், 5.1% குழந்தைகள் மற்றும் 7.1% இளம் பருவத்தினர் ‘பிறர்’ வகையை சேர்ந்தவர்கள், அதாவது உயர் சாதியினரைக் குறிக்கும்.

மேலும், 2% குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் வயிற்று உடல் பருமனைக் கொண்டிருந்தனர், இது இடுப்பு சுற்றளவு-வயதுக்கு அளவிடப்படுகிறது. இந்தியர்கள் அடிவயிற்றைச் சுற்றி கொழுப்பைச் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், மேலும் இந்த கொழுப்பு தொற்றா நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.