வேளாண்மைக்கு 144% கூடுதலாக நிதி; ஆனால் விவசாய பிரச்சனைகளை போக்க இது போதாது
புதுடெல்லி: பாரதிய ஜனதா அரசு (பா.ஜ.க.) தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் முன் எப்போதும் இல்லாதவாறு, விவசாயத்துறைக்கான ஒதுக்கீடு, 2018-19 பட்ஜெட்டில் ரூ. 57,600 கோடியில் இருந்து, இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 1,40,764 கோடி என 144% அதிகரித்துள்ளது.
இது மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கான ஒதுக்கீட்டை 5.2% என அதிகரித்து, அடுத்து வரும் அரசுகள் அரசியல் காரணங்களுக்காக இத்தகைய தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது, 2014-15ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயத்திற்கான ஒதுக்கீடு 2.3% ல் இருந்து 2.4% ஆக இருந்தது.
இருப்பினும், முன் எப்போதும் இல்லாத வகையிலான இந்த ஒதுக்கீடு இந்தியாவில் பரவலாக உள்ள விவசாய நெருக்கடிகளை எதிர்த்து போரிடுவதற்கு போதுமானதாக இருக்காது. முக்கிய விவசாய திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை போதுமானதாக இல்லை என்பது பட்ஜெட் ஒதுக்கீடுகள் பற்றிய எங்கள் ஆய்வு காட்டுகிறது. புதிய வருவாய் பாதுகாப்பு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதல்ல; இதில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மாதம் ரூ .500 அல்லது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.3.50 (ஐந்து குடும்பக் குடும்பத்தை கருத்தில் கொண்டு) என்ற ஒதுக்கீடு - ஒரு கோப்பை டீ வாங்குவதற்கு கூட போதாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெற்றிகரமாக ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள விவசாயிகள் வருவாய் ஆதார திட்டங்களில் ஒதுக்கப்பட்டதை விடவும், இந்த திட்டம் குறைந்த செயல்பாட்டை கொண்டிருக்கிறது.
நீண்ட காலமாக புறக்கணிப்பை ஈடுகட்ட இது போதுமானதாக இல்லை
பதிவு செய்யப்பட்ட அறுவடை காலத்தில், விவசாயப் பொருட்களின் விலைகள் சரிந்தன; செலுத்தப்படாத விவசாய கடன்கள் பெருகின; இதை சார்ந்திருந்த 60 கோடி விவசாயிகள் திண்டாட்டத்துக்குள்ளாகினர் என, 2018 நவம்பர் 30ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.
வேளாண் நெருக்கடிகளுக்கு காரணம், தொடர்ந்து விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதும், 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட குறைபாடுள்ள கொள்கைகளுமே ஆகும். வேளாண் துறைக்கான முதன்மை திட்டமான ராஷ்டிரிய க்ருஷி விகாஸ் யோஜனா போன்ற திட்டங்களை முறையாக அமல்படுத்துவதற்கான ஏற்பாடு மற்றும் உறுதியான நடவடிக்கைகளை விரிவாக்க வேண்டும் என்றும், உள்ளூர் பிரச்சனைக்கேற்ப தேவைப்படும் ஆலோசனைகளை வழங்க, மாநிலங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையுள்ளதாக இது இருக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோருகின்றனர்.
விவசாயத்தில் பொதுச்செலவினங்களுக்கான தொடர்ச்சியான குறைந்த முன்னுரிமை, மனித வளங்களின் பெரும் பற்றாக்குறையால் திட்டங்களை அமல்படுத்துவதில், குறிப்பாக வேளாண் விரிவாக்க சேவைகளில், விவசாய நடைமுறைகள் மற்றும் விவசாயிகளுக்கு முக்கியத் தகவல்களை வழங்குவதில் பெரும் இடைவெளிகளை ஏற்படுத்தியது.
கடந்த 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளில் கடும் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டு விவசாயத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி 0.1% ஆக இருந்தது. இதே ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி -ஜி.டி.பி (GDP) இந்த பிரிவுக்கான ஒதுக்கீடு விகிதம் 2014-15 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 0.3 முதல் 0.4 சதவிகிதமாக இருந்தது என தரவுகள் காட்டியன. போதுமான பொது முதலீடு விவசாயத்தில் தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்தியது. 2014-15 மற்றும் 2016-17 க்கு இடையில், தனியார் துறை முதலீட்டு விகிதம் 2.2% முதல் 1.8% வரை குறைந்தது, இது முதலீட்டில் 2.6% முதல் 2.1% வரை ஒட்டுமொத்த சரிவுக்கு வழிவகுத்தது. இது கிராமங்களுக்கு நெருக்கடியையும் விவசாயத்துறைக்கு துயரங்களையும் ஏற்படுத்தியது.
நிதி ஒதுக்கப்படாத நீர்ப்பாசன அமைப்புகள்; வருவாயும் போதுமானதாக இல்லை
நாட்டின் பாசன அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டிருந்தால் இரண்டு வறட்சி ஆண்டுகளையும் அரசு திறம்பட நிர்வகித்திருக்கலாம். ஆனால் விவசாயத்துறைக்கு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.
பிரதம மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா (பிரதமரின் பாசனத் திட்டம்) எப்போதுமே குறைந்த நிதி மதிப்பிற்கு உட்பட்டுள்ளது; அதன் ஒதுக்கீடு 2014-15ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரவில்லை. இந்த திட்டத்திற்கு 2019-20 பட்ஜெட்டில் ஒதுக்கீடு, கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தை விட ரூ .100 கோடி உயர்ந்துள்ளது.
கடந்த 2016-17ஆம் ஆண்டில் நாடு வறட்சியில் இருந்து மீள முடியாத போது, நீர்ப்பாசன திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு 2015-16ல் ரூ. 10,780 கோடியாக இருந்தது, 2016-17ஆம் ஆண்டில் ரூ.6,134 கோடியாக குறைந்தது. 2017-18 ஆம் ஆண்டில் திட்டத்தின் உண்மையான செலவினங்கள் முன்மொழியப்பட்ட பட்ஜெட் விடவும் குறைவாகவே இருந்தன; இது நிதியின் குறைபாடு மற்றும் செலவழிக்காததை குறிக்கிறது.
வேளாண் நெருக்கடிகள் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதில் அரசின் கவனத்தை மாற்றுவதில் தள்ளியது. 2015-16ஐ அடிப்படையாகக் கொண்டு நிதி ஆயோக்கின் மூன்றாண்டு செயல் திட்டத்தின் வாயிலாக, 2022 ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கு அரசு உறுதி தந்தது. 2015-16 என ஒரு வறட்சி ஆண்டு என்பதால் விவசாய வருவாய் குறைவாக இருந்தது. இது எவ்வித தாண்டலையும் எளிதாக நிர்வகிக்க முடியும்.
வேளாண் சமூகம் இன்னமும் சாகுபடி செலவினங்களிய ஈடுகட்டும் வகையில் வருவாய் அல்லது லாபத்தை பெற போராடிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு, சில குறுகிய கால உத்திகளை பா.ஜ.க. அரசு பின்பற்றியது. விவசாயிகள் அதிக தொகை பெறும் வகையில் வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அதிகரிக்கப்பட்டது.
வேளாண் சாகுபடி துயரங்களை சமாளிக்க, பயிர் சாகுபடிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 1.5 மடங்கு அதிகரிப்பது என்று எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
2018-19 ஆம் ஆண்டில் பெரும்பாலான காரிப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 23%, ரபி பயிர்களுக்கு 13% ஆக உயர்த்தப்பட்டது. 2014-15 மற்றும் 2018-19ஆம் ஆண்டுக்கு இடையே பெரும்பாலான பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு சராசரி 5-10% ஆகும். ஆனால் வறட்சி ஆண்டுகளில் இது 5% க்கும் குறைவாக இருந்தது.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவு வழங்குவதே வேளாண் துயரை எதிர்கொள்ளும் இரண்டாவது திட்டமாகும். 2019 இடைக்கால பட்ஜெட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (பிரதமரின் விவசாயிகள் நிதி) என்ற திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் நிலத்திற்கு குறைவாக ஒவ்வொரு விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 12 கோடி விவசாயிகள் தகுதி பெற்றுள்ளனர் என அரசு மதிப்பிட்டுள்ளது. இதற்கு செலவினம் ஆண்டுக்கு ரூ 75,000 கோடி ஆகும்.
மத்திய அரசு இத்திட்டத்தை 2018 டிசம்பர் என, முன்தேதியிட்டு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. 2018-19 ஆண்டிற்கு இதற்கென ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 10 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதாவது இது ஒரு விவசாயிக்கு நான்கு மாதங்களுக்கு ரூ.2,000 அல்லது ஒரு மாதத்திற்கு ரூ. 500 என வழங்கப்படவுள்ளது.
(ஆச்சார்யா, பட்ஜெட் மற்றும் ஆளுமை பொறுப்பு மையத்தின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.