கலபுராகி மாவட்டம் (கர்நாடகா): “ஆண்டுக்கு ஆண்டு மழையின் அளவு குறைந்து, விவசாயம் பொய்த்து வருகிறது,” என்கிறார், 55 வயதான ஷியாம்ராவ் பாட்டீல். அவர் அணிந்திருந்த லுங்கியில், விவசாயி என்பதற்கு அடையாளமாக ஆங்காங்கே, மண் படிந்துள்ளது; கம்பீரமான மீசை, முகத்திற்கு பொலிவு தருகிறது. மாறிவரும் பருவங்களை அறிந்து கொண்ட அவர், நம் மண்ணிற்கு பொருந்தும் வகையில் மாற்றிக் கொள்கிறார். பருவ நிலை மாற்றத்தால் இந்தியாவில், ஐந்தில் ஒரு பங்கு மக்களின், அதாவது விவசாயத்தை சார்ந்துள்ள, 263 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க தொடங்கியுள்ளது.

உரிய நிலத்தடி நீர் இல்லாத, போதிய மழை பெய்யாத, அதிக வெப்பம், தரம் குறைந்த மண் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் (இப்பகுதியில், 2018-ல் 419 பண்ணை வீடுகளில் நடந்த ஆய்வில் இது அறியப்பட்டது), பருவநிலை மாற்றத்திற்கு எதிராக, கால சூழலை உணர்ந்து, பல்வேறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். கலபுராகி மாவட்டத்தில் உள்ள 91% விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2016ஆம் ஆண்டுடனான 10 ஆண்டுகளில், மழையளவு சரிந்துள்ளதாக தெரிவித்தனர். 61% பேர், விவசாயத்துக்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். வடக்கு கர்நாடகாவின் நான்கு மோசமான வட்டாரங்களில், மனித மேம்பாட்டு வளர்ச்சிகள், ஏழ்மை மாநிலமான பீகாருடன் பொருந்துவதாக உள்ளது.

எழுத்தறிவு விகிதம், 65% உள்ள மாவட்டத்தில், பாட்டீலும், அவரது மனைவியும், 3ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். இந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகளில் வசிக்கும் சமூகத்தினரை பிரதிபலிக்கும் வகையில், இது உள்ளது. உதாரணத்திற்கு, ராஜஸ்தானில் நீர் அறுவடை பாசனம், மற்றும் தென் இந்தியாவில் தொட்டிநீர் பாசனம்.

மாறுபட்ட ஆபத்து, பயிர் நடவுக்கு இயந்திரங்களில் முதலீடு, அரசு மானியங்களை பயன்படுத்துதல், பயிர்களை சந்தைப்படுத்த கூட்டு முயற்சியில் பங்கு பெறுதல், தண்ணீர் சேமிப்பு போன்ற நுட்பங்களை பிறர் வாயிலாக கற்று, இப்போது மற்றவர்களுக்கு கற்பிக்கிறார். இந்தியாவின் பல பகுதிகளிலும் சுத்திகரிக்கும் நிலப்பகுதி, நீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் மற்றும் விவசாய துயரங்கள் போன்ற தருணங்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு கையேட்டை அவர்கள் வழங்குகின்றனர்.

கட்டுப்பாட்டு விவசாயம் இன்று எதிர்கொள்ளும் சிக்கல்கள், தீர்வுகளுக்கு உதாரணங்களை கூற முடியும். கர்நாடகாவின் குல்பர்கா மற்றும் கோலார் மாவட்டங்களில், முன்னேற்றம் கண்டுள்ள, முன்னேறிய விவசாயிகள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட எட்டு விவசாயிகளை ஆய்வு செய்தோம். நாம் முன்பு கூறியது போல், காலநிலை மீளமைப்பை உருவாக்குவதற்கான படிப்பினைகளை கொண்டிருக்கும், நிலையான விவசாய நடைமுறைகளின் வெற்றியாளர்கள்; அல்லது, மாற்றத்தை நிர்வகிக்கும் திறன், தடைகள் குறைக்க மற்றும் வாய்ப்புகளை அதிகரிக்க செய்பவர்கள்.

கிரீஸில் தீ, லாவோஸில் வெள்ளம், ஜப்பானில் அனல் காற்று என்று, உலகம் முழுவதுமே பருவநிலை மாற்ற பாதிப்புகள் உள்ளன. இந்தியாவை பொருத்தவரை, வரும் 2050ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதி பேரின் வாழ்க்கை தரத்தை, பருவநிலை மாற்றம் பாதிக்கக்கூடும் என்று, உலக வங்கியின் 2018 ஜூலை மாத அறிக்கை எச்சரிக்கிறது.

இம்மாற்றங்கள், இந்தியாவின் பாதியளவு வறண்ட பகுதிகளில் ஏற்கனவே உணரப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இது, 10% அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்டவை, இந்தியாவில் மிகவும் பாதிக்கப்படும் மாநிலங்களாக இருக்கக்கூடும்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், கிராமப்புற இந்தியாவில், வளர்ந்து வரும் விவசாயிகள் துயரை சந்திக்கின்றனர் என்று, 2017 ஜூன் மாதம் வெளியான, இந்தியா ஸ்பெண்ட் தகவல் தெரிவிக்கிறது. விளைபொருட்களுக்கு சந்தையில் ஏற்ற-இறக்க விலைகள், அதிகரித்து வரும் கடன் நெருக்கடிக்கு இடையே சிக்கியுள்ள விவசாயிகள் பலர், வாழ்வாதாரத்துக்கு விவசாயம் தகுதியற்றதாகவே கருதுகின்றனர். நாடு முழுவதும் 50 ஆயிரம் விவசாயிகளிடம், 2017 பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் நான்கில் ஒரு பங்கினர், வேறு வாய்ப்பு கிடைத்தால், விவசாயத்தை கைவிடுவோம் என்றனர்.

விவசாயிகள் தங்கள் நிலத்தில் முதலீடு செய்ய, மாறிவரும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, அரசுகளும், வளர்ச்சி முகமைகளும் எவ்வாறு ஊக்குவிக்கப் போகின்றன? இதற்கு, கலபுராகியில் விடை இருக்கிறது. விவசாயி பாட்டீலிடம், அது உள்ளது.

வறண்ட நிலம்; சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள்; சேமிக்கப்பட்ட நீர்

குல்பர்க்கா என்று முன்பு அழைக்கப்பட்ட கலபுராகி மாவட்டம், கோவாவை விட 3 மடங்கு பெரியது; நெதர்லாந்து நாட்டின் நான்கில் ஒரு பங்கு கொண்டது. வறட்சி பாதித்த இப்பகுதியில், ஆண்டு சராசரி மழையளவு, 842 மி.மீ. (கர்நாடக சராசரி – 1,248 மி.மீ.). கோடையில்450 செல்சியஸ் வெப்பமும், 10-15° செல்சியஸ் குளிரும் நிலவுகிறது.

கர்நாடக மாநில விவசாய நிலங்கள், குளிர்காலத்தில் வெப்பத்தையும், ஒழுங்கற்ற மழையையும் சந்தித்து வருகின்றன.

வறட்சி பாதித்த கலபுராகி பகுதியில், ஆண்டு சராசரி மழையளவு, 842 மி.மீ. கர்நாடக சராசரி 1,248 மி.மீ. கோடையில்45° செல்சியஸ் வெப்பமும், குளிர்காலத்தில் 10-15° செல்சியசும் நிலவுகிறது.

ஷியாம் ராவிடம் இரு ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அவற்றில் 5 செ.மீ.க்கு குறைவாக மட்டுமே தண்ணீர் இருப்பதால், மிக கவனமாக அவற்றை பயன்படுத்த அறிந்துள்ளார். “இருக்கும் கொஞ்சம் தண்ணீரையும் உறிஞ்சி எடுத்துவிட்டால், வேறு எதுவும் செய்ய முடியாது; கொஞ்சாமாவது தண்ணீர் குடிக்க, பூமிக்கு விட்டுத்தர வேண்டும்,” என்கிறார்.

குட்டைகள், தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேகரிக்கும் வழிமுறைகள் குறித்து சக விவசாயிகளுடன் ஆலோசித்து, கூட்டு முயற்சியை ஷியாம் ராவ் மேற்கொண்டார். உலகின் மிகப்பெரிய உழைப்பாளர் திட்டமான, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை, கர்நாடகா சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

மழை காலத்தில் குறைந்தளவே மழைப்பொழிவு என்பது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது. கலபுராகி மாவட்டத்தில், 17% விவசாய நிலங்களே தண்ணீரை பெற்றன; இது, இந்திய சராசரி, 58% ஆக உள்ளது. ஆனால், இந்திய விதிகளின் படி பெரிய விவசாய நிலம் இல்லாமல், வெறும், 3.5 எக்டர் மட்டுமே வைத்திருந்த பாட்டீல் கையாண்ட யுக்தியோ வேறு மாதிரியானது. விவசாயத்துக்கு பயன்படும் நிலங்களில், 85% இரண்டு எக்டருக்கும் குறைவானது என்று, 2013 ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (NSSO) சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஷியாம் ராவும், லட்சுமி பாயும் கலப்பு சாகுபடி முறைகளை, அதாவது ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு பயிர்களை பயிரிட்டனர். பருப்பு, வெங்காயம், கோதுமை, சோளம், நிலக்கடலை, எள், புளி, மா மற்றும் கீரை வகைகளை சாகுபடி செய்ததோடு, எட்டு பசுக்கள், 150 கோழிகள் மற்றும் 28 ஆடுகளுடன் பால் மற்றும் கோழி பண்ணைகளை நடத்துகின்றனர். இதன் மூலம், அவர்களின் ஆண்டு வருமானம், ஏறத்தாழ ரூ. 5,00,000 ஆகும், இதில் ரூ. 2,50,000 லாபம் என்று மதிப்பிடலாம்.

கடந்த 2007ஆம் ஆண்டில், சாகுபடியான் பருப்புகளை சந்தையில் விற்பனை செய்வதற்கு பதில், மானியம் வழங்க உதவும் வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, பருப்பு ஆலைகளை அணுகி முதலீடு செய்தார். சாம்பார் செய்ய பயன்படும் இந்த பருப்பை தொடர்ந்து, அரிசியை வறுத்து நூடுல்ஸ் ஆக்கும் வகையில், அதற்கான இயந்திரங்கள் தருவிக்கப்பட்டன. அரிசி நூடுல்ஸ் தயாரித்து, அக்கம்பக்கம் விற்க தொடங்கினார்.

கடந்த 2007-ல் தங்களின் உற்பத்திகளை மத்தியதரர்களிடம் விற்பனை செய்வதற்கு பதிலாக, கலாபுராகி கிராம விவசாயத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மினி டர் தால் ஆலையில் முதலீடு செய்தனர். மினி தால் ஆலையில், சாம்பாருக்கு முக்கிய தேவையான பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

பயிர் அறுவடைக்கு பின், முதலீட்டுக்கு வழியில்லாத போது, அரசின் மானிய தொகையே, பெரும் உதவியாக இருந்தது என்று கூறும் ஷியாம் ராவ், பருப்பை பொடியாக்கி, கிலோ ரூ.140 என கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநில சந்தைகளில் விற்க தொடங்கினார். பருப்பை கிலோ ரூ.100 என, கலபுராகி மாவட்டத்தில் விற்றார்.

பாட்டீல் தம்பதி, அவர்களை போன்ற மற்றவகளுடன் இணைந்து பணியாற்ற கற்றுக் கொண்டனர். சுய உதவி குழுவான பாக்யவந்தியின் 13 உறுப்பினர்களில் பாட்டீலும் ஒருவர். இக்குழு, கிராம விளை பொருட்களை பெற்று, உள்ளூரிலும், மத்திய பிரதேசம், கொல்கத்தா, அகமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு கொள்முதல் செய்கிறது.

ஒத்துழைப்பின் மதிப்பும், கூர்ந்து கற்றலும்

ஷியாம் ராம், விவசாயியான தனது தாய் வழியை பின்பற்றி, தனது 8 ஏக்கர் பயிர்களுக்கு செயற்கை உரங்களை பயன்படுத்தி வந்தார். எனினும், கணிசமான மகசூல் இல்லை. இதையடுத்து, இயற்கை உரங்களுக்கு மாறி, 3.5 ஏக்கர் சாகுபடியை அதில் மேற்கொண்டார். 1997-ஆம் ஆண்டில் தனது கிராமம் அருகே நடந்த பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகே, இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அங்கு, இயற்கை உரங்களின் பலன்களையும் அவர் தெரிந்து கொண்டார்.

பாட்டீலின் விவசாய நிலம், உரம் மற்றும் கருப்பு மண்ணின் கலவையை கொண்டிருந்தது. 1997-ல் தனது கிராமம் அருகே நடந்த பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற பின், தனது 3.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரசாயன உரங்களுக்கு பதில், இயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு மாறினார்.

இயற்கை உரங்களை பயன்படுத்த, ஷியாம் ராவ் தொடர்ந்து ஆர்வம் காட்டினார். இதற்காக, அரசு சாரா அமைப்புகளை (என்.ஜி.ஓ) நாடினார். அவர்கள், அவரை வேளாண் துறைக்கு அனுப்பி வைத்தது. இதன்பின், படிப்படியாக, இயற்கை உரங்களை பயன்படுத்த தொடங்கினார். முதல் ஆண்டில், அதாவது 20 ஆண்டுகளுக்கு முன், கலப்பு டை அம்மோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி.) மற்றும் உரத்தை சம அளவில் கலவையாக்கி, பரவலாக பயன்படுத்தினார். இரண்டாம் ஆண்டில் இந்த விகிதம் மாறுபட்டது. மூன்றாம் ஆண்டில், 10 கிலோ ரசாயன உரத்துடன், 3 மூட்டை உரத்தை இட்டு, கலந்து பயன்படுத்தினார். 4ஆம் ஆண்டில், 5 மூட்டை இயற்கை உரம் மட்டுமே; செயற்கை உரங்களை நிலங்களுக்கு அவர் பயன்படுத்தவில்லை.

”ரசாயன உர பயன்பாட்டை நான் திடீரென கைவிடவில்லை. ஆண்டுதோறும் படிப்படியாக நிறுத்தினேன். இயற்கை உரங்களை பயன்படுத்தியபோது, முதலில், எதிர்பார்த்த மகசூல் இல்லை; பின்னர் அதிகரித்து, இப்போது நன்கு உள்ளது” என்று ஷியாம் ராவ் கூறுகிறார்.

மண்நுண் குழாய்களில் தண்ணீர் ஊற்றும் ஷியாம் ராவ் பாட்டீல். இவர், படிப்படியாக இயற்கை உர பயன்பாட்டுக்கு மாறினார். முதல் ஆண்டில், அதாவது இருபது ஆண்டுகளுக்கு முன், சம அளவிலான டைமோனியம் பாஸ்பேட் மற்றும் வெர்மிகோம்போஸ்ட் ஆகியவற்றை கலந்து பயன்படுத்தினார். ஐந்தாம் ஆண்டில் 5 மூட்டை வெர்மிகோம்போஸ்ட் மட்டுமே அவர் பயன்படுத்தினார்; ரசாயன உரங்களை பயன்படுத்தவில்லை.

ஷியாம் ராவ் பாட்டீல், தான் மட்டுமின்றி தனது கிராமத்தினர், சுற்றுவட்டார விவசாயிகளை, செயற்கை உர பயன்பாட்டில் இருந்து இயற்கை உரத்திற்கு மாறச் செய்தார். அரசுசாரா நிறுவனமான, குல்பர்க்காவில் உள்ள, சமாத்த லோகா ஷிக்ஷன் சமிதி (சம உலக கல்வி வாரியம்), இதை உறுதி செய்துள்ளது.

மைரதா போன்ற அரசுசாரா அமைப்புகளின் உதவியோடு, 150 விவசாயிகளுக்கு ஷியாம் பயிற்சி அளித்தார். பாட்டீலின் அனுபவத்தை கவனித்தோம். அவர் கையாண்ட யுக்திகள், வேளாண் அறிவை வளர்க்க, மற்றவர்கள் பின்பற்ற வேண்டிய, சக்திவாய்ந்தவை. கடந்த 2000ஆம் ஆண்டில், ஷியாம் ராவும், லட்சுமிபாயும், 15 விவசாயிகளை கொண்ட, புண்ணியகோடி என்ற விவசாயக்குழுவை தங்கள் கிராமத்தில் தோற்றுவித்தனர். இக்குழுவினர் சீரான இடைவெளியில் சந்தித்து, பச்சை பயிறு, பருப்பு போன்ற விளைபொருட்களை விற்பனைக்கு வழிவகை செய்தனர்.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 419 குடும்பங்களில், 12% பேர், கிருஷி விஞ்ஞான் கேந்திரம் எனப்படும் அரசால் நடத்தப்படும் வேளாண் தகவல் மையத்தில் இருந்து தகவல்களை பெற்றதாக தெரிவித்தனர். அதில் 85% பேர், மையத்தின் தகவல் திருப்திகரமாக இருந்தது என்ற் குறிப்பிட்டனர். இக்கட்டான நேரத்தில், 86% பேர் குடும்பத்தினர் அல்லது அக்கம்பக்கத்தினரையும்; 1% பேர் அரசையும்; 1% பேர் அரசியல்வாதிகளையும், 2.5% அரசுசாரா அமைப்புளையும் நாடுவது தெரிய வந்துள்ளது.

வேளாண்மையில் புதிய வழிமுறைகளை கையாள்வதில் ஆர்வம் கொண்டுள்ள பாட்டீல் குடும்பத்தினர், விவசாயிகளிடையே அறிவை பரிமாறுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கிராம விவசாயிகளுக்கு, ஷியாம் ராவ் நிதிசார்ந்த உதவிகளுக்கு ஏற்பாடு செய்து தருகிறார். தன் கிராமத்தில், 5 விவசாயிகளுக்கு, ரூ.2.50 லட்சம் கடன் பெற்று தந்துள்ளார்.

அங்கீகாரமும், வெகுமதியும்

கடந்த 2008-09ஆம் ஆண்டில், தண்ணீர் பற்றாக்குறை இருந்தும் விவசாய வளங்களை வளர்க்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். இயற்கை உர பயன்பாடு மற்றும் ஒருங்கிணைந்த விவசாய சாகுபடிக்காக, முற்போக்கு விவசாயி என்ற விருது, 18 ஆண்டுகளாக கர்நாடக அரசால் வழங்கப்படுகிறது. இவ்விருது, பாட்டீல் தம்பதிக்கு வழங்கப்பட்டது. அவர்கள் பெற்ற, 30 விருதுகளில் இதுவும் ஒன்று.

ஏர் கலப்பையும், மண்வெட்டியும் பிடித்த பாட்டீலின் கைகள், காலத்துக்கேற்ற நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி சமூக வலைதளங்களுக்குள்ளும் நுழைந்தனர். இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குதல், அரசின் மானிய உதவி பெறுதல், நிதி ஆலோசனைகள் வழங்குகின்றனர். பருவநிலை மாற்ற சவால்களை சமாளித்து, அதற்கேற்ப தங்கள் விவசாய சாகுபடி உத்திகளை மாற்றி, நல்ல விளைச்சலை கண்டு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளனர்.

அரசின் ஆதரவு, அரசுசாரா அமைப்புகளின் வழிகாட்டுதல், புதுமையான வேளாண் நுட்பங்களால், தகவமைப்பு, நிலையான மற்றும் நிதி ரீதியான சாத்தியங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு பாட்டீலும், லட்சுமி பாயுமே சிறந்த உதாரணம்.

(கிரீஷ்மா ஹெக்டே & சாந்தினி சிங் இருவரும் பெங்களூரு இந்திய மனிதவள தீர்வுகள் கழகத்தின் (IIHS) காலநிலை மாற்றம் குழுவில் உள்ளனர். பருவநிலை மாற்றம், வாழ்வாதார மாற்றங்களின் சிக்கல்களை எதிர்கொள்வது பற்றி, வறண்ட பிராந்தியங்களான இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும். பகுதி வறட்சியை எதிர்கொள்ளும் திட்டங்களில் இணைந்து பணியாற்றுகின்றனர்.)

விளை நிலம் கண்டறிதல் மற்றும் நீடித்த விவசாயம் குறித்த மேலும் கட்டுரைகளுக்கு,https://www.assar.uct.ac.za/news/adaptation-innovation-lessons-smallholder-farmers-indias-rainfed-karnataka

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.